கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்  
கதைப்பதிவு: April 26, 2019
பார்வையிட்டோர்: 29,758 
 
 

உலகம் அதன் இயல்பாய் சுற்றிவருகின்றது.. இரவு வந்தால் விடிந்துதானே ஆகவேண்டும்..விடியற்காலையில் மனிதர்களை விடுத்து மற்ற எல்லா உயிரினங்கள் தன் இரையை தேட ஆயர்தமாகின்றன , பட்சிகளுக்கு மட்டும் ஒரு கூடுதல் வேலை என்னவென்றால் மனிதர்களை உறக்கத்திலிருந்து எழுப்புவது..

சேவல் அதன் பங்குக்கு ‘கொக்கரக்கோ’ என, குயிலோ ‘குக்கூ’ என, கிளிகள் ‘கீகி’ என என்ன ஒரு ரம்மியமான காலை.. அதனை அனுபவிக்க விடியற்காலையில் அழகை ரசிக்க வேண்டும்.. ரசிக்க தெரியாதவனுக்கு குழல், யாழ் மற்றும் பறவைகள் எதற்கு, அவர்கள் உறங்கி மெதுவாக எழலாம் ஒன்றும் அவசரமில்லை..

மார்கழி காலையில் கிராமமே வெள்ளை நிற போர்வை போர்த்தியதுபோல் பனி பொழிந்துகொண்டிருந்தது இலைகள் , புற்களின் மேல் கால்கள் மறந்துபோகின்றாளவுக்கு என்ன ஒரு குளுமை!!.. சிலந்தி வலைபோல் புற்களின் மேல் பனித்துளிகள் உறைந்துபோய் தனது தற்காலிக வீட்டை அமைத்துக்கொண்டுள்ளது..சூரியன் இல்லாதலாய் குளிர் விட்டுவிட்டது போலும்..இருக்கட்டும் எல்லாம் சூரியன் வரும்வரைக்கும் தான் அவை சற்று நேரத்தில் நீராய் வடிந்ததோடி போய்விடும் பாவம்..

படித்து முடித்து வேலைக்காக தேடி அலைந்துகொண்டிருக்கும் இனியவன்

காலையில் என்றும் நான்கு மணிக்கு எழுந்துவிடுவான், ஆனால் காகம் கரைத்தும் குயில்கள் கூவியும் இன்னும் களைத்துப்போய் உறங்கிக்கொண்டிருக்கிறான் . புதிதாய் ஒரு சங்கீத இசை தன் காதில்பட எழுந்துகொள்கிறான், பக்கத்துவீட்டில் புதிதாய் கல்யாணமான ராமன் மனைவி செல்வியின் குரல் போலும் என்று தன்னுள் நினைத்து இசையை ரசிக்கஆரம்பித்தான்..ஏதோ கர்நாடக சங்கீதம்போல் இருக்கிறது, அது இனியவனுக்கு புரியவில்லையென்றாலும் ரசித்தான் , இசைக்கு மொழி உண்டா என்ன?.. ரசனை போதும்.. எப்படி பறவைகளின் ராகம் புரிகிறதோ அதுபோல் இதையும் ஏற்றுக்கொள்ளலாம்..

இனியவன் ராமனின் கல்யாணத்திற்கு செல்லவில்லை ,அன்று வேலைதேட வெளியூருக்கு செல்ல நேரிட்டது..ராமனுக்கு கல்யாணமாகி ஒருவாரம் ஆகியும் நேற்று இரவுதான் ஊருக்கு வந்திருக்கிறான் போலும்..என்ன ஒரு இனிமையான சங்கீத குரல் அவன் மனைவிக்கு …”இன்றைக்கு போய் அவனுக்கு வாழ்த்து கூறவேண்டும்” என நினைத்து படுக்கைவிட்டு விலகி பாயை மடித்துவைத்துவிட்டு தன வேலையை பார்க்க செல்கிறான்..

ராமன் இனியவனைவிட ஐந்து ஆறு வயது பெரியவன் ..ராமன் ஊரிலிருந்து சுமார் 30 கிலோமீட்டரிலுள்ள ஒரு அரசு அலுவலாகித்தில் அசிஸ்டன்ட் என்ஜினீயர் வேலை பார்த்துக்கொண்டிருந்தான்.. செல்வி நகரத்தில் பிறந்து வளர்ந்தவள் என்றாலும் இசையை நன்கு அறிந்து வைத்திருந்தாள். ராமன் அப்பா கோவில் பூசை செய்வார் ஜாதகமும் பார்ப்பார்.. செல்வியும் அவள் மாமியார் மரகதமும் என்றும் போல் வீட்டில் தன பணியை செய்துகொண்டிருந்தனர்..ராமனுக்கு செல்வி ஒருவயது மட்டுமே இளையவள்..

இனியவன் காலையில் குளித்து முதல் வேலையாக ராமனுக்கு வாழ்த்துக்கூற வேண்டுமென கிளம்பினான்..வயதில் ராமன் மூத்தவனென்றாலும் அவர்கள் சிறுவயதுமுதல் நண்பர்களாய் பழகி வந்தார்கள்..

“ராமா!! டேய் ராமா” என்று வீட்டுவாசலிலிருந்து அழைத்தான்..ஆனால் உள்ளிருந்து ராமனின் தாய் மரகதம் வாசலில் வந்து பார்த்தாள்..

“வா!! பா! இனியா உள்ளே வா ஏன் வெளியே நிக்குற” என்றாள்.

“இல்லமா ராமனை பாக்கலாம்னு வந்தேன்! கல்யாணத்துக்கு வரமுடியல அதான் காலையிலே போய் அவனை பாக்கலாம்னு வந்தேன்!! ”

“அவன் வீட்ல இல்லப்பா ”

“எங்கம்மா அவ்ளோ சீக்கிரமா போய்ட்டான் ”

“கல்யாணத்துக்கு ரெண்டுவாரம் லீவு எடுத்துட்டான்ல இன்னைக்கிலிருந்து ஆபிஸ் போறான், வேலை நெறைய இருக்கும்னு ஆறு மணிக்கெல்லாம் கிளம்பிட்டான்..உனக்கே தெரியும்ல இங்கேயிருந்து ரெண்டுமணிநேரம் ஆகும் அவன் ஆபிஸ்க்குப்போக..வாப்பா உள்ளே வந்து உட்காரு ” என்று மரகதம் அழைத்துப்போய் உட்காரவைத்தாள்.

“ஏன்பா கல்யாணத்துக்கு அவ்ளோ கூப்பிடும் வராமவிட்டுட்டேயே, அம்மா சொன்னாள் உனக்கு எதோ இன்டெர்வியூ இருந்ததுன்னு !!”..

“ஆமாம் மா” என்றான்

‘”இனியா ..காபி கிபி சாப்பிடுறியா !”

“இல்ல மா பரவால்ல ”

“இருப்பா எடுத்துட்டு வர சொல்றேன்.. என்னமா செல்வி தம்பிக்கு ஒரு காபி கொண்டா !!” என்று கூடத்திலிருந்து அடுப்பங்கரையில் இருக்கும் மருமகளுக்கு உத்தரவுவிட்டாள்..

“உங்க பொண்ணு மங்கயற்கரிசி எப்படிம்மா இருக்கா! குழந்தை எப்படி இருக்கான் ! இப்போ குழந்தைக்கு மூணுமாசம் தானே வயசு ?”

“ஆமப்பா பாவம் அவ தனியாளா குழந்தையும் வீட்டுவேலையும் பாத்துண்டு கஷ்டப்படுறா ..இன்னும் ரெண்டு வாரத்துல நானும் ஆத்துகாரரும் கொஞ்சநாள் தங்கிட்டு வரலாம்னு பாக்குறோம் !!” என்றாள்

பேசிக்கொண்டிருக்கும் வேளையில் !! லட்சணமாய் மடிசார் அணிந்து கையில் காபி டம்பளர்ரோடு பெண்னொருத்தி வந்தாள்..அவளை சட்டென பார்த்த இனியவன் மனதில் ஓவியம் தீட்டி கொண்டிருந்தான். “வெள்ளை மயில் போலிருந்தது அவள் நிறம், அழகிய கண்களுக்கு மேல் பிக்காஸோவின் ப்ருஷால் தீட்டியதுபோல் வில்போன்ற வளைவான புருவம் , நெற்றியில் வட்டமான சிவப்பு பொட்டு,நடு வடுகு எடுக்கப்பட்ட பின்னிய தலைமுடி அதில் சிறிது மல்லிகை பூவும் வைத்துக்கொண்டிருந்தாள்..என்ன ஒரு கண்கள்.. அவள் பார்வை நேரே தன் இதயத்தை தாக்குவதைபோல் இருந்தது..”

தன்னிடம் நீட்டிய காபி டம்ளர்ரை சற்று நடுக்கத்துடன் வாங்கிக்கொண்டான்!! நடுக்கம் அவன் கையில் இல்லை !! அவன் இதயத்துடிப்பில்..

“வாங்கிக்கோபா காப்பிய !!” என்றாள் மரகதம்

அவள் கையில் இருந்த காபி டம்ளர் தன் கைக்கு எப்படி மாறின என்று அவனுக்கு வியப்பாகத்தானிருந்தது..

“தேங்க்ஸ் !” என்றான்

அவள் மாமியார் உடனே இனியவனை பற்றி செல்வியிடம் சொல்ல ஆரம்பித்துவிட்டாள் ..

“தம்பிதான் மா பக்கத்துவீட்டு கோதையோட பையன் பேரு இனியவா படிப்பை போன வருஷம் முடிச்சுட்டான் இன்னும் வேலைக்காக தேடிக்கொண்டிருக்கான் இன்னும் கிடைக்கல!! ஏம்பா வேலையா இல்ல இந்த உலகத்துல இன்னும் வேல கிடைக்க மாட்டிங்குது?” என்றாள் மரகதம் .

“இல்லமா சாதாரண வேலைனா நான் எப்யோ போயிருப்பேன், கவர்மெண்ட் வேலைக்காக UPSC பரிச்சைக்கு ட்ரை பன்னிட்டு இருக்கேன்”என்று தன்னுடைய கவுரவத்தை காப்பாற்றிக்கொண்டான்.

“அடப்போ பா என்ன சீ யோ! நமக்கு விளங்கள!! எம்மா செல்வி உனக்கு எதாவது இதப்பத்தி தெரிஞ்சுதுன்னா தம்பிக்கு சொல்லுமா!! பாவம் கோதை அன்னைக்கு வருத்தப்பட்டுண்டு இருந்தா !!”என்றாள் மரகதம்.

அடுத்த ரெண்டு மாசத்துல ரிட்டேன் எக்ஸாம் வருதுபோல ” என்றாள் செல்வி

“ஆமாங்க, அதுக்குதான் கஷ்டப்பட்டுட்டுஇருக்கேன் ” என்றான் அவன் முகத்தை பாராமல்..

“ஓகே, என்னோட பிரென்ட் டும் இந்த வருஷம் அந்த எக்ஸாம் எழுதுறா !! ஏதாவதுவேனும்னா சொல்லுங்கோ நாவேணும்னா கேட்டுச்சொல்றேன்” என்றாள் செல்வி

“சரிங்க தேங்க்ஸ்..நான் கிளம்புறேன் ராமன் வந்தபிறகு நான் வரேன், லைப்ரரிக்கு போகணும் இந்நேதிக்கி தொறந்திருப்பாங்க ” என்றான்

உடனே செல்வி, “இங்க லைப்ரரிலாம் இருக்கா?”

“ஆமா இங்க இலக்கியம் , பாடப்புத்தகம் , பொதுஅறிவு சம்பந்தமான புத்தகங்கள் இருக்கும்” என்றான்

“ஓ நைஸ் ” என்றாள்

“பரீட்சைக்கு சின்ன வயசுல இருந்து எண்ணலாம் படிச்சோமோ அத திரும்பவும் படிச்சுட்டு இருக்கேன் , அந்த வயசுல அதன் முக்கியத்துவம் தெரில…சரி மா நான் வரேன் ” என்று தன் வீட்டுக்கு சென்று நோட்டை கையில் எடுத்து கொண்டு லைப்ரரி நோக்கி நடந்துகொண்டிருந்தான்..

செல்லும் வழி எங்கும் பல்வேறு எண்ணங்கள் தன் மனதில் நினைத்தவண்ணம் மெதுவாக நடந்து சென்றுகொண்டிருந்தான்..”அட!! எதற்காக நான் சென்றேனோ, அத சொல்லாமலே வந்துட்டேனே!! ச்சே!! வாழ்த்தே சொல்லலையே!!” என்று தன் மனதில் நினைத்துக்கொண்டு கால்கள் தானே அவனை லைப்ரரிக்கு கொண்டுவந்து சேர்த்துவிட்டது..

லைப்ரரின் ராஜா கையில் ஏதோ புத்தகத்தை வைத்து கொண்டு படித்துக்கொண்டிருந்தார்.. இனியவனை பார்த்து உற்சாகமடைந்த “வாப்பா தம்பி என்ன லேட் இன்னைக்கு” என்று வினவினார்..கால்கள் என்னை மெதுவாக கடத்திக்கொண்டு வந்தது என்று முகம் பார்க்காமல் பதிலளித்தான்..

பரீட்சைக்கு மொழி, இலக்கியம், பல்வேறு கட்டூரைகள் கேட்கப்படும், இனியவனுக்கு இலக்கியத்தில் மட்டும் சற்று பின்தங்கி இருந்தான். ஆதலால் நூலகத்தில் அதன் சம்பந்தமான கதைகள் கட்டூரைகள் தேடி தேடி சில மாதங்களை படித்துவந்து கொண்டிருந்தான்.

க்யூபிட் அண்ட் சைக் என்னும் ரோமானிய காதல் சிறுநாவலை லைப்ரரில் அன்று படித்திருந்தான்..அதன் நியாபகமாய் அன்று இரவு முழுவதும் தூங்கமுடியாமல் தவித்தான்.. க்யூபிட் அம்புகளை வீசி எரிந்து சாகவிடாமல் காதல் எனும் நோயை கொடுத்து மக்களை ஒரு மயக்கத்தில் ஆழ்த்துகிறானே!! அது வாழவிடாமலும் சாகவிடாமலும் ஒரு கயிற்றின் மேல் நடக்கச்செய்கிறதே !! என்று எண்ணி கொண்டிருந்தான்.. உடனே காலையில் பார்த்த செல்வியின் ஞாபகம் வந்தது..”என்ன ஒரு அழகிய பதுமையவள், தன் படர்ந்த நெற்றியில் அந்த சிறிய குங்கும போட்டு என்ன ஒருஅழகை தருகிறது.. அவளின் சிவந்த இதழுக்கு சாயம் தேவையாயென்ன.. அவள் புன்னகைக்கும்போது உதட்டின் அருகில் அந்த புன்னகைவளைவுகளில் சிறிய குழி விழுகின்றனவே!! அழகு அழகு””..காதில் அணிந்திருந்த தோடு அவள் இதயத்துடிப்பின் அசைவுக்கேற்ப அசைந்தாடி தனக்கு காட்டியதுபோலிருந்து..அவள் கண்களிலிருந்து ஒரு மெல்லிய கோடு தன் கண்களின்னுலேயே ஊடுருவி சென்று அவன் நெஞ்சை தொட்டதுபோல் இதயத்தில் ஒரு குளிர்ச்சியை உணர்ந்தான்..அவளின் எண்ணம் தன் கண்களின்வழியே கடத்தி சென்று தன்னிடம் விட்டுச்சென்றதுபோல் தோன்றிற்று.அவன் இதயம் சற்று கனமானதுபோல் உணர்ந்தான்..

விடிந்தது காலை, அன்றிரவு இனியவன் தூங்கவேயில்லை..கனத்த இதயத்துடன் அவன் காலை தொடங்கியது.. வழக்கம்போல் பக்கத்துவிட்டிலிருந்து சங்கீத இசை…இன்று அவள் சுப்ரபாதம் பாடிக்கொண்டிருந்தாள், அதை ரசித்தவாறே படுக்கையில் சிறிதுநேரம் அமர்ந்து கேட்டுக்கொண்டிருந்தான்..

அவனுள் ஊடுருவிய செல்வியின் மயக்கத்திற்கு அஞ்சினான், இதற்காகவே சில நாள்கள் கண்டுங்காணாது அவள் வீட்டை கடந்துசென்றான்..இருந்தும் அவன் கண்கள் அவளை தேடி அலைந்தது…ராமன் வீட்டை கடந்து செல்லும்போது அவன் கண்கள் அவனறியாமல் அவளை பார்க்க ஏங்கியது..அப்படியே ஒருநாள் செல்கையில் சமையலறையிலிருந்து ஏதோ இரு கண்கள் சாலையில் தம்மை பார்க்கிறது என்றுணர்ந்தான், சட்டெனெ திரும்பி பார்க்கையில் உடனே மறைந்தது.. அவள் கண்களேதான்..

இப்படியே இரண்டு வாரம் கடந்துசென்றான்..பரீட்சைக்கு இன்னும் சில நாட்களே இருக்கையில் என்ன ஒரு இக்கட்டான சூழ்நிலையில் அகப்பட்டுவிட்டேனே என்று தன்னுள் வருந்தினான்,ஆனாலும் அவளை பார்க்காமல் அவன் உள்ளம் ஏங்கியது..

ஒருநாள் காலை ஒன்பது மணியளவில் அவள் விட்டு வாசலில் போய் “ராமன்!! ராமா !”என்று அழைத்தான்.

குரலை கேட்டமாத்திரத்தில் உடனே துள்ளி குதிதோடி செல்வி வந்தாள்..

“வாங்கோ வாங்கோ இனியவன்” என்றாள்

“ராமன் வீட்டில் இல்லையாங்க ?” என்று வினவினான்..

“ஆமா! அவரு வீட்டுக்கு வந்து நாலு நாள் ஆகுது..வேலையே கதின்னு அங்கெதங்கிருக்காரு” என்றாள் ..

“ஏன் என்ன அவ்வளவு வேலை!!”

“ம்ம்!! ஏதோ வேலைய முடிச்ச ப்ரோமோஷன் குடுக்கிறேன்னு மேனஜரு சொல்லிருக்காராம் அதனால வீட்டை மறந்துபோய் அங்கே இருந்துட்டேன் போன் பண்ணாரு!! இன்னைக்கு நயிட் பத்து மணிக்கு வருவேன் சொல்லிருக்காரு …!! அப்புறம் உன்னோட பரீட்சைக்கு பிரேபரேஷன் எப்படிப்போகுது..?” என்று கேட்டாள்

“ஆமா!! போயிட்டே இருக்கு..ஏதோ காரணத்தால் என்னால் சரியாக கான்செண்ட்ரேட் பண்ணமுடியால!! ” என்று சொல்லி அவள் கண்களை உற்றுநோக்கினான்..

“ஏன் அப்படியென்ன டிஸ்ட்ரக்ஷன் உனக்கு?” என்றாள்.

உடனே மனதில் “உன் கண்கள்தானடி காரணம் வேறென்ன” என்று மனதில் நினைத்துக்கொண்டு அவளை சற்றும் கண்சிமிட்டாமல் பார்த்தான்..!. அவளும் அவன் சொல்லநினைப்பதை புரிந்தாற்போல மெதுவாக தன் கண்களை சிமிட்டினாள்..

“ஏன் நிக்குற இந்த கயிற்று கட்டிலில் உட்காரு, எதாவது காபி சாப்பிடுறியா?” என்று கேட்டாள்.

என்ன பதில் சொல்வது என்று சிந்திப்பதற்குள் அவள் சமயலறைக்கு போய் பாலைசுடவைத்துக்கொண்டிருந்தாள்..பால் சற்று பொங்கி மேல் எழும்போது இறக்கிவைத்து ஒரு க்ளாசில் டிகாஷன் ஊற்றி நுரைவரும்வரை ஆற்றி கொண்டுவந்து கொடுத்தாள்..

“வீட்டுல ராமன் அம்மா இல்ல?”

“அவங்க ஒருவாரம் முன்னாடியே பொண்ணுவிட்டுக்கு போய்ட்டாங்க..சரி உனக்கு என்ன பிரேபரேஷன் நோட்ஸ் வேணும் சொல்லு!! என் பிரின்ட் மூணு வருசமா எழுத்திட்டுஇருக்கா, நா வேணும்னா கேட்டு சொல்றேன் !!” என்று கேட்டாள்

“ஆமா எனக்கு ஆங்கில மொழி படத்துல எதாவது கட்டூரை இருந்தா தர சொல்லுங்களேன்” என்றான்

“சரி, நான் இன்னும் கொஞ்சநாளே ஊருக்கு போவேன் வாங்கிட்டு வரேன்”..

“அது என்ன இன்ஸ்ட்ருமென்ட் ? வீணைதானே ??” என்று கேட்டான்

“பார்த்தா கிட்டார் மாதிரியா இருக்கு, வீணைதான் “..

“உங்களுக்கு வீணைவசைக்க தெரியுமா?? நான் உங்க கர்நாடக சங்கீத இசைக்கு ரசிகன்..தினமும் நீங்க பாடுறதை என் வீட்லயிருந்து கேட்டுத்தான் எழுந்துப்பேன்..என்ன ஒரு தெய்விக குரல் உனக்கு!!”

“ஓ சாரி , உங்களுக்கு !!” என்றான்

“இட்ஸ் ஓகே..யு கேன் கால் லைக் தட்” என்றாள்

இனியவன் சற்று பதட்டமடைந்து அவள் கண்களை நோக்கினான்!! அவை தன்னை பார்த்துக்கொண்டிருந்தது என்று அறிந்து சற்று நாணி தலைகுனிந்துகொண்டான்..

“எனக்கு வீணை இசை மிகவும் பிடிக்கும்..அதில் இருக்கும் ஜீவன் எந்த இசை வாத்தியமும் தரவேமுடியாது, அது நம் ஆன்மாவை தட்டி எழுப்பும்..வாட் எ மார்வெல்லோஸ் இன்ஸ்ட்ருமென்ட்.. எனக்காக எதாவது வாசிக்க முடியுமா ?” என்றான்

“கண்டிப்பாக ” என்றவள் உடனே தன் வீணையை எடுத்து பிள்ளையை மடியில் வைத்து தாலாட்டுவதைபோல் அதனை வைத்து..ஸ்ட்ரிங்கை சரிசெய்துகொண்டாள்..”உனக்கு ஒரு செல்லன்ஜ், நான் என்ன பாட்டை வாசிக்கிறேன்னு நீ தான் கண்டுபிடிக்கும்”..

“கண்டிப்பாக, ஐ வில் ட்ரை மை பெஸ்ட் ” என்றான்.

உடனே சரஸ்வதியை போல விரல்களில் இசையின் கோலம் வரைந்தால்..அதை கேட்ட எனக்கு ஒரு வித மயக்கமே வந்துவிட்டார்போலிருந்தது.இரண்டு நிமிடம் வாசித்து மடியிலிருந்து வீணையை கிழே வைத்துக்கொண்டு கேட்டாள் ..”என்ன பாட்டு சொல் பாக்கலாம்” என்றாள்

“ஆண்டாள் திருப்பாவையிலிருந்து மார்கழி திங்கள்..சரியா ??”

“கரெக்ட்..

உனக்கு தெரியுமா நானும் இலக்கியம் படித்துண்டு இருக்கேன் உன்னமாதிரி பாடமாயில்ல நேரம் கடத்த..என்கிட்டே பிரெஞ்சு இலக்கிய புத்தகங்கள் என் சொந்த வீட்டில நிறைய இருக்கு ..இங்க சிலது கொண்டுவந்துருக்கேன். நீதான் பாடமா படிக்கிற எந்த இலக்கியங்கள் படிக்குற?” என்று கேட்டாள்

” நான் லைப்ரரில படிக்குறதுதான் அங்க ஏராளமா ருஷ்ய இலக்கியங்கள் குவிச்சு வெச்சுருக்காங்க..நான் சில கவிதை புத்தகங்களை புரட்டுவேன்..ஆனா அந்த லைப்ரரின் ராஜா சார் எப்போவும் ருஷ்ய இலக்கியங்கள் மூழ்கிக்கிடப்பாரு.. ஏதோ இஸ்கி இஸ்கி முடியுற பெயரா சொல்லிகிட்டே கிடப்பாரு நான் கண்டுக்கவே மாட்டேன்..”

“நம்ம லைப்ரரில விக்டர் ஹியூகோ வாழறாரான்னு எனக்கு பாத்து சொல்றியா !! எனக்கு ‘ஹாஞ்சுபாக் ஆப் நாத்ரேடாம்’ திரும்பவும் வாசிக்கும் போலிருக்கு.. சரி நீதான் எதாவது வாசித்த கவிதை சொல்லேன்?” என்று கேட்டாள்

“நான் லைப்ரரில என் சப்ஜெக்ட் புக்ஸ் படிக்கிறேனோ இல்லையோ இப்போல்லாம் கவிதை புத்தகங்களை தேடி தேடி படிக்கிறேன்”..

” ஏன் எதாவது பெண்ணை லவ் பண்றியா ? என்றாள்

அவனுக்கு தூக்கிவாரி போட்டது ..அவள் கண்களை பார்த்துக்கொண்டே மனதில்..”ஆம் நான் உன்னைத்தான் லவ் பண்றேன்” என்று தன் மனதில் சொல்லிக்கொண்டான். அவளோ அவன் கண்களை விட்டு அகலாமல் பார்த்துக்கொண்டிருந்தாள்..

“சரி கவிதை கேட்டேனே !!” என்றாள்

“ஓகே ..சமீபத்தில் புஷ்கின் கவிதை படித்தேன் அதுவேனும்னா சொல்றேன்..” என்றான்

“டோன்ட் மைண்ட் இங்க நான் உட்காந்துக்குறேன் கால் வலிக்குது “என்றவள் அவன் பக்கத்தில் உட்கார்ந்தாள்..

அவனுக்கு மனதில் ஏதோ படபடப்பு உண்டாயின..ரத்தம் மூளைவரை சட்டென ஏறினாற்போல தோணிற்று…

“இதோ செல்வி கவிதை ” என்றவன் தன் கண்களை சற்று மூடி அவளை நோக்கியவாறே அதே படபடப்புடன் கவிதையை சொல்ல ஆரம்பித்தான்..

“நான் உன்னை காதலித்தேன்; ஒருவேளை நான் இன்னும் உன்னை நேசிக்கிறேன்,

சுடர், ஒருவேளை, அணைக்கப்படவில்லை; இன்னும்

அது என் ஆத்துமாவுக்கு மிகவும் அமைதியாக எரிகிறது,

நீ இனிமேல் கவலைப்படக்கூடாது.

அமைதியாகவும் நம்பிக்கையற்றதாகவும் நான் உன்னை நேசித்தேன்,

சில நேரங்களில் பொறாமை சில நேரங்களில் வெட்கமாக இருக்கிறது.

நான் உன்னை காதலித்தேன் என் காதல் இன்னும் இருக்கலாம்,

என் ஆத்மாவில் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்க வேண்டும்.”

என்று சொல்லும்போதே தன் கைகள் அவள் கைகளில் பின்னிக்கொண்டிருந்ததை உணர்ந்தான்.. உடனே தன் கண்களை திறந்து அவள் கீழ் உதட்டில் தான் இத்தனைநாள் சேர்த்துவைத்த உணர்ச்சிகளை முத்தத்தால் வெளிப்படுத்தினான்..தன்னுடைய உதடும் அவளிடம் அகப்பட்டுக்கொண்டிருந்ததை அவன் உணர்ந்தான்..

இருவரும் கண்களை திறந்துபார்த்து அவைகளின் சுய உணர்வுக்கு திரும்பினர்..

“ஐயம் சாரி செல்வி, என்னை ஏதோ கட்டியிழுத்ததுபோல உணர்ந்து உனக்கு முத்தம் கொடுத்துவிட்டேன்” என்றான்

“ஐயம் ஆல்சோ வெரி மச் சாரி எனக்கும் அதே உணர்வுதான் ” என்றாள்

“சரி நான் கிளம்புறேன்” என்று சொல்லிக்கொண்டு எழுந்தான்..அவள் கண்களைப்பார்க்காமல் நாணி தலைகுனிந்தவாறே விலகி சென்றான்..

செல்விக்கு அவன் விலகி செல்ல செல்ல கண்களிலிருந்து கண்ணீர்த்துளிகள் கிழ்நோக்கி பாய்ந்த வண்ணம் இருந்தது…

இரண்டு நாள் கழித்து அவள் போனில் அவனிடம் இருந்து மெசேஜ் வந்தது “நான் பரீட்சை எழுதப்போகிறதில்லை அந்த இலக்கை கைவிட்டுவிட்டேன்.. நான் எழுத்தை நேசிக்க தொடங்கிவிட்டேன் , இனி என் வாழ்வு எழுத்து தான், இந்த புதிய பாதையை என்னுள் விதைத்த உனக்கு நன்றி செல்வி ..என்றும் உன் அன்புடன், இனியவன், சென்னை”…..

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *