கதை கேளுங்கள்: பொறுப்பு
சரியாய் ஆறுமணிக்கு வந்தவிடுவதாக பொறுப்பாய் சொன்ன ஜோஸ்வா, இன்னமும் வரவில்லை! இன்று அவனது காதலுக்கு பச்சைக்கொடி காட்டுவதாக ஜாடையாய்க் கூறியும் அவன் வராத்து, அவன்மீது நம்பிக்கை இழக்கச் செய்ததுடன், பொறப்பில்லாதவன் எனவும் நினைக்க வேண்டியதாயிற்று ஜானுவிற்கு.
மணி ஏழாகிவிட்டிருந்த்து. ஒரு மணி நேரமாய், தனியாக மெரினாவில் காத்திருந்த ஜானுவின் மீது பார்வைகள் தினுசு தினுசாய் படர்ந்த்தில், அவள் மனம் கொந்தளித்தது.
கொஞ்சம் அக்கறையும் பொறுப்பும் இருந்தால், இந்நேரம் வந்திருக்க வேண்டும். ”இவனை நம்பி காதல் சொல்லி, கல்யாணமும் கட்டிக்கிட்டா, விளங்குமா வாழ்க்கை” என உள்ளுக்குள்ளே குமுறினாள். அவனை மொபைலில் தொடர்பு கொண்டார், “நாட் ரீச்சபிள்“ என்ற பதில்தான் கிடைக்கிறது. காத்திருப்பதில் அர்த்தமில்லை என ஸ்கூட்டியை ஸ்டார்ட் செய்தாள் ஜானு.
அப்போது மொபைல் ஒலிக்க, அவன்தானோ என்ற பார்த்தால்…. இல்லை. அவள் அம்மா!
”ஜானு சீக்கிரமா, பி.கே. நர்சிங் ஹோம் வா, நேர்ல பேசிக்கலாம்!”—அம்மாவின் பதற்றமான குரல் கேட்டு, ஸ்கூட்டியின் வேகத்தைக் கூட்டி நர்சிங் ஹோம் போனாள்.
”அப்பாவுக்கு திடிர்ன்னு மயக்கம் வந்திச்சு, ஜோஸ்வாவுக்கு போன் பண்ணி வரச்சொல்லி ஆஸ்பித்திரியில சேர்த்துட்டோம். இப்ப பரவாயில்ல!” என்றாள் அம்மா.
அப்பாவின் படுக்கை அருகே டாக்டர்களுக்கு உதவி செய்தபடி பிஸியாக இருந்தான் ஜோஸ்வா.
- குங்குமம் 3-9-2015 இதழில் வெளியான காதல் கதை
தொடர்புடைய சிறுகதைகள்
”மூச்சிரைக்க லக்கேஜ்களைத் தூக்கி கொண்டு அவசர அவசரமாக மக்கள் அதிக நடமாட்டமுள்ள ரெயில் ஜங்ஷனிற்குள் நுழைந்து… சற்று ஆசுவாசப்படுத்திக் கொண்டிருந்த பாலாஜியின் அலைபேசியில்.. ”உறலோ ! இன்னாங்க ஸ்டேஷனுக்கு போயிட்டீங்களா? ரெயில் வந்திடுச்சீங்களா? எத்தனை மணிக்கு ரெயில் புறப்படும்? லக்கேஜ்லாம் பத்திரமா ...
மேலும் கதையை படிக்க...
”ஆ” அம்மாவென அலறினான்” எதிரே பஸ் ஸ்டாப்பில் நின்றிருந்தவள் காதில் …என்ன விழுந்த த்தோ… ஸ்மார்ட் போனில்… இலாகவமாய் விரல்களால் விளையாடினாள்.
அடுத்த ஐந்தாவது நிமிடம்….. சைரன் ஒலி கேட்டது. ஏதோ, ஆம்புலன்ஸ் என்று பார்த்தால் போலிஸ் ஜீப் … காலோரம் உரசியபடியே ...
மேலும் கதையை படிக்க...
அண்ணாந்து பார்க்கும் அரண்மனையைப் போன்ற மாளிகை. அதில் வசிப்பதென்னவோ மூன்று பேர்தான். மூன்று பேரில் முக்கியமானவர்தான் மஞ்சுளா.அந்த மாளிகையைக் கட்டிக்காக்கும் மகாராணி.
அந்த மஞ்சுளாதான், வீட்டின் பக்கவாட்டில் காலியாக உள்ள இடத்தில் மரங்களை வளர்ப்பதில் ஆர்வமுள்ளவர். அவள் வளர்த்து வரும் மரங்களில் கொய்ய ...
மேலும் கதையை படிக்க...
பிரபல புடவைக் கடையின் மேனேஐர்தான் கேசவன். ஆனால் அவன் மனைவி சித்ராவே சேலைக் கட்டுவதில்லை. என்ன செய்வது? சித்ரா தொலைக்காட்சி சீரியல்களில் நடிக்கிறாள். பெரும்பாலும், அவள் நடிப்பது மாடர்ன் பெண் கதாபாத்திரங்களில்தான். அதற்காக மாடர்ன் டிரஸ் போட்டுப் போட்டு அப்படியே அதற்கு ...
மேலும் கதையை படிக்க...
அழகியகாளை நல்லூர் என்ற கிராமத்தில் பசுபதி என்ற நடுத்தர வயதுடையவனும் வசித்து வந்தான். அவனிடம் ஏறக்குறைய பத்து மாடுகள் இருந்தன.
அந்த மாட்டிடம் இருந்து பால் கறந்து ஊருக்கெல்லாம் அளந்து கொடுத்து தேவையான பணத்தைப் பெற்றுக் கொள்வது அவனது வாடிக்கை.
அப்படி வியாபாரம் செய்து ...
மேலும் கதையை படிக்க...
“உள்ளே நுழையலாமா ? வேண்டாமா ? தயங்கி கொண்டிருந்த, சுஷ்மாவை ”என்னம்மா, தயங்கி தயங்கி வாரே ? ஏதாச்சிலும் கம்ப்ளையன்ட் கொடுக்கணும்ன்னா உள்ற போ! வழியில நிக்காதே, பெரிய அதிகாரிங்க வந்தா என்னை திட்டுவாங்க” என்றார் பாரா போலிஸ்காரர்.
உள்ளே போனவள், ஸ்டேஷன் ...
மேலும் கதையை படிக்க...
“கொஞ்சம் தடுமாறித்தான் போனான் கனேஷ்.. அவனுடைய சர்வீஸில் இதுவரை திக்குமுக்காடியதில்லை. ஆனால் இன்றோ…” தலையைப் பிய்த்துக் கொள்வது போல இருந்தது அவனுக்கு.
பிரபல தொழிலதிபர் மரணம்தான் அவனை அலைக்கழித்தது. தொழிலதிபர் மரணத்துக்கும்…இவனுக்கும் என்ன தொடர்பு.. ”யாரோ கேட்பது புரிகிறது. கனேஷ் பிரபல துப்பறியும் ...
மேலும் கதையை படிக்க...
“அந்த தெரு கடைக்கோடியில் உள்ள ஒரு குட்டிச்சுவரில் உட்கார்ந்து அரட்டை அடித்துக் கொண்டிருந்தார்கள் பதின்மவயது பையன்கள். அந்த ஆறு பேர்களில் முத்துமாணிக்கமும் இருந்தான்.
“இன்னைக்கு மழை வரமாதிரி இருக்குடா” என்றான்
“மழை வராதுடா….இது பாலுவின் பதில்… அந்த கூட்டத்தில் இருவருமே எதிரெதினாவர்கள். முத்துமாணிக்கம் பாசீட்டீவ்வா ...
மேலும் கதையை படிக்க...
ஒங்களை காதலிச்சு கல்யாணம் கட்டிக்கிட்டது எவ்வளுவு தப்புன்னு "இப்பத்தான் புரியுது" முகம் சிவக்க மாலா கத்தினாள்.
இங்க மட்டும் என்னா வாழுதாம், அதேதான் நீ என்னிக்கு வாழ்க்கைல வந்தியோ, அன்னில இருந்தே எனக்கு நரகம்தான்.
பி.பி எகிற குதித்தான் கணேசன்.
கோபத்தை சாப்பாட்டுல காமிக்காதீங்க, டிப்ன ...
மேலும் கதையை படிக்க...
என்னடா, ”ஒன் முகம் இப்படி ஜொலிக்கிறதே” என கேட்டான் ஆனந்தன். ”டேய் ஸ்மார்ட் போன் ரூபாய் இருநூற்று ஐம்பதுக்கு வந்துவிட்டதே, அதான், இவ்வளவு சந்தோஷம். நம்மள மாதிரி நடுத்தர மக்களுக்கு நல்லதுதானே” என்றான் சந்தோஷ்.
அடப்போடா, ”நீயும். ஒன் ஸ்மார்ட் போனும்” என ...
மேலும் கதையை படிக்க...
20 ரூபா மொபைலும் 200 ரூபா தண்ணீரும்!
இத்தளத்தில் பதிவிட்டு ஊக்கப்படுத்துவதற்கு மிக்க நன்றி