அந்தரத்து ஊஞ்சல்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 21, 2021
பார்வையிட்டோர்: 4,362 
 

அகிலா , ஆத்மிகா இருவரும் உயிர் தோழிகள். M sc முதுகலை பட்டம் படித்தார்கள். படித்து முடித்தவுடன் திருமணம் முடித்து இருவரும் வெவ்வேறு இடத்தில் செட்டில் ஆகி விட்டார்கள் . அதன் பிறகு தோழிகள் சந்திக்க வாய்ப்பே இல்லாமல் போய்விட்டது. காலம் உருண்டோடின . இருவருக்கும் தலா ஒரு பெண் குழந்தை. அகிலாவின் பெண் அபராஜிதா, ஆத்மிகாவின் பெண் அனாமிகா.

அகிலா ஒரு தேசிய வங்கியில் வேலை செய்கிறாள் ஆத்மிகா பெரிய தொழிலதிபரின் ஒரே செல்லமகள் இந்நிலையி ல் அகிலாவின் வங்கிக்குஒரு அழகான இளைஞன்அடிக்கடி. கஸ்டமராக வருவான்அதில் பழக்கம் ஏற்பட்டு அகிலாவிடம்அவனுக்கு காதல் மலர்கிறது

அகிலா. மாநிறமாகத்தான்இருப்பாள் ஒல்லியான ஒடிசலான உடம்பு தான் தலைபின்னல் சாட்டை மாதிரி இடுப்புக்குக் கீழே தொங்கும் பேசும் போதும் சிரிக்கும் வரிசையான பற்களுடன் மிகவும் கவர்ச்சியாக தெரிவாள்அதனால் அகிலாவிடம் அந்த இளைஞனுக்கு ஒருவித கிரக்கம் இளைஞனின்பெயர்அம்பரீஷ்

அகிலாவிற்கு தந்தை கிடையாது தாய் மட்டும்தான் தந்தை அவளோட 10 வது வயதில் காலமாகிவிட்டார் அவர் வேலை செய்த பள்ளியில் அகிலாவின் அம்மா விற்கு 1,2 ஆம் வகுப்புஆசிரியையாக வேலை கொடுத்தார்கள்

இந்த இடைவேளையில் ஆத்மி காவை பற்றி கொஞ்சம் பார்ப்போம். ஆத்மி காவும் அழகானவள் தான் என்ன அகிலாவை விட கொஞ்சம் உயரம் குறைச்சல் நன்றாக பாடுவாள்அவள்படிப்பை தொடர்வதில் அவள்அப்பாவுக்கு இஷ்டமில்லைசீக்கிரம் திருமணம் செய்து கொடுத்து மாப்பிள்ளையிடம் தன் கம்பெனியை ஒப்படைத்து விட்டு நிம்மதியாகஸ்தல யாத்திரை சென்று வரவேண்டும் என்ற ஆவல்

ஆத்மிகாவோட அம்மாஅவரைவிட்டு போய்விட்டாள்அவர்கள் இருவரும் விரும்பி தான் மணம் செய்து கொண்டனர்ஆத்மிகா5 வயது பெண்ணாக இருந்தபோது ஒரு திருமணத்திற்குஎல்லோரும் காரில் பயணம் செய்தார்கள் திருப்பதியில் திருமணம் நடந்தது திருமணம் முடிந்து இவர்கள் ஊர் திரும்பும்போது மலையில் கார் பிரேக் பிடிக்காமல் தடுமாறிய போதுபின் சீட்டில் அமர்ந்திருந்த ஆத்மி காவின் அம்மாகார் ஓடும் வேகத்தில் கதவு திறந்துகொண்டதுதடுமாறி காரிலிருந்து கீழே விழந்துஇறந்து விட்டாள்

இதற்க்கிடையில் அம்பரீஷைப்பற்றி கொஞ்சம் அறிந்து கொள்வோம்

அம்பரீஷும் M.B.A படித்தவன் தான் என்ன கொஞ்சம் கர்வமுள்ளவன் காரணம் அவனுடைய அப்பா பெரும் தொழிலதிபர் தான் அவருக்கு சென்னையில்2 பங்களாவும்4 கார்களும் உள்ளனமேலும் கொடைக்கானலில் 2,3 டீ எஸ்டேட் ஸும்2 கெஸ்டு ஹவுஸ் களும் உள்ளன அதனால் அவனுக்கு வேலைக்கு போகவேண்டிய அவசியமில்லாமல் போய்விட் டது

இதையெல்லாம் அவன் அகிலாவிடம் சொல்லி பெருமையாக. பீற்றிக்கொள்வான்நீ என்னை திருமணம் செய்து கொண்டால் உனக்கு வேலைக்குப் போகும் அவசியமில்லைநாம் இரு வரும் கொடைக்கானலில் போய் செட்டில் ஆகிவிடலாம் அங்கு வேலைக்கு ஆள் இருக்கிறார்கள் நீ மஹா ராணியாய் இருக்கலாம் என்பான்

தினமும் வங்கி வேலை முடிந்ததும்இரூவருமா கபீச் பார்க் என்று சுற்றுவார்கள் ஒருநாள் 5 ஸ்டார் ஹோட்டலுக்குப்போனார்கள்அவளுக்கு தெரியாமல் அவன் கூல்ரிங்கில் மயக்க மாத்திரையை கலந்து கொடுத்தான் சிறிது நேரத்தில் அவள் மயக்கமுற்றதும் ஒரூ டாக்ஸியில் அழைத்துப்போய் ஒரு லாட்ஜில் அவளை. நுகர்ந்துவிட்டு அவள் மயக்கம் தெளிவதற்குள் லாட்ஜில் பணம் கட்டிவிட்டு அவர்களிடம் அந்தப்பெண் எழுந்ததும் ரூமை காலி பண்ணச்சொல்லுங்கள் என்னை அவள் கேட்டால் தெரியாது என்று சொல்லச்சொல்லிவிட்டான்

மயக்கம் தெளிந்து பார்த்தால் தலை வலி மண்டையைபிளக்கிறது ஹோட்டல் பையன் வந்து அம்பரீஷ் சொன்னதை சொல்லிவிட்டான் அவளுக்கு திக்கென்றிருந்ததுஅவன் பிறகு நம்மை பார்க்க வராமல் போகமாட்டானென்று வீட்டிற்கு வந்து விட்டாள் மறுநாள் காலை வங்கிக்கு சென்றவள் வேலை நிமித்தம் அவனை மறந்தே போனாள். லஞ்ச்அவரில்அம்பரீஷுக்கு போன் செய்தாள் சுச்ஆஃப் என்று வந்ததுமாலை இரவு என்று பல தடவை முயன்றாள் பலனில்லை

அம்பரீஷ் போர்டிகோவில் காரை நிறுத்திவிட்டுஉள்ளே வருகிறான்உனக்கு ஆயுஸு நூறுடா உன்னைதான் நினைத்தேன் உடனே வந்துவிட்டாய். என்றாள் அம்மா எனக்குஏன்ஐஸ் வைக்கிறாய் என்னால் என்ன காரியம் ஆகவேண்டும் சொல் என்றான்அவன்எனக்கு வயதாகிவிட்டது உனக்கு ஒரு கால்கட்டுபோட்டு என்மறுமகளைஇந்தவீட்டிற்கு அழைக்கணும். காலாகாலத்தில்பேரன் பேத்திகளை பார்த்து விட்டூ கண்ணை மூடணும்என்றாள்

அடப்போம்மா. உனக்கு வேற வேலையே இல்லையா என்றான்அப்போதுகல்யாண புரோக்கர் உள்ளே நுழைந்தார்

கல்யாண புரோக்கர் அட்டகாசமாக Comes in very happy to buy Buy I thought of you as a good groom கொண்டுவரச் சொல்லி ஒருவாரம். ஆகிவிட்டதே இன்னும் வரவில்லையே என்று நினைத்தேன் என்கிறாள்

என்ன ரொம்ப சந்தோஷமாக வருகிறீர்களே வரன் ஏதாவது வந்திருக்கிறதா! என்றாள்

ஆமாம் சூப்பர் வரன் வந்திருக்கம்மா பெரிய தொழிலதிபரோட பெண்ணம்மா படித்தபெண் இனிமையாக பாடுவாளாம் ஆனால் தாயில்லாமல் ஒரே மகளம்மா

அப்படியா ஜாதகம் நன்கு பொருந்தியுள்ளதா பார்த்தீர்களா?

நேற்றுதான் ஃபேமஸ் ஜோதிடர் பொன்னம்பலத்திடம் பார்த்தேன் 10க்கு 10 பொருத்தம் பிரமாதமாக உள்ளதாம்

நேற்றே பெண்ணின் தந்தை வேணு கோபாலிடமும் பேசிவிட்டேன். உங்க பையனின் போட்டோ பார்த்து அவர் மகளிடமும்காட்டிவிட்டார் இருவருக்கும் சம்மதமே.

அந்த பெண்ணின் போட்டோவை நீங்களும் உங்கள் பையனும் பாருங்கள். உங்களுக்கு பிடித்திருந்தால்மேற்க்கொண்டு முயற்சி செய்யலாம் என்றார்

அம்பரீஷின் அப்பா அருணாஜலத்துக்கும்அம்மா சரோஜாவுக்கும்பெண்ணை பிடித்துவிட்டது தன்பிள்ளையிடம் காட்டினாள் அவன் உனக்கு பிடித்தால் எனக்கும். விருப்பம்தான் என்றான்

மேற்கொண்டு பெண்ணின் வீட்டில்சொல்லி பெண்பார்க்கும்படலமும்நிச்சயமும் நடந்து விட்டது

அடுத்தமாதம் முகூர்த்தம் வைத்து பத்திரிக்கைகள் அச்சடித்து வந்துவிட்டன.

அம்பரீஷ்க்கு திருமணத்தில் இஷ்டம் இல்லை, தான் காதலிக்கும் விஷயத்தை அப்பா அம்மாவிடம் சொல்ல தைரியம் இல்லை.

திருமணத்திற்கு ஒருவாரத்திற்கு முன்னதாக யாரிடமும் சொல்லாமல் வீட்டைவிட்டே வெளியேறினான். எங்கு போவது என்று தெரியாமல் வேகமாக காரை ஓட்டி சென்றான். வளைவில் வேகமாக வந்த லாரி மீது கார் பலமாக மோதியதில் அம்பரீஷ் காரிலேயே உடல் நசுங்கி மயக்கமடைந்து விழுந்தான். யாரோ அவனை ஆம்புலன்சில் ஏற்ற ஆஸ்பத்திரியில் சேர்த்தார்கள்.

மகன் காணாமல் போன விஷயம் அறிந்து அவன் பெற்றோர் வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு அழுதனர் . அவனை காணாமல் சரோஜாவால் துக்கம் தாங்க முடியாமல் அழுது அழுது ஒழுங்காக சாப்பிடாமல்‌ துரும்பாக இளைத்து போய்விட்டாள்.

அவள் கணவரிடம் பொருமுகிறாள் இரண்டு பெற்றேனேஒன்றுகுழந்தையிலேயே காணாமல் போச்சு ன்னாஇன்னொன்று வராத இடத்துக்கு போய்விட்டதே என்று அழுதாள்

இதில் அம்பரீஷ் இரட்டையாக பிறந்தவன் ஒருவன் அம்பரீஷ் அடுத்தவன் அபிநந்தன்.

பிளாஷ்பேக்கில் ரிவர்ஸில் வருவோம் அருணாஜலம் சரோஜாவுக்கு கல்யாணமாகி ஐந்து வருடங்கள் கழித்துதான் குழந்தையே பிறந்தது பிறந்த தும் இரட்டைக்குழந்தைகள்அவர்களுக்கு3 வயது இருக்கும்போது சொந்த ஊரில் நடக்கும் கோவில் திருவிழாவிற்கு குடும்பத்துடன் சென்றார்கள். அந்த திருவிழாவில் கூட்டம் எக்கச்சக்கமாக இருந்தது ஊசி விழக்கூட இடமில்லாமல் ஒரே கூட்ட நெரிசல் அப்போ அம்ரீஷோட அப்பா சாதாரணமாக ஒரு ஜவுளிக்கடை யில் தான் மேனேஜராக வேலைபார்த்தார்

ஊரில் தெரிந்தவர்கள் வீட்டில் தான் தங்கியிருந்தார்கள் அவர்கள் திருவிழாவில் குழந்தைகளை கைப்பிடித்து தான் ஜாக்கிரதையாக அழைத்து சென்றார்கள். திடீரென கூட்டத்தில் நெருக்கியடிதாதார்கள் அந்த கூட்டு நெரிசலில் குழந்தை கை நழுவி விட்டது எங்கும் திரும்ப முடியாதபடி கூட்டம் நெறுக்கியது அதிலிருந்து தப்பினால் போறு ம் என்றுவெளியே வந்ததும் சரோஜா கைப்பிடித்திருக்கும் குழந்தை வேறு யாரோட குழந்தை.

இங்க பாருங்க இந்த குழந்தை நம்மது இல்லை யாரோடதோ இது எப்படி வந்ததுஎன்று யோசிக்கும்போது யாரோ வேகமாக வந்து குழந்தையை பிடுங்கிக்கொண்டு இது எங்க குழந்தை என்றார்கள். கோவில் தர்மகர்த்தாவிடமும் ஊர் நாட்டாண்மை யிடமும் சொல்லிவிட்டு 3 வயது குழந்தையென்றும் தன்கையில் பிடித்திருக்கும் அம்பரீஷைக் காட்டி இந்த குழந்தையைப் போல் அந்த பையனும் இருப்பான் என்று அடையாளம் காட்டி அந்த ஊர் ஸ்டூடியோவில் அம்பரீஷைஒரு போட்டோ எடுத்து அவர்களிடம் ஒரு போட்டோ காப்பியையும் கொடுத்து விட்டு வந்தனர்.

ஊர் வந்து சேர்ந்த அருணாஜலத்திற்குஇரண்டு நாளில் ஒருதபால் வந்தது உடனே சரோ நம் பிள்ளை கிடைத்து விட்டான்ஆண்டவன் நம்மை கை விடவில்லை என்றாள்

பிரித்துப் பார்த்தாள் கடிதம் சரோ வோட் அண்ணணிடமிருந்து வந்திருந்தது விஷயம்இதுதான்நாளை நான் சிங்கப்பூரிலிருந்து வருகிறேன் என்றிருந்தது

குழந்தை தொலைந்து போன கவலையில். இருந்தவளுக்கு கடந்த முப்பது வருடமாக வராமலிருந்த தன்சகோதரன்வரப்போவது மிகுந்த மகிழ்ச்சி அளித்ததுதுக்கத்திலும் ஒருசந்தோஷமிருந்தது இது நல்ல சகுனம் என் பிள்ளை எனக்கு கண்டிப்பாக கிடைத்து விடுவான் என நம்பினாள்.

காலம் இறக்கை கட்டி பறந்துகொண்டிருந்தது அபிநந்த் காணாமல் போய் 23 வருடம் ஆகிவிட்டதுபிள்ளை போன் துக்கத்தை அம்பரீஷைப் பார்த்து மறந்து போனாள்.

மறுநாள்காலை அவளுடைய அண்ணண் வந்துவிட்டார் வாங்க மச்சான் எப்படி இருக்கீங்க பேச்சு க்குரல் கேட்டு சரோஜா வெளியே வந்தாள் அண்ணணைப்பார்த்தும்கண்ணீர் விட்டு அழுதாள்ஏண்ணே உங்க உடம்பு இவ்வளவு மோசமாக இருக்குதே என்ன உடம்பு உங்களுக்கென்று ஒரு வாழ்க்கையை உண்டு பண்ணிக்காமல் காலத்தை கடத்தி விட்டீர்களே என்று வருத்தப்பட்டு தன் பிள்ளை காணாமல் போனதையும் சொல்லி வருத்தப்பட்டு கண்ணீர் வடித்தாள்.

அவளுடைய அண்ணன் சிவநேசன் சிங்கப்பூரில் தான். வியாபாரம் செய்து செல்வந்தரானது பற்றியும் எனக்கு வயதாகிவிட்டது உடம்பில் பிணி வந்து விட்டதால் நாம் ரொம்ப நாள் இருக்கமாட்டோமோஎன்ற பயம் வந்ததும் சிங்கப்பூரில் தான் வாங்கிப்போட்ட சொத்தை எல்லாம் விற்று காசோலையாக்கி க்கொண்டு இந்தியா வந்தது பற்றி தன் தங்கையிடம் சொல்கிறார்.

சில மாதங்கள் சென்றன சிவநேசன் தனக்கு ரொம்ப முடியவில்லை என்றும்இனி நீங்கள் தான் என் சொத்திற்குஉரிமையானவர்கள் என்றும் பத்திரத்தை அருணாசலம் சரோஜா பேரில் எழுதிக் கொடுத்துவிட்டு இரண்டொரு நாளில் காலமாகிவிட்டார் அருணாசலம் அதைவைத்துதான்தொழில் செய்து பெரிய செல்வந்தரானார்.

இதற்கிடையில் அகிலாஒருநாள் காலை தலைசுத்தலும்வாந்தியுமாக அவஸ்தைப்பட்டாள்ஏண்டிஉனக்கு உடம்பு சரியில்லை யாடாக்டரிடம் சென்று காட்டிவிட்டு வரலாம் வா என்றாள் அகிலாவின் அம்மா பங்கஜம் எனக்கு ஒன்றுமில்லைஅம்மாவங்கியில் வேலை அதிகம் மேலும் இரவு தூக்கமின்மயினால்ஒரே தலைவலி அதான் வாந்தி வேறொன்றுமில்லை என்று அவள் அம்மாவின் வாயை அடைத்து விட்டாள்

அடுத்தமாதமும் அதேபோல் தலைசுற்றல் வாந்தி ஜாஸ்தியாகி வங்கிலேயே மயங்கி விழுந்துஅமர்களமாகி விட்டது வங்கி முழுக்க அகிலாவைப்பற்றிதான் அரசல்புரசலாகபேசினார்கள் இது எப்படியோ பங்கஜத்தின் காதிலும் விழுந்துவிட்டது.

அன்று மாலை வங்கியிலிருந்து அகிலா வந்தவுடன் பங்கஜம் பிடித்துக்கொண்டாள் உண்மையைச்சொல்லு அகிலா இதற்கு காரணமானவன்யார்என்னிடம் மறைக்காமல் சொல் என்றாள் உடனே அகிலாபங்கஜத்தை கட்டிக் கொண்டு ஓ வென்றுஅழுதாள்நான்மோசம் போய் விட்டேன் அம்மா என்னை. மன்னித்துவிடு என்வங்கிக்குஅடிக்கடி வரும் தொழிலதிபரின்மகன்அம்பரீஷ்தான் காரணம் அவர் ரொம்ப நல்லவரம்மாஎன்னை நிச்சயம் திருமணம் செய்து கொள்கிறேன் எனசத்தியம் செய்தாரம்மா நான் நம்பி ஏமாந்து விட்டேன்இனி இந்த பழியை சுமந்து கொண்டு நான் உயிர் வாழ்வதைவிட உயிரை மாய்த்துக்கொள்வதே மேல் என்று அழுதாள்.

விஷயம் தலைக்கு மேல் போனபின் உயிரைமாய்த்து க்கொண்டால் சரியாகிவிடுமா? எனக்கும ல்லவா பழி வந்து சேரும் டாக்டரிடம் போகலாம்என்றாள் மறுநாள் இருவரும் டாக்டரிடம் செல்வதற்குமுன்பங்கஜம் ஒரு மஞ்சள் கயிற்றை எடுத்து அகிலாவின் கழுத்தில் கட்டிவிட்டாள் டாக்டரிடம் நீ சீரழிந்ததை சொல்லாதேஉன் கணவர் வெளிநாட்டில் இருப்பதாக சொல் என்றாள்

மறுநாள் டாக்டரிடம் சென்றனர்அவர் செக் பண்ணி விட்டு நீங்கள் தாயாகப்போகிறீர்கள் இது தான் முதல் குழந்தையா என்றாள், ஆம் என்ற அகிலாவிடம் உன் கணவர் எங்கு வேலை செய்கிறார் என்றாள் அவர் வெளிநாட்டில். இருக்கிறார் என்று சொன்னாள்.

டாக்டர் பேபி நன்றாக உள்ளது நான் கொடுக்கும் டானிக் கையும் மாத்திரைகளையும் தவறாமல் சாப்பிடு டெலிவரி நார்மலாக இருக்கும் கவலைப்படாதே என்றுபிரிஸ்க்ருப்ஷன்எழுதி தந்தாள் தாயும் மகளும் மருந் துகளை வாங்கி க்கொண்டு வீட்டிற்கு வந்தனர் அகிலா தன்வங்கியில் சொல்லி சென்னைக்கே டிரான்ஸ்ஃபர் வாங்கி விட்டாள் காலம் காத்திருக்க வில்லை சிட்டாக ஓடிவிட்டது அபராஜிதா பிறந்து இன்று அவளுக்கு 10வயது ஆகிவிட்டது ஐந்தாம் வகுப்பு படிக்கிறாள் அகிலாவின் அம்மா மறைந்து ஆறு வருடங்கள் ஆகிவிட்டது.

இனிமேல் ஆத்மிகாவைப்பற்றி பார்ப்போம்.

ஆத்மிகாவின் அப்பாவிற்குபெண்ணுக்கு நிச்சயமான வரன் கை நழுவி விட்டதே இனி என்ன செய்யப்போகிறேன் அம்மாவுக்கு தான் பாவம் பண்ணியாச்சு வாழ்க்கைகொடுக்க வந்த வனுக்கும் அதே கதி தானா என்று மனைவியை நினைத்து இந்தப்பெண்ணை என் தலையில் கட்டிவிட்டு நீ நிம்மதியாக போய் சேர்ந்து விட்டாயே நான் எப்படி இவளை கரையேற்றப் போகிறேன் என்று வருத்தப்பட்டுகண்ணீர் வடித்தார்.

காலம் உருண்டோடி யது ஆத்மி காவுக்கு வரன் ஒன்றும் சரியாகவே அமையவில்லை ஜோதிடர்களும் இந்த பெண்ணுக்கு கல்யாணபிராப்தம்இப்போதைக்கு இல்லை கொஞ்சநாள் கழித்து தான் நல்ல வரனாக வரும் என்று சொல்லி விட்டார்கள்.

அந்தமாதம் ஆத்மிகாவின் அம்மாவின்நினைவு நாள் வந்தது அப்பா இந்த வருடம் அம்மாவின் நினைவு நாளுக்கு முதியோர் இல்லத்தில் போய் அன்னதானம் செய்யலாமா அப்பா என்றாள் உன்விருப்பம் அப்படி என்றால் தாராளமாக செய்யேன் சாப்பாடுசாம்பார்சாதம் புளியோதரை வெஜிடபுள் புலாவ் சர்க்கரைப் பொங்கல் தயிர்சாதம் இவை போறுமா இன்னும் வேண்டு மென்றால் ஆர்டர் கொடுத்து விடலாம் என்றார் இதுவே போதும்பா முதலில் இல்லத்திற்கு போய் பணம் கட்டி சொல்லி விட்டு வரலாம்பா நாளைக்கு போய் சொல்லிவிட்டு ஆர்டர் கொடுத்து விடலாம்மா என்றார்

ஆத்மிகா அவள் தாயாரின் நினைவுநாளுக்கு தாங்கள் இல்லத்தில் அன்னதானம் செய்வது பற்றி சொல்லிப் பணமும் அவள் அம்மாவின் பெயரில் கட்டி விட்டு வந்தாள்.

நினைவு நாளன்று அப்பாவும் பெண்ணும் போனார்கள் இவர்கள் ஆர்டர் செய்த சாப்பாடெல்லாம் பேக் பண்ணி வந்து விட்டதுஇருவரும் ஒவ்வோரு வருக்கும் சாப்பாடு பொட்டலம் கொடுத்துகொண்டே வந்தனர் அப்போது ஒரு இளைஞனும் எல்லோருக்கும் சாப்பாடு பொட்டலம் கொடுத்து வந்தான்.

மானேஜரிடம் சென்று பேசிக்கொண்டிருக்கும்போதுஅவர் அவராகவே அந்த இளைஞனை பற்றிஆத்மி காவின் அப்பாவிடம்இவரும் சிறிய தொழிலதிபர் தான் மாதாமாதம் இங்கு அன்னதானம் செய்து வருகிறார்அந்த இளைஞன் சிறிதுநேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு வேணு கோபாலிடம் தன்னுடைய விசிட்டிங் கார்டை கொடுத்துவிட்டு சென்றான்

முதியோர் இல்லத்தில் அவனை பார்த்ததிலிருந்து ஆத்மிகாவிற்குமனமே சரியில்லை அம்பரீஷ் இறந்து விட்டார் என்றார்களே அவரைப்போல்இருக்கும் இவர்யாரா இருக்கும் என்று மனதில் ஒரே குழப்பமாகவே இருந்தது அவளுடைய அப்பாவிற்கும் இதே குழப்பம்தான்மறுநாள் முதியோர் இல்ல மானேஜருக்கு போன் பண்ணிஅந்த இளைஞனைப் பற்றி கேட்டார் மானேஜர் நேரில் வாருங்கள் சொல்கிறேன் என்றார் இரண்டுநாள் கழித்து அந்தப்பக்கம் ஒரு வேலை இருந்து அது நிமித்தம் போகும்போது மானேஜரை சந்தித்தார் மானேஜர் வேணுகோபாலிடம் உங்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்டார் இவர் கொஞ்சம் தயங்கி கொண்டே அந்த இளைஞனைப் பற்றி கேட்டார்

ஆம் அவர்பெயர்அபிநந்தன் ரொம்ப நல்ல பையன் அனாதை ஆஸ்ரமத்தில் வளர்ந்தவன்தான்ஏதோ டிகிரி படித்து விட்டு சிறு தொழில் ஆரம்பித்து இன்று வளமையாக இருக்கிறான் என்றார் உடனே வேணுகோபால் அந்த பையனைப் பார்த்து பேச முடியுமா என்றார். ஓ பேசலாமே நான். போன் பண்ணி கேட்டு சொல்கிறேன்.

ஆடி வெள்ளிக்கிழமை அன்று ஆத்மி காவும் அவளுடைய அப்பாவும் ஆடி மாத வெள்ளிக்கிழமைஅம்மன்கோவிலுக்கு சென். றனர் அங்கு அம்மனிடம் எனக்கு எப்படியாவது அவரை மனமுடித்துவை என்று ஆத்மி கா மனப்பூர்வமாக வேண்டிக்கொண்டாள் தரிசனம் முடிந்து வெளியே வரும்போது எதிரே வரும் அபிநந்தனை பார்த்தார்கள் அவன் வேணுகோபாலைப்பார்த்து ஹலோ சௌக்யமா எப்படி இருக்கிறீர்கள் என்றான். அவனிடம் வேணுகோபால் நான் உங்களிடம் பேசவேண்டும் என் வீட்டிற்கு வருகிறீர்களா என கேட்டார்.

மறுநாள் வேணு கோபால் அபிநந்தனை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தார் சாயி டி .வி யில் விஷ்ணு சஹஸ்ரநாமம் பார்த்துக்கொண்டிருக்கும் போது காலிங்பெல்லில் குயிலின் இனிமையான சங்கீதம் கேட்டது எழுந்து போய் கதவை திறந்தார்.

வாங்க வாங்க வெல்கம் அபி! உள்ளே வந்ததும் அவர்கள் வீட்டு பிரம்மாண்டமான ஹாலை ஆச்சர்யமாக பார்த்தான் ஹாலின் சுவற்றில் இயற்கை காட்சிகளும். தஞ்சாவூரின் பிரசித்தி பெற்ற ஓவியங்களும் இடம்பெற்றிருந்தன ஜன்னல் திரைச்சீலைகளிலும்ராதா கிருஷ்ணர் ஓவியம்டணதுல்லியமாகவும் மிக அழகாக வும்இருந்தன

அபியை ஒருகுஷ்ஷன் சோபாவை காட்டி உட்காரச் சொன்னார் ஹாலின் நடுவில் இருந்த வெள்ளிப்பூண் போட்ட ஊஞ்சலில். வேணுஉட்கார்ந்து உள் அரையைப்பார்த்துஆத்மிகாவிடம் ஆப்பிள் ஜுஸ் எடுத்து வரச்சொன்னார்

உள்ளே இருந்து வந்த ஆத்மி கா அபியை வரவேற்றுஅவனிடம்எ ஜுஸைகொடுத்தாள் அவன்சாப்பிட்டுவிட்டு பிரமாதமாக இருக்குங்க தேங்க்ஸ் என்றான்

பிறகு வேணுவும் அபியும் பேசிக்கொண்டிருந்தார்கள் பேச்சின் நடுவில் வேணு கேட்டார். தப்பாக எடுத்துக் கொள்ளாதீர்கள் உங்கள் அப்பா அம்மாவைப் பற்றி ஏதாவது தெரியுமா ?

அபி தப்பாக எடுத்துக்கொள்ள ஒன்றுமில்லை சார். அப்போது எனக்கு 3 வயதுஇருக்கலாம். நான் என்பெற்றோருடன் ஏதோ திருவிழாவில் வழி தவறி விட்டேன்யாரோ என்னை உன் பெயரென்ன என்றார் அப்போ எனக்கு 3வயதிருக்லாம் நான் நன்றாக பேசுவேன் அவர்கேட்டதற்கு நான் அபினந்த்என்றேன்உன் பெற்றோர் பெயரென்ன நீ எங்கிருந்து வந்தாய் என்றார் எனக்கு விபரமாக சொல்ல தெரியவில்லை அம்மா என்று அழுதேன். என்னை கேள்வி கேட்டவர் போலீஸ் உடையில் இருந்தார்.

என்னிடமிருந்து எந்த பதிலும் வராததால் அவர் ஒரு வாரம் பார்த்துவிட்டு என்னைத் தேடிக்கொண்டு யாரும் வராததால் என்னை ஒர் ஆஸ்ரமத்தில் கொண்டு விட்டு விட்டார்.

அங்குதான் நான் வளர்ந்தேன்அங்கிருந்தே படித்து ஒரு டிகிரி வாங்கியவுடன் எனக்கு ஒருபெரிய ஆட்டோ மொபைல் கம்பெனியில் வேலைக்கிடைத்து விட்டது பிறகு நான் ஆஸ்ரமத்தை விட்டு வேறு இடத்தில் வாடகைக்கு போய் தங்கினேன்

என்னுடைய கடுமையான முயற்சி யால் இன்று எனக்கு இரண்டு ஆட்டோ மொபைல் கம்பெனிகள் உள்ளது என்றான் வேணு வேறு சில விஷயங்கள் பற்றி பேசினார்பேச்சில் வேணு அபியிடம் உங்களுக்கு திருமணமாகிவிட்டதா? என கேட்டார்

என்ன சார் நீங்க இப்பதான் நான் தொழிலில் முன்னேறிவந்துள்ளேன் திருமணம் பற்றி நினைக்க எனக்கே து நேரம் மேலும் நான் யாருமற்ற வன் எனக்கு யார் பெண்தருவார்கள்என்னைபற்றி சொல்லி எனக்கு பெண் கேட்க யாருமில்லையே என்றான்

அதில்லைப்பா எனக்கும் ஒரு பெண் இருக்கிறாள் அவளுக்கு உன்னை பார்க்கலாம் என்று தான் கேட்டேன்உனக்கு ஆத்மிகாவை பிடித்திருந்தால் மேற்கொண்டு பேசலாமென்றுதான்……என்று இழுத்தார்கள் கண்களில் மலர்ச்சி தெரிந்ததும் வேணு தொடர்ந்து பேசலானார் ஆத்மி காவும் படித்தவள்தான் M.S.C படித்திருக்கிறாள் இனிமையாக பாடுவாள் என்ன? வேலைக்கு போகவில்லை நான் வேண்டாமென சொல்லிவிட்டேன் எனக்கு பெரிய exports Pvtcompany இருக்கிறது. நிறைய பணம் பார்த்தாச்சு எனக்கு இந்தபெண்ணை ஒருவனிடம் ஒப்படைத்து விட்டால் போலும் என் கவலையெல்லாம் தீர்ந்துவிடும் என்றார்.

கடவுளின் கருணை இருந்தால் நடக்கட்டும் என்றான் அபி என்னப்பா சொல்கிறாய் ஆத்மிகாவை உனக்கு பிடித்துள்ளதாஎன்று கேட்டார் அபி உங்கள் பெண்ணை கேளுங்கள் அவளுக்கு இஷ்டமானால் நானும் ரெடி என்றான்

பிறகென்ன ஆத்மிகா நினைத்தபடி அம்மனின் கருணை அவர்களுக்குஇருந்தது அபியிடம் அவன்ஜாதகமெல்லாம் இல்லாததால் அம்மன் கோவிலில் சென்று விளக்கேற்றி பூ போட்டு பார்த்தார்கள் நல்லசகுனம் கிடைத்தது அடுத்தமாதமே நிச்சயத்துடன் திருமணமே வெகு விமரிசையாக நடந்தது.

திருமணம் முடிந்து இருவரும் ஹனிமூன் கொடைக்கானல் 10 நாட்கள் சென்று வந்தனர்.

ஒருநாள் வேணுகோபால் அபியிடம் நான் ஒன்று சொல்கிறேன் ஒத்துக்கொள்வீர்களா என்றார் சொல்லுங்கள் மாமா இனி எனக்கு எல்லாமே நீங்களூம் ஆத்மி காவும் தான் என்றான்ஒன்றுமில்ல மாப்பிள்ளை எனக்கு ஒரு எண்ணம் ஆசையென்றே வைத்துக் கொள்ளுங்களேன்.

அதாவது எப்படிச் சொல்வதென்று தெரியவில்லை என்றார் எதுவாக இருந்தாலும் சொல்லுங்களா மாமா இனி நான் மறு பேச்சு பேசமாட்டேன் என்றான்அபினந்த் வேணு தொண்டையை கணைத்துக் கொண்டார். ஒன்றுமில்லை இனி நீங்கள் என் இல்லை நம் வீட்டிலேயே நாம் எல்லோரும் ஒன்றாக இருக்கலாம் என்றுதான் என்றார்.

அதற்கென்ன மாமா தாராளமாய் இருக்கலாமேஎன்றான் அப்பநீங்கள்இருக்கும் வீட்டை காலி செய்து கொண்டுநம் வீட்டோடு வந்துவிடுங்கள் என்றார்.

இதையெல்லாம் ஆத்மிகா. தன்வாழ்க்கையில் நடந்ததை இறந்த காலத்தை நினைத்து நினைத்து பார்கிறாள்.

அப்போது வாசல்போர்டிகோவில். கார் வந்து நிற்கும் ஓசை கேடகிறதுமறந்தே விட்டேனே அநாமிகாவுக்கு டிஃபன் ஏதும் செய்யவில்லையேஎன்று கிச்சனுக்குள் போகிறாள் அநாமிகா உள்ளே வந்தவள் தாத்தாவை பார்க்க அவரோட பெட்ரூமில் நுழைகிறாள். அவர் அங்கு இல்லாததைக் கண்டு பாத்ரூமில் தேடுகிறாள். வீடு முழுக்கத் தேடியும் அவர் இல்லாததால் அம்மாவிடம் தாத்தா எங்கேம்மா என்கிறாள் ஆத்மிகா சொல்கிறாள், உன் தாத்தா ஊருக்கு போயாச்சே உன்னிடம் அவர் சொல்லவில்லையா? என்கிறாள் எந்த ஊருக்கும்மாபோயிருக்கார் என கேட்கிறாள். அவர் காசி கயா ஹரித்வார் துவாரகா ரிஷீகேஷ் என்று யாத்திரை சென்றுவிட்டார் எப்பம்மா தாத்தா வருவார் எனக்கே தெரியாது பல நாட்கள் ஆகும் போல என்கிறாள்.

அம்பரீஷ் போன துக்கத்திலிருந்து அருணாசலமும் சரோஜாவும் இன்னும் மீளவில்லைஒழுங்காக சாப்பிடாமல் தூங்காமல் இருவரூம் நொந்து நூடூல்ஸாக போய்விட்டார்கள்ஒருநாள் சுகம் கிளினிக் கிலிருந்து அவர்கள்வீட்டிற்கு போன் வருகிறதுவேலையாள் தான் போனை எடுத்தான் ஹலோ யாருங்க பேசுறது எங்கிட்டிருந்து பேசுறீங்க என்றான் . அவர்கள் சொன்னது அவனுக்கு புரியவில்ல ஃபோனை வைத்து விட்டான். திரும்பவும் 10 நிமிடம் கழித்து மீண்டும் போன் அடித்தது அடித்துக்கொண்டே இருந்தது

அருணாசலம் மெதுவாக எழுந்து போய்போனை எடுத்தார் சுகம் கிளினிக் கிலிருந்து பேசுகிறோம் உங்கள் பையன் பேரு அம்பரீஷா என்றது கூரல் இவர் காதில் வாங்கிக் கொண்டு பேசு வதற்குள் போன் கட் ஆகி விட்டது ஒரு மணி நேரம் கழித்து வாசலில் கார் வந்து நின்றது யார் வருகிறார்கள் என சரோஜா எட்டிப்பார்தாள்: யாரோ முகம் தெரியாதவர் ஒருவர் உள்ளே வந்தார்இங்க மிஸ்டர் அருணாசலம் என்பவரை பார்கணும் என்றார்உடனே அருணாசலம் வெளியே வந்து நீங்கள் யார் உங்களுக்கு என்ன வேண்டும் என்றார் அவரை பார்த்ததும் டேய் அருணன் நீதான் அருணாசலமா என்னை நினைவு இருக்காஉனக்கு என்றார் முன்னவர் ஒன்றும் புரியாமல் விழித்தார் டேய் அருணன் நான் தியாகு உன்னுடன் படித்தவன்டாஅவரைகிட்டபோய் பார்த்த அருணாசலம் என்கிற அருணன்டேய் தியாகு நீ எப்படி டா இருக்க எங்கே இருக்க என்றார் உடனே நண்பர்கள் இருவரும் தங்களுடைய இளமைப் பருவம் தாங்கள் சென்னையில் நியூ காலேஜில் B.A படித்து இருவரும் பட்டம் வாங்கியது அவரவர் பிழைப்பிற்கு வெவ்வேறு ஊர்களுக்கு சென்றது என்று எல்லா சமாஜாரமும் பேசி முடித்து விட்டு இரு வரேன் என்ற அருணன் வீட்டுக்கு உள்ளே போய் சரோ ஒரு கப் காஃபி கொண்டாயேன் என்னுடைய பால்ய நண்பன் வந்துள்ளான். தியாகு அவனைப்பற்றி உன்னிடம் அடிக்கடி சொல்வேனே நினைவிருக்கிறதா என்றார். காஃபியை எடுத்துக்கொண்டு வெளியே வந்த சரோஜா தியாகுவிடம்கொடுத்தாள் . அவர் ஒரு வாய் பருகியதும் முகம் சுருக்கினார் ஏண்டா உனக்குகாஃபி பிடிக்காதா!

சின்ன வயதில் உனக்கு காஃபின்னா உயிராச்சே . இதில் சர்க்கரை போடவில்லையா? என்றார் . அவளுக்கு பிள்ளையை பறிகொடுத்ததிலிருந்து எதுவுமே ஒழுங்காக வேலை செய்வதில்லை என்றார். உன் பிள்ளையா எப்ப எங்கே பறி கொடுத்தீர்கள் என்றார் . அது தான் சமயமென்று சரோஜா மடைதிறந்த வெள்ளம் போல் எல்லாவற்றையும் சொல்லி அழுதாள். சிறிது நேரம் மௌனம் நிலவியது. உன்னை பார்த்ததில் வந்த வேலையே மறந்து விட்டது என்றார் தியாகு

அதுசரி இந்த வீட்டில் அம்பரீஷ் என்பது யார் என்னுடைய பையன்அவனைத்தான் சென்றமாதம். எமனுக்கு தாரை. வார்த்து கொடுத்தாச்சே இப்ப என்ன அதுக்கு என்றார் அருணன்அடப்பாவி அம்பரீஷ் என்பது உன் பிள்ளையா அவன் சாகவில்லையடா உயிருடன்தான் இருக்கிறான் என்றார் தியாகு எங்கே எங்கேயிருக்கான் என்பிள்ளை என்று இருவரும் சேர்ந்து கேட்டார்கள். அங்கு ஒரே அழுகையும் ஆச்சரியமும் சேர்ந்து ஒரே அமர்களமாக இருந்தது.

சொல்லுடா தியாகு என்பிள்ளையை எங்கே. பார்த்தாய். அவனை அழைத்து வரக்கூடாதா என்றார் அருணன்சுகம் கிளினிக் கிலிருந்து உன்வீட்டிற்கு2,3 தடவை போன் செய்தும் நீங்கள் எடுக்கவில்லை . அதனால் நானே நேரில் வந்தேன்.

உன்பிள்ளை ஆஸ்பத்திரியில் ICU வில் 20 நாட்களாக அட்மிட் ஆகி நினைவு தப்பி பிழைப்பதே கஷ்டம் என்றாகி இப்பதான் 5 நாட்களாக ICU வை விட்டு ஆர்டினரி வார்டில் போட்டுள்ளார்கள் என்றா அருணாசலமும் சரோஜாவும் ஆவென்று வாய் பிளந்தனர். சரோ உடனே என் தெய்வம் என்னை கைவிடாது என்றேனே பார்த்தீர்களா நம்பிள்ளை கண்டிப்பாக நம்மிடமே வந்து விடுவான் பாருங்கள் என்று ஆனந்த கண்ணீர் வடித்தாள். எல்லோரும் தியாகு வோடள காரில் ஆஸ்பத்திரிக்கு போனார்கள்அங்கு ஆர்டினரி வார்டில் அம்பரீஷ் படுத்துக் கொண்டிருந்தான். இவர்களைப் பார்த்தவுடன் எழுந்து உட்கார்ந்தான் தியாகுஅவனிடம் உடம்பு இப்ப எப்படி இருக்கு நெற்றி காயம் பிளாஸ்டர் பிரிச்சாச்சா என்று கேட்டுக்கொண்டே அருணாசலத்தையும் சரோவையும் காட்டி இவர்கள் யார் தெரிகிறதா என்றார் தெரியும் ஆங்கிள் என்னைபெற்றவர்கள் என்றான்டாக்டர் வந்து பார்த்துவிட்டு. இரண்டு நாளில் டிஸ்சார்ஜ் செய்துவிடலாம். என்றார் அப்ப அருணன் நீயும் சரோவும் வீட்டிற்கு போங்கள் இரண்டுநாள் கழித்து அம்பரீஷை நான் அழைத்து வருகிறேன் என்றார் தியாகு. அப்போது அம்பரீஷிடம்மிருந்து முனகல் சத்தம் கிட்ட போய் பார்த்தால் அகிலா. அகிலா என்ற பெயர் கேட்டது தூக்கத்தில் உளருகிறான் என்றார்அருணன் தியாகுவுக்கு நம்பிக்கை இல்லை அவனுடைய ரூமில் உள்ள அலமாரியில் போய் குடைந்தார் அங்கே ஒரு சிறிய டைரி இருந்தது அதில் ஒரு பக்கம் முழூதூம் அகிலா அகிலா என்று எழுதி இருந்தான் அம்பரீஷ்அதில்அகிலா வின் வீட்டு முகவரி யும் விலாச மும் இருந்ததுதியாகு அதை நோட் பண்ணிக் கொண்டார்

அன்று மாலை அம்பரீஷிடம் தியாகு பேச்சுக்கொடுத்துபார்த்தார் அப்போ அகிலா இங்க வா என்றார் உடனே அவன் உள்ளே எட்டிப்பார்த்தான்ஆமா உனக்கும் அகிலாவிற்கும் என்ன உறவு நட்புவழியிலா வேறே ஏதாவதாஎன்றதியாகு அம்பரீஷை யேஒத்து பார்த்தார் அவன் முகத்தில் வெட்கத்தில் சாயல் தான் தெரிந்தது அவருக்கு புரிந்து விட்டது இது லவ் மேட்டர் என்று சிறிது இடைவெளி விட்டுதியாகுவே பேசினார் உனக்குஇவளிடம் லவ்வாக இருந்தால் என்னிடம் மனசை விட்டு சொல்நான் அகிலாவுடன் உன்னை சேர்த்து வைக்கிறேன்என்றார்உடனே அவன் முகம் மலர்ந்தது ஆம் ஆங்கிள் நான் அகிலாவை மனதில் விரும்பினேன் ஆனால் அவளுக்கு நான் துரோகம் செய்து விட்டேன் என்று விம்மினான் அவனால் அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை தியாகு அவனை தட்டிக்கொடுத்தார் கவலைப்படாதே மகனே நான் இருக்கிறேன் உனக்கு இதெல்லாம் அருணாசலம் சரோஜாவிற்கு தெரியாதுஅவர்களிடம்தியாகு சொல்லவில்லை அந்தவாரமே ஒருநாள் அவர் அகிலாவை தேடுவதற்கு சேலம் சென்றார் ஆம் அங்கு தான் அகிலா அம்பரீஷின்காதல் மலர்ந்த இடம்சேலம் முழுக்க கடைந்தெடுத்துப்பார்த்தும் அகிலாவை கண்டுபிடிக்க முடியவில்லை அவள் வேலை செய்த வங்கியிலும்கேட்டாச்சு அவள் மாற்றல் வாங்கிக் கோண்டுபௌய்11 வருடமாகிவிட்டது என்றனர்.

ஓஹோ அப்போ அகிலா இந்த சென்னை சமுத்திரத்தில் தான் இருக்கணும்என்கண்ணில் படாமல் போகமாட்டாள் என்று மனதை சமாதானம் செய்துகொண்டார்அம்பரீஷுக்குஎன்னபதில் சொல்வதுஇப்படியே 3 வருடம் ஓடிவிட்டது எங்குமே அகிலாவை பார்க்க முடியவில்லைமனது நொந்து கொண்டிருக்கையில் ஒரு நாள் சரோவுக்குபாத்ரூமில் வழுக்கி காலில் அடிபட்டு ஆஸ்பத்திரிக்கு தூக்கி சென்று ஆனால் அவளுக்கு வலதுபக்கம் சுவாதீனமில்லாமல் போய்விட்டது டாக்டர் அவங்களுக்கு பெரிய அதிர்ச்சிதான் காரணம் 24 மணிநேரம் போனால் தான் சொல்லமுடியும் என்று சொல்லிவிட்டார்.

ஒருபக்கம் அம்பரீஷைப்பற்றி கவலை யென்றால் மறுபக்கம் சரோஜா வைப்பற்றிய கவலை அருணாசலமும் ரொம்ப நொந்து போய்விட்டார் ஏற்கெனவே அவர் ஹார்ட் பேஷண்ட்வேறு மறு நாள் காலை ஆஸ்பத்திரியிலிருந்து போன் வந்து விட்டது சரோஜா வின் மரணம் பற்றி இதை எப்படி அருணனிடம் சொல்வது என்று தியாகு யோசித்து கொண்டிருக்கையில் அப்பா வென்று அம்பரீஷின்குரல்உடனே தியாகு ஓடிப்போய் பார்த்தால் அருணனின் தலை சாய்ந்து விட்டது.

அருணாசலமும் சரோஜாவும் மறைந்து 2,3 மாதங்கள் ஆகிவிட்டன அப்பநான் கிளம்பவாஅம்பரீஷா என்றார் தியாகுஎன்ன அங்கிள் இப்படி சொல்றீங்க எனக்கு யாரும்இல்லை பெற்றவர்களும் என்ன விட்டு போய் விட்டனர் நீங்கள்தான் எனக்கு உயிர் கொடுத்தவரே நீங்களும் என்னைவிட்டு போனால் எப்படி அங்கிள் மேலும் நீங்கள் அகிலாவுடன் என்னை சேர்த்து வைப்பதாக எனக்கு வாக்கு கொடுத்தீர்களல்லவா அதுக்கு என்ன பதில் என்றான்.

தியாகுவும் யோசித்துபார்த்தார் ஆம் நீ சொல்வதும் சரியே எனக்கும் வயதாகி விட்டது இனி நான் யாருக்காக வாழவேண்டும் என்றார் உடனே அவருடைய வாயை தன் கையால் பொத்தினான் அம்பரீஷ்.

சரி அந்த வீட்டை வேறு பூட்டி ரொம்ப நாளாச்சே அதை என்னபண்ணுவது அங்கிள் தப்பாக எடுத்துக் கொள்ளாதீர்கள்இனி இந்த வீடு நம்வீடு அந்த வீட்டை விற்று பணத்தை பாங்கில் போடுங்கள் உங்களுக்கு நான் இருக்கிறேன் கடைசி வரை என்னுடனேயே இருங்கள் நான்இருக்கிறேன் உங்கள்பிள்ளையாக என் கடமையை செய்வேன் அங்கிள் என்றான்: அவர் ஒரு தீர்மானத்திற்கு வந்தார் ஆம் அவருடைய வீட்டை விற்று அந்த பணத்தை வங்கி யில் போட்டு வரும் வட்டியைஅம்பரீஷிடம் கொடுத்துவிட்டு அவனுடனேயே இருந்து விடலாம் என்று நினைத்து வீட்டை விற்ப்பதற்கு ஏற்பாடு செய்தார்: ஆம் அவருக்கு இனி யார் இருக்கிறார்கள் அம்பரீஷை தவிர.

தியாகு வீட்டை விற்பனை செய்ததால் அவ்வளவு பணத்தையும் வங்கியில் போடமுடியுமா கொஞ்சம் கொஞ்சமாக போடலாமா என்று விசாரிக்க வங்கிக்கு சென்றார். அங்கு கௌண்டரில் அகிலா இருப்பதை பார்த்துவிட்டார் எப்போதும்தன் சட்டை பாக்கெட்டில் வைத்திருக்கும் அகிலாவின் போட்டோவை எடுத்து அவளுடன் பொருத்திப் பார்த்தார்துல்யமாக அகிலாவைப்போலவே இருந்ததுவங்கியில் விசாரித்துவிட்டு அங்கேயே அமர்ந்திருந்தார் லஞ்ச் டைமில் எல்லோரும் சாப்பிடகிளம்பினார்கள் அகிலாவும் கிளம்பினாள். அவள் வெளியே வந்ததும் தியாகுவும் அவளுடன் வந்தார் நீங்க யாரு சார் உங்களுக்கு என்ன வேண்டும் என்றாள் உன்னிடம் கொஞ்சம் பேசணும் என்றார் என்ன சார் நீங்க நீங்க யாருண்ணே எனக்கு தெரியாது என்னிடம் என்ன பேசப்போறீங்க.

உனக்கு என்னை தெரியா துஆனால் எனக்கு உன்னை தெரியும்மா அப்படியா அப்ப விஷயத்தை சொல்லுங்க.

உன்னை பெயர் சொல்லிக்கூப்பிடலாமா ? தாராளமாக கூப்பிடுங்க நீங்க என்னைவிட பெரியவரல்லவா என்றாள்: அப்பசரிம்மா உன் கணவர் எங்கிருக்கிறார்வெளிநிட்டில் வேலை செய்கிறார்என்றாள் வெளிநாடு ண்ணா எங்க எந்த நாட்டில் அகிலா மௌனமாக இருந்தாள் தப்பாக எடுத்துக்கொளாளாதேம்மா உன் முகமே சொல்கிறதேவாழ்க்கையில் ஏதோ பிரச்சினை என்று.

என்னிடம் மனம் விட்டு சொல்லம்மா உன் வாழ்க்கையில் அக்கரை எடுத்துக் கொண்டு உன் கணவருடன் உன்னை சேர்த்து வைக்கிறேன் அவன் இந்த சென்னையில் தான் இருக்கிறான் என்றார்.

உடனே அகிலாவின் முகத்தில் மலர்ச்சி யும் ஆச்சர்யமும் தெரிந்ததுஇப்ப வேண்டாம் உனக்கு நேரம் கிடைக்கும் போது சொன்னால் போதும் என்றார்.

இன்று மாலை என்வீட்டிற்கு வாருங்கள் சுமார் 6 மணிக்கு சந்திக்கலாம் ஏன்றாள மாலைமணி6.15 கு தியாகு அகிலா கொடுத்த விலாஸத்தைபார்த்துஅந்த விலாஸ பேப்பரை தன் பாக்கெட்டில் வைத்துக்கோண்டு கிளம்பினார்: காலிங் பெல்லின் சத்தம் கேட்டு அபராஜிதா கதவை திறந்தாள் யாரோ வயதானவர் நிற்பதை பார்த்துவிட்டு உள்ளே போய் அவள் அம்மாவிடம் யாரோ ஒரு தாத்தா வந்திருக்கிறார் என்றாள் உடனே அகிலா வேக மாக வெளியே வந்து பார்த்து வாங்க வாங்க என வரவேற்று உள்ளே அழைத்து போய் சோஃபாவில் உட்கார வைத்து தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தாள் காஃபி சாப்பிடுறீங்களா? என்று காபியும் கொண்டு வந்து கொடுத்தாள் பிறகு ஆத்மிகாவை ஏதோ வேலையாக வெளியே அனுப்பிவிட்டு தியாகுவிடம் தன்கதையைசொன்னாள் இந்த பெண் யார் என்றார். தியாகு அவள்தான் எனக்கும் அம்பரீஷுக்கும் பிறந்தவள் என்றாள் தான் வாழ்க்கையில் மிகவும் கஷ்டப்பட்டு விட்டேன் என்பெண்ணிடம்கூட உன் அப்பா வெளிநாட்டில் வேலை பார்க்கிறார் என்றுதான் கூறியுள்ளேன் என்றாள் சிறிது மௌனத்திற்கு பிறகு தியாகு வாய் திறந்தார்.

அகிலா நீ என்பெண்போலதான் அம்பரீஷுடன் உன்னை கண்டிப்பாய்சேர்த்து வைக்கிறேன் என்னை நீ நம்பலாம் என்றார் அப்போது அபராஜிதா வந்தாள் தியாகு அவளிடம் உன் பெயரென்னம்மா என்றார்அபராஜிதா என்றாள் நீ என்ன படிக்கிறார் 10 th படிக்கிறேன் என்றாள்.

அகிலாவை பார்த்து சரி ம்மா பிறகு பார்க்கலாம் என விடை பெற்று சென்றார்

ஒருவாரம் ஓடிவிட்டது. அவருடைய வீடு விலை போய் விட்டது கையில் கிடைத்த பணத்தை வங்கி யில் போடவேண்டும் அவர் அம்பரீஷை. தன்னுடன் வங்கி க்கு வருமாறு கூப்பிட்டார் அவன் இன்னிக்கு சென்னை கிளையிலுள்ள தன் கம்பெனிக்கு அவசியம் போகவேண்டுமே அங்கிள் என்றான் ஒரு மணி நேரம் எனக்காக ஒதுக்கு வங்கியில் பணம் கட்டி விட்டுபோகலாம் என்றார்.

சரி என்று அவனும் வந்தான்இருவரும் வங்கியில் செக்கை மாற்றியதும் அம்பரீஷ் அங்கிருந்த நாற்காலி யில் உட்கார்ந்து விட்டான் அப்போ தியாகு அகிலா விடம் அதோபார் என்றார் அவர் கை காட்டிய இடத்தில் உட்கார்ந்திருந்தவனைபார்த்து ஆச்சர்யமாக வாயைப்பிளந்தாள். அவர் நீ ஒன் அவர் பர்மிஷன் போட்டு விட்டு வா என்றார். அவளும் சரி யென்று 1/2 நாள் லீவு போட்டு வந்தாள்மூவரும். பக்கத்தில் உள்ள பூங்காவிற்கு வந்தனர் தியாகு அவர்கள் இருவரையும் தனியே மனம் விட்டுபேசப் சொல்லிவிட்டு வெளியே வந்து விட்டார். அம்பரீஷ் தான் முதலில் பேசினான். அகிலா உனக்கு என்மேல் ரொம்ப கோபமிருக்கும் ஆம் கோபம் வராமல் எப்படியிருக்கும் நல்லவர்மாதிரி என்னுடன் பழகி என்னை நம்ப வைத்து என் வயிற்றிலும் உங்கள் அடையாளத்தை பதித்துவிட்டு எனக்கு துரோகம் செய்துவிட்டு தப்பி ஓடி விட்டீர்கள்.

நான் உனக்கு செய்த துரோகத்திற்கு நன்றாக கஷ்டப்பட்டு விட்டேன் . இனி உன்னை விட்டுப் ஒரு நாளும் போகமாட்டேன் என்றான் எப்படி நம்புவது நம்முடைய பெண்மேல் சாட்சியாக சத்தியம் செய்யுங்கள் என்றாள்நமக்கு பெண் இருக்கிறாளா பெயர் என்ன வைத்தூள்ளாய் என்றான் அது அப்புறம் சொல்கிறேன் முதலில் இனி எந்நாளும் உன்னை கை விட மாட்டேன் என்று சத்தியம் செய்யுங்கள் என்றாள்அதன்படி அவனும் சத்தியம் செய்தான்.

இருவரும் பேசிக்கொண்டே வரூம்போதுஎதிரேஆத்மிகாவும் அபிநந்தனும் பூங்காவை நோக்கி வந்தனர்அம்பரீஷும் அபிநந்தனும் ஒருவரை யொருவர் புரிந்து கொண்டு ஒருவரையொருவர் தழுவிக் கொண்டனர் அப்ப ஆத்மிகாவிடம் அகிலா அம்பரீஷை க்காட்டி இவர்தான் என் கணவர் என்றாள்.

அதற்குள் தியாகுவும் வந்து விட்டார்: நால்வரும் பேசிக் கொண்டே அம்பரீஷின் வீட்டை அடைந்தனர். தியாகு சொன்னார், நாளை வெள்ளிக்கிழமை நல்ல முகூர்த்தநாளாக இருக்கு அம்மன் கோவிலிலும் சொல்லிவிட்டேன். நாளை நாம் எல்லோரும் அம்மன் சந்நிதானத்திற்கு சென்று அகிலா அம்பரீஷின் திருமணத்தை நடத்திவிடுவோம். நாளை அம்மனுக்கு அபிஷேகத்திற்கு பணம் கட்டியுள்ளேன். அது முடிந்ததும் இருவரும் மாலை மாற்றிக்கொள்வார்கள். அம்பரீஷ் அகிலாவின் சங்கு கழுத்தில் தாலிகட்டிவிடட்டும் என்றார்.

மறுநாள் கோவிலில் அபிஷேகத்திற்குமுன்னாடியே நல்ல நேரத்தில் அம்பரீஷ் அகிலாவின் சங்கு கழுத்தில் தாலி கட்டினான். அந்த சடங்கு முடிந்ததும் அபிஷேகத்தின் போது அபராஜிதாவையும் அநாமிகாவையும் தியாகராஜன் அவர்களுடைய தாத்தா அழைத்து வந்தார் அவர் அபராஜிதா இதுதான் உன் அப்பா என்றார். ஆச்சரியத்தில் அபராஜிதா அப்பாவை கட்டிக்கொண்டாள். ஏன்பா இத்தனைநாளா என்னை பார்க்க வரவில்லை. நான் அப்பாவுக்காக எவ்வளவு ஏங்கினேன் தெரியுமா என்றாள். நான்தான் உன்னைப் பார்க்க ஓடி வந்து விட்டேனேடி கண்ணா. எனக்கு இவ்வளவு நாளாக கான்ட்டிராக்ட் முடியவில்லை, விசாவும் கிடைக்கல. போனவாரம் தான் கிடைத்தது என்றான். எப்படியோ ஆண்டவன் என் அப்பாவை என்னிடம் சேர்த்துவிட்டான். இத்தனை நாள் அந்தரத்து ஊஞ்சலாக இருந்த நம் வாழ்க்கை இன்று நல்ல ஸ்ட்ராங்கான ஊஞ்சலாக மாறிவிட்டது. இனி எல்லாம் சுகமே என்று அபராஜிதா அவளுடைய அப்பா அம்மா இருவரின் கழுத்தைக் கட்டிக்கொண்டு ஆனந்தமாக சிரித்தபடியே சொன்னாள்

இனி எல்லாம் சுகமே.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *