இனஸ்பெக்டர் குமார்

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: கிரைம்
கதைப்பதிவு: December 11, 2015
பார்வையிட்டோர்: 18,669 
 
 

குமார் நீதிமன்றத்துக்கு புறப்பட்டுகொண்டிருந்தான்.ஆனால் அன்றைய மழை சூழல் குமாருக்கு சிறிது தடையை தூவி பெய்து கொண்டிருந்தது.

குமார்,மழை பெய்கிறதே சற்று உடற்பயிற்சி மேற்கொண்டு விட்டு செல்லலாம் என நினைத்து உடற்பயிற்சியில் இறங்கினான்.அந்த அளவுக்கு உடற்பயிற்சி பிரியன் அவன்.

அவனை நீதிமன்ற வழக்கு மனதளவில் பாதித்திருந்தது.இது அவனது 13வது நீதிமன்ற பயணம்.

நான் ஏன் நீதிமன்றம் போகனும் என தனக்குள் கேட்டு சிந்திக்க ஆரம்பித்தான். அவன் கண்ணில் நீர் வழிய ஆரம்பித்தது.

குமார் ஒன்றும் சாதாரணமானவன் அல்ல அவன் காவல்துறையில் இன்ஸ்பெக்டர் நிலையில் இருந்தவன்.எந்தவித துப்பும் இல்லாமல் குற்றவாளிகளை கண்டறியும் திறம் கொண்டவர்.

ஏதோ அவன் போதாக்காலம்…! அவன் மீது தேசத்துரோகம் மற்றும் ஒரு பெரிய அரசியல் பிரமுகர் கொலை வழக்கு.

இதன் காரணமாக அவன் இன்ஸ்பெக்டர் பதவி பறிக்கப்பட்டிருந்தது.அவனால் ஒன்றும் செய்ய இயலவில்லை.

இது குமாரின் ஒட்டுமொத்த காவல்துறை வாழ்க்கைக்கு அவபெயரை மழை போல வாரி வழங்கியிருந்தது.

குமார் நீதிமன்றத்துக்கு பயணமானான். ஆனால் வழக்கம்போல வழக்கு விசாரணை தள்ளிவைக்கப்பட்டது. குமார் தரப்பில் நியாயத்தை கூற 13 முறை வாய்ப்பு தரவில்லை பொல்லாத நீதிமன்றம்.

குமாருக்கு நிறைய படிப்பினையை வழங்கியிருந்தது.நல்லதுக்கு காலம் கிடையாது. நேர்மை,நீதி ,நியாயம் எல்லாம் சும்மா என மன ஒட்டத்தில் ஒடிக்கொண்டிருந்தது.

முதலில் தன் மீதுள்ள குற்றச்சாட்டை சரிசெய்யவேண்டும்.மேலும் இதன் உண்மையான பின்னணியை கண்டறிய வேண்டும் என முடிவெடுத்தான்.

அவன் மீது சூட்டப்பட்ட முதல் குற்றம் பாகிஸ்தான் உளவாளியாக செயல்பட்டது.இரண்டாவது இந்தியாவின் உள்துறை அமைச்சரை படுகொலை செய்தது.

குமார் சிந்திக்க ஆரம்பித்தான். நான் எப்படி பாக்கிஸ்தான் உளவாளி ஆக்கப்பட்டேன் என…! முதலில் அவன் தன் மின்னஞ்சல் முகவரியில் இருந்து இஸ்லாமாபாத்திற்கு அனுப்பப்பட்ட மின்னஞ்சல்கள் பற்றி சிந்திக்க தொடங்கினான்.

குமார் ஒரு நாளுக்கு இரு முறை மின்னஞ்சல்கள் வந்துள்ளதா என செக் செய்பவன்.அதுவும் அவன் சரியாக காலையில் 9.30க்கும், மாலை 7.30க்கும் மெயில் செக் செய்வான்.

குமாருக்கு , எவனுக்கோ என் ரெகுலர் மெயில் செக் பண்ணுற டைம் அன்ட் பாஸ்வேர்டு தெரிந்திருக்கவேண்டும் அதை வைத்து இந்த சதி திட்டம். தீட்டப்பட்டுள்ளது என சந்தேகம் வந்திருந்தது.

அதை உறுதி செய்ய தன் கணிணியை பழுதுபாக்கும் ரவியை தொலைபேசியில் வீட்டுக்கு வரும்படி அழைத்தான். ஆனால் ரவி வரவில்லை. அவன் இதோ வந்துட்டேன்,அதோ வந்துட்டேன்,நாளைக்கு வரேன் என நாளை ஒட்டினான். குமாருக்கு புரிந்து போனது இவனிடம் இருந்து ஆரம்பிக்கலாம் என.

குமார் தன் நம்பிக்கையான காவல்துறை நண்பர்கள் மூலம் ரவியின் இருப்பிடத்தை தெரிந்துகொண்டான். ரவியின் பங்களா வீடு ஒர் மர்மமாகவே உணர்வளித்தது குமார்க்கு.

குமார்,ஒர் மறைவிடத்தில் ரவியின் பங்களா அருகில் மறைந்து கொண்டு தொலைபேசியில் ரவியை அழைத்தான். “ஹலோ நான் குமார் பேசுறேன்.” . “ம்ம் சொல்லுங்க எக்ஸ் இன்ஸ்பெக்டர் சார் எப்படி இருக்கிங்க”. “நான் நல்லா தான் இருக்கேன்.” இப்ப உங்க வீட்டுக்கு வந்துட்டு இருக்கேன் ரவி” .”உங்ககிட்ட அவசரமாக ஒன்னு சொல்லனும் அதான் சொல்லாம கொல்லாம கிளம்பிட்டேன்”. என்ற உடன் ரவிக்கு போனில் உதறியது. உடனே வீட்டை பூட்டிவிட்டு காரில் வேகமாக கிளம்பினான்.

குமார் ஜேம்ஸ்பாண்ட் பாணியில் ரவி வீட்டுக்கு ஐன்னலை கழட்டி விட்டு உள்ளே போனார். வீடு ஒரு வித மர்ம தோற்றத்தில் இருந்தது.

ரவியின் படுக்கை அறையில் ஒர் விசித்திரமாக குமார் புகைப்படம் மாட்டப்பட்டிருந்தது.அருகில் இந்திய உள்துறை அமைச்சர் புகைப்படம் மாட்டப்பட்டிருந்தது.

ஒரே ஆச்சரியம் ..! குமார் உறைந்தே விட்டான். அந்த புகைப்படத்தை கழட்டி பார்த்தான். அதில் ஒரு பொத்தான் இருந்தது. அதை குமார் அழுத்தினான். ஒர் ரகசிய அறை…!

அந்த ரகசிய அறையில் ஒரு பெரிய கணினி மற்றும் ஏகப்பட்ட பைல்கள் இருந்தது. மேலும் அந்த கணினியை குமார் ஆன் செய்து பார்த்தான்.அதில் உடனே பாஸ்வேர்ட் என வந்தது. குமார் ,நீண்ட யோசனைக்கு பிறகு பாஸ்வேர்டில் குமார் என டைப் செய்தான். ஒரே ஆச்சரியம் .! கணினி திறந்துவிட்டது.

அதில் குமார் என்ற தலைப்பில் போல்டர்.அதில் மெயில் என்பதில் பேக் மெயிலர் என்ற ஒரு சாப்ட்வேர். அதில் ஐ.எஸ்.ஐ உளவாளியின் மின்னஞ்சல்லில் இருந்து குமார்க்கு மெயில் அனுப்புவது போல கட்டமைந்திருந்தனர்.

குமார் , கண்டுபிடித்துவிட்டார் ரவி தான் குற்றவாளி என்பதை.

மேலும் அங்கு உள்ள ஆதாரங்களை ஒரு பென் டிரைவில் காப்பி செய்து விட்டு வீட்டுக்கு சென்றார் . அதில் கிட்டத்தட்ட ஒரு 600 மெயில்கள். அதில் 400 மெயில்கள் குமார் சம்பந்தப்பட்டது.

ஏதோ AILF என்ற இயக்கம் தொடர்பான மெயில் என ரவியின் இன்பாக்ஸ் முழுவதும்.

எப்படியோ பாதி கடல் தாண்யாச்சு, என குமார் நினைக்க நேரம் சரியாக மாலை 7.54 . திடீரென தனக்கு ரவியின் வீட்டின் முகவரி கொடுத்து உதவிய காவல்துறை நண்பரிடம் இருந்து மிஸ்டு கால்.

திருப்பி குமார் போன் செய்து பார்த்தான். யாரும் பதிலளிக்கவில்லை. அடுத்த நாள் காலையில் செய்தி தாள் பார்த்த குமாருக்கு அதிர்ச்சி..!

செய்தியில் , காவல்துறை அதிகாரி விபத்தில் மரணம் என்ற செய்தி. மேலும் குமாரை பயமுறுத்தியது.

மேலும் செய்திதாளில், காவல்துறை அதிகாரிக்கு காயம் பட்ட இடத்தில் ஒரு குதிரை வடிவ முத்திரை பதிந்துள்ளது என விசித்திரமான செய்தி.

குமார் ரவியின் வீட்டுக்கு அருகில் உள்ள டீக்கடையில் விசாரிக்க ஆரம்பித்தான். நேற்று ரவியின் கார் எத்தனை மணிக்கு வீட்டுக்கு வந்தது என்பது முதல் கேள்வியாக குமார் கேட்டான். அந்த டீக்கடைக்காரர் மிகவும் யோசித்து ஒரு இரவு 8.00 இருக்கும் என பதிலளித்தார்.

அப்போது திடீரென ரவியின் கார் வெளியே புறப்பட்டது. குமார் உற்றுகவனித்ததில் கார் கதவில் ஒர் குதிரை முத்திரை உள்ளது என உறுதி செய்துகொண்டார்.

இந்த காவல்துறை அதிகாரி கொலைக்கு காரணம் ரவி என தெளிவாக புரிந்தது குமாருக்கு.

இதற்கு பின்னணியில் நிச்சயமாக எனக்கு வேண்டாத காவல்துறை அதிகாரி இருக்கலாம் என்ற சந்தேகம் குமாருக்கு.

அப்போது தான் குமாருக்கு ஞாபகம் வந்தது மெட்ராஸ் குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக செயல்படும் படி தன்னை எஸ்.பி.ரமேஸ் வற்புறுத்தியது.

ஆனால் குமார் நேர்மையின் காரணமாக இதற்கு ஒத்துழைக்கவில்லை. இந்த குண்டுவெடிப்பில் தான் இந்திய உள்துறை அமைச்சர் கொல்லப்பட்டிருந்தார்.

எஸ்..பி.ரமேஸ் திடீரென பெரிய பணக்காரர் ஆகி விட்டதாக அன்று காவல்துறை வட்டாரத்தில் பேச்சு. மேலும் குமார் பதவி பறிப்புக்கு பின்னர் அடுத்த நாளே மூன்று தீவிரவாதிகள் தப்பி ஒட்டம் என்பது செய்தியாக இருந்தது.

குமார் எல்லாவற்றையும் தொகுத்து யோசித்து பார்த்தார்.அவ்வளவு தான் வழக்கு முடிந்தது.அதாவது பணத்துக்குகாக எஸ.பி.ரமேஸ் தீவிரவாதிகளை தப்பிக்க வைக்க திட்டமிட்டுள்ளார்.இதிலா குமார் தடையாக இருப்பான் என்பதற்காக அவனை பதவியை விட்டு நீக்க உளவாளி மற்றும் தீவிரவாதிகளுக்கு உதவியதாக பழியை ரவியின் உதவியுடன் செய்துமுடித்துள்ளார்.

இதை நிருபிக்க அந்த டீக்கடைகாரர்,ரவியின் வீட்டில் இருந்து கைப்பற்றிய மெயில்களும் போதுமானதாக இருந்தது.

14வது முறையாக நீதிமன்றம் கூடிய போது தன் வாதத்துடன், ஆதாரங்களை எடுத்துரைத்தார் குமார். இதற்கு மேல் எஸ்.பி.ரமேஸ் மற்றும் ரவியால் ஒன்றும் செய்ய இயலவில்லை.

குமார் மீது போடப்பட்ட பழிகள் இருவருக்கும் சரிசமமாய் பகிர்ந்து அளிக்கப்பட்டது. குமார் தன் மீது போடப்பட்ட பழிகள் நீங்கியது பெரும் மகிழ்ச்சியளித்து.

மீண்டும் குமாருக்கு இன்ஸ்பெக்டர் பதவியளித்தது.மீண்டும் இன்ஸ்பெக்டர் குமார் பணயில் முழுமையாக தன்னை ஈடுபடுத்தி கொண்டார்.

Print Friendly, PDF & Email

1 thought on “இனஸ்பெக்டர் குமார்

  1. கோர்வை இல்லை..crime த்ரில்லர் போல அறவே இல்லை..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *