செய்வினை!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: கிரைம்
கதைப்பதிவு: May 5, 2024
பார்வையிட்டோர்: 918 
 
 

(2011ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

பாறையில் கூலித்தொழிலாளிகள் நிறையபேர் ஜல்லி உடைத்து கொண்டிருந்தார்கள். ராம் அந்தப் பாறையை குத்தகைக்கு எடுத்து புதிதாக கிரஸர் தொழில் ஆரம்பிக்கலாம் என்ற முடிவில் தான் நண்பன் அமெரிக்கா போவதால் அவன் செய்கின்ற கிரஸர் வியாபாரத்தைத் தொடங்களாம் என்ற முடிவில் தான் சாலிக்கிராமத்தில் இருந்த அந்தப் பாறைக்கு வந்திருந்தான்.

அங்கே பணியாளர்கலை மேற்பார்வை பார்த்துக் கொண்டிருந்தன முகம் முழுவதும் தாடியால் போர்த்தி ஏறக்குறைய பாகிஸ்தானியர் பட்டான் பாணியில் உடையணிந்திருந்த சூப்பர்வைசரைப் பார்த்ததும் ஒரு கணம் உறைந்து போனான்.

இவரை எங்கேயோ பார்த்திருக்கிறோம் ஆனால் எங்கே… மிகமிகப் பழகிய முகம் மாதிரி, என்று எண்ணியவாறு அருகில் நெருங்கிய போது அந்த தாடி வைத்திருந்த மனிதன் மறைந்து போயிருந்தான்.

வேகமாக ஓடி வந்து அந்தக் கூலித் தொழிலாளர்களை நெருங்கி வந்த ராம், திரும்பி பார்த்தபோது அந்த தாடி வைத்திருந்த மனிதன் வேகமாக தூரத்தில் கூலியாட்களின் கூடாரத்தில் நுழைந்து கொண்டிருப்பது புரிந்தது.

அருகில் வந்த சிவா என்ன ராம் ஏன் ஒருமாதிரி இருக்கிறாய்? என்று கேட்டான். ஒன்றுமில்லை என்று சிரித்துக் கொண்டே சொன்ன ராம் தான் வியப்படைந்ததை சிவாவிடம் காட்டிக் கொள்ள மறைத்தாலும் அவனுடைய கை ஒரு நிமிடம் நடுங்கியதை உணர முடிந்தது.

ஏன் ராம் எனிதிங் ராங்? என்று கேட்டான் சிவா.

எஸ் சிவா. சம்திங் ராங். நம்ம கிருஷ்ணா இறந்து போய் அவனுடைய பாடியை புதைச்சீங்களா? இல்லை எரிச்சிங்களா?

எரிக்கத்தான் செய்தோம். ஏன் நீ கூட லேட்டா வந்து அடுத்து நான் அஸ்தியை கரைக்கப் போன போது கூட வந்திருந்தாயே. திடீரென்று இப்ப கேட்கிறாயே? என்னாச்சு ராம் என்று கேட்டான் சிவா.

அஸ்தியை கரைக்க வந்தது உணமைதான். ஆனால் எரிந்தது கிருஷ்ணாவா வேறு யாருமா? என்பது தான் சந்தேகமாக இருக்கிறது.

இடியட் தனமாக பேசுகிறாய் நீ இங்கே இருக்க வேண்டாம் என்று சொல்லித்தானே உன்னை டாலியோடு ஹைதராபாத் அனுப்பிவிட்டு நானும் கொடைக்கானல் போவது போல நடித்து கிருஷ்ணாவின் காரை விபத்தில் விழ வைத்து அவசர அவசரமாக அவனுடைய இறுதிச்சடங்கில்…. ஒரு நிமிடம் அவன் உடை அவன் போட்டிருந்த சங்கிலி எல்லாம் சரியாகத்தானே இருந்தது. அவன் முகம் தான் அன்று சிதைந்து போனதால் சரியாக யாருக்கும். ம். ராம் எங்கோ ஒரு இடறல் இருக்கிறது. நீ என்ன திடீரென்று கிருஷ்ணாவின் மரணத்தைப் பற்றி பேச்செடுக்கிறாய். அவனைப் பார்த்தாயா? அவன் இறந்து ஆறு மாதங்களாகிறதே.. ஏதாவது பேய் பிசாசு… சிவா

பேய் பிசாசு எல்லாம் கட்டுக்கதைகள். இன்றைக்கு நீ அமெரிக்கா போவதற்கும் நான் ஒரு கம்பெனிக்கு டைரக்டரா இருப்பதற்கும் காரணமே நாம் திட்டமிட்டபடி கிருஷ்ணாவை தீர்த்து கட்டியதுதான். முக்கியமான விஷயம் ஆனால்… ஆமாம் சிவா இந்தப் பாறையை எப்போது நீ லீசுங்கிறதுக்கு எடுத்தாய்?

ஆறுமாதமிருக்கும் ம்… சொல்லப் போனால் நம் கிருஷ்ணா இறந்து இரண்டு மூன்று நாட்களில் இதை வாங்கி கிரஸர் போட்டு ஜல்லி உடைக்க ஆரம்பித்து விட்டேன்.

இங்கே உள்ள எல்லா வேலைக்காரர்களையும் உனக்கு தெரியுமா?

நன்றாகத்தெரியும் போன வாரம் சூப்பர் வைசர் லீவு வேண்டுமென்றான். சரி என்று சொன்னேன். ஆனால் அவன் ஒருமாதம் லீவில் போவதால் வேறு யாரையாவது வேலைக்கு வைத்து விட்டுப் போகச்சொன்னேன். அவன் யாரோ சாகுல் என்று நல்ல அனுபவமுள்ள ஆளை வேலைக்கு வைத்து விட்டுப் போவதாகத்தான் சொன்னான்.

அந்த சாகுலை இன்னும் நான் பார்க்கவில்லை என்ற சிவாவிடம் சாகுலை கொஞ்சம் அழைத்து வரச் சொல்ல முடியுமா? என்று கேட்டான் ராம்.

ஓ! தரளமாக! என்றவன், அருகிலிருந்த வேலைக்காரனிடம் முருகா போய் உங்க சூபர்வைசர் சாகுலைக் கொஞ்சம் கூட்டி வா என்றான் சிவா.

முருகன் ஆட்கள் தங்குமிடம், வேலை பார்ர்க்குமிடமெல்லாம் சாகுலை காணவில்லை. ஒரு வேளை சாப்பிடுவதற்கு லோடு லாரி இலே கீழே ரோட்டுப்பக்கம் போய்விட்டாரோ என்னவோ தெரியவில்லை என்று வந்து சொன்னான்.

மொபைலை எடுத்து பழைய சூபர்வைசர் குகனை கூப்பிட்டான் சிவா குகன் நீ புதிதாக வேலைக்கு வைத்த ஆள் பெயரென்ன சாகுல் தானே.

ஆமாம் என்றது எதிர் முனை. உனக்கு எப்படி பழக்கம்? என்று கேட்டான்.

ஒரு நாள் வந்து தான் ஏற்கனவே பக்கத்து கல் குவாரியில் சூபர்வைசராக இருந்ததாகச் சொல்லி வேலை கேட்டான். ஊர் கூட சேலம் பக்கத்தில் ஏதோ பெயர் சொன்னான். நான் ஒரு மாதத்தில் திரும்பி விடுவதாக இருந்ததால் அவனை வேலை பார்க்கச் சொன்னேன்.

சரி என்று செல்போனை அனைத்து விட்டு ”ராம்” நம் திட்டம் தெரிந்து காரில் யாரையாவது வைத்து தீர்த்துக்கட்டி விட்டு கிருஷ்ணா தப்பித்திருப்பானோ? என்று கேட்டான் சிவா மனதிற்குள் கொஞ்சம் பயந்தவாறு.

அப்படி தப்பித்திருந்தால் இதற்குள் நம்மை சந்த்தித்திருக்க வேண்டுமே. ஆறு மாதத்திற்கும் மேலாகி விட்டதே. என்று ‘ராம்’ சொல்லிக் கொண்டிருக்கும் போது

சீக்கிரம் கீழே இறங்குங்கள் பாறையை உடைக்க பாம் வைக்கப் போகிறார்கள் என்றான் முருகன்.

காரில் ஏறி ராமும் சிவாவும் எதுவும் பேசாமல் இறங்கி வந்த போது கொஞ்ச நேரத்தில் பின் சீட்டிலிருந்து முகம் முழுக்க தாடியுடன் பட்டான் -உடை அணிந்த அந்த மனிதன் மெதுவாக எழுந்தான்.

கண்ணாடியில் முகம் பார்த்த சிவா ஏய் யார் நீ? என்றன்.

சாகுல் என்ற கிருஷ்ணா என்னை நீங்கள் கொன்று விட்டு என் சொத்துக்களை பறித்துக் கொள்ள நினைத்த நீங்கள் எல்லாம் நல்ல நண்பர்கள் என்று சொல்வதற்கே வெட்கப்படுகிறேன் என்று கோபமாக கத்தினான் கிருஷ்ணா.

அது வந்து… ராம் நடுங்கியவாறு முகத்தை கர்ச்சீப்பால் துடைத்து கொள்ள கிருஷ்ணா எல்லாவற்றையும் கொடுத்து விடுகிறோம். எங்களைக் காட்டிக் கொடுத்து விடாதே என்றான் சிவா.

எப்படியோ தொலைந்து போங்கள் நான் இறங்கிக் கொள்கிறேன் என்று காரின் கதவைத் திரந்து விட்டு வெளியே பாய்ந்த கிருஷ்ணா கையில் பட்டிருந்த சிராய்ப்புகளுடன் எழுந்து சிரித்தான்.

பிரேக் இல்லாமல் கார் ஓடிக் கொண்டிருந்தது.

– டிசம்பர் 2011, இனிய நந்தவனம்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *