அந்தப் பொண்ணு வேணவே வேணாங்க…

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 14, 2020
பார்வையிட்டோர்: 6,167 
 
 

அத்தியாயம்-1 | அத்தியாயம்-2

வேலனூரில் முருகனுக்கு கும்பாபிஷேகம் முடிந்தது.மற்ற உறவுக்காரங்களுடன் கூட உணவு அருந்தி விட்டு ராஜலிங்கமும் லலிதாவும் பேசிக் கொண்டு இருந்தார்கள்
‘ஏண்டா ராஜ்,சுதாவுக்கு இந்த வருஷமாவது கல்யாணம் பண்ணப் போறயா இல்லையா” என்று கேட்டாள் ராஜலிங்கத்தின் அக்கா மரகதம்.

“நானே இந்த கும்பாபிஷேகம் ஆவட்டும்,அப்புறமா சொல்லலாம்ன்னு தான் காத்துக் கிட்டு இருக்கேன் அக்கா.போன வாரம் தான் சுதா காதலிக்கற பையன் சுரேஷ்,அவன் அப்பா அம்மாவுடன் வந்து நம் சுதாவை ‘பொண்னு பாக்க’ வந்தாங்க.அப்பவே பையன் அப்பா ‘எனக்கு பொண்ணு பிடிச்சு இருக்குன்னு’ சொல்லிட்டாரு.ஆனா அந்த அம்மா மட்டும் வந்ததில் இருந்து ரொம்ப நேரம் நம்ம லலிதாவையே வச்ச கண் வாங்காம பாத்துக் கிட்டு இருந்தாங்க.பிறவு ‘நாங்க வீட்டுக்குப் போய் கலந்து பேசி முடிவு சொல்றோம்’ன்னு சொல்லிட்டுப் போயிட்டாங்க.வீட்டுக்கு போனவுடன் அந்த அம்மா தான் ‘போனில்’ மொட்டையா ‘எங்களுக்கு பெண்ணைப் பிடிக்கலீங்கன்னு’ சொன்னாங்க” என்று சொல்லும் போது ராஜலிம்கம் கண்களில் நீர் துளித்தது.

தன் கண்களைத் துடைத்துக் கொன்டே”நான் அவருக்கு ‘போன்’ பண்ணி ‘நாங்க அடுத்த வாரம் நேர்லே வந்து உங்களே பாக்கறேங்க’ன்னு சொலிட்டு விட்டு வந்து இருக்கேன் அக்கா”என்று சொன்னார் ராஜலிங்கம்.“பையனுக்கு அம்மா அப்படியா சொல்லிட்டாங்க.சா¢ விடு.இந்த இடம் இல்லீ ன்னா என்ன வேறு நல்ல இடம் நமக்குக் கிடைக்காமலா போய் விடும் ராஜ்” என்றாள் மரதகம்.

“அது இல்லேக்கா.சுதாவும் அந்த பையனும் ஒருத்தரே ஒருத்தர் மனசார விரும்புறாங்க.இவங்க கல்யாணத்தை எப்படியாவது முடிக்கணும்.அவங்க என்ன காரணம் சொல்றாங்கன்னு நான் கேட்டு தொ¢ஞ்சுக் கிட்டு வந்து,எப்படியாவது இவங்க ரெண்டு பேருடைய கல்யாணத்தை முடிக்கணும். சுதாவைப் பார்க்க எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு” என்றார் ராஜலிங்கம் கண்களில் நீர் தளும்ப.

அவர் குரலில் ஆழ்ந்த வருத்தம் தொ¢ந்தது. இவங்க ரெண்டு பேரும் பேசுவதையே கவனித்துக் கொண்டு இருந்தாள் சின்ன அக்கா பார்வதி.

கொஞ்ச நேரம் யோஜனைப் பண்ணிக் கொண்டு இருந்த மரகதம். தன் தங்கை பார்வதியை பார்த்து “ஏன் பார்வதி,உனக்குத் தான் சென்னை ரொம்ப பழக்கம் ஆச்சே.நீ ராஜ் கிட்டே அந்த அம்மா விலாசத்தே விசாரிச்சுகிட்டு அவங்க வூட்டுக்குப் போய்,அந்த அம்மாவைப் பாத்து. “நீங்க சுதாவை ஏன் பிடிக்கலேன்னு சொன்னீங்கன்னு என்கிற காரணத்தைக் கேட்டுக்கிட்டு வாயேன்”என்று சொன்னாள் மரகதம்.

உடனே பார்வதி தன் தம்பி ராஜ்ஜைப் பார்த்து “சா¢ ராஜ்,அக்கா சொல்றா மாதிரி,அவங்க விலாச த்தே நீ எனக்கு குடு.நான் சென்னைக்குப் போய்,அந்த அம்மா கிட்டே கொஞ்சம் நேரம் பேசி கிட்டு இருந்து விட்டு, அவங்க சுதா வேணாம்ன்னு சொன்ன காரணத்தை வறேன்” என்று சொன்னதும், ராஜலிங்கம் காஞ்சனா வீட்டு ‘அடரஸ்ஸை’ பார்வதியிடம் கொடுத்தார்.

முருகன் கும்பாபிஷேகத்தை எல்லாம் நல்லபடியா முடித்துக் கொண்டு ராஜலிங்கம் தன் குடுமபத்தோடு சென்னைக்கு வந்தார்.

ஒரு வாரம் போனதும் பார்வதி வேலனுரை விட்டு கிளம்பி சென்னைக்கு வந்து தம்பி ராஜ லிங்கம் வீட்டுக்கு வந்தாள்.ரெண்டு நாள் ஓய்வு எடுத்துக் கொண்டு பார்வது தம்பி ராஜலிங்கத்தைப் பார்த்து “ராஜ்,நான் அந்த அம்மா வீட்டுக்குப் போய், கேட்டுக் கிட்டு வாறேன்” என்று சொன்னதும் ராஜ் “அக்கா,கொஞ்சம் ஜாக்கிறதையா பேசுங்க.அவங்க கேக்கற சந்தேகங்களுக்கு நல்ல பதிலா சொல்லி,அவங்க மனசே மாத்தி எப்படியாவது நம்ம சுதா கல்யாணத்தே அவங்க பையனுக்கு பண்ணி வக்கற வழியே பண்ணுங்க.சுதா அந்தப் பையன் மேலே உயிரா இருந்து வறா.அவளேப் பாத்தா எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்குக்கா” என்று கண்களில் கண்ணீர் துளும்பச் சொன்னார்.

லலிதாவும் “ஆமாம் அக்கா.சுதா என் கிட்டே சுரேஷைத் தவிர நான் வேறே யாரையும் கல்யா ணம் பன்ணிக்க மாட்டேன்னு சொல்லி ரொம்ப அழறா” என்று சொன்னாள்.
“நீங்க ரெண்டு பேரும் நிம்மதியா இருந்து வாங்க.நான் அவங்க கேக்கற சந்தேகங்களுக்கு எல்லாம் நல்ல பதிலா சொல்லி,அவங்க பையனுக்கு நம்ம சுதாவை கல்யாணம் பண்ணிக் கொள்ளச் சொல்றேன்.அம்மா சுதா.நீ கவலைப் படாம் இருந்து வா.இந்த ஜென்மத்லே சுரேஷ் தான் சுதாவுக்கு புருஷனா வரப் போறான்.அந்த வேலனூர் முருகன் நமக்கு நிச்சியமா இந்த அருளைப் பண்ணுவார்” என்று வேலனூர் முருனைத் திடமாக நம்பிக் கொண்டு சொன்னாள் பார்வதி.

அன்று ஞாயிற்றுக் கிழமை.காலையிலேயே தம்பி ராஜிடமும்,லலிதா இடமும் சொல்லிக் கொண்டு பார்வதி காஞ்சனாவின் விலாசத்தை விசாரித்துக் கொண்டு காஞ்சனா வீட்டுக்கு வந்தாள்.

சோபாவில் ‘காபி’ யை ருசித்துக் கொண்டே ராமன் பேப்பர் படித்துக் கொண்டு இருந்தார். சுரேஷ் ஒரு ஆங்கில நாவலைப் படித்துக் கொண்டு இருந்தான்.
‘காலிங்க் பெல்’ அடிக்கவே காஞ்சனா போய் கதவை திறந்தாள்.

நரையோடிய தலை மயிர்,நெத்தியிலே விபூதி,அதுக்கு கீழே சின்ன சாந்து பொட்டுடன் நின்றுக் கொண்டு இருந்தாள் பார்வதி.காஞ்சனாவுக்கு ஆச்சா¢யம் தாங்கவில்லை.”நீங்களா ஆன்டி, வாங்க, வாங்க.எங்க இவ்வளவு தூரம்” என்று வரவேற்றாள் காஞ்சனா.

”நீயா காஞ்சனா,எனக்கு ஆச்சா¢யம் தாங்கலேயே.நான் உன்னை இந்த வூட்லே பாப்பேன் என்று துளிக் கூட எதிர் பார்க்கலே” என்று சொல்லி விட்டு தன் மனதுக்குள் ‘அடே, இவளா நம்ம சுதாவை பொண்ணு பார்த்துட்டு,பொண்ணு பிடிக்கலேன்னு சொன்னவ.இவ ஏன் அப்படி சொல்லி இருப்பா” என்று யோஜனைப் பண்ணிக் கொண்டு வாசலிலேயே நின்றுக் கொண்டு இருந்தாள் பார்வதி.

“ஏன் ஆன்ட்டி அங்கேயே நின்னுக் கிட்டு இருக்கீங்க.வாங்க உள்ளே வாங்க. வந்து சோபாலே உக்காருங்க” என்று அழைத்தாள் காஞ்சனா.

பார்வதி மெல்ல வீட்டுக்கு உள்ளே வந்தாள்.ராமன் சுரேஷூம் ‘யார் இந்த அம்மா.இவங்களே பாத்ததும் காஞ்சனா உள்ளே வரவேக்கறாங்களே’ என்று யோஜனைப் பண்ணிக் கொண்டு இருந்தார். ராமனும் அந்த அம்மாவைப் பார்த்துக் கொண்டு இருந்தான்.’யார் இந்த அம்மா.நம்ம அம்மாவுக்கு ரொம்ப தொ¢ஞ்சவங்க போல இருக்குது” என்று நினைத்தான்

“இதோ இருங்க,ஒரு நொடிலே உங்களுக்கு நாஷ்டா கொண்டு வறேன்” என்று சொல்லி விட்டு சமையல் ரூமுக்கு ஓடிப் போய் ஒரு தட்டில் நாஷ்டா கொண்டு வந்து,வந்த அம்மாவை சோபாவில் உட்காரச் சொல்லி விட்டு,காஞ்சனாவும் அந்த அம்மா பக்கத்திலேயே உட்கார்ந்துக் கொண்டு,அவள் கொண்டு வந்த நாஷ்டாவை அந்த அம்மா கிட்டேக் கொடுத்தாள் காஞ்சனா.

“ஆன்டி சௌக்கியமா.உங்களே இந்த கோலத்லே பாக்கவே எனக்கு ரொம்ப..” என்று காஞ்சனா

கேட்டுக் கொண்டு இருக்கும் போதே அந்த அம்மாவுக்கு அடக்க முடியாத அழுகை வந்தது.’ஹான்ட் பேக்கில்’ இருந்த கைக் குட்டையை வெளியே எடுத்து தன் கண்களை துடைக்க ஆரம்பி த்தாள் அந்த அம்மா.

”சாரி ஆன்டி.நான் ரொம்பஅவசரப் பட்டு உங்களே கேட்டுட்டேன்” என்று சொல்லி அந்த அம்மாவிடம் மன்னிப்புக் கேட்டாள் காஞ்சனா.”எல்லாம் என் தலை விதி காஞ்சனா”என்று சொல்லி விட்டு ஒரு இரண்டு நிமிஷம் மௌன மாய் இருந்தாள் பார்வதி.

’இந்த அம்மாவுக்கு நம்ம விலாசம் எப்படி கிடைச்சு இருக்கும். எப்படி நம்ம வீடு தேடி வந்து இருக்காங்க.இவங்க ஏன் நம்ம ஈடு தேடி வந்து இருக்காங்க’ என்று காஞ்சனா யோஜனைப் பண்ணிக் கொண்டு இருந்தாள் காஞ்சனா.

சற்று நேரத்திற்குப் பிறகு ”அது நடந்து நாபத்தி ரெண்டு வருஷம் ஆயிடிச்சி காஞ்சனா..” என்று சொல்லி விட்டு அந்த அம்மா மறுபடியும் தன் கண்களைத் துடைத்துக் கொண்டாள்.

கண்களைத் துடைத்துக் கொண்ட பிறகுஅந்த அம்மா “ஆனா நேத்து நடந்தா மாதிரி கண் முன்னாலேயே மறக்க முடியாம இருக்குது.உனக்கு தொ¢யுமோ,தொ¢யாதோ காஞ்சனா. யாரோ ஒரு பாவி நம்ம மோகனாவை கல்யாணம் கட்டிகிறேன்னு சொல்லி விட்டு அவளை ஏமாத்திட்டாம்மா. ரெண்டுலே ஒன்னு கேட்டு முடிவு பண்ண மோகனாவும்,அவங்க அப்பாவும் பெங்களூக்கு காரிலே போனாங்கம்மா.காஞ்ஜிவரம் தாண்டும் போது கூட என் கிட்டே ‘செல் போன்லே’ மோகனா அப்பா பேசினாரும்மா.அவங்க கொஞ்ச தூரம் கூட போய் இருக்க மாட்டாங்க.எதிரெ வந்த லாரி மேலே இவங்க கார் மோதி,இவங்க இரண்டு பேரும், டிரைவரும் விபத்து நடந்த இடத்திலே இறந்துட்டாங்க” என்று சொல்லி தன் கண்களை மறுபடியும் துடைத்துக் கொண்டாள் பார்வதி.

பார்வதி சொன்ன சமாசாரத்தைக் கேட்டதும் ‘ஷாக்’ அடித்தது போல் இருந்தது காஞ்சனாவு க்கு. ‘அடப் பாவமே.நம்ம ஆறுயிர் தோழி மோகனா ‘லைப்’ இப்படி ‘டிராஜிக்கா’ ஆயிடிச்சா.அவ கூட அவ அப்பாவும் இறந்து விட்டு இருக்காரே.அந்த அம்மா முழுக்கச் சொல்லட்டும்” நினைத்து மிகவும் வருத்தப் பட்டுக் அழுதுக் கொண்டு இருந்தாள் காஞ்சனா.

கொஞ்ச நேரம் ஆனதும் “இந்த விஷயம் கேள்விப் பட்டு,நானும் எங்க பக்கத்து தெருலே இரு ந்த என் தம்பி ராஜலிங்கமும் உடனே அந்த விபத்து நடந்த இடத்துக்கு ஓடிப் போய் ‘ஆக வேண்டிய தை’ எல்லாம் செஞ்சுட்டு வுடு திரும்பி வந்தோம்” என்று சொல்லி தன் கண்களைத் துடைத்துக் கொண்டாள் பார்வதி.
எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டு இருந்தார் ராமன்.அவர் தன் மனதில் ’அவங்க சொன்ன சோகக் கதையே கேட்டுட்டு காஞ்சனாவும் அழறாளே.இந்த அம்மாவுக்கும் காஞ்சனாவுக்கும் என்ன சம்பந்தம்’ என்று யோஜனைப் பண்ணிக் கொண்டு இருந்தார்.

உடனே காஞ்சனா “எனக்குக் கேக்கவே ரொம்ப கஷ்டமா இருக்கு ஆண்டி.நானும் மோகனாவு ம் நகமும் சதையும் போல் பழகி வந்தோம்,அவ ஊட்டி ‘ட்ரிப் போறேன்னு சொன்னப்பவே நான் அவ கிட்டே ‘மோகனா ஜாக்கிறதையா இருந்து வா’ன்னு சொன்னேன் ஆண்டி.அப்ப கூட அவ கவலைப் படாம என் கிட்டே’ நீ கவலை படாதே காஞ்சனா,நான் அவரே நிச்சியமா கல்யாணம் பண்ணிப்பே ன்னு அடிச்சு சொன்னா…..” என்று சொல்லும் போது காஞ்சனா கண்களில் மறுபடியும் கண்ணீர் வந்தது.
கண்களைத் துடைத்துக் கொண்டே காஞ்சனா “நீங்க நாஷ்டாவை சாப்பிடுங்க.நாஷ்டா ரொம்ப ஆறி போவுது” என்று சொன்னதும் பார்வதி காஞ்சனா கொடுத்த நாஷ்டாவை யோஜனைப் பண்ணிக் கொன்டே சாப்பிட ஆரம்பித்தாள்.

அந்த அம்மா நாஷ்டாவை சாப்பிட்டு முடிந்ததும், காஞ்சனா சமையல் ரூமுக்குப் போய் சூடா ‘காபி’யை ஒரு டவரா டம்ளா¢ல் போட்டுக் கொண்டு வந்து,அந்த அம்மா கையிலே கொடுத்து விட்டு, “முதல்லே இந்த ‘காபி’யே குடியுங்க ஆண்டி.மீதியே அப்புறமா பேசலாம்” என்று சொன்னதும் பார்வதி காஞ்சனா கொடுத்த ‘காபி யை ரசித்துக் குடித்துக் கொண்டு இருந்தாள் பார்வதி.

ராமனுக்கு இப்போது ஓரளவு விஷயம் புரிந்தது.’சா¢, அவங்க பேசிக்கட்டும்’ என்று அவர் மறு படியும் பேப்பர் படிக்க ஆரம்பித்தார்.
குடித்து விட்டு காலி டவரா டம்ளரை காஞ்சனா கையிலே கொடுத்து விட்டு “அம்மா காஞ்சனா.நீ குடுத்த ‘காபி’ ரொம்ப நல்லா ருசியா இருந்திச்சி” என்று சந்தோஷப் பட்டுக் கொண்டே சொன்னாள் பார்வதி.

உடனே காஞ்சனா ” ரொம்ப ‘தாங்க்ஸ்’ ஆண்டி” என்று சொன்னாள்.

கொஞ்ச நேரம் போனதும் “அவங்க ரெண்டு பேரும் இறந்த பிறவு,நான் ஒரு தனி மரமாய் ஆயிட்டேம்மா.சென்னைலே இருந்த வூட்டே காலி பண்ணிட்டு,விழுப்புரதிலே இருந்த என் அப்பா, அம்மா,அக்கா மரகதம்,என் ஒரே தம்பி ராஜ் இவங்க கூட போய் ஒன்னா சேர்ந்து வாழ்ந்து கிட்டு வறேம்மா” என்று சொன்னாள் பார்வதி.
“கல்யாணம் ஆகி மூனு வருஷம் ஆனதும்,என் முதல் பிரசவத்துக்கு நான் எங்க அம்மா அப்பா வீட்டுக்கு விழுப்புறம் போய் இருந்தேன்.அந்த பிரசவத்லே எனக்கு ரெட்டை குழந்தைங்க பொறந்தா ங்க.ரெண்டும் பொட்டைப் பிள்ளைதான்.விழுப்புரத்லேயே கல்யாணம் கட்டிக் கிட்டு இருந்த என் அக்காவுக்கு பத்து வருஷம் ஆகியும் குழந்தைங்களே போறக்காம இருந்திச்சி.அவங்க என்னேப் பாத்து ‘பாரு,உனக்கு ரெண்டும் பொட்டைப் பிள்ளையா பொறந்து.அதிலே ஒரு பொட்டைப் பிள்ளை யே எனக்குத் தத்துக் குடு’ன்னு கேட்டாங்க.எனக்கு பிரசவம் ஆகி ரெட்டை குழந்தைங்க பொறந்து இருக்காங்க என்கிற சேதியைக் கேட்டதும் மோகனா அப்பா விழுப்புறம் வந்தாரு.அவரு, அவங்க அம்மா,அப்பா,எங்க அம்மா,அப்பா எல்லோரும் பேரும் கலந்து பேசி,நானும் அவரும் ஒரு பொட்டைக் குழந்தையே என் அக்காவுக்கு தத்துக் குடுத்தோம்” என்று சொல்லி விட்டு மறுபடியும் தன் கண்களை த் துடைத்துக் கொண்டு இருந்தாள் பார்வதி.

கொஞ்ச நேரம் ஆனதும் பார்வதி ”அந்த ரெட்டை குழந்தைங்க பொறந்த பிற்பாடு எனக்கு குழந்தையே பொறக்கலே.நானும் என் வீட்டுக்காரரும் மோகனாவை ரொம்ப செல்லமா வளத்து வந்தோம்.அவ கேட்டதே எல்லாம் வாங்கிக் குடுத்தோம்.என்னை விட அவங்க அப்பாவுக்கு தான் மோகனா பேர்லே ரொம்ப ஆசை.அவரு மோகனா கேட்ட ‘டிரஸ்’ எல்லாம் வாங்கிக் குடுத்துக் கிட்டு வந்தார்.மோகனா அந்த ஊட்டி‘டூர் போவ ஆசை பட்டப்ப, நான் மோகனா அப்பா கிட்டே ‘வேணாங்க. மோகனா தனியா அவ்வளவு நாள்,அவ்வளவு தூரம் எல்லாம் போக வேணாங்க.அவ கல்யாணம் ஆவாத பொண்ணுங்க’ ன்னு நிறைய தடவை சொல்லி பாத்தேன்.ஆனா அவர் கேக்கலே. மோகனா வை அந்த ஊட்டி ‘டூரு’க்கு அனுப்பினாரு” என்று சொல்லி தன் கண்களைதுடைத்துக் கொண்டாள்.

கொஞ்ச நேரம் ஆனதும் “மோகனா, இப்படி ஒரு கல்யாணம் கூட கட்டிக்காம ‘அகாலமா’ இந்த உலகத்தே விட்டு போவான்னு எங்க ரெண்டு பேருக்கும் முன்னமே தொ¢யாமப் போச்சு.தொ¢ஞ்சு இரு ந்தா,அவ கூடப் பொறந்தக் குழந்தையே நாங்க என் அக்காவுக்குத் தத்துக் குடுத்து இருக்கவே மாட்டோம்.ரொம்ப தப்பு பண்ணிட்டோம்,ரொம்ப தப்புப் பண்ணிட்டோம் காஞ்சனா”என்று சொல்லும் போது பார்வதிக்கு அழுகை பீறிட்டுக் கொண்டு வந்தது.தன் கண்களைத் துடைத்துக் கொண்டு இருந்தாள்.

பார்வதி சொன்னதைக் கேட்ட காஞ்சனாவுக்கும் அழுகை வந்தது.அவளும் தன் கண்களைத் துடைத்துக் கொண்டு இருந்தாள்.ஒரு ஐந்து நிமிஷம் ஆனதும் பார்வதி ‘நார்மல்’ ஆனாள்.

சற்று நேரம் கழித்து பார்வதி “நான் என் அக்காவுக்கு தத்துக் குடுத்த பொண்ணு லலிதா வயசு க்கு வந்தவுடன்,உறவு விட்டுப் போவக் கூடாதுன்னு நினைச்சு,என் அம்மா,அப்பா லலிதாவை என் தம்பி ராஜலிங்கத்துக்கு கல்யாணம் பண்ணி வச்சாங்க” என்று சொன்னாள்.

‘அடேடே இது தான் உண்மையா.நாம லலிதா வீட்டுக்குப் போனப்ப லலிதா அசல் மோகனா ஜாடையாகவே இருந்தாதால் தானே நாம லலிதாவை மோகனான்னு நினைச்சு சுரேஷ் ரொம்பவும் ஆசைப் பட்ட சுதாவை ‘உங்க பெண்ணே எங்களுக்குப் பிடிக்கலே’ ன்னு ‘போன்’ பண்ணி சொன் னோம்.இப்ப தான் உண்மை தொ¢ஞ்சுப் போச்சே.எப்படியாவது நாம சுரேஷ்க்கு அவன் ஆசை பட்ட சுதாவைக் கல்யாணம் பண்ணி வைக்கணும்” என்று நினைத்தாள் காஞ்சனா.

தான் அவசரப் பட்டு பண்ணத் ‘தப்பை’ நினைத்து மிகவும் வருத்தப் பட்டாள் காஞ்சனா. “ஆண்டி,எனக்கு ஒரு பத்து நிமிஷம் ‘டயம்’ குடுங்க” என்று சொல்லி விட்டு வாசல் கதவைத் திறந்துக் கொண்டு வெளியே போனாள் காஞ்சனா.

’இது வரைக்கும் அந்த அம்மா சொன்னதை எல்லாம் கேட்டுக் கிட்டு அழுது கிட்டு இருந்தா ளே காஞ்சனா.இப்ப என்ன திடீர்ன்னு எழுது எங்கே போய் இருக்கா’ என்று ஒன்றும் புரியாமல் ராமனும்,சுரேஷூம் வரும் முழித்துக் கொண்டு இருந்தார்கள்.

காஞ்சனா அவர்கள் வசித்து வந்த வீட்டுக்கு மூணாவது ‘பில்டிங்கில்’ இருந்த ‘கிருஷ்ணா ஸ்வீட்ஸ்’ கடைக்கு ஓடிப் போய் ஒரு கிலோ மைசூர் பாக்கை வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வந்தாள்.

வீட்டுக்கு உள்ளே வந்த காஞ்சனா ஒரு மைசூர் பாக்கை எடுத்து தன் கையிலே வைத்துக் கொண்டு “ஆண்டி,உங்க வாயே கொஞ்சம் திறங்க” என்று சொன்னாள்.

பார்வதிக்கு ஒன்றும் புரியவில்லை.’என்னடா இது.இவ என்னமோ ‘எனக்கு ஒரு பத்து நிமிஷம் ‘டயம்’ குடுங்கோன்னு கேட்டுட்டு வாசலைத் தொறந்துக் கொண்டு வெளியே போனா.இப்ப உள்ளே வந்து ‘உங்க வாயே தொறங்கன்னு சொல்றா’ என்று ஒன்றும் புரியாத பார்வதி ஆச்சா¢யப் பட்டுக் கொண்டு காஞ்சனாவைப் பார்த்துக் கொண்டு இருந்தாள்.காஞ்சனா விடாமல் “ஆண்டி உங்க வாயே கொஞ்சம் தொறங்க ‘ப்லீஸ்’” என்று கெஞ்சவே பார்வதி வாயைத் திறந்தாள்.

உடனே காஞ்சனா தன் கையிலே இருந்த மைசூர் பாக்கை பார்வதி வாயிலேத் திணித்தாள்.

காஞ்சனா வாயில் துணித்த ‘ஸ்வீட்டை’ தின்ன முடியாமல் மெல்ல மென்றுக் கொண்டு ”என்ன காஞ்சனா,என் வாயிலே ‘ஸ்வீட்’ தரே.நான் என் துக்கத்தை சொல்லி அழுதுக் கிட்டு இருக்கேன்.நீ என்னடான்னா ஒரு ‘ஸ்வீட்டை’ என் வாயிலே திணிக்கறே.எனக்கு ஒன்னும் புரியலையே” என்று ஆச்சா¢யத்துடன் கேட்டாள் பார்வதி.

ராமனும் சுரேஷூம் ஆச்சா¢யமாகப் பார்த்துக் கொண்டு இருந்தார்கள்.

காஞ்சனா பதிலே சொல்லவில்லை.

அவள் தன் ‘செல் போனை’ எடுத்து யாரையோ கூப்பிட்டாள்.மறு பக்கத்தில் இருந்து “ராஜலிங்கம் ஹியர்”‘ என்று பதில் வந்தவுடன் “சம்பத்திங்களா. நான் சுரேஷின் அம்மா பேசறேன். சுதாவை எப்போ எங்க வீட்டுக்கு மருமகளா எங்க வீட்டுக்கு நீங்க அனுப்பப் போறீங்க.அதுக்கு முன்னாடி இன்னைக்கு மதியம் நம்ம வீட்டுலே சாப்பாட்டுக்கு நீங்க, லலிதா,என் மருமக சுதா, எல் லோரும் நிச்சியமா வா££ங்க.என்ன சா¢யா.நீங்க மூனு பேரும் எங்க வீட்டுக்கு நிச்சியமா மதியம் சாப்பிட வரணும்” என்று மூச்சு விடாமல் பேசினாள் காஞ்சனா.

உடனே பார்வதி ‘என்னடா இது.நாம இந்த அம்மா கிட்டே சுதாவே கல்யாணம் பண்ணிக்குங்க ன்னு கேக்கத் தானே.நாம அதேப் பத்தி இன்னும் ஒன்னும் பேசலே.அதுக்கு முன்னாடி இந்த அம்மா வே நம்ம சுதாவே எப்போ எங்க வீட்டு மருமகளா அனுப்பப் போறீங்கன்னுக் கேக்கறாங்க.இவங்க மனசு எப்படி மாறிச்சு.நல்ல வேளை நாம வந்த வேலே நாமஅவங்களே ஒன்னும் கேக்காம,பதில் சொல்லாம ரொம்ப சுலபமா முடிஞ்சிடிச்சி.எனக்கு ஒன்னும் புரியலையே’ என்று நினைத்து சந்தோஷப் பட்டுக் கொண்டு இருந்தாள்

ராமனும் சுரேஷூம் காஞ்சனா ‘போன்’லே பேசினதைக் கேட்டு ஆச்சா¢யப் பட்டுக் கொண்டு இருந்தார்கள்.ராஜலிங்கத்துக்கு ஒன்றும் புரியவில்லை.கொஞ்ச நேரம் அவர் சும்மா இருந்தார்.ஆனால் காஞ்சனா அவசரப் படுத்தவே “சா¢ங்க” என்று சொல்லி விட்டு ‘போனைக் கட்’ பண்ணினார்

’என்னடா இந்த அம்மா அன்னனைக்கு ‘போன்’ பண்ணி ‘உங்க பெண்ணே எங்களுக்குப் பிடிக்கலே’ ன்னு சொன்னாங்க.இப்ப என்னடான்னா அவங்களே சுதாவை எப்போ எங்க வீட்டுக்கு மருமகளா நீங்க அனுப்பப் போறீங்கன்னு சொல்றாங்க’ என்று யோஜனைப் பண்ணிக் கொண்டு இருக்கும் போது,சமையல் ‘ரூமி’ல் இருந்து வெளியே வந்த லலிதா “யாருங்க ‘போன்லே’.நீங்க ‘சா¢ங்க’ன்னு சொன்னீங்க” என்று ஆச்சா¢யத்துடன் கேட்டாள்.

ராஜலிங்கம் குழபியவாறே “லலிதா,சுதாவைப் பொன்ணுப் பாத்துட்டுப் போன அம்மா தான் ‘போன்’ பண்ணாங்க.அவங்க திடீர்ன்னு ‘சம்பத்திங்களா.,நான் சுரேஷின் அம்மா பேசறேன்.சுதாவை எப்போ எங்க வீட்டுக்கு மருமகளா எங்க வீட்டுக்கு நீங்க அனுப்பப் போறீங்க.அதுக்கு முன்னாடி இன்னைக்கு மதியம் நம்ம வீட்டுலே சாப்பாட்டுக்கு நீங்க,லலிதா,என் மருமக சுதா,எல்லோரும் நிச்சியமா வா££ங்க.என்ன சா¢யாங்க’ன்னு கேட்டாங்க.நான் ஒரு நிமிஷம் ஒன்னும் புரியாம முழிச்சிக் கிட்டு இருத்தேன்.ஆனா அவங்க ‘போன்லே’ ரொம்ப அவசப் படுத்தவே நான் ‘சா¢ங்க’ன்னு சொல்லிட்டு ‘போனைக் கட்’ பண்ணேன்” என்று சொன்னார்.

உடனே லலிதா “இதிலே என்னங்க இருக்கு புரியறதுக்கு.உங்க அக்கா அவங்க வீட்டுக்குப் போய் இருக்காங்க இல்லே.அவங்க அந்த அம்மாவேப் பாத்து ‘ஏங்க, நீங்க எங்க சுதாவே ‘பொண்ணுப் பாத்துட்டு’ ‘எங்களுக்கு பொண்ணு பிடிக்கலேன்னு சொன்னீங்கன்னு.உங்க காரணத்தே கொஞ்சம் சொல்லுங்கன்னு கேட்டு இருப்பாங்க.அவங்க காரணத்தே சொன்னவுடன் உங்க அக்கா அவங்க சந்தேகத்தை தீத்து வச்சு இருப்பாங்க.அதான் உடனே அவங்க மனசே மாத்தி கிட்டு உங்களுக்கு ‘போன்’ பண்ணி இருப்பாங்க” என்று சொன்னவுடன் ராஜலிங்கம்” நீ ரொம்ப கரெக்டா சொல்றே. எனக்கு அக்கா அந்த அம்மா வீட்டுக்குப் போனதே சுத்தமா மறந்துப் போச்சு” என்று சொல்லி தன் மணைவியின் கையைப் பிடித்துக் குலுக்கினார்.

ராஜலிங்கம்,லலிதா,சுதா மூவருக்கும் ‘எப்படியோஅந்த அம்மா மனசு மாறி கல்யாணத்துக்கு ஒத்துக் கொண்டு இருக்காங்களே’ என்று நினைத்து மிகவும் சந்தோஷப் பட்டார்கள்.உடனே ராஜ லிங்கம் “ரொம்ப சந்தோஷம் சம்மந்தி.நாங்க நிச்சியமா உங்க வீட்டுக்கு சாப்பிட வறோமுங்க”

என்று மறுபடியும் ‘போன்’ பண்ணிச் சொன்னார்.உடனே காஞ்சனா “ரொம்ப ‘தாங்ஸ்ங்க’ “ என்று சொல்லி ‘போனை’க் ‘கட்’ பண்ணீனாள்.

“ஆன்டி,உங்க பேத்தி சுதா தான் இந்த வீட்டுக்கு மருமகளா வரப் போறா. உங்களுக்குத் தொ¢யுமா.அதுக்கு தான் இந்த ஸ்வீட்” என்று சொல்லி இன்னொரு ‘ஸ்வீட்டை’ பார்வதி இடம் நீட்டினாள் காஞ்சனா.

பார்வதி காஞ்சனாக் கொடுத்த மைசூர் பாக்கை சந்தோஷமாக சாப்பிட்டுக் கொண்டு இருந்தாள். கொஞ்ச நேரம் ஆனதும் காஞ்சனா பார்வதியைக் கேட்டு ராஜலிங்கம் குடும்பத்துக்கு என்ன சமையல் பிடிக்கும் என்று கேட்டு விட்டு,பார்வதியின் துணையோடு அந்த சமையலை பண்ண ஆரம்பித்தாள்.

எல்லோரும் வந்து சாப்பிட்டு விட்டுப் போவட்டும்,அப்புறமா நாம காஞ்சனாவை அவ மனசு மாறினதுக்கு என்ன காரணம்ன்னு கேக்கலாம்’ என்று காத்துக் கொண்டு இருந்தார் ராமன்.ஆனால் சுரேஷ் ‘அப்பாடா,ஒரு வழியா அம்மா நம்ம கல்யாணத்துக்கு ஒத்துக் கிட்டு இருக்காங்க.இந்த சமா சாரத்தே சுதா கேட்டா ரொம்ப சந்தோஷப் படுவா.நல்ல வேளையா அம்மாவே மனசு மாறி நம்ம கல்யாணத்துக்கு ஒத்து கிட்டு இருக்காங்க’ என்று நினைத்து மிகவும் சந்தோஷப் பட்டான்.

ராஜலிங்கம் ஒரு ‘கால் டாக்ஸியை’ ஏற்பாடு பண்ணிக் கொண்டு லலிதாவையும்,சுதாவையும் அழைத்துக் கொண்டு காஞ்சனா வீட்டுக்குப் புறப்பட்டார்.காஞ்சனா வீட்டுக்கு வந்து ராஜலிங்கம் ‘காலிங்க் பெல்லை’ அழுத்தினார்.வாசலில் நின்றுக் கொண்டு இருந்த ராஜலிங்கத்தையும்,அவர் குடும்பத்தையும் பார்த்த காஞ்சனா சந்தோஷத்துடன் தன் கையைக் கூப்பி ”வாங்க, வாங்க சொன்னா மாதிரியே வந்துட்டீங்களே.எனக்கு ரொம்ப சந்தோஷம் நீங்க மூனு பேரும் எங்க வீட்டுக்கு சாப்பிட வந்தது” என்று சொல்லி விட்டு அவர்கள் மூவரையும் அழைத்துக் கொண்டு போய் ‘சோபாவில்’ உட்காரச் சொன்னாள்.

ராமன் ராஜலிங்கத்திடம் பேசிக் கொண்டு இருந்தார்.சுரேஷூம் சுதாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு தங்கள் கண்களால் சந்தோஷதை ‘பறி மாறி’ க் கொண்டு இருந்தார்கள்.

காஞ்சனா சாப்பாடு ரெடி ஆனதும்,தன் வீட்டுக்காரரையும்,பார்வதியையும்,ராஜலிங்கம் குடும்ப த்தாரையும் ‘டைனிங்க் டேபிளில்’ உட்கார வைத்து,அவள் செய்த இருந்த விருந்து சாப்பாட்டை பறி மாறினாள்.லலிதா ”சாப்பாடு ரொம்ப சூப்பர்ங்க.எல்லா ஐயிட்டங்களும் ரொம்ப நல்லா பண்ணி இருக் கீங்க” என்று காஞ்சனாவை புகழ்ந்தாள்.பார்வதியும்” ரொம்ப நாளுக்கு பிற்பாடு நானும் ஒரு நல்ல விருந்து சாப்பாடு சாப்பிட்டு இருக்கேன்.லலிதா சொன்னது ரொம்ப நிஜம்.சாப்பாடு ரொம்ப சூப்பர்” என்று சொல்லி காஞ்சனாவை அவளும் புகழந்தாள்.

சாப்பாடு முடிந்து ஒரு மணி நேரம் ஆனதும் ராஜலிங்கம் எழுந்து நின்றுக் கொண்டு” நான் ஐயரைக் கேட்டு ஒரு நல்ல முஹ¥ர்த்த நாளா குறிக்கச் சொல்லி,அவர் சொன்னதும் நான் உங்களு க்கு அவர் சொன்ன தேதியே ‘போன்’ பண்ணிச் சொல்றேன்.இப்ப நாங்க உத்தரவு வாங்கிக்கறோம்” என்று சொன்னதும் ராமனும் காஞ்சனாவும் அவர்கள் கூட வாசல் வரைக்கும் போய் அவர்களை காரில் ஏற்றீ விட்டு வந்தார்கள்.

வீட்டுக்கு வந்ததும் வராததுமாய் ராஜலிங்கம் பார்வதியைப் பார்த்து “அக்கா கார்லே கேக்க வேணாம்ன்னு என் சந்தேகத்தைக் கேக்காம வந்தேன்.நீங்க அந்த அம்மா வீட்டுக்குப் போய் அந்த அம்மா கிட்டே என்ன சொன்னீங்க.அவங்க மனசே எப்படி மாத்தினீங்க” என்று கேட்டு அவசரப்படுத்தினார்.லலிதாவும் “எனக்கும் அந்த சந்தேகம் இருக்கு அக்கா” என்று கேட்டடாள்.

பார்வதி “நான்,அவங்க வீட்டுக்குப் போய் ‘காலிங்க் பெல்லை’ அழுத்தியதும் காஞ்சனா வந்து கதவைத் தொறந்து என்னேப் பாத்து ‘ஏன் ஆன்ட்டி அங்கேயே நின்னுக் கிட்டு இருக்கீங்க.வாங்க உள்ளே வாங்க. வந்து சோபாலே உக்காருங்க’ன்னு சொல்லி இட்டுக் கிட்டுப் போய் அவங்க வீட்டு ‘சோபா’விலே உக்காரச் சொல்லி,எனக்கு நாஷ்டாவும் காபியும் குடுத்தாங்க.எனக்கு காஞ்சனாவை முன்னமே ரொம்ப நல்லாத் தொ¢யும் ராஜ்.அவளும் மோகனாவும் காலேஜ் படிக்கற நாள்ளே நகமும் சதையும் போப பழகி வந்தாங்க.காஞ்சனா ஒரு வாரம் ஞாயித்துக் கிழமை நம்ம வீட்டுக்கு வந்தா, அடுத்த வாரம் மோகனா காஞ்சனா வீட்டுக்குப் போவா” என்று சொன்னாள்

உடனே லலிதா “அந்த அம்மாவும் அக்கா மோகனாவும் காலேஜ் தோழிகளா” என்று ஆச்சா¢ய மாகக் கேட்டாள்.”ஆமாம் லலிதா.காஞ்சனா என் ‘கோலத்தே’ப் பாத்து ரொம்ப வருத்தப் பட்டு “ஆண்டி,உங்களே இந்த கோலத்லே பாக்க எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்குது’ ன்னு கணகள்ளே தண்ணி வந்து கேட்ட உடனே,தான் நான் மோகனா கிட்டே எனக்கு முதல் பிரசவத்லே ரெண்டு பொட்டைப் குழந்தைங்க பொறந்ததில் இருந்து, ஒரு குழந்தயே என் அக்கா மரதத்துக்கு தந்துக் கொடுத்ததில் இருந்து,மோகனாவும் அவங்க அப்பாவும் காஞ்சீவர விபத்லெ இறந்துப் போன சமாசார ரத்தே,சொன்னேன்.பிறகு நான் சென்னையிலே தனியா இருக்க விரும்பாம விழுப்புறதுக்குப் போய் என் அம்மா,அப்பா அக்கா மரகதம்,வீட்டுக்கு போய் தங்கி வந்துக் கிட்டு இருக்கிற சமாசாரத்தையும் சொன்னேன்” என்று சொன்னாள்.

கொஞ்ச நேரம் போனதும் காஞ்சனா கடைக்குப் போய் இனிப்பை வாங்கிக் கிட்டு வந்து என் வாயிலே திணித்தாள்.உங்களே சாப்பாட்டுக்குக் கூப்பிட்டா.எனக்கு அவ பண்ணது ஏன்னே புரிய வில்லை”என்று சொன்னாள்.உடனே லலிதா “அக்கா உங்க சோகக் கதையே சொன்னதேக் கேட்ட பிறகு அந்த அம்மாவுக்கு நம்ம குடும்பத்தில் பேர்லே ஒரு அனுதாபம் வந்து இருக்கும்ன்னு நான் நினைக்கிறேன்” என்று சொன்னாள்.

“எது எப்படி இருந்தாலும் என்ன.அந்த அம்மா நம்ம சுதாவே அவங்க மருமகளா ஏத்துகிட்டு இருக்காங்க.அது தான் நமக்கு வேண்டியது.நான் ஐயருக்கு ‘போன்’ பண்ணி சுதா கல்யாணத்துக்கு ஒரு நல்ல முஹ¥ர்த்த நாள் குறிச்சிச் சொல்லச் சொல்றேன்” என்று சொல்லி ஐயருக்கு ‘போன்’ பண்ணீனார்.

ஒரு அரை மணி நேரம் கழித்து ஐயர் ராஜலிங்கத்தை ‘போன்லே’கூப்பிட்டு “ராஜ லிங்கம் சார்,வர மாசம் இருபதாம் தேதி உங்க பொண்ணு சுதா நக்ஷத்திரத்துக்கு ஒரு நல்ல முஹ¥ர்த்த நாள் வறது.அன்னைக்கு நீங்க உங்க பொண்ணு சுதா கல்யாணத்தே வச்சுக்குங்க” என்று சொன்னார்.

உடனே ராஜலிங்கம் ராமன் வீட்டுக்கு போன் பண்ணிணார்.காஞ்சனா தான் ‘போனை’ எடுத்துப் பேசினாள்.”சம்மந்தி, ஐயர் வர மாசம் இருபதாம் தேதி சுதா நக்ஷத்திரத்துக்கு ஒரு நல்ல முஹ¤ர்த்த நாள் வருது,அன்னைக்கு நாம சுதா சுரேஷ் கல்யாணத்தே வச்சுக்கலாம்ன்னு சொன்னார்” என்று சொன்னதும் காஞ்சனா “ரொம்ப சந்தோஷம் சம்மந்தி.அன்னைக்கு அவங்க ரெண்டு பேருடை ய கல்யாணத்தே நாம வச்சுக்கலாம்” என்று சொல்லி ‘போனைக் கட் பண்ணினாள்.

ஐயர் சொன்ன முஹ¥ர்த்த நாளில் ராஜலிங்கம் உறவினர்களும்,காஞ்சனா உரவுக்காரர்களும் கலந்துக் கொண்டு சுதா சுரேஷ் கல்யாணம் வெகு விமா¢சையாக நடந்து முடித்தர்கள்.இரண்டு குடும்பமும் மிகவும் சந்தோஷப் பட்டார்கள்.ராமனுக்கு காஞ்சனா ‘ஏப்படி,ஏன் மனசு மாறினா’ என்று கேட்க வேண்டும் என்று ஆசைப் பட்டாலும்,அவருக்கு அதைப் பத்தி காஞ்சனாவிடம் கேட்க ¨தா¢ யம் இல்லை.காஞ்சனாவும் ‘அந்தக் காரணத்தை’ யாருக்கும் சொல்லாமல் தன் நெஞ்சுக்குள் மிக ஆழத்தில் போட்டு புதைத்து விட்டாள்.

– முற்றும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *