கண்ணீரில் நனைந்த நினைவுகள்

12
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்  
கதைப்பதிவு: November 16, 2014
பார்வையிட்டோர்: 33,002 
 
 

மாலை ஆறு மணி.மாலை நேரம் சிலருக்கு உற்சாகம் கொடுக்கும் .மருத்துவ மனைகளில் அதுவும்ஐசீ யு அருகில் இருப்பவர்கள் வாழ்க்கையின் மறுபக்கம் நினைத்து பார்க்கும் நேரம் .கார்த்திக் அதைத் தான் செய்து கொண்டிருந்தான்.

உள்ளே ஐ சீயு வில் அவள் மூச்சு மெஷின் தான் சுவாசித்துக் கொண்டிருந்தது.மூடிய அவள் கண்களில் லேசாகக் கண்ணீர்!அந்த மெல்லிய நினைவில் அவனா! அல்லது யாரோ!

வெளியில் பெஞ்சின் ஓரத்தில் அவன்.! கண்கள் மூடிக் கொண்டிருந்தாலும் நினைவின் நடுவில் அதே கண்ணீர்!

அந்த முதல் சந்திப்பு!

சிறு வயதில் ஒருவரை ஒருவர் பழகித் தெரிந்திருந்தால் கூட ,வயதின் அமைப்பினால் தங்கள் மனதில் தோன்றும் எண்ணங்களில் அவரவர்களை நிலையாக நிறுத்தி ,ஒரு நிழற்ப் படமாக வரைந்து மகிழும் அந்த வயதில் அவர்களின் முதல் சந்திப்பு!

ஆடி பதினெட்டு! பொதிகையின் தென்றல் முழுமையாக ,அமைதியாக ,இனிமையாக வீசிக் கொண்டிருக்கும் நேரம் அது!

பொதிகை தனக்கே உரித்தான இயற்கை எழில் வளத்தின் அழகையும் ,அருமையையும் செங்கோட்டையிலிருந்து நெல்லை முழுதும் கம்பீரமாய் ரசித்துக் கொண்டிருக்கும் தனி அழகு!

பொதிகை மலைக்கென்று தனிமையான நேரமே இல்லை!

இரவு பகல் எந்நேரமும் நிலா ஒளியிலும் சூரிய ஒளியிலும் தன்னுடைய பெருமையை தானே வியக்கும் நேரம்! பசுமையோடு சூழ்ந்து பண்ணிசைக்கும் நேரம்!

அந்த ஜீவ நதி தாமிரபரணியோ தன் அழகான கரைகளில் அருகருகே அமைந்த பசுமையான கிராமங்களின் தன்னிறைவோடு தளிர் நடை போட்டு வரும் அழகுப் பெண்களும் ,பெரியவர்களும் புத்தாடை மிளிர மகிழ்ந்து ஆற்றின் படிக்கட்டுகளில் கூட்டுச் சோறு உண்ணும் நேரம்!

வித விதமான சமைத்த உணவுகள்! உற்றவரும் உறவினரும் ஒன்றாக உண்ணும் நேரம்!

பசுமையான பச்சை நிற நெற் கதிர்கள் அந்த தென்றலுக்கு அசைந்தாடி பண்ணிசைக்கும் நேரம்!

இளம் தளிர்களோ உணவு உண்டாலும் ஓரப் பார்வையில் கனிவு கசிய காதலனை நாடும் நேரம்!

தாமிர பரணி எத்தனையோ காதல் நிகழ்வுகளை காலத்தால் அழியாத கவிதைகளாக மாற்றி இருக்கிறது!

அந்த தெளிந்த நீரோட்டத்தின் இடையிடையே இருக்கும் சிறிய பாறைகளின் முகப்பு மேல் அமர்ந்து கனிவான தமிழில் பேசிய காதல் கவிதைகளை நினைவில் இருத்தி ஓடும் அந்த தெளிந்த நீரோட்டத்தை இன்னமும்தெளிவாக அழகு பெறச் செய்து கொண்டிருந்தது.

கார்த்திக் கையில் இலையை வைத்துக்கொண்டு இருக்கும் உணவை உண்ணாமல் தண்ணீரில் கீழ் படியில் நிற்கும் அழகிய பெண் தேவதை ரேவதியைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

கடவுளே! எப்படித்தான் அழகு என்ற அமைப்பை இப்படி செதுக்கித் தெளித்து என் போன்றவர்களை கிறங்கச் செய்கிறாய் !

என்னடா கார்த்திக்! கையிலே சாப்பாட்டை வச்சுண்டு அங்கே என்ன பாக்கறே!

இது ரேவதியின் அம்மா குரல்!

இந்த உலகத்திற்கு வந்தான் .

இல்லை மாமி! கொஞ்சம் சாதத்தை எடுத்து மீன்களுக்கு போட்டுப் பார்த்தேன்!மீன்கள் ஓடிவருவது அழகா இருக்கு!

நீ ஓடி வர மீன்களைத்தான் பார்த்தியா! மாமியின் குரல் வேற மாதிரி தொனித்தது!

டீ!ரேவா ! இப்படி காலை நனைசுண்டு தண்ணீலே நின்னா இப்படிதான் மீன் பார்க்க அலைவாங்க!

மேல வா!

ரேவதி திரும்பினாள்.

கார்த்தி !இப்படி முழுங்கற மாதிரி பார்த்தா அப்படிதான் சொல்லுவாங்க!

ரேவா!மேல போகாதே நில்லு!

நீ பார்த்தது போதும் !நான் எங்கேயும் போல ! மேல தான் வரேன்! இந்தா புளியோதரை !நான் பண்ணினது !இதை எனக்காக தின்னு வை!

வெறும் இலையை வச்சுண்டு வச்ச கண் வாங்காமெ பார்த்தா இப்படிதான் சொல்லுவாங்க! என்றாள் ரேவதி .

சரி! நாளன்னிக்கி அதே டிரைன் தானே! உங்க கோச் பக்கத்திலே தான் எங்களுக்கும் போட்டிருக்கு!

சென்னை போனா பாக்கவே முடியாதே !

மெதுவாகப் பேசிக்கொண்டே கிராமத்துக்குள் வந்தார்கள் .

அது சரி!ஏன் உங்க அம்மா அவ்வளவு கொவிச்க்கிறாங்க !இப்படி பேச மாட்டாங்களே !

நேத்திக்கி டவுன்லே புடவையோ நகையோ வாங்கும்போது பணம் போறலேன்னு உங்க அம்மா கிட்டே கேட்ட போது இவளுக்கு இல்லே சொல்லிட்டு கொஞ்ச நேரம் கழிச்சு வேற யாருக்கோ உங்க அம்மா கொடுத்திட்டாங்க !அது தான் கோபம்!

இந்த ஊர்லே திருநாள் வரும்போது தான் நாம பார்த்துக்கிறோம்.சென்னையிலே போனா எப்பவோ !

தெரியாதவங்க கூட சென்னையிலேருந்து வரும்போது ரெயில்லே அவ்வளவு ஆசையாகப் பேசறாங்க!நம்ம ஒரே ஊரு !ஒரே கிராமம்!ஒருத்தருக்கு ஒருத்தர் நல்லாவே தெரியும் !ஆனா இப்படி இருக்கோம்!

கார்த்திக்கின் மென்மையான மனசு அவன் பேச்சிலே தெரிந்தது!

நாளைக்கு என்ன பண்ணப் போறே கார்த்தி !

நாளைக்கு என் குளோஸ் பிரண்டு பாண்டியனைப் பார்க்க தென்காசிக்குப் போறேன்

அனேகமா நாம டிரைன்லே தான் மீட் பண்ணுவோம்.

ரேவா! என் கிட்டே பேசாமே இருந்திராதே !அப்புறமா இருக்கிற கொஞ்சம் லைப் பும் போரடிச்சுடும் .கார்த்தி! அவள் கூப்பிட்ட விதம் நெஞ்சத்தில் தூங்குகிற எண்ணங்களை தட்டி எழுப்பி எதோ ஒரு இனிமை உணர்வைத் தூண்டியது போல இருந்தது !

கார்த்தி!எல்லோரும் போல நான் இல்லே!உன்னை இங்க வச்சு ,தன் இதயத்தைக் காட்டி,நினைச்சிண்டு இருக்கேன் !அது ஒரு நாளும் மாறாது!

கிராமத்து விளக்கு ஒளி! மாலை இருட்டிலும் கூட அன்று கொஞ்சம் பிரகாசமாகத் தெரிந்தது!

கார்திக்னுடைய உள்ளத்தை ப் போல!

ரேவதி வீட்டுக்குப் பொய் விட்டாள்.கார்த்திக் அவன் வீட்டு வாசலுக்குப் போகுமுன் அம்மாவும் வந்தாள்.

ஏண்டா கார்த்தி !அந்த பொண்ணோடு பேசிண்டு வரே !அவ அம்மா மூஞ்சியை உர்ர் னு வச்சிண்டு வரா!

அம்மா !நீயும்தான் அவ பணம் கேட்டா கொடுக்க வேண்டியதுதானே!ஏன் நேத்திக்கு இல்லேன்னு சொன்னே!

அதுக்குள்ளே இந்த விஷயம் உன் வரைக்கும் வந்தாச்சா !இதுதான் நீங்க பேசிக்கிற லக்ஷணமா!

சரி!நேத்திக்கி அவ கேட்ட பணம் என்கிட்டே இல்லை !எதோ நாலாயிரமோ என்னமோ இருந்தது .

அவங்க பணக்காரங்க !கையிலே கிரெடிட் கார்டு விளையாடும்!.எடுக்க வேண்டியதுதானே!அங்கே ஜவுளிக்கடயிலே கொடுத்தா வாங்கிக்கிறாங்க!

அது இல்லேம்மா!அந்த மாமி ஹான்ட்பாக்லே கார்ட் இல்லே!அந்த வாலெட் எங்கேயோ வச்சுட்டாங்க! அதனால்தான் உன்னைக் கேட்டாங்க !

என்னடா!அவளுக்கு வக்காலத்து வாங்கிண்டு வரே! இதோ பாரு கார்த்தி!நாம ஒரே ஊர்தான்!சொந்தம் கூட உண்டு .ஆனா நாம மிடில் கிளாஸ் !அவங்க பணக்காரங்க!பிசினெஸ் பண்றவங்க !

கார்த்தி!வீணா அந்தப் பொண்ணை நினைச்சு கோட்டை கட்டாதே! உன் படிப்பு முடியிற வழி பாரு! அவங்க நம்பளை நினைச்சுக்கூட பார்க்க மாட்டாங்க !

கார்த்திக் நினைச்சுப் பார்த்தான்.

அதென்ன!பழகும் போது கூட பணக்கார மனது நகைகளை பூட்டிக்கொண்டு மேல பாக்குமா!

பரிபூரணமான தெளிவான இன்னொரு எளிமையான மனதை ஏறெடுத்துப் பாக்கத் தயங்குமா !

உலகத்துலே எது வேண்டுமானாலும் சரிக் கட்டலாம் .பணம் உள்ளவன் ,இல்லாதவன் சரியான நேர் கோட்டில் நிற்பது! நடந்ததில்லை!

இத்தனைக்கும் நாம ஒண்ணும் இல்லாதவங்க இல்லை!.என்ன ஒரு எக்ஸ்ட்ரா லக்சரி முடியாது !

இதுக்கே இவ்வளவு பாகுபாடா!

அடுத்த நாள் காலையில் தென்காசிக்கு நண்பன் பாண்டியனைப் பார்க்கப் போய்ட்டான் .

ரேவதி இரண்டுதரம் அவன் வீட்டுக்கு முன்னாலே நடந்து அவன் எங்கேயாகிலும் தென்படுகிறானா என்று பார்த்தாள்

இரண்டாம்தரம் நடக்கும் போது அவன் அம்மாவைப் பார்த்து விட்டாள்.

மாமி!நாளைக்குதானே ஊருக்கு!

ஆமாம் ரேவா!நீங்களும் நாளைக்குதானே !

என்ன பாக்கறே !கார்த்தி காலையிலேயே தென்காசிக்குப் போய்ட்டான்.நாளைக்குக் காலையிலே வருவான் .

ரேவதிக்கு பதில் சொல்லவரவில்லை! சிரித்தாள்.

இந்த மாமி என்னமா நோட் பண்றா பாரு! இவளுக்கு மருமகளா நான் எப்படி குப்பை கொட்டுவேன் என்று மனதிலே நினைத்துண்டு ‘சும்மாதான் மாமி!கோடி வீட்டிலே டைலர் இருக்காரா பார்க்கப் போனேன் .அவர் இல்லை .போயிட்டு வரேன் .

மறு நாள்.

கார்திக் அம்மாவும் தம்பியும் மாலை ரயிலுக்குப் புறப்பட தயார் ஆனார்கள் .நண்பன் பாண்டியனுடன் கார்திக் பத்து மணிக்குமேல் வந்தான்.பாண்டியன் கார்லேயே ஸ்டேஷன் போனார்கள் .

இவர்களுக்கு திரீ டயர் ஏசி .ரேவதியும் அம்மாவும் முதல் வகுப்பு ஏசி.கன்யாகுமரி கிளம்பும் நேரம்.

கார்த்திக் அங்கும் இங்கும் பார்த்துக் கொண்டிருந்தான்.அவன் அம்மாவும் தம்பியும் வண்டியில் இருந்தார்கள் .

கடைசியாக ரேவா அம்மாவுடன் ஓடி வந்தாள்.

கார்த்திக் அவளைப் பாண்டியனுக்கு அறிமுகப் படுத்த ஆசை!வெச்டிபுல் கோச் ஆனதால் வண்டியில் இருந்தே இவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தான் நண்பன் பாண்டியனுடன் .

அம்மா முன்னாள் போக லக்கேஜ் வேலை ஆளுடன் அவள் பின்னால் வந்தாள் .சற்று திரும்பியதும் ,தான் நிற்கும் இடத்தைக் காண்பித்து இங்கே வா என்று சைகை செய்தான் .

பாண்டியனுக்கு அவளை அறிமுகம் செய்தான் .

உங்களுக்காக நேத்துப் போனவன் இன்னக்கு மத்யானம் தான் உங்களோடு வந்தான் என்றாள்.

மன்னிச்சுக்கோ தங்கச்சி !உன்னைப் பத்தி அப்புறம் தான் சொன்னான்.முழுக்க வீட்டிலே எல்லார் கிட்டேயும் உன் பேச்சுதான் .இனி அவன் வரும்போது நீயும் வரணும்.எல்லோரும் உன்னைப் பார்க்க ஆவலா இருக்காங்க !

கார்த்திக்கின் அன்பையும் அவன் தன மேல் கொண்டுள்ள பாசத்தையும் கேட்டு மிகவும் பூரித்துப் போனாள்.

தென்காசிலே எனக்கு அன்பான அண்ணனும் குடும்பமும் இருக்கு !அண்ணா!நிச்சயம் நான் வருவேன் .அம்மா தேடுவாங்க ! என்று பொய் விட்டாள் .

கார்த்திக்கும் பாண்டியனும் அவள் அன்பிலே நெகிழ்ந்து போனார்கள் .

வண்டி கிளம்பியது.பாண்டியனும் கிளம்பிப் பொய் விட்டான் .

டிக்கெட் பரிசோதனை முடிந்து சாப்பாடு விருதுநகர் தாண்டி வரும் என அறிவிக்க அவள் கொஞ்சம் கண்ணயர ஆயத்தமானாள் .

மெதுவாக ரேவா இருக்கையிலிருந்து பக்கத்துக்கு கோச்க்குப் போனாள்.

என்ன ரேவா!அம்மா என்ன பண்றாங்க !

அம்மா படுத்துண்டு இருக்கா மாமி!

பேச ஆரம்பித்தார்கள் .

நீ அண்ணா யுனிவர்சிடி தானே! மேல் கொண்டு என்ன பண்ணப்போறே !

எம்பீயே பண்ணலாம்னு இருக்கேன் மாமி! அப்புறம் எங்க கம்பனிலேயே அப்பா,சித்தப்பாவோடு ஜாயின் பண்ண சௌகரியமாக இருக்கும்.

கார்திக் புத்தகம் படித்துக் கொண்டிருந்தான் .

இவன் என்ன பண்ணப் போறான் .மாமி!இங்கே திருச்சிலே தானே படிக்கிறான் .

இவனா!டிகிரி வாங்கினதும் நல்ல வேலை கிடைச்ச உடனே ஜாயின் பண்ணுவான்.அடுதாப்பிலே தம்பி பிளஸ்டு முடிச்சா சிலவு இருக்கே!

என்ன மாமி!கார்த்திக் மாதிரி பிரைட் ஸ்டுடன்ஸ் மேல படிக்கலாமே!இவனைக் கம்பேர் பண்ணினா நாங்கெல்லாம் ஆவரேஜ் .

மாச சம்பளம் வாங்கற எங்களுக்கு இதுவே பெரிய லக் ! பார்க்கலாம் .

மாமி!மாச சம்பளம் என்பது நிலையானது!பிசினஸ் அப்படி இல்லை !எப்பவும் திகில்தான் !

எதிர் பார்ப்புகள் தான்!

நல்ல பேசறே ரேவா!நல்ல சந்தோஷமா சௌக்கியமா இருக்கணும் நீ ரேவா!

மாமி! ரேவதியின் கண்களின் ஓரத்தில் நீர் கசிய அவள் குரலில் ஒரு எதிர் பார்ப்பு தென் பட்டது!

ரேவா!அவளை அணைத்துக்கொண்டு தப்பா நினைக்காதே அம்மா! உன்னை எனக்கு ரொம்பப் பிடிக்கும் .ரொம்ப நல்ல குணம் உனக்கு!ஆனா ஆசைப்படற சூழ்நிலையிலே நான் இல்லே !

மாமி!நான் எப்போதும் நல்லதே நினைப்பேன்!நீங்களும் அப்படியே நீங்களும் நினையுங்கோ மாமி !

அவள் குரலில் தொனியின் வேறு அர்த்தங்கள் தெரிந்தன!

நான் வரேன் மாமி! என்று சொல்லி ரேவா பொய் விட்டாள்.

கார்த்திக் புத்தகம் படிதுக்கொண்டிருந்தானே தவிர இந்தப் பேச்சு முழுதும் கேட்டுக் கொண்டு இருந்தான்..

அம்மா !அந்தப் பொண்ணை ஆசிர்வாதம் பண்ணினே சரி!அதுக்கு மேல லாஜிக் எல்லாம் பேசி கொழப்பரையே!

கார்த்திக்!நான் லாஜிக் எல்லாம் பேசலே! உண்மை நடப்பதைத் தான் மனசுலே வச்சுப் பேசினேன் !

வீணா மனசுலே ஒரு கோட்டை கட்டி ஆசை வளர்த்து அப்புறம் இவங்க முன்னாலே தலை குனிய முடியாது!நீங்க சின்னவங்க!காலேஜ் வேலை என்று போய்டுவீங்க!

நாங்கதான் தராதரம் பார்க்கிறவங்க முன்னாலே தலை குனிஞ்சு நிக்கணும்!

எனக்கு சக்தி இல்லை கார்த்தி! உனக்கு பொறுப்பு நிறைய இருக்கு!அனாவசியமாக அந்தப் பொண் பின்னாலே சுத்தாதே!

மதுரை வரப்போகுது !உன் தம்பியை மேல்பர்த்லேருந்து எழுப்பு !சாப்பிட்டு தூங்கச் சொல்லு!

எல்லோரும் சாப்பிட்டுப் படுத்தார்கள் .இவனுக்கு மிடில் பர்த்.வண்டி திண்டுக்கல் தாண்டியது!

தூக்கம் வரலே!போகும் வழியில் கதவு பக்கத்தில் நின்று கொண்டிருந்தான் .பின்னால் அவள் !

அவன் தோளை அழுத்தினாள்.!

அவள் கண்கள் கலங்கி இருந்தது!

கார்த்தி!உலகத்துலே பணம் ,அந்தஸ்து தான் முக்கியமா!மனசு எல்லாம் அப்புறம் தானா!

என்னை மறந்துடுவையா கார்த்தி !அவள் கண்களில் கண்ணீர் பெருகியது!

கவலைப் படாதே ரேவா !கடவுள் நமக்குன்னு ஒருநேரம் வச்சிருப்பான் !அப்போ நிச்சயம் நீ என்னோடு இருப்பே !கண்ணைத் துடைச்சுக்கோ!

நானே ரொம்பக் கலங்கி இருக்கேன்!என்னை இன்னும் கலங்க விடாதே!

கார்த்தி!எப்போ நீ திருச்சி போறே!எனக்கு என்ன பண்றது என்றே தெரியலே!உன் மேல உசிரையே வச்சிட்டேன் !

அது பொது இடம் யாராகிலும் வருவார்கள் என்று தெரிந்தும் கூட அவளுடைய தணியாத அன்பின் வேகத்தினால் ஆர்வம் உந்த அவனை இறுக்கிக் கட்டிக் கொண்டாள்.

ரேவா !என்ன பண்றே நீ !கொஞ்சம் பொறுத்துக்கோ!நீ இப்படி இருந்தா அனாவசிய சண்டை சச்சரவு வரும்!எல்லாம் நல்ல படியா நடக்கும்!முதல்லே உன் இடத்துக்குப் போ !என் நம்பர் உன் கிட்டே

இருக்கில்லே !அப்புறம் பேசு!

உங்க அம்மாவோ வேறு யாராகிலும் பார்த்தா வீண் வம்பு!என்று அவளை சமாதானப் படுத்திக் கண்ணீரைத் துடைத்து விட்டான். ஆனால் அவன் கண்களில் கண்ணீர் !

கார்த்தி! நீ மட்டும் இப்போ அழறையே!

என்னால் முடியலே ரேவா !நீ இன்னும் கொஞ்சம் அழுதா இந்த ரயிலை நிறுத்தி இருட்டில் உன்னோடு ஓடிப் போய்டுவேன்!

ஆனா நாளைக்கு எனக்கும் உனக்கும் பொறுப்பு இருக்கு! படிப்பு இன்னும் முடியலே !நம்ம லாஸ்ட் ஸ்டேஜ் லே இருக்கோம்! இப்போ போ ! அப்புறம் போனில் பேசலாம்!

காலையில் ரயில் மாம்பலம் ஸ்டேஷன் வந்ததும் ரேவதி அம்மாவுடன் இறங்கினாள்.கார்த்திக் படியில் நின்று பார்த்துக்கொண்டே இருந்தான் .இவன் நிற்பதைப் பார்த்து ரேவா! அங்கேயும் இங்கேயும் பார்த்திண்டு நிக்காதே!சீக்கிரம் வா!

சரி !அம்மா! டிரைவரும் இன்னொரு ஆளும் லக்கேஜ் எடுக்க நடந்தாள்.போகும் போதே இவனுக்கு போன் காண்பிச்சு ஜாடை சொல்லிட்டுப் போனாள்.

வண்டி நகர்ந்தது .இவர்கள் எக்மோரில் இறங்கி அம்பத்தூர் போக வேண்டும் .

உள்ளே வந்த வனைப் பார்த்து ‘என்னடா கார்த்தி! படியிலே போய் நின்னையே !அவ அம்மா உன்கிட்டேயாகிலும் கை அசைச்சாளா !ஏன் நான் இங்கே தானே இருக்கேன் !சொல்லிட்டுப் போலாம் இல்லையா !ஒரே ஊர் திருநாளுக்குத் தானே போயிட்டு வரோம் !

கார்த்தி! நான் கோபிசுண்டு பேசலே !இப்படி உதாசீனமா இருப்பவர்களிடம் எப்படி உறவு வைக்க முடியும்! என்னைத் தப்பா நினைக்காதே !

கார்த்திக் அம்மாவைப் பார்க்கும் போது உண்மையாகவே அவள் நிலைமையை புரிந்து கொண்டான்.

அம்மாவைப் பார்க்கப் பாவமாக இருந்தது !

மனித உள்ளங்கள் காட்டும் பாகுபாடுகள் மன்னிக்க முடியாதவை !

இது எப்படி நல்ல மனங்களை வாட்டுகிறது !

அவர்கள் அம்பத்தூர் போனார்கள் .

கார்த்திக் நண்பன் பாண்டியனுக்குப் போன் பண்ணினான் .நடந்ததைச் சொன்னான்.

கார்த்தி!எப்பொழுது வேண்டுமானாலும் உடனே போன் பண்ணு !நண்பன் நான் இருக்கும் வரைக்கும் எதுக்கும் கவலைப்படாதே!எல்லாம் அப்படிதான் இருப்பாங்க !தைரியமாக இரு!

கூப்பிட மறந்திடாதே !நீ எங்கிருந்தாலும் உன் துணைக்கு நான் இருப்பேன் !

கார்த்திக்கின் ஒவ்வொரு அசைவிலும் அவனுக்கு உறுதுணை அவன் நண்பன் பாண்டியன்தான்!

நட்பு என்று ஒரு இலக்கணம் சொன்னால் முதலில் பாண்டியன் நினைவுதான் வரும்!

அன்று மாலை மணி ஐந்து இருக்கும் .ரேவதி போன் பண்ணினாள்.

கார்த்தி!என்ன பண்ணறே!எப்போ என் பக்கத்திலே இருப்பே!என்னாலே எதுவும் முடியலே!என்ன சொல்லணும் பேசணும்னு தெரியலே!இப்பவே இங்க வரமாட்டாயா என்று இருக்கு!

ரேவா! தைரியமாக இரு!எல்லாம் சரியாகும் !லாஸ்ட் எக்ஸாம் வருது!படிச்சு வெளியே வரப்பாரு!நீ கலங்கறது எனக்கு இங்கே தெரிகிறது! நானும் உன்னை மாதிரி ஆயிட்டா லைப் என்ன ஆகும்!

காதலுக்கு என்று ஒரு பிரிவு ,சோகம் ,அன்பின் பிரதிபலிப்பு இதன் உணர்வுகளே தனியானது .இந்த சூழ்நிலைகளில் சிக்கியவர்கள் தன் நிலைக்கு வருவது அவ்வளவு எளிதல்ல தைரியமும் தன்னம்பிக்கையும் மாறாமல் இருக்க வேண்டும்!

சொல்லலாம்!எழுதலாம்!ஆனா முடியாது!

வாழ்க்கையின் முக்கியமான நேரங்களில் இம்மாதிரி தடுமாற்றங்கள் மிகவும் வேதனை உள்ள சோதனையான நேரங்கள் ! எவருக்கும் நேரக் கூடாது!

அடுத்த நாள் கார்த்திக் திருச்சிக்குப் போய் விட்டான் .

அவனுக்கு காதல் ஒரு புறம் !குடும்பப் பொறுப்பு ஒரு புறம் !அப்பா கவர்மெண்ட் உத்தியோகம் ஆனாலும் கால் வலி,மூட்டு வலி என்று அப்பப்போ உடல் நலம் குன்றும் மனிதர்!நல்லவர் !

அவருடைய நிலைமைக்கு அவ்வளவுதான் முடியும் .

கார்த்திக் அவ்வப்போது பேசும் ஆறுதல் பேச்சக்களும் தைரியத்திலும் ரேவதி கொஞ்சம் கொஞ்சமாக தன் நிலைக்கு வந்து படிப்பில் கவனம் செலுத்தினாள்.

நடுவில் ஒரு நாள் .

ஸ்ரீரங்கத்தில் உறவினர் வீட்டு திருமணம் .ரேவதி குடும்பத்தினருக்கு நெருங்கிய சொந்தம் .

எல்லோரும் காரில் போனார்கள் .போகும் போதே ரேவதியிடம் அந்தப் பையன் கார்த்திக்கும் இவங்க உறவு உண்டு.அவன் வருவான் .நீ பாட்டுக்கு அவன் பின்னாலே பல்லை இளிச்சுண்டு நிக்காதே !நம்ம ஆட்கள் வேற கதை கட்டுவாங்க!தெரியுதா !

சரி அம்மா!இவள் சரி சொன்னாலும் வேறு என்ன செய்யல்லாம் என்ற பிளான் தோன்றியது!கார்த்திக்

திருச்சியில் இருப்பதால் நிச்சயம் அங்கு வருவான் .

விழுப்புரம் தாண்டி டோல் கிட்ட சாப்பிடப் போனார்கள்.மெதுவாக அப்பா அம்மா வேறு பக்கம் இருக்கும் போது கார்த்திக்கிடம் விஷயம் சொன்னாள்.

நாளை ரேசிப்ஷன் முன்னாடி எப்படியாகிலும் கோவிலுக்கு வரப் பாரு !நான் இருக்கும் இடம் ,நேரம் சொல்லுகிறேன் .ஸ்ரீரங்கத்தில் எனக்கு நிறைய நண்பர்கள் உண்டு.நாம சந்திக்கலாம். இது கார்திக் ஐடியா !

அதுவரை நான் அங்கு கல்யாணத்திற்கு வர மாட்டேன் .

மாலை மூணு மணிக்கு மேல் எல்லாரும் வரவேற்ப்பு முமுரத்தில் இருந்தார்கள் .ரேவதி மெதுவா அம்மாவிடம் .அம்மா ! கொஞ்சம் கோவிலுக்குப் போயிட்டு வந்தடறேன் .

அம்மா புடவை ,நகை செலக்ஷன் லே இருந்ததினாலே ‘சரி !சீக்கிரம் போயிட்டு வா !காரை எடுத்துண்டு போ !

நல்ல வேளை! அவள் அம்மாவுக்கு கார்த்திக் நினைவு வரவில்லை!

கார் தெற்குவாசல் மெயின் சன்னதிக்கு வந்தது!

டிரைவர் முத்து ரொம்ப நல்லவர்.ரேவதியை குழந்தையிலேருந்து தெரியும் .

முத்து அங்கிள்!நீங்க வரலையா !

இல்ல அம்மா ! நான் காலைலேயே போயிட்டு வந்திட்டேன்!நீ போயிட்டு வா!எனக்கு கொஞ்சம் சொந்தக்காரங்களைப் பார்க்கணும்.ஸ்டேஷனுக்குப் பக்கத்திலே இருக்காங்க.நீ முடிச்ச உடனே

போன் பண்ணு .உடனே வந்திடறேன் .

சரி அங்கிள்!போன் பண்ணறேன் .

கார்த்திக் சக்கரத்தாழ்வார் சன்னதி பக்கத்தில் நண்பன் ராஜுவோடு காத்திருந்தான் .ரேவதி வந்தவுடன் ,ப்ரஹாரம் வழியாக தன்வந்தரி சன்னதி,தாயார் சன்னதி தாண்டி ,வடக்கு வாசல் போய் நண்பன் ராஜு வீட்டிக்குப் போனார்கள்.

ராஜு அப்பா அம்மா காபி கொடுத்து விட்டு கொஞ்சம் மார்கெட் போறோம் சொல்லி போய் விட்டார்கள்.ராஜுவும் வெளியே பயிக் தொடைக்கிறேன் என்று வாசலுக்குப் போய்ட்டான் .

கார்த்தி! என்று ரேவா உணர்ச்சி பொங்க அழ ஆரம்பித்தாள்.

ரேவா !அதுதான் நான் வந்திட்டேன் இல்லே !

கார்த்தி!எப்போ என்னோடேயே இருப்பே !என்று பக்கத்தில் வந்தாள்.

ரேவா! இது நண்பன் வீடு !பார்த்துக்கோ !

சரி!எனக்கும் தெரியும்!

ரேவா!இன்னும் ரெண்டு மாசத்திலே கல்லூரி வாழ்க்கை முடிந்து நாம அடுத்த கட்டத்திற்கு தயாராகணும் .

கார்த்தி! நான் தனியா ஸ்டடி ரூம்லே இருக்கும்போது ரொம்ப திண்டாடுவேன் !அப்புறம் நீ சொன்ன மாதிரி படிப்பில் கவனம் வரும் .

கார்த்தி!நீ என்னோட உயிர் மட்டுமல்ல !என் லைப் காட் ,கைடு எல்லாம் நீதான்!ஒவ்வொரு விஷயமும் நீ ஆராய்ஞ்சு மெதுவா எனக்கு போன்லே சொல்லும்போது நான் அழுவேன் .

கடவுளே!இவனை என்னோடேயே இருக்க தயவு பண்ணமாட்டாயா என்று!

யு ஆர் மை டியர் கிரேட் பர்சன் !

என்னை விட்டுப் போய்டாதே !

கோவில்லே உன்னைப் பார்த்தப்போ என் மனசிலே வந்த நிம்மதி !அதுக்குமேல சொல்ல தெரியலே!

அவளின் அந்த ஆழமான உணர்ச்சி பொங்க தன்னை மறந்து சொன்ன விதம் ,வாசலில் பயிக் தொடைச்சுக் கொண்டிருக்கும் ராஜு வின் கண்கள் கலங்கின!

கார்த்திக் செயலற்று நின்றான் !

அவளின் அப்பழுக்கற்ற தூய அன்பின் உணர்வுகள்! அவளின் அழகிய முகத்தையும் கண்களின் ஓரத்தில் இவனுக்காகவே கிழே விழாமல் முத்துப்போல தோன்றும் கண்ணீரையும் கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தான்.

ரேவா! என்று அவன் அழைத்த அன்பின் அசைவிலே அவள் தன்னை மறந்து அவன் கரங்களில் இணைந்து கொண்டாள்.அவன் மறுக்க வில்லை!அவளோடு உறைந்து போனான்!

நண்பன் ராஜு பயிக் டெஸ்ட் ஸ்டார்ட் பண்ணும் போது தான் நினைவு திரும்பினார்கள் .

சரி ரேவா !நேரமாகிறது .நாங்கள் கார் வரைக்கும் வரமாட்டோம் .உன்னை வாசல் வரைக்கும் கொண்டு விடறோம்.நீ காருக்கு போன் பண்ணு .நான் இன்னைக்கு அங்கே கல்யாணத்திற்கு வர மாட்டேன்.நாளைக்கு வரேன்.இன்னைக்கு வந்தா சந்தேகம் வரும்உங்க அம்மாவுக்கு,

நீ எங்கே இருப்பே இன்னைக்கு கார்த்தி!

நான் இங்கே ராஜுவோடு இருப்பேன்.நாளைக்கு வரேன்.

அப்போ நானும் உன்கூடயே இங்கேயே இருக்கேனே!

ரேவா!சின்னக் குழந்தையா நீ! அது மாதிரியே பேசறே ! இப்போ சமத்தா போய்டு !அப்புறம் நான் எங்கே இருக்கேனோ அங்கே வரலாம்.

ராஜு! நீ சொல்ல மாட்டாயா ! என்று ராஜுவிடம் சிணுங்கினாள் !

ராஜு சிரித்தான்!

தன்னோடு இணைந்து ஒன்றிய அவள் தூய்மையான மனதை எண்ணி கார்த்திக் வியந்தான்!

மறுநாள்.

கல்யாணத்திற்குப் போனான்.ரேவதியின் அப்பாவும் அம்மாவும் டிபன் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள் .

ஆச்சர்யமாக ரேவதியின் அம்மா அவனிடம் ‘என்னடா கார்த்தி! அப்பா அம்மா வரலையா !நீ மட்டும் வந்திருக்கே!வா! டிபன் சாப்பிடு !கார்த்திக் சந்தோஷப் பட்டான்.எதோ கொஞ்சம் அதிர்ஷ்டம் அடிக்குது நமக்கு என்று நினைத்துக்கொண்டான் .

சாப்பாடு ஆனதும் நண்பன் ராஜு பிக்கப் பண்ண கார்த்திக் போய் விட்டான்.ரேவதியை சந்திக்கவில்லை.

பரிக்ஷை முடிந்தது .பிளேஸ்மென்ட் வந்தது.கார்த்திக்,ராஜு இருவரும் ஒரே கம்பனியில் புனேயில் சேர்ந்தார்கள் .பெங்களூரு ஹெட் ஆபிஸ் .

ரேவதி பெங்களூரு வில் எம்பியே சேர்ந்தாள்.தோழிகளுடன் ஒரு அபார்ட்மெண்ட் எடுத்து தங்கினாள்.

ஹெட் ஆபீஸ் மீட்டிங் போது தவறாமல் ரேவதியை சந்திப்பான் .ஆனாலும் ரேவதிக்கு அவன் மேலே படிக்கலையே என்ற குறை உண்டு .

அன்று ஒரு நாள் .

தோழிகள் நால்வரும் ஸ்ரீகலாவின் காரில் மைசூர் வரை போக திட்டமிட்டனர்.கோவில்கள் , பாலஸ் பார்த்துவிட்டு விருந்தாவன் கார்டன்ஸ் பார்க்க இரவு வந்துவிட்டது.அங்குள்ள உணவு விடுதியில் சாப்பிடும்போது அடுத்த டேபிள் பையன்கள் சிலர் அனாவசியமாக இவர்களை கிண்டல் செய்து செல்போட்டோக்கள் எடுக்க ஆரம்பித்தனர் .

கோபம் அடைந்த ஸ்ரீகலா அவர்களின் போனைப் பிடுங்கி உடைத்து ஹோட்டலில் கம்ப்ளயன்ட் கொடுத்து விட்டு எல்லோரும் அங்கேயிருந்து கிளம்பினர்.

ஹைவேயில் கார் போய்க்கொண்டிருந்தது.பின்னால் வந்த கார் இவர்களை டேயில்கேட் பண்ணிக் கொண்டு வந்தது.அநேகமாக அந்தப் பையன்கள் தான் இருக்கவேண்டும் .ரேவதி ஸ்ரீகலா பக்கத்தில் உட்கார்ந்திருந்தாள்.பின்னால் மற்ற இருவர் .

இரவு நேரம்.போலீஸ் மெசேஜ் கொடுத்தார்கள் .ஆனால் அடுத்த சில நொடிகளில் பின்னால் வந்த காரால் நொடித்து திருப்ப இவர்கள் கார் பாலன்ஸ் போய் ஒரு மேட்டில் மோதி உருண்டது.

ஸ்ரீகலா ரேவதிக்கும் மூச்சு இல்லை .முழு மயக்கத்தில் கிடந்தனர் .பின்னால் இருந்தவர்களுக்கும் நல்ல அடி.மொனகல் சத்தம் வந்தது.

போலிஸ் உடன் வந்ததால் நால்வரையும் பெங்களூரு மருத்துவ மனையில் சேர்த்தார்கள்.அவரவர் செல் செயலில் இருந்ததால் தகவல் கொடுக்க சுலபமாக இருந்தது .

ரேவதியின் போனில் கார்திக் நம்பர் முதலில் இருந்ததால் மருத்துவ மனையிலிருந்து உடன் கூப்பிட்டார்கள் .

நல்ல வேளையாக அவன் அன்று பெங்களுரு வில் இருந்ததால் உடனே ஓடினான்.

ரேவதி வீட்டிற்கு போன் செய்தான். ரேவதி அம்மா தான் இருந்தாள்.அப்பாவும் சித்தப்பாவும் வெளி நாட்டில் பிசினஸ் விஷயமாக போய் இருந்தனர் .

மாமி!நான் பார்த்துக்கிறேன் .! நீங்க காலை பிளைட் பிடிச்சு வாங்க !

கார்த்தி ! அந்த மாமியின் குரல் தழு தழுத்தது .

அவர் வேற இல்லை!நீ எவ்வளவு நல்ல பையன் !உன்னைப் போய் !

மாமி!அப்புறம் பேசலாம் .ஜாக்கிரதையாகப் புறப்பட்டு வாங்க!நான் இருக்கேன். பார்த்துக்கிறேன் .

மாமா வரும்போது வரட்டும்.

இரவு ஆனாலும் உடன் நண்பன் பாண்டியனுக்குப் போன் பண்ணினான்.

கார்த்தி!நான் கிளம்பிட்டேன் . காலையில் திருவனந்தபுரம் பிளைட் பிடிச்சு அங்கே இருப்பேன்.

கவலைப் படாதே.

ஸ்ரீகலாவும் ரேவதியும் தான் சீரியஸ் கண்டிஷன்.மற்றப் பெண்கள் பரவாயில்லை.

ஐ சீயு வில் இரண்டு உயிர்கள் அசைவற்று , மெஷின்தான் சுவாசித்துக் கொண்டிருந்தது.

ஸ்ரீகலாவின் உறவினர்களும் மற்றவரும் வந்துவிட்டனர்.

கார்த்திக் தூங்கவே இல்லை டாக்டர்கள் இப்போதைக்கு எதுவும் சொல்ல முடியாது .நாளை சொல்லுகிறோம் என்று சொல்லி விட்டார்கள் .

கடவுளே!என்னை ஏமாத்தாதே!எப்படியாகிலும் அவளை எனக்குக் கொடு !என்று பித்துப் பிடித்து உட்கார்ந்து கொண்டிருந்தான்.

கால ஐந்து மணி இருக்கும்.பாண்டியன் குரல்!

கார்த்தி!ஏர்போர்ட் வந்திட்டேன்.இன்னும் ரெண்டு மணிக்குள் அங்கே இருப்பேன் !

சொன்னபடி பாண்டியன் வந்தான்.

பாண்டி! என் கதியைப் பார்த்தாயா !என்று அவனைக் கட்டிக்கொண்டு கதறினான்.

இவன் பாண்டியனிடம் கதறி அழும் போதே ரேவதி அம்மா வந்து விட்டாள்.தன் பெண் ரேவதியிடம் தனக்கு மேல் உயிரை வைத்திருக்கும் ஒரு உண்மை மனித நேயத்தை நேரில் பார்த்தாள்.

தன் பெண்ணின் உயிருக்காக எதையும் செய்யக் காத்திருக்கும் அவனைப் பார்க்க தன் மனதிலே மன்னிப்பு கேட்டுக் கொண்டாள்.

உள்ளே போய் உயிருக்குப் போராடும் பெண்ணைக் கூடப் பார்க்கவில்லை!அவன் தோளில் கை வைத்து

‘கார்த்தி! என் பெண் ரேவா உனக்காகவே பிழைச்சு வரணும்

அவள் கண்களில் நீர் பெருகியது.

ஐயோ ! என்ன மாமி!இப்போ போய் இதெல்லாம் பேசிண்டு !

உள்ளே அய்சீயு வில் பெண் அசையாது படுத்திருக்கும் நிலை பார்த்து மயக்கம் வரக் கீழே விழப் போனாள்.

நல்ல வேளை!கார்த்திக்கும் பாண்டியனும் தாங்கிப் பிடிக்க ,டாக்டர் பார்த்து ஒ !மைகாட் !உடனே அட்மிட் பண்ணி ட்ரிப்ஸ் ஏற்றினார்.

பெண் உள்ளே உலகம் தெரியாமல்! அம்மா வெளியே இன்னொரு இடத்தில மயக்க நிலையிலே!

அவசர சிகிட்சைக்குப் பிறகு மாமி கண் திறந்தாள் .

கார்த்திக் உட்கார்ந்து இருந்தான்.டாக்டர் திரும்பவும் வந்து கொஞ்சம் பெட் ரெஸ்ட் வேணும்.

என்று சொல்லிப் போனார்.

டாக்டர் போனதும் பாண்டியனைப் பார்த்து ‘இவர் யாரு’ என்று மாமி கேட்டாள்.

மாமி!இவர் என் உயிர் தோழன் பாண்டியன் !தென்காசி லேருந்து திருவனந்தபுரம் பிளைட் பிடிச்சு உடனே வந்திருக்கார்.

ரேவா இவரை அண்ணா ன்னு கூப்பிடுவா!

மாமியின் கண்களில் நீர் வழிந்தது !

கார்த்தி!என்ன அந்தஸ்து !பணம் இருந்து என்ன ! பெத்த பொண்ணு !உயிருக்கு போரடிண்டு இருக்கா!

அவ அப்பா வரலே!எனக்குக் கூட ஆளு வரலே!

ஆனா என் பையன் ஸ்தானத்திலே எவ்வளவு பொறுப்பா ஓடி வந்திருக்கார் இந்தப் பாண்டியன் !

அதுக்கு மேல நீ !

என்னை தப்பா நினைச்க்காதே கார்த்தி! நான் உன்னை ரொம்ப நோக அடிச்சுட்டேன் !

மாமி!நீங்க என் அம்மா மாதிரி ! நான் அதுக்கு மேல நினைச்சிண்டு இருக்கேன்!

இல்லை கார்த்தி!ரேவா உனக்காக பிழைச்சு வரணும் !அவளை உன்னோடு சேர்த்துப் பார்க்கணும் !

இதோ அவ அண்ணன் பாண்டியனோட கூட இருக்கணும் !

பாண்டியன்!ஒரு அருமை அண்ணன் நீ இருந்து இவங்க கல்யாணத்தை நடத்தணும்.

அம்மா!ஒரு நல்ல பொறுப்பான பணி யை என் கிட்டே கொடுத்திருக்கீங்க !ஒரு அண்ணனா இருந்து என் தங்கச்சி ரேவதியை இவனிடம் ஒப்படைப்பேன் .

பாண்டியன் எதற்கும் கலங்காதவன் இந்த அன்பின் அரவணைப்பிலே நெகிழ்ந்து போனான் .

அந்த மூன்று திரு உள்ளங்களும் பாச உணர்ச்சிகளின் பிணைப்பிலே உச்சத்தில் ஒருமித்து இருந்தன!

இம்மாதிரி நல்ல உள்ளங்களை இறைவன் ரொம்பவும் சோதிப்பதில்லை !

மிகுந்த மருத்துவ சாதனைகளும் சிகிட்சை யின் பலனாக சில மாதங்களுக்குப் பிறகு அவர்கள் விருப்பங்கள் இனிதே நிறைவேறியது ! ஸ்ரீகலா பூரண குணமாகி இவர்கள் திருமணதிற்கு வந்தாள்.

திருமணம் முடிந்த உடன் வேறெங்கும் போகாமல் ரேவதி தன் கணவன் கார்த்திக் கரம் பிடித்து தன் அருமை அண்ணன் பாண்டியன் இல்லத்தில் தன் முதல் அடி எடுத்து வைத்தாள்.

12 thoughts on “கண்ணீரில் நனைந்த நினைவுகள்

  1. என்ன ஒரு அருமையான காதல் கதை அற்புதம் .. வாழ்த்துக்கள்

    1. அன்புள்ள நித்யா வெங்கடேஷ் அவர்களுக்கு,
      தங்கள் அருமையான விமர்சனம் என் கதைக்கு கிடைத்தமைக்கு மிக்க நெகிழ்வுற்றேன்.
      என்னுடைய மற்ற கதைகளும் படியுங்கள்.
      மிக்க நன்றி
      பி.சங்கரன்

    2. நிச்சயமாக ஐயா… நெஞ்சை நெகிழ வைத்த காதல் கதை .. தங்களின் படைப்புகள் மேலும் சிறப்புடன் வளரட்டும் …வாழ்த்துக்கள்

  2. ஜெயமதுரா அவர்களுக்கு,
    அருமையான தங்கையின் பாச உணர்வு தங்கள் எழுத்துக்களில் உணர்ந்து மிக நெகிழ்ந்து விட்டேன்.நான் எழுதிய இந்தக் கதையின் முழுப் பயனை இப்படி ஒன்றிய பாசத்தினால் பெற்றுவிட்டேன்
    தங்களுக்கு அண்ணனின் அன்பு கலந்த நல் வாழ்த்துக்கள்
    நன்றி.
    பி.சங்கரன் .

  3. ரொம்ப நல்ல கதை………… என்னையும் உங்கள் தங்கையாக ஏற்றுக்கொள்வீர்களா?

    1. அருமையான தங்கையின் பாச உணர்வு தங்கள் எழுத்துக்களில் உணர்ந்து மிகவும் நெகிழ்ந்து விட்டேன்.நான் எழுதிய இந்தக் கதையின் முழுப் பயனை இப்படி ஒன்றிய பாசத்தின் மூலம் பெற்று விட்டேன்.
      தங்களுக்கு அண்ணனின் அன்பு கலந்த வாழ்த்துக்கள் .
      மிக்க நன்றி.
      பி.சங்கரன்

  4. அண்ணா தங்கள் கதைகள் மிக அருமையாக உள்ளது. இன்று முதல் நான் உங்கள் விசிறி……

    1. அன்புமிக்க நண்பர் திரு.மணிகண்டன் அவர்களுக்கு,
      மிக்க மகிழ்ச்சி கலந்த நன்றி .என் கதைகள் தங்கள் போன்றவருக்கு நல்ல ஆர்வத்தையும் ,எழுதும் என் மீது சகோதர அன்பையும் தருவதற்கு இறைவனுக்கும் ,தங்களுக்கும் என் கண்ணீருடன் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
      எனக்கு இப்படி ஒரு அருமையான இடம் கொடுத்து ,என்னை ஊக்குவித்து வரும் “சிறுகதைகள்” பதிப்பகத்தாருக்கு மிக்க நன்றி
      இன்னும் எழுதுகிறேன்,நன்றி .
      பி.சங்கரன் .

    1. தங்கள் அன்பான விமர்சனம் என்னை மிகவும் ஊக்கப் படுத்தி இருக்கிறது , மிக்க நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *