காவல்காரன்

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: கிரைம்
கதைப்பதிவு: June 16, 2019
பார்வையிட்டோர்: 33,484 
 

ராசம்மா,ஒற்றைக் கிழவியாய் வசிக்கும் குடிசை வீடு.

இட்டிலி வியாபாரம். மிச்சமீதி இட்டிலிக்காக நாள் முழுவமும் காத்து கிடக்கும் எலும்பும் தோலும் வெளியே தெரிய மணி என்கிற நாய். ராசம்மா கணவன் குடியால் உயிர் பிரிய, தனது கணவன் பேரை நாயிக்கு வைத்தாள் திட்டுவதற்காகவே.

அருகே உயர்ந்த அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு பணக்காரத் தம்பதியருக்கு வாரிசு என்று யாரும் இந்தியாவில் இல்லை, ஒற்றை உயர்ரக நாய் ரியோவைத் தவிர, உயர் ரக உணவுகளும், பிஸ்கெட்களும் சாப்பிட்டு வகைத்தொகை இல்லாமல் உடல் பெருத்து இருந்தது.

மழை நாளில் ஒரு நாள்..

ரியோவை அழைத்துக்கொண்டு நடைபயிற்சிக்கு வந்த வருக்கு உடம்பு சரியில்லாமல் போக ,அவரை அழைத்துக்கொண்டு மருத்துவமணை விரைந்தனர்.

ரியோவை அழைத்துக்கொண்டு வந்து அடுக்குமாடி குடியிருப்பு காவலாளி ,ராசம்மா வீட்டில் விட்டு விட்டு போயிருந்தான்.

அதுவும் குறைத்துக்கொண்டே இருக்க, ராசம்மா என்ன செய்வது என அறியாமல் திட்டிக்கொண்டே இருந்தாள்.

மணியும் இதற்கு பயந்து ஓரமாய் பரிதாபமாய் ,தனது இட்டிலிக்கு எந்த குந்தகமும் வரக்கூடாதே எனக் கவலையில் நின்றுக் கொண்டு இருந்தது. தாயுள்ளம் இரண்டிற்கும் இட்டிலி வைத்தது.

ரியோ சாப்பிடாமல் முகர்ந்துப் பார்த்து இன்னும் வேகமாய் அவளைப் பார்த்து குறைத்தது.மணி தன் கடமையை முடித்து விட்டு எங்கோ ஓடியது.

வரும் பொழுது எஞ்சிய எலும்புத் துண்டோடு வந்து ரியோவுக்கு முன் போட்டது. உர்..உர்.. என பல்லைக் கோரமாக்கி சீரியது. உயர்ந்த ஆகாரமே கண்ட ரியோ!

எலே மணி,உன் பிச்சைக்கார புத்திய அது கிட்டே காட்டுறீயா? அது உன்னைய மாதிரி எச்சக் கலையா? சொகுசான இடத்திலே வளர்ந்தது. என கணவனைத் திட்டுவதைப் போலவே திட்டினாள்.

இருந்தாலும் பரிதாபப்பட்டு கொண்டு வந்ததை எண்ணி பூரித்துப்போனாள்.ராசம்மா.

காதால் கேட்டு பாவமாய் இருவரையும் பார்த்து வாலைச் சுருட்டி ஓரமாய் போனது.மணி.

நல்ல மழைக் கொட்டித் தீர்க்க.. மணி வழக்கம் போல அடுக்குமாடி கட்டிடத்திற்குள் உறங்கச் சென்றது.

சரி இது இங்கனயே கிடக்கட்டும், யாராவது வரும்போது பார்த்துக்கலாம். இதால ஒரு பிரச்சனையும் இல்ல. என்ன சத்தம் தான் ரொம்ப பெரிசா இருக்கு. மணியாயிருந்தா போட்டதைத் தின்பான். நாளைக்கு கறி வாங்கிப் போடுவோம் என மனத்தில் நினைத்தாள்.

பொழுதும் விடிய..ரியோவின் உரிமையாளரும் வரவில்லை. ரியோவை உரிமைக்கோரியும் யாரும் வரலை.

இதற்கும் நம்மைப் போல கேட்க நாதியில்லையோ? என நினைத்தாள்.

மணி வேகமாக ஓடி வந்தது. ராசம்மாவைப் பார்த்து குறைத்துக்கொண்டே இருந்தது.

ஏதோ செய்தி சொல்வதாக உணர்ந்து ,என்ன ? ஏன் கத்தறே? மூடிக்கிட்டு போய்டு.. என அதட்டினாள்.

அதுவும் விடாமல் குரைத்துக் கொண்டேயிருக்க, அட சனியனே, எலே,ராசு அதுக் கூடப் போய் பாருடா, எங்க கூப்பிடுது? ராசுவும் ஓடினான், அடுக்கு மாடி குடியிருப்பிற்கு..

அங்கே ஆடைகள் களைந்து அரை நிர்வாணமாய் காம்பவுன்ட சுவர் ஓரமாய் யாரோ சடலமாய்க் கிடக்க..அருகில் சென்றுப் பார்த்தான்,கிடு கிடுவென ஓடி வந்து ராசம்மாவிடம் விஷயம் சொல்ல .யாரோ ஒருவர் போலிஸிடம் தகவல் சொல்ல சிறிது நேரத்தில் அந்தப் பகுதியே போலிஸ் வாகனத்தால் நிரம்பியது.

அங்கே கிடந்தது, 55 வயது உடைய பெண்,மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டவரின் மனைவி. பலாத்காரம் செய்யப்பட்டு தலையில் பலத்த காயத்தோடுக்கிடந்தாள்.

யார் முதல்ல பார்த்தது? மணியும் நானுத்தான்,ராசு.

நீ யாரு? இங்க என்ன வேலை உனக்கு?

நான் கூலி வேலை செய்யறவன்ங்க! இட்டிலி திண்ண வந்தேன், இந்த நாய் வந்து அடையாளம் காட்டி கூப்பிட்டதாலே வந்து பாரத்தேனுங்க என உண்மையைப் பேசினான்.

எங்க இந்த குடியிருப்பின் காவலாளி? தெரியலை என்றனர் .அதானே அவனைக் கானலையே,என்றனர். கோரசாக குடியிருப்பு வாசிகள்.

அவனுக்கு வயது?

என்ன அறுபது இருக்கும்.

ராசம்மாவும் நேற்று காவலாளி ரியோவை அவள் கடையில் விட்டதும்,கணவன் வீட்டில் இல்லை என்பதும் அவனுக்கு மட்டுமே தெரியும் என அனைத்தையும் போலிசிடம் விவரித்தாள்.

CcTV புட்டேஜ் பார்த்து ஒரு வழியாக காவலாளிதான் என அடையாளம் காணப்பட்டது.

வீட்டுக்காரரை தேடிவந்தவளின் பின்னாள் சென்று அவள் வீட்டிற்குப் போய் அவங்களை பலாத்காரம் செய்துள்ளான்,கூச்சல் போட்டதும் தலையில் தாக்கியதால் மயக்க நிலையில் இருந்தியிருக்கக் கூடும் என முடிவு செய்தனர் காவல் துறை.

இந்த காவலாளி நாய்தான் பண்ணியிருக்கான் என எல்லோரும் பேச, ராசம்மாவிற்கோ கோபம் வந்தது. நாய்ன்னு சொல்லி நாயைக் கேவலப் படுத்தாதிங்க, நாய்க் கூட நன்றியும்,முறையான காமத்தோடத்தான் இருக்கு. இந்த கேடுக் கெட்ட மனுசப் பயலுவத்தான் தான் குடிச்சிட்டா எல்லாத்தையும் மறந்துட்டு தாய்க்கும், தாரத்திற்கும்,மகளுக்கும் கூட வித்தியாசம் தெரியாமல் திரியரானுவோ, எனத் திட்டிக்கொண்டே கடைக்கு வந்தடைந்தாள். அங்கே ரியோவிற்கு காலையில் வாங்கிய கறியும், சுட்ட இட்லியும் அப்படியே இருக்கக் கண்டு, நாய் கூட எடுத்து வைத்தாத்தான் சாப்பிடும், காவல் காக்க வேண்டிய காவலாளியே சூரையாடிட்டு போயிருக்கான். இந்த மனிதர்களுக்கு ஏன்தான் இந்த புத்தியோ?

Print Friendly, PDF & Email

1 thought on “காவல்காரன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *