மறுபடியும் மணியடித்தது. ஆபீசில் கேஸ் கவுண்டரில் உட்கார்ந்திருந்த கேசவ மூர்த்தி வாடிக்கையாளர்கள் யாரும் பார்க்கவில்லை என்பதை உறுதி செய்து கொண்டு’ஹலோ…!’ என்றான் மென்மையான குரலில்.
மறுமுனையில் அதைவிட மெல்லிய ஆனால் தேன் போன்ற குரலில்
‘நான்தான்… உங்களை எப்ப பார்க்கலாம்?! நான் ஃபிரீ…! நீங்க ஃபிரியா?’ என்றதும், படபடப்பானான் கேசவமூர்த்தி.
‘நான் தான் பல முறை போனில் சொல்லீருக்கேனே…?! நான் கேசியர் அப்படி அல்ப சொல்பமால்லாம் வர முடியாதுன்னு!. எப்ப வெளிய வருவேன்னு எனக்கே தெரியாது!. அது மட்டுமில்ல..! நீங்க யாருன்னே எனக்குத் தெரியலை…’! என்று இழுத்தான்.
‘உங்களுக்கு என்னைத் தெரியாட்டா என்ன? எனக்கு உங்களை நல்லாத் தெரியும். ஆனாலும் நான்… நான் உங்களை விரும்பறேன். ஐ லவ் யூ! என்றது அந்த தேனிசைத் தென்றல்.
‘நீ.. விரும்பலாம்.,.! ஆனா, உனக்கு ஒண்ணு தெரியுமா?’ கேட்டுவிட்டுத் தொடர்ந்தான்…
‘எனக்கு வயசென்ன தெரியுமா? அறுபது…!! ரிட்டயர் ஆகப் போறேன்’ என்றான்.
மறுமுனையில் சில நொடிகள் அமைதி!
‘காதலுக்குக் கண்ணில்லை என்பது மட்டுமில்லை., வயசுமில்லை. எனக்கும்தான் அறுபதாகுது அதுக்காக காதல் வந்தா சொல்லி அனுப்பக் கூடாதா? அதான் போனில் சொல்லி அனுப்பியிருக்கேன்!’ என்றாள்.
அவனோ அசடு வழிந்தான்.