என்றும் நான் மகிழ்வேன்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: November 21, 2022
பார்வையிட்டோர்: 2,549 
 
 

மதிவாணன் உற்சாகமாயிருந்தான். அவனடைய உற்சாகத்திற்கு காரணம் – லலிதா. அவளை சந்திக்கத்தான் இப்போது அவன் கிளம்பிக் கொண்டிருந்தான்.

முகத்திற்குப் பவுடர் போட்டான். சிசிலடித்தபடி அட்ரஸை படித்துப் பார்த்தான்.

“லிதா, 113/5 ஏ காரைக்கா முரி ரோடு, எர்ணாகுளம்.”

ஷு ஷு மாட்டும்போது -சொல்லாமல் கொள்ளாமல் அவள் முன்பு போய் நின்றால் அவளுக்கு எப்படி இருக்கும்’ என்று நினைத்துப் பார்த்தான்.

அதிர்வாளா…வெட்கப்படுவாளா…கோபிப்பாளா…? இல்லை வீடு எப்படி கண்டுபிடித்தாய் என்று திகைப்பாளா…?

பஸ் ஸ்டாப்பில் ― இங்கேதானே அவளை முதன்முதலில் சந்தித்தோம் என்று நினைத்தான்.

அவள் – இதோ இந்த மூலையில் ஹாண்ட் பேகுடட்ன நின்றிருந்தாள். கூட்டம் நிறைந்திருந்தது. லேசாய் தூறல்.

நான் அவளருகில், தவறுதலாய் அவள் காலை மிதித்துவிட “ஆ…” என்றாள்.

“ஸாரி” என்றேன்.

அவளும் “ஸாரி.”

“நான்தானே மிதித்தேன்… நீங்க எதுக்காக ஸாரி சொல்லணும்…?”

“என் ஸாரி” என்று சிரித்தாள். பெண்களின் சிரிப்பு பொல்லாதது. ஆண்களை ஓரே அமுக்காய் அமுக்குவது. அன்று அந்த ஒரு வாத்தையில் நம்மை மயக்கிவிட்டாள்….?

மதி அதன்பிறகு பலமுறை லிதாவை பஸ்ஸ்டாப்பில் பார்த்திருக்கிறான். பல தடனை எதிர்பார்த்து ஏமாந்துமிருக்கிறான்.

அவள் யார் எங்கிருந்து வருகிறாள் என்பதெல்லாம் தெரியாது. பெயர் மட்டும் லலிதா என்று தெரியும்.

அவன் ஒரு ஆங்கில தினசரியில் நிருபன். வேலைக்குப் போகும் பெண்களைப் பற்றி ஒரு ஃபிச்சர் தயாரிக்கும்படி ஆசிரியர் சொல்லி இருந்தார். அதற்காகப் படமும் பேட்டியும் எடுக்க ஆரம்பித்திருந்தான்.

யார் யாரையோ பேட்டி எடுக்கிறோமே. ஏன் ‘என்’ லலிதாவையும் இதில் சேர்க்கக்கூடாது என்று தோன்றியது.

இரண்டு வாரம் முன்பு அவளிடம் கேட்டபோது “வேண்டவே வேண்டாம். என்னை விட்டு விடுங்கள்!” என்று மறுத்தாள்.

“ஏன் லலிதா…?”

“எதற்கு வம்பு – வேண்டாம்!”

“இதில் வம்பு என்ன இருக்கிறது…உன் படம் கூட பேப்பரில் வரப்போகிறது!”

“அதனால்தான் வேண்டாமென்கிறேன்.”

“அவரவர்கள் பத்திரிகையில் தங்கள் படம் வராதா என அலைகிறார்கள். என்னடாவென்றால்…”

“நான் அலையவில்லை. ஆளைவிடுங்கள்!”

“போகட்டும். பேட்டி வேண்டாம். என்னை உன் வீட்டுக்கூடாதா?”

“பஸ் வருதுங்க” எனுற நழுவப் பார்த்தாள்.

“ஆது உங்க பஸ் இல்லை. சரி வீட்டிற்கு வேண்டாம். அட்லீஸ்ட் ஆபீஸிற்காவது அழைக்கக் கூடாதா..?”

“ம்கூம்.” என்று சிரித்தாள். மழுப்பல். கள்ளி!

அதன்பிறகு அவளை அவன் பஸ் ஸ்டாப்பில் பார்க்கவில்லை. அவள் என்ன ஆனாள்.. எங்கேப் போனாள்? என்கிற யோசனையிலிருக்கும் போது ஒருநாள் பத்திரிகை ஆபீஸிற்குப் போன் பண்ணினாள்.

“மதி. இன்னைக்கு ஜோஸ் ஜங்ஷனில் சந்திப்போமா…?”

“எப்போ…?”

“சாயந்தரம் ஐந்து மணி. ‘

ஐந்து மணிக்கு அவன் சரியாய் ஆஜராகியிருந்தான். “பார்த்தாஸ்” நிழலில் ஒதுங்கியிருக்க – அவள் வந்தாள்.

அவள் முகத்தில் வாட்டம். அவளக்கு என்னவோ நேர்ந்திருக்கிறது. ஏதோ சிக்கலில் மாட்டிக் கொண்டு இருக்கிறாள் என்று புரிந்தது. நம்மிடம் அவற்றை பகிர்ந்து கொள்ளதான் வரச்சொன்னாளோ…?

எதுவாயிருந்தாலும் சரி, அவளாய் சொல்லட்டும என்று பேசாமலிருந்தான். ஆனால், அவள் வாயே திறக்கவில்லை.

அப்போது யாரோ ஒரு இளைஞன்-நல்ல சிகப்பில் வாட்டசாட்டமாயிருந்தான் – “ஹாய்!” என்று கையாட்டிவிட்டு நகர…

அவள் முகம் இருண்டு போனது.

“யார் அது லலிதா..?”

அவள் பதில் சொல்லவில்லை.

“உன்னை அநிமுகமிருப்பதால்தானே ஹாய் என்றான்… அவனுக்கு கதிலுக்கு நீ ஒரு புன்னகையாவது பூத்திருக்கலாம். இப்படி முகத்தைகடுகடுவென வைத்துக்கொண்டிருக்க வேட்ம்!”

“அந்தாள் மோசம்!”

“என்ன செஞ்சான். ஏன் மோசம்?”

“அவன் யாருன்னே எனக்குத் தெரியாது. ஆள் மாறிப்போய் ஹாய் சொல்லிட்டான்னு தோணுது. சரி, வாங்க போவோம்!”

அவளின் போக்கு அவனுக்கு புதிராய் இருந்தது. அதற்குப் பிறகும் கூட அவள் புதிர்மேல் புதிராய் நடந்துகொண்டாள்.

பஸ் ஸ்டாப்பில் அவள் தென்படவே இல்லை. வேலையை விட்டு விட்டு போய்விட்டாளோ என்று கூட நினைத்தான்.

அவள் யார். பின்னனி என்ன என்பது தெரியாமலேயே அவனுக்கு அவள் மேல் ஒரு பற்றுதல் வந்திருந்தது.

அவள் திடீரென போன் பண்ணுவாள். சந்திக்கும் இடத்தையும் நேரத்தையும் தெரிவிப்பாள். போவான்.

அவள் தப்பித் தவறிக்கூட தன் விலாசத்தை சொன்னதில்லை. அவனுடன் சினிமாவிற்கு வந்திருக்கிறாள். போர்ட் கொச்சி பீச்சிற்கு போயிருக்கிறார்கள்.

எங்கு போனாலும் அவளிடம் ஃப்ரீனெஸ் இருக்காது. கண்களில் எப்போதும் ஒரு மிரட்சி. குனிந்த தலை நிமிரவே மாட்டாள்.

அவள் யாருக்போ பயப்படுகிறாள். யாரையோ தவிர்க்கப் பார்க்கிறாள் என்பது புரிந்தது. ஆனால் அது என்ன என்று புரிந்துக் கொள்ள முடீயவில்லை. அவளம் சொல்ல தயாராயில்லை.

இரண்டு நாள் முன்பு-

ராதா நிலாஸில் சாப்பிட்டு முடித்து அவள் டாய்லெட் போன சமயத்தில் அவளுடைய ஹாண்ட் பேகில் இன்லெண்ட் ஒன்று இருப்பதை கவனித்தான்.

அது அவளுக்கு வந்த லலெட்டராய் இருக்க வேண்டும்.

இது அவளுக்கு வந்திருக்கும் பட்சத்தில் அவள் விலாசம் இருக்க வேண்டுமே…!

இருந்தது. குறித்துக் கொண்டான்.

இப்போது அந்த விலாசத்திற்குதான் போய்க் கொண்டிருக்கிறான்

வீட்டை கண்டுபிடிக்க முடீயாது என்று நினைத்தாய் லலிதா? இதோ வருகிறன். வந்து உன்னை திகைக்க வைக்கிறேன் பார்! இந்த மதியை யார் என்று நினைத்தாய்…?

“காரைக்காமுரி” எனப்பட்ட அந்த பாரதியார் சாலையில் நம்பரை தேடி அலுத்து, எதிர்ப்பட்ட பெண்மணியிடம், “லலிதா வீடு ஏதான்னு அறியாமோ….?”

“ஏது லலிதா..?” என்று எதிர்கேள்வி கேட்டாள்.

ஏது லலிதா என்று சொல்வது என யோசிக்கையில் “ஓ! அ லலிதாவானோ, கொறச்சிக்கூட நடந்தால் மதி!”

கொஞ்சம் தூரம் நடந்து வேறொருவரை விசாரிக்க, “தோ அந்த பூவரசமரத்து வீடு!” என்றார்.

அந்த பூவரசமரத்து வீடு அத்தனை பெரியது ஒன்றுமில்லை. சுற்றிலும் பந்தாவாய் காம்பவுண்ட் இருந்தது. காம்பவுண்டின் மேல் கண்ணாடிச் சிதறல்கள்.

கேட்டை திறந்ததும் முதலில் வயதான மாது ஒருத்தி தென்பட்டாள். லலிதாவின் அம்மாவாய் இருக்குமோ….? இல்லை. பாட்டி!

லலிதாவை பார்க்கணு என்றதும், “லலிதாவோட ஆராணு நீங்கள்..?”

“ஞான் ஒரு ரிலேடிவானு.”

“இவிட இருக்கி”.

அவள் காட்டின ஸ்டுல் சற்று பழுதுபட்டிருந்தது. பயந்து பயந்து அமர்ந்தான்.

அவன் அமர்ந்து நகம் கடித்த போது இரண்டு. மூன்று பெண்கள் அவனைக் கடந்து சென்றார்கள். கடக்கும் போது கடைக்கண் பார்வையை வீசினார்கள்.

இவர்கள் யார்.? லிதாவின் உடன்பிறப்புகளோ. சேச்சே! இருக்காது. இது லேடீஸ் ஹாஸ்டலாய் இருக்கும்.

ஒரு பெண் குளித்து நீர் சொட்டலுடன் டாக்கியை சுற்றிக் கொண்டு வந்தாள்.

அவனுக்கு வெட்கமாயிருந்தது. கண்கள் கூசின. அவளுக்கு எதுவும் கூசின மாதிரி தெரிவயவில்லை. இனி யாராவது நீர் சொட்டுகிறார்களா என்று அவன் எட்டி பார்த்தபோது லலிதா வந்தாள்.

சட்டென்று எழுந்து பெருமித்துடன் பார்த்தான்.. அவள் முறைத்தாள்.

“இங்கே ஏன் வந்தீங்க?” என்றாள் படபடப்பாய்.

“ஏன் லலிதா. உன்னை பார்க்க நான் வரக்கூடாதா..?”

“நாலு மணிக்கு சுபாஷ் பார்க்குக்கு வரேன். அங்கே பேசிக்கலாம் இங்கிருந்து கிளம்புங்க!”

சுபாஷ் பார்க்கில் மதிவாணன் மூன்று மணிக்கே காத்திருந்தான்.

அவனுக்கு குழப்பமாயிருந்தது. லலிதா ஏன் அத்தனை பதற்றப்பட்டாள்? ஏன் விரட்டினாள்…? நாம் எத்தனை பாடுபட்டு வீட்டை கண்டுபிடித்தோம். அவள் என்னடாவென்றால்… வரட்டும் நாக்கை பிடுங்கிக் கொள்கிறமாதிரி கேட்க வேண்டும்.

அவள் ஏதோ ஆபத்தில் இருக்கிறாள் என்பது மட்டும அவனுக்குப் புரிந்தது. அவளை அதிலிருந்து எப்படியும் காப்பாற்ற வேண்டும்.

பார்க்கில் நடமாடும் பலகார வண்டி சூடாய் கட்லெட்டை சப்ளை செய்து கொண்டிருநதது. குழந்தைகள் ஊஞ்சலாடின. கண்ணாடிக் கூண்டுகளில் மீன்கள் கலர் கலராய் துள்ளின. தூரத்தில் கப்பல். பாசஞ்சர் படகுகள் தண்ணீரைக் கிழிததுக கொண்டு பறந்தன.

லலிதா வந்தாள். வந்த உடனேயே. “மதி…. உங்களை யார் அங்கே வரச்சொன்னது….?”

“என் காதலியை பார்க்க எனக்கு உரிமையில்லையா…?”

“காதலியா… என்ன சொல்கிறீர்கள்..?”

“ஏய்! என்ன ரூட்டு மாறுது? அப்போ நீ சினிமாவுல மாதிரி சகோதரனாதான் நினைச்சு பழகினாயா…?”

“மதி! நான் சொல்றதை கேளுங்க. நண்பராய் நினைச்சுதான் நான் உங்களோட பழகறேன். நான் உங்களுக்கு ஏற்றவளில்லை.”

“அப்படின்னா என்ன அர்த்தம்…?” வெகுண்டான்.

“நீங்க காதலிக்கிறதா சொன்ன இவள் புனிதமானவள் இல்லை. விபச்சாரின்னு!”

மதிக்குச் சம்மட்டியால் அடித்தது போலிருந்தது. “என்ன சொல்கிறாய் லலிதா.?”

“ஆமாம். நான் உத்தமி இல்லை. இந்த சிரிப்பு கபடமில்லாதது இல்லை. எங்கிட்ட வர்றவங்க உடல் சுகத்துக்காகதான் வர்றாங்க. அன்பும் ஆதரவும் காட்ட எவரும் இல்லை. அதுக்காக ஏங்கின போதுதான் உங்கள் சந்திப்பு கிடைச்சுது. சதா படுத்து படுத்து உடம்பு வெறுத்துப் போச்சு. இடிதை மறக்கதான் நான் உங்கைள சந்திக்க வருகிறன்.”

அன்று முழுவதும் மதி சுயநினைவில் இல்லை. லலிதா மேல் அவனுக்கு வெறுப்பு வந்தது.

அடுத்த நாள் அவள் மேல் அனுதாபம் பிறந்தது.

மூன்றாம் நாள் ஒரு தீர்மானத்துடன் அவளை பார்க்கச் சென்றான்.

லலிதா அறைக்குள் சிலைபோல சிலைபோல அமர்ந்திருந்தாள். அவளிடம் எந்தவித சலனமுமில்லை. நோ சிரிப்பு. கண்கள் சோகத்தை சிந்தின.

அவன் கட்டிலில் அமர – சட்சட்டென்று உடைகளை களைய ஆரம்பித்தாள்.

“லலிதா. என்ன இது…?”

“ம்.?” என்றாள் அர்த்தத்துடன் “இது என் தொழில் கூடம். இங்கே படுக்கை விரிப்பதுதான் என் வேலை.”

“நோ! நான் அதுக்காக வரலை கத்தினான். “இந்த அவல வாழ்க்கையிலிருந்து உன்னை விடுவிக்கப் போகிறேன்.”

“விடுவிச்சு…?”

“சந்தோஷமா குடும்பம்..”

“சாரி மதி! வீண் சிரமம் வேண்டாம். லீம் மீ!“ மறுத்தாள். “நான் உங்களை நம்பறேன். நீங்க என்னை மீட்கலாம். ஆனா அதுக்கப்புறம்…?” உடைகளை சரி பண்ணிக் கொண்டாள்.

“இதுக்கு முன்பு ஒருத்தர் என் மேல் அனுதாபப்பட்டு விடுவிச்சார். அவர் கம்பெனியில் வேலையும் போட்டுக் கொடுத்தார். நானும் முதல்ல ஹாப்பியா ஃபீல் பண்ணேன். ஆனா அது நிலையில்லாம போச்சு. வெளியே பலரும் பலவிதமா பார்த்தாங்க. பேசினாங்க. மூன்றாம் நாளே ரெண்டு பசங்க வரியான்னாங்க. நான் கையை ஓங்கினப்போ- “இதுக்கு முன்னாடி வந்தவதானே – இப்போ உத்தமியாயிட்டாயா…?”

அந்தப் பக்கமா வந்த போலீஸ் அவங்களை பிடிச்சுகிட்டு போச்சு. என்னை ஸ்டேஷன்ல கம்ப்ளெயிண்ட் எழுதித் தரச் சொன்னாங்க. போனப்போ எஸ். ஐ. என்னை மோசமா…

மதி! வேணாம் ப்ளீஸ்! வெளியே என்கு சந்தோஷமே கிடையாது. நிம்மதியே கிடையாது!”

“நான் கல்யாணம் பண்ணிகிட்டா…?”

“கேட்க நல்லாதான் இருக்கு. இது அதைவிட பெரிய சித்ரவதை. உறுத்தலிலேயே செத்துருவேன்!”

“அப்போ இந்த நரகத்திலேயே…”

“இது நரகம் தான். ஒத்துக்கிறேன். இங்கே எனக்கு என்ன குறை? பணம் கிடைக்கிறது. தேவைகள் நடக்கின்றன. எங்கேயோ இருக்கிற என் குடும்பம் சந்தோஷப்படுகிறது. தவிர இங்கே நான் மகாராணி! எப்பேர்பட்டவர்களும் என் காலடியில். இங்கே வருபவர்கள் கொஞ்ச நிமிஷத்திற்காகவது என் அடிமை! இதோ நான் வெளியே வந்தா என்னவெல்லாம் அனுபவிக்க வேண்டியிருக்கு! ப்ளீஸ் மதி! வெளியே வந்து சிறகொடிக்கப் படறதைவிட கூண்டுக்குள் அகப்பட்டே இருந்துடறேறே…!”

மதிவாணன் விருட்டென்று வெளியேறினான்.

அவன் நெஞ்சு பாரமாயிருந்தது.

– வானத்ததை தொட்டவன் (மினனூல் வெளியீடு: http://www.freetamilebooks.com)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *