எப்படி சொல்வேன்

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: October 13, 2013
பார்வையிட்டோர்: 15,382 
 
 

அந்த சூப்பர் மார்க்கெட்டில் ஆர்த்தியை இன்று சந்திப்போம் என்று சங்கள் நினைத்துக் கூட பார்த்திருக்கமாட்டான். அவ்வளவு கூட்ட நெரிசலிலும் ஆர்த்தி சங்கரை அடையாளம் கண்டுக்கொண்டாள்.

முகத்ததை திருப்பிக் கொண்டு நகர நினைத்தவனை அவனின் பெயரை சொல்லி அழைத்து கையசைத்தாள்.

“ஹாய்” சங்கர் எப்டி இருக்க என்றால் அழகான புன்னகையோடு.

சங்கர் பொய்யான புன்னகையை வரவழைத்துக் கொண்டு தலையை மட்டும் ஆட்டினான். புழைய விஷயங்களை ஒவ்வொன்றாக நினைவுப்படுத்தி ஏதேதோ அவள் பேசினாள்.

ஆனால் சங்கரோ அவள் பேச்சிற்கு தலையை மட்டுமே ஆட்டினான்.

ஆர்த்தி பேச்சில் ஆர்வமாக இருந்தாலும் சங்கரை அவ்வப்போது ஓரக்கண்ணால் நோட்டமிடவும் செய்தாள்.

சிறு மௌனத்திற்கு பிறகு ஆர்த்தியே மீண்டும் பேச்சை தொடர்ந்தாள்.

ஏண்டா இவள பாத்தோன்னு நெனைக்கிறியா சங்கர்?

சே சே அப்டி……அப்டிலா ஒன்னும் இல்ல பாத்து ரொம்ப நாள் ஆச்சா அதா என்ன பேசுறதுன்னு தெரியல.

அவன் பேச்சில் தடுமாற்றதை உணர்ந்தாள் ஆர்த்தி.

ஆனா எனக்கு உங்கிட்ட பேச நிறைய விஷயம் இருக்கு சங்கர், மனதுக்குள்ளயே சொல்லிக் கொண்டாள்.

ஆர்த்தியை பொறுத்த வரைக்கும் அவள் சங்கரின் ஒரு தலை காதலி.

சரி பார்ப்போம் தலையை ஆட்டிக்கொண்டே செல்லியவன் ஆர்த்தியின் பதிலை கூட ஏற்காமல் விட்டா போதுமென்று வேகமாக அங்கிருந்து நடையை கட்டினான்.

சங்கரின் நினைவுகளெல்லாம் ஆர்த்தியவே சுற்றி சுற்றி வந்தது. இரண்டு வருட நினைவுகளுக்கு பின்நோக்கி சென்றான்.

அன்று கல்லூரியின் இறுதி நாள் சங்கரிடம் தனியாக பேச நினைத்த ஆர்த்தி, அவனை அழைத்துக் கொண்டு காபி ஷாப்பிற்கு சென்றாள்.

கூட்டம் நிறைந்த அந்த காபி ஷாப்பில் அமைதியான ஒரு இடத்தை தேடிப்பிடித்து இருவரும் சென்று அமர்ந்தனர். காலேஜ்லயே கேண்டின் இருக்கும் போது எதுக்காக இவ்வளவு தூரத்துல இருக்குற காபி ஷாப்புக்கு நாம வந்திருக்கோன்னு நா தெருஞ்சுகலாமா? ஒன்றுமே தெரியாததைப் போல் சங்கர் கேட்டான்.

எனக்கு சத்தியமா தெரியல சங்கர் நீ இத தெருஞ்சு கேக்குறயா இல்ல தெரியாம கேக்குறயான்னு! நானும் உங்கிட்ட இந்த விஷயத்த மறைமுகமா எத்தனையோ தடவ சொல்லிடேன். நீ ஏ ஒன்னுமே தெரியாத மாதிரி எங்கிட்ட நடிக்கிற? உண்மையாவே நா உன்ன மனசார நேசிக்கிற விஷயம் உன் மனசுக்கு தெரியலயா சங்கர்? உன்னோட ப்ரெண்ட்ஸ் எல்லாம் நம்ம ரெண்டு பேத்தையும் சேத்து வச்சு பேசல! நீ அவுங்கிட்ட பொய்யா கோவிச்சுக்கிட்டு தனியா போய் உள்ளுக்குள்ள அவுங்களோட கேலி பேச்சை நெனச்சு சந்தோசப்படல… என்ன நீ புருஞ்கவே மாட்டீயா?

ஆர்த்தியின் கண்களில் ஈரம் எட்டிப்பார்ப்பதை சங்கர் கவனித்தான்.

ஆம் தன்னுடைய நண்பர் வட்டாரங்கள் தன்னையும் ஆர்த்தியயும் சேர்த்து வைத்து பேசும் போது சங்கருக்கு சந்தோஷமாக இருந்தாலும் அப்டியெல்லாம் ஒன்றும் இல்லை என்று பொய்யாக பேசிவிட்டு உள்ளுக்குள்ளயே சந்தோஷப்பட்டுக்கொள்வான்.

சங்கரும் ஆர்த்தியை மனதார காதலிக்கதான் செய்கிறான், ஆனால் ஏனோ அதை அவளிடமிருந்து மறைக்கிறான்.

ஆர்த்தி என்னையும் நீ புருஞ்சுக்க நா….நா…. உன்ன…

போதும் இதுக்கு மேல நீ எதுவும் செல்ல வேண்டாம். நீ என்ன சொல்ல வாரேன்னு எனக்கு தெரியும். உன் மனசுக்குள்ள நா இருக்கேன்னு எனக்கு தெரியும். ஆனா எதுக்காக நீ அத மறைக்கிறேனுதா எனக்கு தெரியல! பரவாயில்ல என்னைக்கு நா உன்னோட மனசுக்குள்ள இருக்கேன்றத நீ புருஞ்சுகிறயோ அன்னைக்கு என்னோட காதலும் உனக்கு புரியும். அப்போ நா உன்னோட பக்கத்துல இருப்பேனான்னு எனக்கு தெரியாது, ஆனா நீ ஏ மனசுக்குள்ள எப்பயுமே இருப்ப.

அதற்கு மேல் பேச முடியாமல் துக்கம் அவள் தொண்டையை அடைத்தது. தலையை கவிழ்ந்து கொண்டே இருந்தவன் நிமிர்ந்து பார்த்த சமயத்தில் ஆர்த்தி அவன் எதிரில் இல்லை.

கண்கள் விரிய நடைபாதையவே பார்த்துக்கொண்டிருந்தான்.

நான் எப்படி செல்வேன் ஆர்த்தி, இந்த வயசுல இதயத்தை தொலைப்பது ரொம்ப சந்தோஷமான விஷயம், ஆனா நா…..

அன்னைக்கு நடந்த அந்த எதிர்பாரா விபத்துல என்னுடைய ஆண்மையை தொலைந்ததை எப்படி சொல்வேன்.

1 thought on “எப்படி சொல்வேன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *