கசக்கி சிறியதாய் உருட்டி எறியப்பட்ட பேப்பருக்கு இப்படி பயந்து போயோ அல்லது பயந்து போனது போல் அஞ்சி தலை குனியாவிட்டால்தான் என்ன அல்லது லேசாக கழுத்தை அப்படி ஒடித்துச் சாய்த்து கோபமாகவும் ஒயிலாகவும் பார்க்கா விட்டால்தான் என்ன இப்பொழுது எனக் கேட்கத் தோணுகிறது அவளைப் பார்த்து/
கட்டியிருந்த கலர்ச்சேலையில் பார்க்க அழகாய்த் தெரிந்தாள். தலையில் முன்நெற்றியை ஒட்டி பூத்துத் தெரிந்த வெள்ளை முடிகளை கறுப்பு முடிகளோடு படிய வாரி சீவியிருந்த அழகில் பார்க்க பாந்தமாய்த்தெரிந்தாள்.
அந்தத்தெருவில்அக்கம்பக்கத்துவீடுகளில்இருக்கிறபெண்களில் சிலர் தலை முடிக்குசாயம்பூசிக்கொண்டசெய்திஅறிந்தபோதும்அதைபார்த்து கண்ணுற்ற போதும்கூடஇவள்பிடிவாதமாய்தலைக்குடைஅடிக்கமறுத்துவிட்டாள். ”இயல் பாக இருக்கட்டுமே என்ன இப்பொழுது கெட்டுபோனது” என்கிறாள், கூட இன்னும் கொஞ்சம் சொல்க்கட்டை சேர்த்துக்கொள்கிறாள்,”நீங்களே இப்படி இருக்கும் போதுஎனக்கென்னவந்துவிட்டதுஇந்த ஐம்பத்தி இரண்டு வயதில் முன் நெற்றியைஒட்டியும்தலைக்குள்ளுமாய்வெள்ளைமுடிகளை சேமித்து வைத்துக் கொண்டு அலையும் போது நான்மட்டும் ஏன் தலை முடியை கறுப் பாக வைத்துக் கொண்டு அலைய வேண்டும்”என்கிறாள்.
சரிதான்அவளதுசொல்லிலும்ஒருஞாயம்இருக்கத்தான்செய்கிறதுஎன்கிறநினைப்போடு அவளைப்பார்த்தபோது வலது பக்கபுஜத்தின்ஓரமாய் தூக்கித் தெரி ந்த சேலையின் மடிப்பில் ஒய்யாரம் காட்டி அமர்ந்திருந்த ரோஸ்க்கலர் பூ ஒன்றுஅவளதுகையசைவிற்குதவறி கீழே விழுந்து விடும் போலிருந்தது.,
அடடடா ஓடோடிப்போய்பிடிக்கவேண்டி வருமோஎன அவன் நினைத்துக் கொண்டிருந்தவேளையில்அவள் சாப்பிட்டுக்கொண்டிருந்தாள்.அவளின் கையசைவு ஒவ்வொன்றிற்குமாய்ஒவ்வொருதடவையாயும் பூஅசைந்து கொடுத் தது. கூடவேகையில்போட்டிருந்தகண்ணாடிவளையல்களும்/
இந்ததீபாவளிக்குஎடுத்தது.அம்மாவிற்குசேலைஎடுக்கப்போனஇடத்தில்மனை வியின் நினைப்பு வர எடுத்துவந்தஎக்ஸ்ட்ராச் சேலை.க டைக்காரர் கூடச் சொன்னார்,”இதுவெல்லாம்இப்பிடித்தான் சார்,பூராம் வடக்கத்தி அயிட்டம்.செயற்கைஇழைசேலைஇது”என்றார். ”இப்பொழுதெல்லாம் இதுதான்சார்பேமஸ்” எனவுமாய்சொல்லத்தவறவில்லைஅவர்.இதேதுநூலில்நெய்தசேலைஎன்றால் கூட இருநூறு ரூபாய் ஆகும் என்றார்.
மத்திய தரக் குடும்பங்களின் நிலையைக்கணக்கில் கொண்டும் மாதாந்திரச் சம்பளம்வாங்குவோரை மனதில் வைத்துமாய் நெய்துவருகிற இதுபோலான சேலைகள்இல்லாவிட்டால்இவனதுவீடுகளெல்லாம்எப்பொழுது இம்மாதிரி யான சேலைகளைப் பார்க்க/
கடையிலிருந்துவெளியில்வரும்கடையில்வேலைபார்ப்பவர்சொன்னார்,”சார்,எங்கவீட்டுபொம்பளைகலெல்லாம்இதுபோலசேலகட்டதவம்கெடக்கணும் சார், எங்களுக்கு வாய்ச்சது அந்த பூனம் சேலை இல்லையின்னா மில்லுச் சேலைதான் சார்”என/
கசக்கிஉருட்டிஎறியப்பட்டபேப்பர்அப்படிஒன்றும்கனம்கொண்டதாகவோ அல் லதுபெரியதாகவோஇல்லை,எறிந்தபேப்பருக்குவிலகுகிறேன் பேர்வழி என ரொம்பவும்தான் கழுத்தைச் சாய்த்தாளானால் ஏற்கனவே கழுத்தின் இடது பக்கமாய் பிடித்திருந்த நரம்புப் பிடிப்பு மிகவும் தொந்தரவு செய்யக்கூடும்,
இந்தவாரத்தின்செவ்வாயன்றுஎப்பொழுதும்இல்லாதஅதிசயமாய்அதிகாலை ஐந்து மணிக்கே முழிப்பு வந்து விட எவ்வளவுநேரம்தான் எழுந்து சும்மா உட்கார்ந்திருக்க,/மனைவியைஎழுப்பி போடலாமா சின்னதாக ஒரு டீ எனக் கேட்டதும்அவள்உடல்முழுவதுமாய்அழுப்பை அப்பிக் கொண்டு எழுந்தாள், முகம்கழுவி விட்டுடீப்போடஅடுப்பில்பாலைபாக்கெட்டிலிருந்து உடைத்துஊற்றும்போதுதான்கவனிக்கிறான். கழுத்தை ஒருபக்கமாய்சாய்த்துக் கொண்டும் வலிதாங்காமல் லேசாய் முகம் சுளித்துக் கொண்டுமாய் நின்றிருந்ததை/
”ஆகாஎன்னதுஇது,புதுவிதஅவஸ்தையோடுநிற்கிறாளே”எனஅருகில் போய்க் கேட்டபோது”நேற்றுமாலையிலிருந்தேகழுத்துஒருபக்கமாகபிடித்துக் கொண் டுவிட்டது,என்றாள்.அதுநரம்புப்பிடிப்பாஅல்லது தசை வலியாஎன்பது தெரிய வில்லை. அவளாக நரம்புப்பிடிப்பு என அர்த்தம் பண்ணிக் கொண்டு சொன்னாள். கழுத்தின் இடதுபக்கமாய்ஆரம்பிக்கிற வலிநடுமுதுகு வரையுமாய் பயணித்து பின் யூ டர்ன் அடித்துத்திரும்பி திரும்பவுமாய் ஆரம்பித்த இடத்திற்கே வந்து வந்து கண்ணாமூச்சிக்காட்டிவிட்டு திரும்பவும், நடு முதுகுவரைசென்று திரும்பவும் யூ டர்ன் அடித்து,,,,,,,,என செவ்வனே அதன் வேலையை செய்து கொண்டு படுத்தி எடுக்கிறது” என/
”இப்படி என சொல்லியிருந்தால் உன்னை எழுப்பியிருக்கவும் மாட்டேன். டீப் போட சொல்லியிருக்கவும் மாட்டேன். இன்னும் கால் மணி போனால் டீக் கடை திறந்து விடும். நான் காலாறப்போய் அப்படியே குடித்து விட்டு வந்துவிடுவேன் எனச்சொன்னான். விடுங்கள் இதைப் போய்ஒருபெருசாக,,,,,,,,/ என்றுசொன்னவாறே டீஆற்றியவள்”இன்னைக்குஅந்தஹோமியோபதிடாக்டர் கிட்டபோகணும்,கழுத்து வலிக்கு காண்பிக்கணும், கூட வரமுடியாது ஒங்க ளால,நீங்ககேட்டாவதுசொல்லுங்கஅவருஅந்நேரம்இருப்பாரான்னு,நான்பஸ் ஸேறி போயிக்கிறேன்” என்றாள்.
அவளுக்கானஎந்தநோயும்அந்தஹோமியோபதிமருத்துவர்கொடுக்கிறமருந்தில் சரியாகிப்போகிறது,அவளுக்கும்உடலுக்கு எதுஒன்றென்றாலும் அவரிடம் போய் வைத்தியம் பார்த்தால் திருப்தியாயும்ஆகித் தெரிகிறது. என்ன தூரம் தான் கொஞ்சம்அதிகம்.மூன்று கிலோமீட்டராவது இருக்கும், பஸ்ஸிற்குநேரமா கிற சமயத்தில் பஜார் வழியே நடந்தே போய்வந்து விடுவாள். கேட்டால் ”அப்படியே காய்கறி மார்க்கெட்போனது போல இருக்கும்” என்பாள்.
மார்க்கெட்ப்பக்கம்போகமுடியவில்லைஇப்பொழுதெல்லாம், ரெண்டு தூறல்விழுந்தாலேமார்க்கெட்ரோடெல்லாம்நசநசப்பாய் ஆகிப்போகிறது. பாதாளச் சாக்கடைக்காய்தோண்டினார்களாஇல்லைடெலிபோன்கேபிள்போடத்தோண் டினார்களாஎனத்தெரியவில்லை. இடையில்சிறிது நாட்களாய்எதுவும்தோண்டப் படாமல்நன்றாகஇருந்தது ரோடு, இப்பொழுது அதற்கெல்லாம் சேர்த்து வைத்து பழைய படியுமாய் இப்படி ஆகிப்போயிருந்தது.
காலையில்சர்வீஸிற்குவிட்டிருந்தஇருசக்கரவாகனத்தைமாலையில்எடுத்துக் கொண்டுமார்க்கெட்பக்கமாய்போய்வந்தபொழுது சுத்தமாய் துடைத்து வைத் திருந்த வண்டிசகதிக் காடாய்ஆகிப்போனது,அன்றுஇவனுக்குரத்தக்கண்ணீ ரே வந்துவிட்டது.அன்றிலிருந்துஇன்று வரை மார்க்கெட் போவ தென்றால் ஒன்று சைக்கிள் அல்லது நடைதான்/
இவன்வந்திருந்தவேளைமணிமூன்றுசில்லறைஆகிப்போயிருந்தது.நல்லபசி. அன்றுதான் மாற்றலாகி வந்த அலுவலகத்தில் வேலைமுடிய மதியம் மணி மூன்றுக்குமேல்ஆகிவிட்டது.
முன்வேலைபார்த்தஅலுவலகம்என்றால்சொடக்குப்போடுகிறநேரத்தில்வேலை யைமுடித்து விடுவான். பழையஅலுவலகம் போலில்லை புதிய அலுவலகம்.
கட்டிடம்,விரிவாகஇருந்தது,பறந்து விரிந்திருந்த அதன்தளமும், விஸ்தீரணமும் பார்க்க நன்றாக இருந்தது.
பழைய அலுவலகம் அப்படியில்லை,சின்ன கட்டிடம்,மனித மூச்சுக்காற்றே மனிதமுகம் மேல் மோதிவெப்பத்தை உண்டாக்குகிற அளவிற்கு சின்னதாக வேஇருந்தது,இவனும்கட்டிடத்தின்ஓனரைப்பார்த்து”கட்டிடத்தின்பின்னால்இருக்கிறவெற்றுவெளியுடன் சேர்த்து கட்டிடத்தை விரிவு படுத்தித் தாருங்கள், இல்லையானால்கட்டிடத்தைஎங்களுக்குஇருக்கஇடம்போதாமல் வேறொரு கட்டிடத்திற்கு போக வேண்டி வரும் எனச் சொன்ன போது ”இல்லைய்யா நீங்க அப்பிடியெல்லாம் சொல்லக் கூடாது,ஒங்களுக்கு தெரியாதது இல்ல, ஐயா (கணவர்) யெறந்து போன பிற்பாடு எனக்குன்னு பிடிப்பா இருக்குறது இந்த வீடு ஒண்ணுதான்யா,ஐயா இருந்த வரைக்கும் தீப்பெட்டி ஆபீஸ் நடத்தி வருமானம் வந்துச்சி, புண்ணியவான் போய் சேந்ததுக்கப்பறம் புள்ளைக ஆளுக்குக்கொஞ்சமா புடுங்கி எடுத்தது போக இது ஒண்ணுதான் எனக்குன்னு இருக்குய்யா, தீப்பெட்டிஆபீஸையும்கட்டிஇழுக்கமுடியல,விட்டுட்டேன்.இப்பதைக்கு நீங்க ஆபீஸ் இருக்குற இந்தகட்டத்துக்கு குடுக்குற வாடகை ரூபாயும் கலெக்டர்ஆபீசுலவேலைபாக்குறஏங் பையனும்குடுக்குறகாசுலதான்யாஏங்சீவனம்ஓடிக்கிட்டுஇருக்கு. அதயும் கெடுத்துறா திங்கய்யா, இல்ல அப்பிடித்தான் நாங்க போயித்தான் ஆகணுன்னா போயிக்கங்க,ஏங் தல விதி போல ஆகட்டும்”. என்றாள்.
அன்றுஅவள் உதிர்த்தவார்த்தைகளுக்குபின்பாய்இவனுக்கும்சரி இவனோடு உடன்பணியாற்றுபவர்களுக்கும்சரிஅந்தகட்டிடத்தை மாற்றுகிற எண்ணமே போய்விட்டது.அதன் பின்னான நாட்களில் இரண்டுவருடங்கள்பணிபுரிந்து இப்பொழுது இங்கு மாற்றலாகி வந்த அலுவலகம் இன்னும் வேலைக்கு பழகாதஇடமாய் இருக்கலாம்,அல்லதுஉடலும்மனதுமாய்அங்குஐக்கியமாகி ஓடுவதற்கு நேரம்எடுத்துக்கொண்ட காரணமாய்க் கூடஇருக்கலாம்.இப்படிதாமத மானாகிப்போனதற்கு/
அலுவலகத்திலிருந்துவெளியேவந்தபோதுரோடுஅத்துவானப்பட்டுக்காட்சியளித்தது,இங்குமாற்றலாகிவரும்போதேநினைத்தான்,இனிமேல்இருசக்கர
வாகனத் தைஓட்டக்கூடாதுமுடிந்த மட்டும், சைக்கிளில்தான் எங்குசெல்லவேண்டும் எனமுடிவெடுத்திருந்தான்.ஆனால்முடியவில்லை,
இங்குவந்துபணிக்குசேர்ந்தஅன்றுஇருசக்கரவாகனத்தில்தான்வந்தான்,சைக்கி ள்ரிப்பேராகிக்கிடக்கிறது.ரிப்பேர்செய்யநேரமில்லை.அதனால்இன்று இருசக் கரவாகனத்தைசர்வீஸிற்குவிட்டுவிட்டுபஸ்ஸில்வந்திருந்தான்அலுவலகத்திற்கு/
நீண்டநாட்களாய்சர்வீஸ்பண்ணவேண்டும்எனநினைத்துவைத்திருந்தவண்டி,முடியவில்லை,ஓடிக்கொண்டேஇருந்துவிட்டான்,இப்பொழுதான்சற்றே
நின்றமாதிரியாய்ஒருஎண்ணம்உண்டாகிறது,போகிறவருகிறஇடமெல்லாம்இருசக்கரவாகனத்திலேயேஅலைந்துவிட்டுஇப்பொழுதுவெறுங்கையை
வீசிப்போய் க் கொண்டிருப்பதுஏதோஇழந்து விட்டதைப் போலிருந்தது.
பாய்டீக்கடையைஅண்மித்துக்கொண்டிருக்கும்போதுஇவன்முதுகுக்குப்பின்னால்பஸ்வரும்சத்தம்கேட்டது.இவனும்அந்தஎண்ணத்தில்தான்நடந்துக்
கொண்டிருந்தான்,
”மினிபஸ்அல்லதுடவுன் பஸ் ஏதேனும்வந்தால் ஏறிப்போய்விடவேண்டும்,நடந்துபோகமுடியாதுபசிநேரத்திற்கு.”என/திரும்பிப்பார்க்கிறான் வந்தது டவுன் பஸ்ஸாக இருந்தது,சரியாக பாய் கடை வாசலுக்கு நேராக பஸ் நின்றது கையைக்காட்டியதும்/ லேசாககையைக்கிள்ளிப் பார்த்துக் கொண்டான், நடந்தது நிஜமே/
இரண்டுவருடங்களுக்குமுன்பாய்ஒருமழைக்கால முன்னிரவொன்றில் இருசக்கரவாகனத்தில்போய்க்கொண்டிருக்கும்பொழுது போலீஸில் பிடித்து விட்டார்கள் லைசென்ஸ் இல்லை என.இவன் லைசென்ஸை வீட்டில் வைத்துவிட்டுவந்திருந்தான்,அதைச்சொன்னாலும்விடுவதாய்இல்லை அவர்கள்,என்ன செய்ய கேஸ் புக்பண்ணப்போகிற சமயமாய் வந்த தெரிந்த போலீஸ்க்காரர் ”நீங்கபோங்கசார் நான் பாத்துக்கிறேன்” என்றார். அவருக்கு நன்றி சொல்லி விட்டுகிளம்புகையில்ரோட்டில்எதிர்கொண்டு வந்தவளைஎங்கேயோபார்த்த ஞாபகமாய் இருந்தது, யார் அவள் இவனும் வண்டியை ஓட்டிக் கொண்டு போய்விட்டான்,ஓட்டிக்கொண்டு போய் விட்டானே தவிர இவனின் ஞாபக மெல்லாம் அந்தப் பெண்ணைப் பற்றியே சுற்றிக்கொடிருந்ததாக/
வட்டமிட்டநினைவுகள் விரிந்து வந்து நிலைகொண்டு நின்றஇடம்தாயகம்காபிபாராகஇருந்தது.அங்குதான்அடிக்கடிடீசாப்பிடுவான்இவன், அப்பொழுதெல்லாம்தாயகம்காபிபாரின் டீ மாஸ்டராக இப்பொழுது பாய் கடையில் டீ மாஸ்டராகஇருக்கிறவரேஇருந்தார்.டீக்குடித்தும் வடைசாப்பிட்டும் மாஸ்ட ரிம் பேசிக் கொண்டிருந்த நாட்களிலுமாய் அந்த டீக்கடையை அன்றாடம் கடந்தஒருபெண் இவன் மனதில் குறியிட்டவளாய் அல்லதுஇவன்மனதில் மையம் கொண்டவளாக ஆகிப்போகிறாள்.
பழையகிழிந்ததாவணியும்,சாயம் போனசட்டையுமாய் காட்சி தருகிறவள்ஏதாவதுஒருவேலையைமுன்னகர்த்திச் சென்றுகொண்டிருப்பாள். வேகமாகதலையில்தண்ணீர்க்குடத்துடன்,அல்லது ஏதாவது பொருள் வாங் கிக் கொண்டு, அல்லது பலசரக்குக்கடைக்கு,சமயாசமயங்களில் டீக்கடைக்கு,,, என வருவாள்.
டீக்கடைக்கு அவள் வரும்போது மட்டும்ஆண்கள்கூட்டம் இருக்கக்கூடாது, அது அவளுக்குள்ளாய் அவள் போட்டுக் கொண்ட சட்டம்/எதன் பாதிப்பாய் அவள் அப்படி ஆனாள் என மாஸ்டர் சொல்ல அரைகுறையாய் கேட்ட துண்டு அவ்வப்பொழுது/
அவள்திருச்செந்தூர்பக்கம்ஒருகிராமம்,அவள்படித்துக்கொண்டிருந்தகிராமத்துப் பள்ளிக்குபோகிற வழியில்தான் அவனதுவீடும்இருந்தது. அவனும் அவள் படிக்கிற பள்ளியில்படித்தவன்தான்,படிப்புவரவில்லைஎனபாதியில்படிப்பை நிறுத்திவிடஅன்றிலிருந்து ஊர்சுற்றுவது ஒன்றுதான் இவனது பிரதானபணியாகிப்போனது.மைனர்த்தனமாய்ஊர்சுற்ற,கைநிறைய அள்ளிச்செலவழிக்க, ஊர்ச் சாவடியில்உட்கார்ந்து சீட்டுவிளையாட,இன்னும் இன்னுமானநிறைந்துகெட்ட பழக்கங்களைகைக் கொண்டிருந்தவனை என்ன சொல்லியும் திருத்தி விட முடியவில்லை அவர்களது தாய் தகப்பனால்/
என்னதான்வசதியானவீடாகஇருந்தாலும்அவனதுஅப்பாஇன்னும்தோட்டத்தில் கோவணம்கட்டிக்கொண்டு வெள்ளாமைக்கு தண்ணீர் பாய்ச்சிக் கொண் டிருக்கிறவர் மகன் இப்படி,,,,,,,என காறித்துப்பாதவர்களும் மனதினுள்ளாய் வையாதவர்களும் ரொம்பவுமே குறைச்சல் ஊருக்குள்ளாய்/
நேரத்திற்கு ஒரு பேண்ட்,சர்ட்,நேரத்திற்கு ஒரு சிங்காரிப்பு,நேரத்திற்கு ஒருஸ்டைல்,நேரத்திற்குஒருசெண்ட்,நேரத்திற்குதகுந்தமாதிரி ஒவ்வொரு வனாய் முகம் மாற்றிகாட்டுகிற அவனைஏனோஅவளுக்கு மிகவும்பிடித்திருந்தது.மனதாரஅவனைக்காதலித்தாள்.வயதின்பருவக்காய்ச்சலுக்கும், காதலுக்கும்வித்தியாசம் தெரியாதஅநேகரைப்போலவே/
பள்ளிக்குவருகிறபொழுதிலும்,பள்ளிவிட்டுவீட்டுக்குசெல்கிறசமயங்களிலுமாய் அவனைபார்க்கமுடியாதாஎனஏங்கி இருக்கிறாள்.ஒரு நாளில்லை, இரண்டு நாட்களில்லை.மாதக்கணக்கில்அவள் கண்களும் மனமும் இப்படி அவனுக் காய்ஏங்கித்தெரிந்ததுஅவனுக்கும்ஆள் மூலமாய் அரசல் புரசலாய் தெரிந்து போக போய் விட்டான் அவளை கூட்டிக்கொண்டு தைரியமாக/.
இப்பொழுதுஅவன்கூட்டாளிகள்ஊரில் இருந்தார்கள்,அவன் செய்த சேட்டை, சல்லவாரித்தனங்கள்,இன்னமும், இன்னமுமான நிறைந்து போனவைகள் இருந்தன.அதுபோலஅவள்படித்த பள்ளியும் அவளது தாய் தகப்பனும் வீடும் இருந்தது,ஆனால் அவர்கள் இருவரும் ஊரில் இல்லை.போனவர்கள் எங்கு போனார்கள்என்கிறஎந்த தடயமும் யாருக்கும் கிடைக்கவில்லை ஊருக்கு ள்ளாக/
இப்படியாய்இருந்தமாதங்கடந்தஒருஇரவுபொழுதில்ஊர்தூங்கிப்போன சாமப் பொழுதொன்றில் அவளது வீட்டின் கதவுதட்டப்படதானாய் திறந்த கதவு தாய் தகப்பன்மருந்துகுடித்துஇறந்துகிடப்பதைக்காட்டியது.விக்கித்துப்போனஅவள் ”இப்பொழுது ஒரு மணிஅல்லது இரண்டு மணி நேரத்திற்குள்ளாகத் தான் இறந்திருக்கவேண்டும்,பாவிமகநான்வந்ததுதாவந்தேன்,கொஞ்சம்சீக்கிரமாவந்திருக்கக்கூடாதா, பகல்லயே வந்து ஊர்க்காடுகள்ல ஒழிஞ்சி இருந்துட்டு இப்பம்இருட்டுனசாமத்துலவராமஊர்என்னசொன்னாஎன்னன்னுஅப்பதையே வந்திருக்கணும்.அப்படி பகல்லவந்திருந்தா தாய்தகப்பன காப்பாத்தியிருக்க லாம்”/எனஅழுகையினூடாகஅடம்கொண்டு புரண்டாள்,”என்ன அழுது என்ன செய்ய, போன உசிரு போனது தானே,இதுக்குத்தான் ரொம்ப ஆடக்கூடாது ன்றது” எனஇழவுவீட்டு வந்திருந்த ஒரு பெரிசு அங்கலாய்ந்து கொண்டிருந்தது,
மறுநாள்காலை ஊர் பஞ்சாயத்தே அவளதுதாய்தகப்பனின்இறுதிச்சடங்கை முடித்து விடலாம் என முடிவு செய்தது.தாய் தகப்பன் மரணித்துப் போன பின்அந்தஊரில்இருக்கப்பிடிக்காமலும்,அவச்சொல்பொறுக்காமலும்,பிழைக்கக்கதியற்றுமாய் வந்து விட்டாள் இங்கு. என்றார் மாஸ்டர்,
காதலித்தவன்,,,,,?எனகேள்விக்குறியிட்டபோது”அவ்வளவுதான்ஆசைதீந்துருச்சி அவனுக்கு,காதுல கெடந்த ஒரு ஜோடி கம்மலயும், மூக்குத்தி யையும் நைச்சியமாபேசி புடிங்கீட்டு பத்தி விட்டுட்டான்,பாவம் இவகையில காசில் லாம ரயில் ஏறி ஊர் வந்துசேந்துருக்கா,இப்ப இங்க இருக்கா, பத்து வீட்ல வேல செஞ்சுக்கிட்டு பத்து வீட்லயும் மூணு வேளைச்சாப்பாடு, மாசம் பொறந்தா சம்பளன்னு போயிக்கிட்டிருக்கு அவ பொழப்பு.ஆமாம் திடீர்ன்னு நீங்கஏன்கேக்குறீங்க,,,,,? அவளப்பத்தி என அவளைப்பற்றி விசாரிக்கிற பொழு தெல்லாம்எல்லாவிஷயங்களையும் மறக்காமல் சொல்லி முடித்து விட்டு பிற் பாடாய்த் தான் கேட்பார்,ஏன் கேக்குறீங்க,,,,,,,,,,,,,என/
பஸ்ஏறிவந்தகணம்தவறாமல்அந்நினைவு இப்பொழுது ஞாபகத்திற்கு வருவதாய்/
கசக்கி சிறியதாய் எறியப்பட்ட பேப்பர் இவன் வாங்கிய ஐந்து ரூபாய் மதிப்பு கொண்ட பஸ்டிக்கெட்டே தவிர வேறில்லை.