வாசலில் போலீஸ் ஜீப் வந்து நின்று எஸ்.ஐ.யும் கான்ஸ்டபிள்களும் இறங்கி வீட்டினுள் நுழைந்து கணவர் இறந்து ஒரு வாரம் ஆன துக்கத்தில் இருந்த ரூபாவிடம் விசரிக்க வந்தனர்.
போலிஸின் வருகை கண்டு ரூபாவும் அறையை விட்டு வெளியே வந்து வறண்டாவில் கண்ணீரீடன் நிற்க எஸ்.ஐ. ருபாவை பார்த்து,
“வணக்கமா”
“வணக்கங்க”
“அம்மா உங்க கணவரின் இறப்பு உங்களால் தாங்க முடியாதுதான் ஆனால் உங்க கணவரின் இறப்பில் சந்தேகம் இருப்பதாகவும் அவர் தானா இறக்கவில்லை தற்கொலை செய்து கொண்டதாகவும் அதற்கு காரணம் உங்க மகன்தானும் உங்க கணவரின் தங்கை கம்ளைன்ட் கொடுத்திருக்காங்க இதுபத்தி விசாரணை செய்தான் வந்திருக்கோம் கொஞ்ச ஒத்துழைப்பு தாங்க”
“ஐய்யோ கடவுளே அவரோட சாவுல சந்தேகமா அதுவும் அந்த சிரிக்கி சொன்னானு எம் மகன சந்தேகபட்டு விசாரிக்கிரிங்களா இது அடுக்கமா இது நியாமா கடவுளே..”
“அம்மா சந்தேகபட்டு விசாரிக்கிறோம் அவ்வளவுதான் உங்களுக்கு தெரிஞ்சத சொல்லுங்க”
“எனக்கு தெரிஞ்சதா எனக்கு தெரிஞ்சது என் கணவர் போதைல பாத்ரும்ல வழுக்கி விழுந்து இறந்துட்டாரு. அவ்வளவுதான் அப்படி தற்கொலைனா அது அவனாலதான் இருக்கும் ஏனா அந்த சிரிக்கிதான் அடிக்கடி வந்து அவருகிட்ட எம் பொண்ண உன் பையனுக்கு கட்டிக்ககோனு சண்ட போடுவா அவருக்கும் என் பையனுக்கும் அவ வீட்டுல பொண்ணெடுக்க இஷ்டமில்ல அத நேரடிய அவமுன்னாடியே சொல்லிட்டாரு அதுக்கு அவ கூடபொறந்த அண்ணனு கூட பாக்கம அவர அவ்வளவு அசிங்கமா திட்டி சண்ட போட்ட அதுநடந்த பத்து நாள்ல இப்படி நடந்திருக்குனா அவ பேசினதுதான் மனசுதாங்கம அதிகமா குடிச்சு உழுந்து இறந்திட்டாரு அதனால நீங்க மொதல்ல அவள போயி கைதி பன்னுங்க சார் நல்ல குடும்பம சந்தோஷம இருந்த எங்கள்ட்ட வந்து சண்ட போட்டு அந்த மனுசன நோகடுச்சு அவரு போயிசேந்திட்டாரு இப்ப என் பையன சிக்க வெக்க பாக்கிற அது பொய் நீங்க வேனா அக்கம் பக்கம் இருக்கறவங்க கேளுங்க போனவாரம் வந்து அவ ரோட்ல சண்ட போட்டத தெருவே பாத்ததுங்க சார்”
“அப்படிங்களா.. அப்ப உங்க கணவர் தற்கொலை செய்யல கண்டிப்பா”
“கண்டிப்ப இல்லைங்க”
“அப்ப இந்த ஆடியோவ கேளுங்க இது உங்க கணவர் அவங்க தங்கை கிட்ட பேசுனது ‘ராஜீ நல்லாயிருகறயா.. நான் இங்க நல்ல இல்லமா மனசே சரியில்ல நீ சண்ட போட்டுதுல இருந்து. ஆண்டவன் என்ன படச்சு ஏன் இப்படி ஒருபுத்திய கொடுத்தானு தெரியல இதனால பொண்டாட்டிட அடிக்கடி சண்ட பையன்டயும் நல்ல மதிபில்லா என்னமோ இந்தவயசுல இப்படி ஒரு புத்தி ஒரு சில நேரம் என்ன நினைச்ச எனக்கே கோபம் வருது பேசாம செத்தர்லாம் தோனுது’ இப்படி பேசியிருக்கார் உங்க கணவர் இதுக்கு என்ன சொல்றீங்க”
“சார் இதுக்கு என்ன சொல்றது உண்மைதான் டெய்லியும் தண்ணிய போட்டுட்டு பொண்டாட்டி புள்ளட்ட சண்ட வீட்டுக்கு வர வேலக்காரங்கள இருந்து துணி அயன்பன்ற டோபிட்ட தெரகூட்ட வரவங்கிட்ட வரைக்கைம் சண்ட இந்த தெருவுல யாரும் பேசமாட்டாங்க டெய்லியும் தண்ணி போட்டுட்டு யாருட்டையாவது சண்ட போடம அன்னைக்கு தூங்க மாட்டாறு அதனால அவரு மனசே அவருக்கு உருத்தியிருக்கு அதான் அப்படி பேசியிருக்காரு”
“அப்போ இப்படி பேசுனதால மனசு ஒடஞ்செல்லாம் தற்கொலை செய்யலங்கிறீங்களா”
“யாரு அந்த மனுசனுக்கா இறக்கம்ங்கறது துளிகூட இல்லாத கல்லு மனசுங்க சார்… நீங்க வேணா இந்த ஏரியாவுல யார்ட்ட வேணாலும் விசாரிங்க தெரியும்”
“சரி உங்க பையன் எங்க”
“பையன் வெளியே போயிருக்கான் வரச்சொல்லுட்டுங்களா..” னு கேட்கும் போது வீட்டு வேலக்காரம்மா எல்லாத்துக்கும் டீ கொடுக்க,
“தா இந்தம்மா இங்கதான் ஆறு வருஷமா வேல செய்றாங்க இந்தம்மாவ கொஞ்சமாவா திட்டுவாரு அப்படி திட்டுவாரு அதுவும் தண்ணி போட்டுட்டு கெட்ட கெட்ட வார்த்தையில….. கால கொடும அந்தம்மாவோட சூழ்நில அதுவும் பொருத்துக்ககும் நானும் அந்தம்மகிட்ட பொருத்துக்க சொல்லுவேன் அதனால அந்தம்மாவும் இங்க வேல செய்யது”
“சரிங்கம்மா போன் பண்ணி உங்க மகன வரச்சொல்லுங்க பேருக்கு விசாருச்சுட்டு கிளம்பரோம்” னுட்டு டீயை குடித்தார்கள்.
எஸ்.ஐ. டீ குடித்து விட்டு வெளியே வந்து எதிரில் இருந்த அயன்கடைக்கு போயி “யப்பா தீப்பெட்டி இருக்கானு” கேட்டுகிட்டே பாக்கெட்டிலிருந்து சிகிரெட் பாக்கெட்டை எடுத்து ஒரு சிகரெட்டை எடுத்து வாயில் வைக்க அயன்கடைக்காரர் தீப்பெட்டியை நீட்ட அத வாங்கி சிகரெட்டை புகைக்க ஆரம்பிச்சுட்டே,
“யப்பா உனக்கும் அந்த எதிர் வீட்டல போனவாரம் இறந்தாரே அவருக்கு என்ன பிரச்சனைய”
“பிரச்சனையா… பிரச்சனையெல்லாம் ஒன்னும் இல்லைங்க சார் அவரு ஒரு மொடகுடிகாரரு தண்ணிய போட்டுட்ட யாருனு பாக்கமாட்டாரு யார்ட்ட வேணாலூம் தாருமார சண்டைக்கு போவரு கெட்டவார்த்த அதிகம் பேசுவாரு அப்படி ஒரு பத்து நாளைக்கு முன்னாடி எங்கிட்ட சண்ட போட்டாரு அப்பவும் அதே மாதிரி கெட்ட வார்த்த எங்கம்மாவை யெல்லாம் இலுத்தாரு அதுல ஒரு சின்ன கை கலப்பு அவ்வளவுதான் ஆன அதுக்கு அடுத்த நாளே அவரு நல்ல நிலையில இருக்கும் போது மன்னிப்பு கேட்டுட்டேன் அவரு அத பெருசா எடுத்துக்கல உட்ரா..னுட்டார் அதுக்கபுபறம் சகஜமா பேசிகிட்டுதான் இருந்தோம் ஏன் சார் என்னாச்சு எதுக்கு கேட்டீங்க”
” ஒன்னும் இல்ல சும்மா தான் சின்ன விசாரனை, அவரு தானா சாகல, போதையில கடந்தவர தூக்கி பாத்ரும்ல போட்டிருக்காங்க. அதுல மண்ட ஒடஞ்சு இறந்துட்டாறான்னு அவங்க தங்கை கம்ளைன்ட் அதான் என்னனு விசாரிக்க வந்தோம்”
” இருக்கலாம் சார் அந்த பையன் இருக்கான் பாருங்க ரொம்ப கோபக்கார நாளு நாள் முன்னாடி தேய்ச்ச துணி கூடுக்கு அவங்க வீட்டுக்கு போன அப் அங்க அப்பனுக்கும் மகனுக்கும் சண்ட அவரு போதைலதான் இருந்தாரு அந்த பையன் அவரு சட்டை புடுச்சிருந்தான் நான் தான் போயி ரெண்டு பேரையும் விலக்கி விட்டேன் அப்ப அந்த பையன் எங்கிட்டயே சண்டுக்கு வந்துட்டேன் ஏண்டு நாம உள்ள போனோன் ஆயிருச்சு, இத்தனையையும் அந்தம்மா வேடிக்க பாத்துட்டுதான் இருந்தாங்க பையன ஒரு வார்த்த கூட திட்டுல அவங்களு என்னதூன் திட்டுனாங்க நாம பேசாம துணிய கூடுத்துட்டு வந்துட்டேன் அதனால நீங்க சொல்ற மாதிரியும் இருக்கலாம் பையனையும் விசாரிங்க ஆன மொத்தத்துல அந்தாளு போதயில பலர பகச்சுகிட்டது உண்மைங்க எனக்கு தெரிஞ்சு அவ்வளவுதான். த அந்த பையன் வந்துட்டான் பாருங்க உள்ள போறன் பாருங்க”ங்க ஸ்பளன்டரில் ஒரு வாலிபன் உள்ளே போக அதற்குகுள் எஸ்.ஐ. புகைத்த சிகரெட் புகையாக கரைந்து தீர அதை கீழே போட்டு அனைத்து விட்டு மீண்டும் வீட்டிற்க்கு உள்ளே சென்றார்.
எஸ்.ஐ. வீட்டிற்குள் செல்வதற்க்குள் அந்த பையனிடம் அவனின் அம்மா விவரம் சொல்ல அவன் எஸ்.ஐ. யிடம்
” சாரு வணக்கம்”
“வணக்கம் தம்பி வாங்க உட்காருங்க”னு ஷோபாவைக்காட்ட மதன் ஷோபாவில் அமர்ந்தான்.
“உங்க பேரென்ன”
“மதன்”
“என்ன பன்றீங்க”
” பி.ஸ்.சி முடிச்சு வேலைக்கு ட்ரை பன்றேன்”
” ஒ சரிசரி அம்மா சொன்னாங்களா”
“ஆமா சொன்னாங்க”
“என்ன சொன்னாங்க”
“அப்பா இறந்தது இயற்கையா இல்ல சூசைட்டு பன்னிட்டார்னு அத்தை கம்ளைன்ட் கூடுத்து இருக்காங்க அதுக்கு போலீஸ் விசாரணைனைனாங்க”
“ஆமா அது தான்! உண்மையில உங்களுக்கு தெரிஞ்சது என்னான் சொன்னீங்கண்ணா பரவாயில்லை ஏன்னா உங்கப்பா அத்தைகிட்ட பேசின வாய்ஸ் ரிக்டார்ட் இருக்கு அத எங்கிட்ட கூடுத்திருக்கூங்க அதுல உங்கப்ப ஒரு மாதிரியதான் பேசராறு அதுயில்லாம எதிரில் கடை வைத்திருக்கும் டோபியும் இருக்கலாம் காரணம் பத்து நாளைக்கு முன்னாடி இங்க வீடல பாத்தா..ராம நீங்க அப்பா சட்டை புடுச்சு சண்ட போட்டிங்களாம் அதுல மனசு ஒடிஞ்சு பண்ணியிருக்கலாம் ங்கரார்”
” சார் எங்கப்ப கெட்டு போறதுக்கு காரணமே அந்த டோபிதான் காரணம் எங்கப்பா தண்ணியடுச்சிட்டு கெட்ட வார்த்தை பேசி எல்லாத்திட்டையும் சண்ட போடுவாறு ஆனா அதுக்கும் மேல இந்த இரண்டு வருஷம இந்த வயசுல தப்பானபுக் படிக்கிறது பலான படம் பாக்கிறது எல்லாம் வந்திருச்சு இதுக்கு காரணம் அந்த டோபிதான் புக் கேசட்எல்லாம் வாங்கி கூடுத்துட்டு ஒசிகூடியும் குடிப்பான் அதகாரணமா வெச்சு பத்துநாளைக்கு முன்னாடி எங்கப்பட்ட பணம் கேட்டிருக்கான் அப்ப அவனுக்கும் எங்கப்பாவுக்கும் சண்டை ஆன அதுக்கப்புறம் எங்கப்பா எங்களுக்கு தெரியாம அவனுக்கை பணம் கூடுத்திருக்காரு அதகேட்டுதான் அன்னைக்கு சண்ட வந்து நான் அவரு சட்டைய புடுச்சது எல்லாம் ஆனா அடுத்தநாளே அப்பா நல்ல நிலமையில இருக்கும் போது மன்னிப்பு கேட்டேன் அத அவரு பெருசாவே எடுத்துக்கல அதனால எங்கப்பா சூசைட்டல்லாம் பண்ணியிக்க மாட்டார் பாத்ருமில் வலுக்கி விழுந்துதான் இறந்தார் இது வேணும்னே எங்கத்தை பண்றது நான் அவங்க பொண்ண கல்யாணம் பண்ணிக்கலனே அதனால என்பேர கெடுக்கனும்னு பன்றாங்க அவ்வளவதான் சார்”
“அப்படிய அப்ப கண்டிப்பா சூசைட் இல்ல வழுக்கி விழுந்தார்னு முடிவெடுத்துக்கலாம்”
“முடிவெடுக்கறதெல்லாம் இல்ல அதுதான் உண்மைங்க சார்”
“அப்ப சரி நாங்க கிளம்பறோம் இந்த கேச இப்படியே முடிக்க பாப்போம் உங்கத்தை ஒத்துக்கலைனா விசாரணை தொடர மீண்டும் வருவோம்”
“சரிங்க சார்”
சரி நாங்க வரோம் அம்மா நாங்க வரோம்”னு போலீஸ் காரங்க கிளம்பீட்டாங்க
“அம்மா அத்தைக்கு ஏம்மா புத்தி இப்படி போகுது தேவையில்லாம பன்றாங்க, அவங்கண்ணன பத்தி தெருஞ்சம் நம்மள அசிங்கபடுத்துனும்னு பன்றாங்க”
“அட உடுப்பா நம்மல அசிங்கபடுத்துணும்ணா அவதான் அசிங்கபடுவா கடவுளுக்கு தெரியும்! விடு எல்லாம் அவன் பாத்துக்குவான் போய் குளிச்சிட்டு வா சாப்பிடலாம்” மதனும் குளிக்க போக தான் மகனுக்கு சாப்பிட எடுத்து வைக்கலாம்னு கிட்சனுக்குள்ள போன வேலக்காரம்மா அழுதுகிட்டே கால் விழுந்துட்டு,
“அம்மா என்ன சொலறது தெரியலமா நன்றிமா”
“நன்றியா எதுக்கு”
“என் புள்ளைக்காக உங்க கணவர இழந்து விதவையாகி இப்ப கூட இந்த கெட்ட பேரும் வாங்கறீங்க ஆன அன்னைக்கு நடந்த எதபத்தியும் பேசாம மறச்சுட்டீங்க”
“மொதல்ல எந்திரி அந்த மனுசன் அந்த குழந்தபுள்ளய பன்னின கரியத்தை நீ வெளிய சொல்லாததுக்கு உனக்கு தான் நான் நன்றி சொல்லனும். நல்ல வேள அந்தன்னைக்கு அந்த நேரம் பாத்து நான் ரூமுகுள்ள போனேன் அந்தாளு.. அந்த விவர தெரிய குழந்தைய செவுத்துல வெச்சு அமுக்கி….. பாத்தேன் புடுச்சு தள்ளுனேன் போதையில இருந்ததாலே பாத்ரும் வாசப்படியில விழுந்து அடிபட்டு இறந்துட்டான். அவ்வளவுதான் அன்னைக்கு நடந்தத நீ மறந்துரு என்னானலும் சரி நான் அவரு வலுக்கி விழுந்துதான் இறந்தார்னு சொல்லுவேன் இது மதனுக்கு கூட தெரியக்கூடாது புரியுதா, ஆமா புள்ள எப்படி இருக்க பயம் தெளிஞ்சுட்டால”
“அம்மா ஓரளவு பயம் தெளுஞ்சுட்டா.. ஆனா வாயில துணிய வெச்சு அலுத்துனதுல தொண்டையெல்லாம் புண்ணாம், எங்க வீட்டுகாரர் கேட்டார் நான் சூட சாப்பாடு சாப்பிட்டுடானே, அவளகேட்டார் அவ அப்பா…. கையி… ரத்தம்…, அப்பா… கையி …ரத்தம்… அதேதான் சொல்ற ”
” முளவர்ச்சி இல்ல கொழந்தைக்கு வேற என்ன தெரியும் அத தவிர, அதேபோயி ச்ச்ச.. இப்ப நினச்சாலும் தாங்கமுடியல. இப்படிபட்ட குழந்தய கைவக்கனும்னு நினச்ச வக்கர புத்திக்குதான் ஆண்டவன் கொடுத்த தண்டனை சாவு.”
பெண் குழந்தைகளை வன்புறுத்தும் வக்கிர புத்தியை ஆழக்குளி தோண்டி மண்ணில் புதைப்போம்.