செம்மை நிற கட்டிட முகப்பு கொண்ட அலுவலகம் !
காக்கி உடுப்புக்கள் அங்கும் இங்கும் நடமாட அப்பொழுதுதான் பூசை ஒன்றை ஒருவனுக்கு அளித்துவிட்டு அப்பாடா என்று உட்காரபோனவள்.

சம்திங்க்…சம்திங்க்..சம்திங்க்…
ஹலோ !
ஹலோ ! பிரதாப்
சாரி இது பிரதாப்பில்லை, ராங் நம்பர்
நோ, இதுதான் அவர் நம்பர்,
லுக் மிஸ்டர்..இது ராங்க் நம்பர்னு சொல்றேன்
சாரி பார் மை மிஸ்டேக்கன்…உங்க குட் நேம் ப்ளீஸ்..
லுக் சார்..ராங்க் கால் அப்படீன்னு சொல்லிட்டேனில்லை, தயவு செய்து போனை கட் பண்ணுங்க,
ஓகே..ஓகே..போனை வைக்கறதுக்கு முன்னாடி ஒரு வார்த்தை ! உங்க குரல் கோபமா பேசினாலும் ஸ்வீட்டா இருக்கு !
ராஸ்கல்..முணு முணுத்து போனை அணைக்கிறாள்.
ஐந்து நிமிடங்கள் கழித்து மீண்டும் சம்திங்க்..சம்திங்க்..சம்திங்க்…
ஹலோ ! மிஸ்டர் பிரதாப்…
மிஸ்டர் என்ன விளையாடறீங்களா? இப்பத்தானே சொன்னேன் இது ராங்க் கால் அப்படீன்னு !
வாவ்..மறுபடி தப்பு பண்ணிட்டனா, பரவாயில்லை, உங்க பேரை மட்டும் சொல்லிடுங்க..ப்ளீஸ்..இல்லையின்னா மறுபடி மறுபடி போன பண்ணுவேன்.
யூ ஸ்கெள்ண்டிரல், என்ன விளையாடறியா?
லுக் மேடம் விளையாடறதுக்கு நான் ஒண்ணும் சின்ன பையனும் இல்லை, வேலை வெட்டி இல்லாத வெட்டிப்பையலும் இல்லை, இந்த ஊருல்யே கெளரவமான ஒருவரோட பையன். “சாவேஷ் மோட்டார் கம்பெனியோட” ஓணர் பையன்..
நீ யாரா வேணா இருந்துட்டு போ..இப்ப போன கட் பண்ணு..
ஓகே..மறுபடி போன் பண்ணுவேன்…பை..உங்க குரல் ரொம்ப ஸ்வீட்டா இருக்கு போன் அணைக்கப்பட….
பத்து நிமிடங்கள் கழித்து மீண்டும் சம்திங்க்..சம்திங்க்…சம்திங்க்…
யூ ஸ்கெள்ண்ட்ரல்..உனக்கு எத்தனை முறை சொல்றது ..இடியட்..இடியட்..
மேடம்..வெயிட்…வெயிட்..நான் சதீஷ்…ஏன் கோப்மா இருக்கீங்க!
எவனோ ஒரு ராங்க் கால் போட்டுட்டு, உன் பேரென்னன்னு கேட்டு உசிரை எடுக்கறான்.
ஹ்லோ யாராம்..விவரம் ஏதாவது சொன்னானா?
எவனுக்கு தெரியும் கேட்டா சாவேஷ் மோட்டார் கம்பெனியாம் அதுக்கு முதலாளியோட பையன்னு சொல்லிகிட்டு……
சரி நான் பாத்துக்கறேன்..
பத்து நிமிடங்களில் மீண்டும் சம்திங்க்..சம்திங்க்…சம்திங்க்..
ஹலோ
ஹலோ நான்தான், ராங்க் கால்…உங்க பேரு கேட்டேனே
லுக் மிஸ்டர் அது உனக்கு அவசியமா? யாமினி..
ஆ..அருமையான பேரு.. உன் குரல் மாதிரியே இருக்கு.. உன்னை சாரி உங்களை சந்திக்க முடியுமா?
என்ன மிஸ்டர்..அப்படியே நட்பை வளர்த்தறீங்களோ?
ஐயோ..அப்படி எல்லாம் நினைக்க வேண்டாம், உங்களை மாதிரி நட்பு கிடைச்சா எனக்கும் சந்தோசமா இருக்கும்..
சம்திங்க்..சம்திங்க்..சம்திங்க்….கால் அழைக்க
ஹலோ சதீஷ்..என்ன பண்ணிகிட்டு இருக்கே?
கொஞ்சம் வேலையா இருக்கேன், எப்படி போகுது, ஏதாவது தேவைப்படுதா?
இதுவரைக்கும் இல்லை,,பாக்கலாம், நம்ம கிட்டே கம்பிளெயிண்ட் பண்ணவங்க கொடுத்த பைலை எடுத்து வச்சுக்க..
பெஸ்ட் ஆப் லக்..
சம்திங்க்..சம்திங்க்..சம்திங்க்… மீண்டும் அழைக்க
ஹலோ யாமினி !
என்ன மறுபடியுமா,!
நோ நோ இந்த முறை உனக்குத்தான் போன் பண்ணுனேன்,…உன்னை நேர்ல பாக்கணும்
அது இப்ப முடியாதே நான் டூட்டியில இருக்கேன்…
ஹா அப்ப நீ வேலையில இருக்கற பொண்ணா…
ஆமா, அதை ஏன் கேக்கறீங்க, சரி நான் டவுன் ஹால் பக்கம் கணபதி சில்க்ஸ் போறேன். அப்புறமா போன் பண்ணுங்க..
ஓ தேங்க் யூ..அரை மணி நேரம் கழிச்சு கூப்பிடறேன். ஸ்வீட் யாமினி…
டவுன் ஹால் ! கண்ணை பறிக்கும் ஊதா கலர் சேலையில் வாசலில் நின்று கொண்டிருக்கும் பெண் கையில் இருக்கும் போன்..சம்திங்க்…சம்திங்க்..சம்திங்க்..
ஹலோ!
நான் நான்…நீங்க எங்க இருக்கறீங்க?
ஏன் கணப்தி சில்க்ஸ் முன்னாடிதான்..
அடையாளம் சொல்ல முடியுமா?
ஓ இங்கதான் வந்திருக்கீங்களா?
யெஸ்..உன்னைய பாக்கணும்னு துடிக்கிறேன்…
ஊதா கலர் சேலையில கடை முன்னாடி வலது புறம் நின்னுகிட்டிருக்கேன், என் பிரண்டு ஒருத்தி வரேன்னா..
வாவ்.. இங்கிருந்து பாக்க தேவதை மாதிரி இருக்கீங்க.. இருங்க..நான் வர்றேன் உங்க்கிட்டே..
வாங்க…வாங்க..அப்ப்டியே எங்காவது போகலாம்,
சின்ன சலசலப்பு அந்த இடத்தில் !
சம்திங்க்..சம்திங்க்..சம்திங்க்.. அழைப்பு..
ஹலோ !…என்னாச்சு மேடம் !…
இப்பத்தான் அடிச்சு துவைச்சு போட்டுட்டு வர்றேன், உள்ளே உட்கார வச்சிருக்கேன். அவன்கிட்டே செல்போனை பிடுங்கிட்டீங்களா?
நாலஞ்சு வச்சிருக்கான், எல்லாத்தையும் பிடுங்கியாச்சு, அந்த பைலை மறக்காம எடுத்துட்டு வாங்க, இது மாதிரி எத்தனை பேரை ஏமாத்திருக்கன்னு விசாரிக்கணும்,
ஆட்டை கடிச்சு மாட்டை கடிச்சு போலீஸ் இன்ஸ்பெக்டர் எனக்கே அல்வா கொடுக்கறான், தொப்பியை எடுத்து தலையில் மாட்டிக்கொண்டு வெளியில் வந்தார் இன்ஸ்பெக்டர் யாமினி, வயது ஐம்பதுக்கு மேல் !