கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 1, 2021
பார்வையிட்டோர்: 1,844 
 

“ஐயா! புண்ணியமுண்டாகும்! ஏதும் தாங்க!” இது மாத்தறை நில்வளகங்கைப் பாலத்தைக் கடப்பவர்கள் கேட்கும் குரல். அது அவ்வழியாற் போவோர், வருவோர் அனைவருக்கும் பழக்கப்பட்ட சிராஜின் குரலல்லவா? ஆம்! அவன் பிச்சைக்காரன். ஆனால், கலைப்பித்துக் கொ ண்ட பிச்சைக்காரன். அவன் புல்லாங்குழலை இசைக்க ஆரம்பித்துவிட்டால், சனக்கூட்டத்தையே கட்டுப்படுத்த முடியாது. அவ்வழியாற் போவோர் வருவோர் அனைவரும் சிராஜின் புல்லாங்குழலிசையில் மெய்மறந்து ஒரு கணமே னும் தாமதித்தே செல்வர். அந்த அளவுக்கு அவனிடம் கலையின் கைவன்மையிருந்தது.

அன்று வழமையான அந்தப் புல்லாங்குழலோசை யில்லை. சிராஜ் சருகுகளால் வேயப்பட்ட தன் சிறுகுடிலில் தரையில் பாயில் கிடந்தான். நகரிலிருந்து புறம்பான ஒரு பிரதேசத்தில் அவனைப்போன்ற பல ஜீவன்கள் வாழும் குடிசைகளுக்கு மத்தியில், அவனது குடிலும் இருந்தது. அது சிராஜைப் போன்ற ஜீவன்களுக்கே சொந்தமான பிரதேசம், பசியும், துன்பமும் எப்படி அவர்களுக்குச் சொந்தமோ அதைப் போலவே அதைப் பிரதிபலிக்கும் சாக்கடைகளும், சந்து பொந்துகளும் உள்ள பிரதேசமும் அவர்களுக்குச் சொந்தம், என்ற மரபு பற்றிப் போலும் .. சிராஜியின் குடிலில் மங்கிய விளக்கின் ஒளி காற்றில் அசைந்துகொண்டிருந்தது.

“அம்மா! …” என்ற ஈனக்குரல் அடிக்கடி அவன் வாயிலிருந்து வெளிவந்துகொண்டிருந்தது. அவன் கலை வன்மைக்கு உயிர்கொடுக்கும் புல்லாங்குழல் பக்கத்தில் கிடந்தது. இடைக்கிடை இருமல் முனங்கல்… சிராஜின் பக்கத்தில் தண்ணீர்க் குவளையுடன் நின்றாள், மும் தாஜ். ”வாப்பா! இன்ன தண்ணீர் ……!” என்று தண் ணீரை நீட்டினாள், அவள். சிராஜ் அவளை உற்று நோக்கி னான் …. ஆதரவற்ற இந்த உலகில் தனக்காகக் கண் கலங் கும் ஒரு சீவன் என்ற நினைப்போ, என்னவோ அந்தப் பார்வை அர்த்தம் பொருந்தியதாக … ஆழ்ந்த கருத்து டையதாக விளங்கியது. சிராஜின் கன்னங்கள் வழியாக வழிந்தோடிய கண்ணீரை அவனாற் கட்டுப்படுத்தமுடிய வில்லை. எட்டு வருடங்களுக்கு முன் நடந்த அந்தச் சம்ப வம் அவன் மனக்கண் முன் நிழலாடியது,

அப்போது சிராஜ் பிச்சையெடுக்கும் தொழிலில் நன்கு பயிற்சிபெற்ற காலம். அன்று பாலத்தின் அண்மை யில் அமர்ந்து தன் புல்லாங்குழலை இசைக்க ஆரம்பித் தான். சற்று நேரத்திற் கூட்டம் கூடிவிட்டது. தன் தக ரக் குவளையில் டக் டக்…’ என விழும் சத நாணயங்களை நம்பிக்கை நிறைந்த கண்களோடு நோக்கிக்கொண்டே புல்லாங்குழலை இசைத்தான். கலை எங்கு பிறந்தாலும் அதற்கு மதிப்புண்டு தானே? பிச்சைக்காரனிட மிருந்து வருவதானாலும், அந்தப் புல்லாங்குழலோசையில் ஒரு கவர்ச்சியைக் கண்டு அதை ரசித்துக்கொண்டிருந்தன, அங்கிருந்த புண்ணியாத்துமாக்கள்.

மாலை நேரமானதும்… கூட்டம் குறைந்துவிட்டது. அனைவரும் சென்றுவிட்டனர். ஆனால் அந்தச் சிறுமி மட் டும் அங்கே நின்றாள். பரட்டைத் தலையும் … நான்கு பக் கங்களிலும் கிழிந்து தொங்கும் கந்தலாடையும் …. கையி லிருந்த தகரக் குவளையும் அவள் சிராஜின் இனத்தைச் சேர்ந்தவள் என்பதையுணர்த்தின. அவள் சிராஜின் பக் கத்தில் வந்தாள்…..

“தாத்தா! நல்லா ஊதிறியே! திரும்பவும் ஊதேன்…!” என்றாள். அவள் கேள்வியிற் கெஞ்சும் பாவனை தொனித்தது. சிராஜுக்கு அந்தக் குரலைக்கேட்டதும் உடம்பெல் லாம் புல்லரித்தது. அந்தக் கெஞ்சும் குரலிலே பிரேமை யின் ஸ்பரிசத்தைக்கண்டான். தந்தைப்பாசத்தின் குழை வையும், பிரதிபலிப்பையுங் கண்டான்.

“நீ யார் ….?” என்றான் சிராஜ்.

“நான் ஒரு பிச்சைக்காரி! பார்த்தால் தெரியவில் லையா? சிறுபிள்ளை மாதிரி கேட்கிறியே?” என்று சர்வசா தாரண மாகத் தன்னை அறிமுகப்படுத்தினாள், அவள் . வாழ்க்கையை அவ்வளவு எளியதாக நோக்கும் அவளைக் கண்டு ஆச்சரியப்பட்டான், சீராஜ்.

“அப்போ ஒனக்கு தாய், தந்தையர் இருக்காங்களா ?”

“ம்… / நான் மட்டுந்தான் இருக்கேன் . / அது சரி திரும்ப ஊதேன் ….. ! கேட்க நல்ல ஆசையாயிருக்கு …..” என்றாள், அவள்.

“ம்…ம் … மாட்டேன்!” என்று குறும்புப் பதில் கொடுத்தான், சிராஜ்.” அப்போ ! நான் போகமாட்டேன் …! நீ ஊதினால் தான் போவேன்” என்று அடம்பிடித்தாள், அந்தச் சிறுமி.

சிராஜின் கண்கள் கலங்கின. தன்னையும் நேசிக்க உல கில் ஒரு சீவன் இருக்கிறதே, என்ற ஆத்ம திருப்தி அவ னுக்கு .

புல்லாங்குழல் ஒலிக்க ஆரம்பித்தது. சிரித்த வதனத் துடன் அதை ரசித்துக்கொண்டே மெய் மறந்து நின்றாள், அவள்.

“போதுமா…?” என்றான், அவன்.

சிறுமியின் முகம் வாடியது … பிரியப்போகின்றோமே என்ற கவலை, அவளுக்கு.

“நீ எங்கிருக்கின்றாய்?” என்று அவளைக் கேட்டான் சிராஜ்.

“எனக்கென்ன இடம் … கிடைத்ததைச் சாப்பிட்டு, கண்ட இடத்தில் தூங்கிட்டாப்போச்சு!” என்று அலட்சி யமாகப் பதில் பகர்ந்தாள், அந்தச் சிறுமி.

“அப்போ! என்னோடு வாவேன்! என் குடிசையிலே ஒனக்கு நல்லா இருக்கலாம். வாறியா ….?’ என்று ஆசை யொடு அவளை நோக்கினான், சிராஜ். நாணமும், மகிழ்ச்சி யும் கலந்த பாவனையில் தலையசைத்தாள், அவள் . அவ ளது வதனத்தில் மகிழ்ச்சியின் ரேகைகள் படர்ந்து விளங் கின. சிராஜின் புல்லாங்குழலை உரிமையோடு கையி லெடுத்துக்கொண்டே அவன் பின்னால் நடக்க ஆரம்பித் தாள். அவள் பெயர் மும்தாஜ்! பெயருக்கேற்ற குணமும், பண்யும் அவள் பாலிருந்தன. அவள் சிராஜை “வாப்பா!” என அழைக்கும் போது அதிலே அவன் பாசத்தின் உயிர்த் துடிப்பைக்கண்டான்.

சிராஜின் அருள் நிறைந்தகுடிலுக்கு ஒளிகொடுத்தாள், மும்தாஜ். சிராஜ் அவளுக்கு புல்லாங் குழல்பயிற்சியளிக்க ஆரம்பித்தது தான் தாமதம், அவனையும் மிஞ்சிவிடும் பாவ னையில் இசைக்க ஆரம்பித்தாள், மும்தாஜ். எங்கோ இருந்த மும்தாஜைத் தன்பால் சேர்த்துவைத்த புல்லாங் குழலைப்பற்றிச் சிராஜ் அடிக்கடி மும்தாஜிடம் பேசுவான்.

சிராஜின் நெஞ்சின் வருத்தம் வரவரக் கூடியது ….. மூச்சுவாங்குவது கூடச் சிரமமாக விளங்கியது. “அம்மா….” என்று அடிக்கடி முணங்கினான்:

“தண்ணி !” என்ற மும்தாஜின் குரல் அவனை நினைவு லகத்திற்கு மீளச்செய்தது. மும்தாஜின் கையிலுள்ள தண்ணீர்க்குவளை யை மெதுவாகப் பற்ற முயன்றான். ஆனால் அங்கே அவன் கண்ட காட்சி …..? ஆம்! மும்தாஜின் நெற்றியிலிருந்த தளும்பு! அது அவனுக்காக அவள் உதித்த தியாகத்தின் அடையாளம்!

அப்போது பாலம் பழுது பார்த்துக்கொண்டிருப்ப தால் அவ்விடத்தில் பிச்சைக்காரர்கள் கூடுவது விலக்கப் பட்டிருந்தது! சட்டமும் நிபந்தனையும் எங்கே சிராஜைப் போன்றவர்களுக்குத் தெரியப்போகின்றது! அன்று மும் தாஜ் பின்னால் புல்லாங்குழலைத் தாங்கிவர வழமைபோல் சிராஜ் தன் இடத்துக்கு வந்தான். புல்லாங்குழல் இசைக்க ஆரம்பித்ததுதான் தாமதம் யாரோ ஒரு பெரிய மனிதர் என்று சொல்லப்படுபவர் வந்தார்!

“பிச்சைக்காரப் பசங்களா! எத்தனை தரந்தான் சொல்றது! போங்கடா, இவ்விடத்தை விட்டு!” எனத் தனக்கே உரித்தான பாணியில் விரட்டினார். சிராஜுக்கு ஆச்சரியமாகப்பட்டது.

”இது நாங்க வழமையாயிருக்கிற இடமையா?”

“அடே எவ்வளவு திமிரடா உனக்கு” என்று சிரா ஜைத் தள்ள முயன்றார். அவ்வளவுதான்; மும்தாஜின் ரோஜாக் கன்னங்கள் கோவைப் பழம்போல் காட்சி நல் கின.

“எங்க அப்பாவை என்ன செய்யிறே!” என்று கையிலிருந்த தடியால் அந்த ஆசாமிக்கு ஒரு தட்டு தட்டினாள். … அவ்வளவுதான் ஒரு கூட்டமே மும்தாஜையும் சிராஜையும் நோக்கி வந்தது.

“அடே! பிச்சைக்காரக் குட்டி! இவ்வளவு அகங்கா ரமா ஒனக்கு!’ என்று தன் கைத்தடியால் மும்தாஜின் நெற்றியில் ஒரு போடு போட்டான். சிராஜின் கூக்குால் எள்ளவும் பலிக்கவில்லை! ஆனால் அடிபட்டு இரத்தங்கக்கிய நிலையிலும், ”அப்பாவை ஒன்றும் செய்யாதீங்க!” என்று இரங்கித் துடித்தது, அந்த இளம் இதயம். எங்கி ருந்தோ வந்த மும்தாஜ் தன் உயிரோடுயிராக இணைந்து விட்டதை நினைக்கும்பொழுது சிராஜின் கண்கள், அவனை யறியாமற் கண்ணீ ர் வடித்தன.

“அம்மா! மும்தாஜ் இதைப்பிடியம்மா!” என்று தன் கையிலிருந்த புல்லாங்குழலை அவள் கையில் வைத்தான், சிராஜ்…

“எனக்குப்பின் … நீதான் …. இதற்கு வாரிசு!…” என்று கம்மிய குரலில் – இருமலுக்கிடையிற் சொல்லி முடிவதற் கும்… அவனது கண்கள் மூடுவதற்கும் சரியாக இருந்தது.

“அப்பா! …” என்ற மும்தாஜின் கூக்குரல் அந்தக் குடிசையே அதிரும்படி எதிரொலித்தது. எந்தக் கலை அவளைச் சிராஜ்பால் சேர்த்ததோ, அந்தக் கலைக்கு இனி அவள் தான் வாரிசு.

– எம். ஏ. எம் சுக்ரி – கதைப் பூங்கா – பல்கலை வெளியீடு, பேராதனை, இலங்கை – முதற்பதிப்பு ஜனவரி 1962

எம். ஏ. எம். சுக்ரி:  மாத்தறையைச் சேர்ந்த இவர் கொழும்பு சகாராக் கல்லூரியின் பழைய மாணவர்; தின கரன், சுதந்திரன் என்பன இவரது கட்டுரைகளைத் தாங் கியவை; இவரது முதற்கதையான ‘வாரிசு’ இவரைச் சிறு கதை உலகில் நுழையச் செய்கிறது; அச்சிலேறும் முதற்கதையிதுவே.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *