(1946 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
மஜும்தார் வம்சம் பழமையானது. கிராமத்தில் அதற்கு மிகுந்த மதிப்பு உண்டு. மூத்தவரான குருசரணர் தான் வீட்டில் சகல காரியங்களுக்கும் அதிகாரி. வீட்டுக்கு மாத்திரமல்ல, கிராமம் பூராவுக்குமே அவர் தான் அதிகாரி என்றால் இதில் மிகை ஒன்றும் இல்லை. ஸ்ரீகுஞ்சபுரத்தில் பெரிய மனிதர் இன்னும் பலர் இருந்தனர். ஆயினும், இவரிடம் ஜனங்களுக்கு இருந்த பக்தி சிரத்தை மற்ற வரிடம் கிடையாது. வாழ்நாளில் இவர் பெரிய உத்தி யோகம் ஒன்றும் பார்த்ததில்லை. கிராமத்தை விட்டு அவரை வெளியே அழைத்துச் செல்வதென்பது நடக்கக் கூடிய காரியமே அல்ல. வாலிப வயதில் அருகே இருந்த ஒரு ஜில்லா உயர் தரப்பள்ளியில் ஆசிரியர் வேலையில் புகுந்தார். அவ்வளவுதான். பிறகு அந்த வித்யாலயத்தை விட்டு வெளியே எங்கும் செல்ல அவர் பிரியப்படவே இல்லை. அங்கே அவருக்கு ரூபாய் முப்பதிலிருந்து ஐம்பது வரை உயர்ந்தது. இப்பொழுது அதில் பாதி, இருபத் தைந்து ரூபாய் பென்ஷன் கிடைக்கிறது.
அவர் வேலையிலிருந்து ஓய்வு எடுத்துக் கொண்டு மூன்று வருஷங்களாகின்றன. உலகத்தில் பணம்தான் பெரிது என்று இன்றுவரை அவர் எண்ணியதே இல்லை. ‘அப்படி இருந்திருந்தால், சண்டை சாடியில் மத்யஸ்தம் செய்யவோ, வம்புவழக்குகளை விசாரித்துத் தீர்ப்புக் கூறு வதிலோ, நல்ல காரியம் கெட்ட காரியங்களுக்கு யோசனை கேட்பதிலோ ஸ்ரீகுஞ்ரபுரத்து ஜனங்கள் அவர் கட்டளைப் படி நடந்திருக்கமாட்டார்கள். அவருடைய எல்லையற்ற தர்மசிந்தனை, மாசற்ற ஒழுக்கம், சலியாத உறுதி இவை களைக்கண்டு எல்லோரும் அவருக்கு மரியாதையுடன் தலை வணங்கி நின்றனர். வயது கிட்டத்தட்ட அறுபது ஆகி விட்டது. அக்கம்பக்கத்துக் கிராமத்தில் யாராவது ஒருவன் மத்யஸ்தம் செய்வதில், தர்மம் பேசுவதில் நியாய மாக நடந்துவிட்டால் ஜனங்கள் அவனை ‘அடேடே, நீ என்ன குருசரணராகி விட்டாய்போல் இருக்கிறது’ என்று கூறத்தலைப்பட்டார்கள். அவ்வளவு தூரம் ஜனங்களுக்கு இவரிடம் மதிப்பு ஏற்பட்டிருந்தது.
குருசரணருக்கு மனைவியில்லை, ஒரே மகன் விமலன் தான் இருந்தான். உலகத்தில் அதிசயம் என்று சொல்ல ஏதாவது உண்டானால் அது இதுதான். இத்தனை நல்ல குணம்வாய்ந்த குருசரணருக்கு இவ்வளவு தீய ஒழுக்கம் வாய்ந்த மகன் எப்படிப் பிறந்தான் என்பது தான் தெரியவில்லை.
மகனுடன் தந்தைக்குக் குடும்ப பந்தம் ஒன்றுமே கிடையாது. இவருடைய உறவெல்லாம் அவருடைய சகோதரன் ஹரிசரணருடைய மூத்தமகன் பாரஸிடம் தான். அவனைத்தான் அவர் தன் மகனாய்ப் பாவித்தார். பாரஸ் எம்.ஏ. பரீட்சை தேறிவிட்டுச் சட்டகலாசாவையில் படித்துக் கொண்டிருந்தான். அவனை அரிச்சுவடி முதல் இன்றுவரை படிக்கவைத்தவர் அவர்தான். விமலன் ஒன்றும் படிக்கவில்லை என்ற துக்கம் இதன் மூலம் சற்றுக் குறைந்தது.
இளைய சகோதரர் ஹரிசரணர் இவ்வளவு நாட்கள் வரை எங்கோ தூரதேசத்தில் உத்யோகம் பார்த்து வந்தார். இந்த யுத்தத்திற்குப் பிறகு திடீரென்று அவர் எப்படியோ பணக்காரராகிவிட்டார். வேலையையும் விட்டு விட்டு வீட்டோடு வந்து சேர்ந்தார். இங்கு அதிக வட்டிக்குப் பணம் லேவாதேவி செய்யலானார். மனைவியின் பெயருக்கு ஒரு தோட்டத்தை விலைக்கு – வாங்கினார். இப்படியாக இன்னும் ஏதேதோ செய்யலானார். இதன் காரணமாக அவருடைய பணவாசனை ஐந்தாறு கிராமங் கள்வரை வீசியது. – ப ஒருநாள் ஹரிசரணர் தன் தமையனிடம்வந்து வணக் கத்துடன், “அண்ணா! உங்களிடம் வெகு நாட்களாக ஒரு விஷயம் சொல்லவேண்டும் என்றிருக்கிறேன்” என்றார்.
“நல்லது சொல்லேன்!”
ஹரிசரணர் தோளைக் குலுக்கிக்கொண்டு, “நீங்கள் ஒண்டியாக இன்னும் எவ்வளவு நாட்களுக்கு இப்படி…?” என்றார்.
“அது வாஸ்தவந்தான். அறுபதாவது வயசு நடக்கிறது” என்றார் குருசரணர்.
“அதனால்தான் சொல்லுகிறேன். இனி நான் வீட்டோடு இருக்கப்போகிறேன். நிலபுலன்கள் தாறு மாறாகக் கிடக்கின்றன. நானே எல்லாவற்றையும் இனிப் பார்த்துக்கொள்…” – குருசரணர் ஒருகணந்தான் தன் தம்பியின் முகத்தைப் பார்த்தார். பிறகு, “நிலபுலன்கள் சரியாகத்தான் இருக் கின்றன. இதில் தாறுமாறு என்ன இருக்கிறது? நீ பாகம் பிரித்துக்கொள்ளும் விஷயத்தைப்பற்றிப் பேசுகிறாயா?” என்றார்.
ஹரிசரணர் வெட்கித் தலைகுனிந்து, “இல்லை, அண்ணா இல்லை. இப்பொழுது நடப்பதைப் போலவே நடக்கட்டும். இதில் மாறுதல் ஒன்றும் வேண்டாம். ஏதோ நம்மிடம் இருப்பதில் கவனமாக இருக்க வேண் டாமா? சமையல் சாப்பாட்டு விஷயம் எப்பொழுதுமே தொல்லை பிடித்ததுதான். மற்றதெல்லாம் ஒன்றாகவே இருக்கட்டும். சமையல் மட்டும் தனியாகச் செய்து கொள்ளுவோம். உங்களுக்குத் தெரியாததா?” என்றார்.
“தெரியாமல் என்ன? எனக்கு நன்றாகத் தெரியும். நல்லது, நாளையிலிருந்து அப்படியே செய்துவிட்டால் போகிறது.”
“எப்படி நிர்ணயிப்பது என்பதைப்பற்றி, நீங்கள் ஏதாவது நிச்சயம் செய்தீர்களா?”
“நிச்சயம் செய்ய இதுவரை அவசியம் ஏற்படவில்லை. இன்று ஏற்பட்டு விட்டதென்றால் சகோதரர்கள் மூவரும் சரி சமபாகம் பிரித்துக்கொள்ள வேண்டியதுதான்”
ஹரிசரணர் ஆச்சரியத்துடன், “மூன்று பாகம் எப்படி? சின்ன நாட்டுப்பெண் விதவை. குழந்தை குட்டிகளும் இல்லை. அவளுக்கு எப்படிப் பாகம் சேரும்? மொத்தம் இரண்டு பாகம்தான்” என்றார்.
குருசரணர் தலையசைத்து விட்டு, “இல்லை, மூன்று பாகம் தான். சின்ன நாட்டுப் பெண் யார்? நமது சியாம சரணின் மனைவியல்லவா? அவள் உயிருள்ளவரை அவளுக்கும் பாகம் உண்டு” என்றார்.
ஹரிசரணர் சற்றுக் கடுகடுப்புடன், “சட்டப்படி அவளுக்குப் பாகம் கிடைக்காது. ஏதோ சாப்பாட்டிற்குத்தான் வாங்கிக் கொள்ளலாம்” என்றார்.
“அது வாங்கிக் கொள்ளத்தான் செய்வாள். இந்த வீட்டுக்கு வந்த மருமகள் அல்லவா?”
“நாளை ஒருகால் நிலத்தை விற்றோ, அடகு வைத்தோ பணம் வாங்கவோ ஆரம்பித்தால்?”
“சட்டப்படி அப்படிச் செய்ய அவளுக்கு உரிமை உண்டானால் செய்யத்தான் செய்வாள்.”
ஹரிசரணரின் முகம் சுண்டியது. “உம், செய்வாள், செய்யமாட்டாளா?” என்றார்.
மறுநாள் ஹரிசரணர் கயிறும் அளவுகோலும் எடுத்துக்கொண்டு வீட்டுவாசல்களை அளந்து கொண்டு திரிந்தார். குருசரணர் ஒன்றும் பேசவும் இல்லை ; அதைத் தடுக்கவும் இல்லை. இரண்டு மூன்று தினங் களுக்குப் பிறகு செங்கல், காரை, மணல் யாவும் வந்து சேர்ந்தன. வீட்டில் வெகு நாட்களாக இருந்த வேலைக் காரி, ” நாளையிலிருந்து கொத்தன் வந்து வேலை செய்யப் போகிறான். சின்னபாபு தன் பாகத்திற்குச் சுவர் எழுப்பிக் கொள்ளப்போகிறார்” என்றாள்.
குருசரணர் சிரித்துக் கொண்டே, “அதுதான் பார்த் துக் கொண்டிருக்கிறேனே! சொல்ல வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது?” என்றார்.
ஐந்தாறு தினங்களுக்குப் பிறகு ஒரு நாள் மாலை, கதவுக்கு வெளியே காலடிச் சத்தம் கேட்டது. குருசரணர் தலை நிமிர்ந்து பார்த்துவிட்டு, “பஞ்சு அம்மா, என்ன சேதி?” என்று கேட்டார்.
பஞ்சுவின் தாய் வெகு நாளைய வேலைக்காரி. அவள் கை ஜாடையினால் சுட்டிக் காட்டி, “பெரிய பாபு, சின்ன அம்மா நிற்கிறார்கள்” என்றாள்.
குருசரணரின் மனைவி இறந்தபின்பு சின்ன மருமகள் தான் வீட்டுக்கு எஜமானியாய்க் காரியங்களை நிர்வகித்து வந்தாள். மைத்துணன் முன் வருவதில்லை. மறைவில் நின்று தான் பேசுவது வழக்கம். அவள் மிருதுவான குரலில், “மாமனார் வீட்டில் எனக்கொன்றும் உரிமை இல்லையா? சின்ன மன்னி இராப்பகல் வாயில் வந்தபடி யெல்லாம் பேசுகிறாளே?” என்றாள்.
“ஏன் அம்மா, உரிமை இல்லாமல் என்ன? அவளுக் குள்ள உரிமை உனக்கும் உண்டு.”
“ஆனால் இந்த மாதிரிச் செய்தால் வீட்டில் இருக்க முடியாதே!” என்றாள் பஞ்சுவின் தாய்.
குருசரணர் எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந் தார். ஒரு நிமிஷம் மௌனமாக இருந்துவிட்டு “பாரஸை வரச் சொல்லிக் கடிதம் எழுதி இருக்கிறேன். அவன் வந்தவுடன் யாவும் சரிப்பட்டு விடும். அதுவரை நீங்கள் கொஞ்சம் சகித்துக்கொள்ளுங்கள்!” என்றார். – சின்ன மருமகள் இதைச் சற்று ஆட்சேபித்து, “ஆனால் பாரஸ் வந்து…..? ” என்று ஆரம்பித்தாள்.
குருசரணர் இடைமறித்து, “ ஆனால் ஒன்றுமில்லை அம்மா. என் பாரஸ் விஷயத்தில் . ஆனால் ‘கீனால்’ என்ற வார்த்தையே கிடையாது. ஹரி அவனுடைய தந்தைதான். ஆனால் அவன் என்னுடையவன். இந்த உலகமே ஒன்று சேர்ந்தாலும் அவன் என்னுடைய வனாகவே இருப்பான். அவனுடைய பெரியப்பா, ஒரு நாளும் அநியாயம் செய்யமாட்டார் என்ற விஷயத்தை அவன் இதுவரை அறிந்து கொண்டிருக்காவிட்டால் அவனை இவ்வளவு நாள் வளர்த்துப் படிக்க வைத்தது வியர்த்தம் என்று எண்ணிக்கொள்” என்றார்.
வேலைக்காரி சொன்னாள் :-“இதில் சொல்லுவதற்கு என்ன இருக்கிறது? அந்த வருஷம் தாய் இறந்து போனாள். அப்பொழுது எமன் வாயில் இருந்த அவனை நீங்கள் தானே மீட்டு வந்தீர்கள், பெரிய பாபு! அப் பொழுது சின்னபாபு எங்கே இருந்தார்? இந்த மாற்றாந் தாய் எங்கே இருந்தாள்? பயத்தினால் ஒருவரும் கிட்டே வந்து அண்டவே இல்லையே! அப்பொழுது பெரியப்பா தான் தனியாய் நின்றார். இரவென்றும் பகலென்றும் பாராமல் உழைத்தார்!”
“பாரஸின் தாயார் ஜீவித்திருந்தால் அவள் கூட இவ் வளவு செய்திருக்கமாட்டாள் !” என்றாள் சின்ன நாட்டுப் பெண்.
குருசரணருக்குச் சங்கோஜமாகப் போய்விட்டது. “இருக்கட்டும் அம்மா! அதெல்லாம் இப்பொழுது எதற்கு?” என்றார்.
அவர்கள் சென்ற பிறகு விருத்தரான குருசரணரின் கண்முன் பாரஸ், விமலன் இருவர் பக்கம் பக்கமாக நின்று காட்சியளித்தார்கள். ஜன்னலுக்கு வெளியே உள்ள பரந்த வானவெளியைப் பார்த்து அவர் ஆழ்ந்த பெருமூச்சு விட்டுக் கொண்டார். அதன் பிறகு பெரிய மூங்கில் தடியை எடுத்துக்கொண்டு சர்க்கார் சாவடிக்குச் சதுரங்கம் ஆடக் கிளம்பி விட்டார்.
மறுநாள் மத்தியானம், குருசரணர் ரொட்டி சாப் பிட உட்கார்ந்தார். வீட்டின் வடபுரம் தாழ்வாரத்தில் ஒரு பாகத்தை அடைத்துக்கொண்டு ஹரிசரணர் சமை யல் செய்து கொண்டிருந்தார். அங்கிருந்து ஒரு பெண் கடும் வார்த்தைகளை அள்ளி வீசிக்கொண்டிருந்தாள். சொன்ன சொல் கணக்கில் அடங்காது. அவர் சமையல் தடைப்பட்டது. இதற்குள் ஆண்குரல் ஒன்று அத்துடன் கலந்து வந்தது. அவர் அதைக் காது கொடுத்துக் கேட்டார்.
சின்ன மருமகள் மறைவில் நின்றபடி ‘ஆஹாஹா’ என்று தவித்துப் போனாள். பஞ்சுவின் தாய் கோபத்தி னால் கூச்சலிட்டு இந்தச் சம்பவத்தைப் பகிரங்கப்படுத்தினாள்.
குருசரணர் முற்றத்துக்கு வந்து நின்று தம்பியிடம் “ஹரிசரண்! பெண்கள் வார்த்தையை நான் பொருட் படுத்துவதில்லை. ஆனால் நீ புருஷனாக இருந்தும், உன் மதனியை இவ்வாறு அவமானப் படுத்தினால் அவளால் இந்த வீட்டில் எப்படி இருக்கமுடியும்?” என்றார்.
இவருடைய வார்த்தைக்கு ஒருவரும் பதில் சொல்ல வில்லை. ஆனால் வாசல் பக்கத்திலிருந்த “ஹரிசரணரின் மனைவியின் கடும் சொற்கள் கேட்டன. அவள் கேலியாக, “ஆமாம், இந்தமாதிரி அவமானம் செய்யாதீர்கள். அப்புறம் மன்னி, இந்த வீட்டில் இருக்கமாட்டாள். அப்புறம் என்ன ஆகிவிடும் தெரியுமா?” என்றாள்.
“இதற்கு ஹரிசரணர் பதில் சொன்னார்:”உலகம், பாதாளத்திற்குப் போய்விடும். வேறு என்ன ஆகிவிடும்? யார் இருக்க வேண்டுமென்று காலைப்பிடித்துக் கொள்ளுகிறார்கள்? போனால் சனி தொலைந்தது!” என்றார்.
குருசரணர் தயங்கி நின்றார். அவர்களுடைய பேச்சு வார்த்தைகள் முடிந்த பிறகு பேசாமல் வெளியே செல்ல லானார்.
ஊர்ப் பள்ளிக்கூடத் தலைமை உபாத்தியாயரின் பெண்ணுடைய கல்யாணத்திற்காக குருசரணர் கிருஷ்ண நகருக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்தார். இதற்குள் பாரஸ் வீடு வந்து சேர்ந்தான். வந்ததும் வராததுமாய் ஜுரமாய்ப் படுத்துவிட்டான். அவர் பயந்துகொண்டே பாரஸின் அறைக்குள் நுழைந்தார். எதிரே வந்த தம்பி யைப் பார்த்து, “பாரஸுக்கு ஜுரமா வந்திருக்கிறது?” என்று கேட்டார்.
ஹரிசரணர் “உம்!” என்று சொல்லிவிட்டுச் சென்று விட்டார். ஹரிசரணர் மனைவியின் தாய்வீட்டு வேலைக் காரி அவரை வழிமறித்து, “ நீங்கள் உள்ளே போகாதீர் கள்!” என்றாள்.
“ உள்ளே போகக்கூடாதா, ஏன்?” “உள்ளே அம்மா இருக்கிறார்கள்!” ” அவர்களைச் சற்று விலகிக் கொள்ளச் சொல்! ”10
102
*” அவர்கள் எங்கே விலகிக் கொள்வது? பிள்ளைக்கு நெற்றி வருடிக் கொண்டிருக்கிறார்கள்!” என்று சொல்லி விட்டு அவள் தன் காரியத்தைப் பார்க்கச் சென்றாள்.
ப்- குருசரணர் கனவில் இருப்பவர்போல் ஒரு கணம் அப்படியே நின்றிருந்தார். பிறகு பாரஸைக் கூப்பிட்டு “ உடம்பு எப்படி அப்பா இருக்கிறது?” என்று கேட் டார். –
இந்த வருத்தம் தேங்கிய கேள்விக்கு உள்ளே இருந்து யாதொரு பதிலும் வரவில்லை. ஆனால் வேலைக்காரி எங்கோ இருந்தபடி, “ சின்ன ஐயாவுக்கு ஜுரம், கேட் கிறதா?” என்றாள்..
குருசரணர் ஒன்றும் தோன்றாமல் இரண்டு மூன்று நிமிஷங்கள் நின்றார். பிறகு மெள்ள மெள்ள வெளியே வந்தார். ஒருவருடனும் ஒன்றும் பேசவில்லை. நேரே கிருஷ்ண நகருக்குப் போனார். –
அங்கே கலியாண கோலாகலத்தில் ஒருவரும் இவ ரைக் கவனிக்கவில்லை. கல்யாணச் சந்தடி ஓய்ந்ததும் அவருடைய வெகுநாளைய நண்பரான தலைமை உபாத்தி யாயர் குருசரணரைத் தனிமையில் அழைத்து, “ என்ன விஷயம் குருசரண்? ஹரிசரண் ஏதோ உனக்குத் தொங் தரவு கொடுத்துக் கொண்டிருப்பதாகக் கேள்விப்பட் டேனே? வாஸ்தவமா? ” என்று கேட்டார்.
குருசரணர் சமாளித்துக்கொண்டு ” ஹரிசரணனா? இல்லையே!” என்றார்.
“ இல்லாமல் என்ன? ஹரிசரணனின் விஷமங்கள் எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தான்!”
குருசரணருக்குச் சட்டென்று சகல விஷயங்களும் நினைவிற்கு வந்தன. அவர், “ ஆமாம், ஆமாம், அவன்
103
சொத்து சம்பந்தமாக ஏதோ தகராறு செய்து கொண் டிருக்கிறான் ” என்றார்.
அவருடைய வார்த்தையின் தொனியினால் அந்த நண் பர் வருத்தமடைந்தார். இருவரும் சிறு வயது முதல் கள் ளங் கபடமற்றுப் பழகியவர்கள். அப்படியிருந்தும் குரு சரணர் தன் குடும்பச் சச்சரவை, மறைப்பதற்காக, அசட்டையாகப் பதில் சொல்ல முயல்வதைக் கண்டு, அவர் மேலே தொடர்ந்து ஒன்றும் விசாரிக்கவில்லை.
குருசரணர் கிருஷ்ண நகரத்திலிருந்து வீடு திரும்பி வந்து பார்த்தார். அவர் இங்கு இல்லாமல் இருந்த இந்தச் சில தினங்களுக்குள் ஹரிசரணர் வீட்டின் ரேழியிலும் முற்றத்திலும் பல இடங்களில் பள்ளங்களை வெட்டி வீட்டில் கால் வைக்க இடமில்லாமல் செய்திருந்தார். அவ ருடைய சௌகரியத்திற்கு, அவர் இஷ்டப்படி பிரித்துச் சுவர் எழுப்பிக்கொண்டார். அவரிடம் ரூபாய் இருக் கிறது. ஆகையால், பிறருடைய அபிப்பிராயத்தைக் கேட்க வேண்டிய அவசியம் தமக்கு இல்லை என்று எண்ணினார் போலிருக்கிறது.
குருசரணர் தம் அறைக்குச் சென்று ஆடைமாற்றிக் கொண்டிருந்தார். இதற்குள் சின்ன நாட்டுப் பெண்ணு டன் பஞ்சுவின் தாய் வந்து நின்றாள். குருசரணர் விஷ யத்தை விசாரிக்க வாய் திறந்தார். அதற்குள் அவள் விசித்து அழ ஆரம்பித்துவிட்டாள். அவள் அழுது கொண்டே, “முந்தாநாள் காலையில் சின்ன நாட்டுப் பெண் ணைச் சின்ன பாபு கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளி
னாராம் ” என்றும் சொன்னாள்.
நடந்த சம்பவத்தைப் புரிந்துகொள்ள குருசரணருக்கு அதிக நேரம் பிடிக்கவில்லை. ஆயினும், அவர் கற்சிலை போல் அசைவற்று, உணர்வற்று நின்றுவிட்டார். பிறகு
104
திடீரென்று “ஏன் அம்மா, நிஜமாகவே ஹரிசரண் உன் னைக் கை தீண்டினானா? தீண்டியிருப்பான்!” என்றார். . ம். பிறகு சற்றுப் பொறுத்து, ”சரிதான், பாரஸ் அப் பொழுது கட்டிலில் படுத்திருப்பான்!” என்றார். –
பஞ்சுவின் தாய் சொன்னாள்:-” அவர் ஒன்றையும் காதில் போட்டுக்கொள்ளவில்லை, பெரிய பாபு. இன்று காலை வண்டிக்குத்தான் அவர் கல்கத்தா சென்றார்.” –
“அவன் ஒன்றும் காதில் போட்டுக்கொள்ளவில் லையா? அவன் தன் தந்தையின் செய்கை தெரிந்தும் பேசா மலா சென்றான்?”
‘”ஆமாம், தெரிந்தும் பேசாமல் தான் சென்றான்!” –
குருசரணருக்கு இந்த உலகமே சுழல்வதைப்போல் இருந்தது. அவர், ” பெண்ணே ! இந்தக் குற்றத்திற்கு அவனுக்குத் தண்டனை கிடைக்காவிட்டால், இந்த வீட் டில் நான் இருந்து காரியமில்லை. எழுந்திரு! இன்னும் நேரமிருக்கிறது. நான் வண்டி கொண்டு வருகிறேன். நீ. கோர்ட்டுக்குச் சென்று பிராது கொடுக்கவேண்டும்” என்றார். 11
கோர்ட்டுக்குச் சென்று வழக்குத் தொடர்வது என்ற வார்த்தையைக் கேட்டதும் நாட்டுப்பெண் திடுக்கிட்டுப் போனாள். இதற்குள் குருசரணர் “ குடும்ப ஸ்திரீகளுக்கு இந்தக் காரியம் கண்யக் குறைவானதுதான். இது எனக் கும் தெரியும். ஆனால் இப்படி வேண்டுமென்று அவ மானம் செய்வதைப் பேசாமல் சகித்துக்கொண்டால் கடவுளே உன்மீது சினம் கொள்வார். இதைவிட அதிக மாக நான் ஒன்றும் சொல்லமுடியாது” என்றார்.
சின்ன நாட்டுப்பெண் எழுந்து நின்றாள். பிறகு, “ தாங்கள் என் தந்தைக்குச் சமமானவர்கள். நீங்கள் என்ன கட்டளையிடுகிறீர்களோ அதைச் சற்றும் தயங்கா மல் நான் நிறைவேற்றுகிறேன் ” என்றாள். –
105
கம் ஹரிசரணர் பேரில் வழக்குத் தொடரப்பட்டது. குரு சரணர் தம்மிடமிருந்த தங்கச் சங்கிலியை விற்று அதிக பிஸ்கொடுத்து பெரிய வக்கீலாக வைத்துக் கேஸ் நடத்தி
வழக்கு வாய்தா தினமும் வந்தது. பிரதிவாதி ஹரி சரணர் ஆஜரானார். ஆனால் வாதி ஆஜராகவில்லை. வக்கீல் ஏதேதோ பேசினார். நியாயாதிபதி கேஸைத் தள்ளி விட் டார். அகஸ்மாத்தாக குருசரணரின் பார்வை கூட்டத் தில் இருந்த பாரஸின் பக்கம் சென்றது. அவன் தன் முகத்தைத் திருப்பிச் சிரித்துக் கொண்டிருந்தான். – குருசரணர் வருத்தத்துடன் வீடுவந்து சேர்ந்தார். சின்ன நாட்டுப் பெண்ணின் தாய் வீட்டில் யாருக்கோ தேக அசௌக்கியமென்று சேதிவந்ததன் பேரில், அவள் ஸ்நானம் செய்துவிட்டு சாப்பிடாமல்கூட வண்டி கொண்டு வரச் சொல்லிச் சென்று விட்டாளென்று கேள்விப்பட்
டார்.
கேஸ் ஜயித்ததற்காக ஹரிசரணர் மேள தாளத் துடன் சண்டிதேவிக்கு பூஜை போட்டார். மேளச் சத் தம் ஊர் கிடுகிடுத்தது.
இரண்டு பாகமாகப் பிரிக்கப்பட்ட பிதிரார்ஜித வீட் டில் ஒரு பக்கம் ஹரிசரணரின் குடும்பம். மறு பக்கம் குருசரணரும் வெகு நாளைய வேலைக்காரியான பஞ்சுவின் தாயும் இருந்தனர்.
மறுநாள் காலை பஞ்சுவின் தாய் வந்து, ” பெரியபாபு! சமையலுக்குச் சாமான்களெல்லாம் எடுத்து வைத்து விட்டேன்” என்றாள். * சமையலா! ஆமாம்! சரிதான். இருக்கட்டும், இதோ வந்துவிட்டேன்!” என்று கூறி எழுந்திருக்க லானார் குருசரணர். அதற்குள் வேலைக்காரி, “அவசர மில்லை பெரியபாபு. இன்னம் சற்று நேரமாகட்டும்.
106
அதற்குள் தாங்கள் கங்கைக்குச் சென்று ஸ்நாநம் செய்து விட்டு வாருங்கள்!” என்றாள்.
” நல்லது சென்று வருகிறேன்! ” என்று சொல்லி விட்டு கணத்திற்குள் கங்கா ஸ்நானத்திற்குத் தயாரானார், அவருடைய பேச்சிலோ, நடத்தையிலோ எவ்வித சல னமோ தேக்கமோ இல்லை. ஆயினும் பஞ்சுவின் தாய்க்கு ஏதோ குறையாகவேபட்டது. அவளுக்குத் திரும்பத் திரும்ப “ இவர் அந்தப் பழைய பெரியபாபு அல்ல!” என்ற நினைவே வந்தது.
அவள் உள்ளே சென்று உரத்த குரலில், “ இது நல்ல தற்கல்ல, இதனால் ஒருநாளும் நன்மை ஏற்படாது. பகவான் இதற்குத் தண்டனை அளித்தே தீருவார்!” என்று புலம்பிக்கொண்டிருந்தாள்.
யாருக்கு நன்மை ஏற்படாது ; யாருக்கு பகவான் தண்டனை அளித்தே தீருவார் என்பது விளங்கவில்லை. ஆனால் இது சம்பந்தமாக அன்று சின்னபாபுவின் சார்பாக ஒருவரும் சண்டைக்கு வரவில்லை.
இவ்விதமாக நாட்கள் கழிந்து வந்தன.
குருசரணரின் ஒரே பிள்ளை விமல சந்திரன் நல்ல நடத்தையுள்ளவனல்ல என்பது அவருக்குத் தெரியும். சில மாதங்களுக்குமுன் அவன் வீட்டுக்கு வந்து சிலமணிநேரம் தங்கினான். பிறகு அவன் கண்ணில் தென்படவே இல்லை. அந்தத்தடவை அவன் ஏதேதோ சாமான்களை ஒரு தோற் பையில் போட்டு ஒளித்து வைத்து விட்டுச் சென்றான். அவன் போனபிறகு குருசரணர் பாரஸை அழைத்து, “ இந்தாடா அப்பா! இதில் என்ன இருக்கிறது. பார்?” என்று காட்டினார். 4 பாரஸ் அவற்றை நன்றாகப் பார்த்துவிட்டு “ எல்லாம் காகிதங்கள். ஏதாவது தஸ்தாவேஜாக இருக்கலாம்.
107
பெரியப்பா! இவைகளைக் கொளுத்தி விடட்டுமா?” என்று கேட்டான்.
p “பிறகு அவை ஒருவேளை வேண்டியிருந்தால்?”
“ஆனால் விமல் அண்ணாவுக்கு இவை தேவையில்லை. ஆபத்தை வீட்டில் வைத்துக்கொள்ள வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது?” –
குருசரணர் தடுத்தார். “விஷயத்தை அறியாமல் வீணாக்குவானேன் பாரஸ்? நீ இதை எங்கேயாவது மறைத்து வைத்துவிடு. பிறகு பார்த்துக் கொள்ளலாம்” என்றார். |
இந்த சம்பவத்தை அத்துடன் மறந்துவிட்டார். அன்று காலை அவர் கங்காஸ்நானம் செய்து திரும்பிவந்து சமையல் செய்ய ஆயத்தம் செய்துகொண்டிருந்தார். அப்பொழுது திடீரென்று கையில் தோல் பையுடன் பாரஸ், ஹரிசரணர், கிராமத்திலுள்ள நாலு பெரிய மனிதர்கள், போலீஸார் யாவரும் வந்துசேர்ந்தனர்.
விஷயம் இதுதான். விமல் ஒரு கொள்ளைக்காரன். அதோடு எங்கோ ஓடிவிட்டான். பத்திரிகையில் இந்த விஷயத்தைப் படித்துவிட்டுப் பாரஸ் போலீஸுக்குத் தகவல் கொடுத்துவிட்டான். தோல் பை இதுவரை அவனிடம்தான் இருந்தது. சில விநாடி அவர் கண் கொட்டாமல் பாரஸின் முகத்தைப் பார்த்தார். அதன் பின் கலங்காத அவர் கண்கள் இரண்டினின்றும் கண்ணீர் துளித்தது. பிறகு அவர், “எல்லாம் உண்மை ; பாரஸ் சொன்ன தில் ஒன்றுகூடப் பிசகல்ல!” என்றார்.
இன்ஸ்பெக்டர் குருசரணரை சில கேள்விகள் கேட்டு விட்டு அவரை விட்டுவிட்டார். பிறகு போகும்போது அவர் குனிந்து குருசரணரின் பாதங்களைத் தொட்டு, “ நீங்கள் வயதில் மிகவும் பெரியவர்கள். என்னுடைய இந்தத் தவறை மறந்துவிடுங்கள். இவ்வளவு துக்ககர
108
மான காரியத்தை இதற்குமுன் நான் செய்ததே இல்லை ” என்றார். .
பின்னும் சில மாதங்களுக்கெல்லாம் விமலனுக்கு ஏழு வருஷம் சிறைவாசத் தண்டனை விதிக்கப்பட்டது என்ற செய்தி எட்டியது. 5
மீண்டும் மேளதாள வைபவத்துடன் தடபுடலாக ஹரிசரணர் சுபசண்டி தேவிக்குப் பூஜை போட ஏற்பாடு செய்யலானார், ம்
பாரஸ் தந்தையிடம் “ அப்பா, இவைகளொன்றும் வேண்டாம்” என்றான்.
in “ஏன்?”
” இதை என்னால் சகிக்க முடியவில்லை.”
* நல்லது; சகிக்க முடியாவிட்டால் இன்று வண்டிக்கே கல்கத்தா சென்று சுற்றித் திரிந்து விட்டு வா. ஜகன் மாதா வுக்குப் பூஜை. தர்ம கர்மங்களைத் தடை செய்யாதே!”
தர்ம கர்மங்களுக்கு யாதொரு தடையும் ஏற்பட வில்லை என்பதைச் சொல்லத் தேவை இல்லை.
பத்துப் பன்னிரண்டு தினங்களுக்குப் பிறகு ஒருநாள் காலை குருசரணரின் வீட்டுப் பக்கம் திடீரென்று ஏதோ கூக்குரல் கேட்டது. சிறிது நேரத்திற்கெல்லாம் இடைச்சி அழுதுகொண்டே வெளியே வந்து நின்றாள். அவள் மூக்கில் ரத்தம் ஒழுகிக்கொண்டிருந்தது. ஹரிசரணர் படபடப்புடன், ” என்ன ரத்தம் மோக்ஷதா, ஏன் இப்படி? என்ன சமாசாரம்?” என்று கேட்டார்.
அழுகைக் குரலைக் கேட்டு வீட்டிலுள்ளவர்கள் எல்லோரும் வந்து கூடிவிட்டனர். மோக்ஷதா அழுது கொண்டே, ” பாலில் தண்ணீர் விட்டிருக்கிறேன் என்று பெரிய பாபு என்னை உதைத்துக் குழியில் தள்ளி விட்டார்!” என்றாள்.
” யார், யாரது! அண்ணாவா! சேச்சே! அவரா
109
அப்படிச் செய்தார்” என்றார் ஹரிசரணர் ஆச்சர்யத் துடன்.
* “யார் பெரியப்பாவா? நீ பொய் சொல்லுகிறாய் !” என்றான் பாரஸ்.
“பெரியவர் கூடப் பெண் பிள்ளையைக் கைதீண்டி அடிப்பாரா? ஏண்டி பால்காரி ? நீ என்ன ஏதாவது கனவு கண்டாயா?” என்றாள் ஹரிசரணரின் மனைவி.
அவள் தன் மேலுள்ள மண்ணைக்காட்டி தெய்வத்தின் மேல் ஆணையிட்டுத் தான் சொன்னது யாவும் உண்மை என்று கூறினாள்.
– ‘ இஞ்ஜங்ஷன்’ ஆர்டரால் சுவர் எழுப்பும் வேலை நிறுத்தப்பட்டிருந்தது. ஆனால் முற்றத்தில் தோண்டிய பள்ளம் அப்படியேதான் இருந்தது. அதைத் தூர்க்கவே இல்லை. குருசரணர் உதைத்ததால் அவள் அந்தப் பள்ளத்தில் வீழ்ந்தாள். அதனால் காயம் ஏற்பட்டது.
“சரி, வா, என்னுடன்.. பிராது கொடுக்கலாம்!” என்றார் ஹரிசரணர்.
“நீங்கள் என்ன அசம்பாவிதமாகப் பேசிக்கொண் டிருக்கிறீர்கள் ? மைத்துனர் பெண் பிள்ளையைக் கை தீண்டி அடிப்பாரா? அவள் பொய் சொல்கிறாள் !”
என்றாள் அவர் மனைவி. –
பாரஸ் திகைத்துப் பேசாமல் நின்றிருந்தான்.
“ பொய்யாக இருந்தால், தோற்றுப் போகட்டும். ஆனால் அண்ணாவின் வாயிலிருந்து பொய் வராது. அடித் திருந்தால் தண்டனை கிடைக்கட்டுமே!” என்றார் ஹரி சரணர். இந்த யுக்தியைக் கேட்ட மனைவிக்கு நல்ல புத்தி வந்துவிட்டது. “அதுவும் சரிதான். போய்க் கேஸ் கொடுங்கள். நல்ல தண்டனை கிடைக்கும்” என்றாள்.
– எதிர்பார்த்தபடியே நடந்தது. அண்ணாவின் வாயி
110
லிருந்து பொய் வரவில்லை. சட்டப்படி அவருக்குப் பத்து
ரூபாய் அபராதம் விதித்தார்கள்.
இந்தத் தடவை சுபசண்டிக்கு பூஜை நடைபெறவில்லை. ஆனால் மறுநாள் சிறுவர்கள் பலர் ஒன்று கூடிக்கொண்டு குருசரணரின் பின்னால் ஏதேதோ கூச்சல் போட்டுக் கொண்டே சென்றனர். பால்காரியை அடித்ததைப்பற்றி ஒரு பாட்டுக்கூடக் கட்டிவிட்டார்கள்.
இரவு எட்டுமணி இருக்கும். ஹரிசரணரின் வாசலில் எல்லோரும் அமர்ந்திருந்தனர். இப்பொழுதெல்லாம் கிராமத் தலைவர்கள் இங்கேதான் வந்து கூடுவது வழக்கம். திடீரென்று ஒருவன் வந்து ஒரு சந்தோஷச் செய்தியைத் தெரிவித்தான். கொல்லர்கள் விச்வ கர்மா பூஜை உத்ஸவத்தை முன்னிட்டு கல்கத்தாவிலிருந்து இரண்டு கேம்டா நடனக்காரிகளைக் கொண்டு வந்திருக்கிறார்கள். அந்தக் கூட்டத்தில் குருசரணர் அமர்ந்திருக்கிறார். இது தான் செய்தி.
ஹரிசரணர் சிரித்துச் சிரித்து ஓய்ந்து போனார். * பைத்தியமா என்ன? இவன் பேச்சைக் கேட்டீர்களா? அண்ணா கேம்டா கூத்துப் பார்த்துக்கொண்டிருக்கிறாராம். ஏண்டா அவிநாசா! குடித்துவிட்டு வந்திருக்கிறாயா என்ன?” என்றார்.
அவிநாசன் சத்தியம் செய்து, “ என் கண்களால் பார்த்துவிட்டு வருகிறேன் !” என்றான்.
ஒரு ஆள் ஓடினான் உண்மையை அறிந்து வர. பத்து நிமிஷங்களுக்கெல்லாம் திரும்பிவந்து சொன்னான் : “ விஷயம் முற்றிலும் வாஸ்தவம். கூத்துப் பார்த்துக் கொண்டிருப்பதோடு மட்டுமல்ல. தலைப்பில் முடிந்திருந்த பணத்தையும் எடுத்துக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்! இதையும் பார்த்துவிட்டுத்தான் வந்தேன் !” என்றான்.
அவ்வளவுதான். ஒரே குதூகலம். ஒருவன், “ இம்
111
மாதிரி ஒருநாள் நடக்கும் என்பது தெரிந்த விஷயம் தானே” என்றான். மற்றொருவன், “ ஒரு காரணமும் இல்லாமல் பெண் பிள்ளையைக் காலால் உதைத்த அன்றே நமக்குத் தெரிந்து விட்டதே” என்றான். இன்னொருவன் குருசரணரின் மகனின் திருட்டுக் கேஸை எடுத்துக் கூறி, “தந்தையின் நடத்தையை அநுசரித்துத்தான் மகனும் செய்திருக்கிறான் !” என்றான்.
இன்று பேசாமல் இருந்தவர் ஹரிசரணர் ஒருவர் தான். அவர் இவைகளில் மனம் கொள்ளாதவராய்ப் பேசாமல் உட்கார்ந்திருந்தார். இன்று அவருக்கு அவரை யும் அறியாமல் பால்ய நினைவுகள் தோன்றலாயின. இவர் தானா அவருடைய தமையன் ? இவரா அந்தக் குருசரண மஜும்தார்!
இரவு மணி இரண்டு இருக்கும். கூத்து முடிவடைய இன்னும் நேரம் இருந்தது. விசுவகர்ம பூஜை சீக்கிரம் முடிவடைந்து விட்டது. பக்தர்கள் கள் குடித்து, மாமிசம் உண்டு சதிர்வைத்து, தக்ஷயக்ஞரூபத்தில் இதைப் பூர்த்தி செய்துகொண்டிருந்தார்கள். பலர் தங்கள் நினைவு தப்பி இருந்தனர். அவர்களின் மத்தியில் அமர்ந்து சிரித்துக் கொண்டிருந்தார் குருசரணர்.
அப்பொழுது சால்வையினால் முகம்வரை மூடிக் கொண்டிருந்த ஒருவர் அங்குவந்து சேர்ந்தார். மெள்ள குருசரணர் முதுகில் கையை வைத்தார். அவர் திடுக்கிட்டு, ” யார்?” என்று கேட்டார்.
“நான் தான், பாரஸ்! பெரியப்பா! வீட்டுக்கு வாருங்கள்!”
குருசரணர் யாதொரு தடையும் சொல்லவில்லை. ” வீட்டுக்கா? சரி, வா!” என்றார்.
உற்சவப் பந்தலைவிட்டு வெளியே வந்து சாலையில் நின்று அதிக வெளிச்சமில்லாத இடத்தில் பாரஸ் பெரி
112
யப்பாவின் முகத்தைக் கூர்ந்து நோக்கினான். கண்கள்
அந்தப் பழைய ஜோதி இல்லை. முகத்தில் அந்தக் இல்லை. பாதாதிகேசம் இவர் ஒரு நடைபிணம் காட்சியளித்தார். இவ்வளவு நாட்களுக்குப் பிறகு, கண்களில் கண்ணீர் பெருகியது. இவ்வளவு நாட்களு பிறகு, ஜனங்களின் முன் லஜ்ஜையடையக்கூடிய எதுவும் பெரியப்பாவிடம் இல்லை என்பதை . கண்கள் கண்டன. இந்த உணர்ச்சியற்ற உடலை 6 பெரியப்பா எங்கோ சென்றுவிட்டார் என்பது அ குப் புலப்பட்டது. அவன், “பெரியப்பா, காசிக்குப் போக வேண்டுமென்று சொல்லிக் கொன், தீர்களே, போகிறீர்களா?” என்று கேட்டான்.
குருசரணர் உயிரற்ற சடலத்தைப் போல், “ றேன், பாரஸ். ஆனால் என்னை யார் அழைத்துச் வார்கள்?” என்றார்.
“நான் அழைத்துக் கொண்டு போகிறேன்.”
” அப்படியானால் வா, வீட்டுக்குச் சென்று சாமான் களை எடுத்துக்கொண்டு புறப்படுவோம்!”
“இல்லை பெரியப்பா! அந்த வீட்டுக்கு இனிப் போக வேண்டாம். அங்கிருக்கும் சாமான் ஒன்றுமே நமக்கு இனி வேண்டாம்!”
குருசரணருக்குச் சட்டென்று சுய உணர்ச்சி வந்து கணநேரம் மௌனமாக இருந்தார். பிறகு, “ஒ. வேண்டாமா? அந்த வீட்டிலுள்ளது நமக்கு ஒன்றும் வேண்டாமா?” என்றார்.
பாரஸ் தன் கண்களைத் படைத்துக் கொண்டே ” ஆமாம் பெரியப்பா! ஒன்றும் வேண்டாம். அவைகளை எடுத்துக்கொள்ள அங்கு வேண்டிய பேர் இருக்கிருர் வாருங்கள் !” என்றான்.
“சரி, வா!” என்று கூறிக் குருசரணர் பாரஸின் கையைப் பற்றிக் கொண்டார். இருள் மண்டி ஜன சந்தடி யற்றுக்கிடந்த சாலை வழியே இருவரும் ரயில்வே ஸ்டேஷனை நோக்கி நடந்தார்கள்.
– நாலு கதைகள், சரத் சந்திரர், மொழி பெயர்த்தவர்: அ.கி.ஜயராமன், முதற் பதிப்பு: 1946, ஜோதி நிலையம், சென்னை.