எங்கே என் காதல்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: August 5, 2022
பார்வையிட்டோர்: 14,721 
 
 

‘தமிழா!! தமிழா!! நாளை நம் நாளை’ என்ற பாடல் செந்திலின் கைபேசி அலாரம் ஒலித்தது. அலாரத்தை நிறுத்திவிட்டு, தினமும் செய்யும் நடைப்பயிற்சியை தொடர்ந்தான். காலையில் மழைத் தூரலில் நனைந்த படியே நடையை தொடர்ந்தான்.

செந்தில் ஒரு பத்திரிக்கையாளராக வேலை பார்க்கிறான். பெண்ணிய சுதந்திரம், சமத்துவம் போன்ற சமுதாயத்தின் மாறுபட்ட நல்ல சிந்தனை உடையவன். அழகான தோற்றம். எதிலும் சாதாரணமாக தான் இருப்பான். உடை, நடை, பேச்சு எல்லாவற்றிலும் இயல்பாகவும், எளிமையாகவும் நடப்பவன். நேர்மை குணம் கொண்ட அவனை சிலருக்கு பிடிக்காது. காரணம் அவன் வாழ்க்கை போக்கில் போகாமல், அனைத்திலும் நியாயம், தர்மம் பார்க்க கூடியவன்.

நடையின் வேகத்தை குறைத்த செந்தில் “அருகம்புல் ஜூஸ் கொடுங்க” நடைப்பாதையில் உள்ள கடையில் பானத்தை வாங்கி அருந்தியயுடன், நடைபயிற்சியை தொடர்ந்தான்.

கார்மேகம் இருட்ட, தென்றல் காற்றுடன் கலந்து, லேசான மழைச்சாரல் துற, அம் மழை துளிகள் குடையில் விழ, விழுந்த சில மழை துளிகள் சிதறி, அவளின் பாதத்தை நனைத்ததை பார்த்த செந்தில், கால் விரல்களின் நகத்தில் பூசப்பட்ட வண்ணத்தையும் சேர்த்து, தண்ணீருடன் அவள் பாதம் போட்ட நடையை ரசித்த படியே மேல் நோக்கி, அவளின் முகத்தை பார்க்க, குடைக்குள் அவள் முகம் மறைந்து விட்டதே!!! என எப்படியாவது பார்த்துவிட வேண்டும் என முன் நோக்கி புறப்பிட்டான்.

அவளின் பாதமே! நம் இதயத்துடிப்பை இரு மடங்காக்கி விட்டதே! அவளின் முகத்தை பார்த்தே ஆகா வேண்டும். செந்திலுக்கு மழைமேல் கோபம். மழை நின்று விட்டால் குடையை மடித்து விடுவாள் அல்லவா? தோழி ஒருத்தி வர, குடையுனுள் அவளையும் அழைத்தாள், ஒரு நொடி குடையை வலது புறம் உயர்த்தி, மீண்டும் தோழியுடன் குடைக்குள் முகத்தை மூடினாள். ஒரு நொடி அவளின் முகத்தை பார்த்ததற்கே, ஓராயிரம் கவிதை மனதில் தோன்றியது. முழுமையாக முகத்தை பார்த்தால், மூவாயிரம் கவிதை தோன்றுமோ?? என அவனிடமே அவன் பேசி கொண்டான்.

மீண்டும் முகத்தை பார்க்க முற்பட ஒரு பெரியவர் “தம்பி மணி என்னாச்சு?” என கேட்க மணியை கூறிவிட்டு, திரும்பி பார்த்தான். எங்கே என் காதல் தேவதை?? அவளை காணவில்லையே!! மழைச்சாரல் தானே தூறியது. ஆனால் மின்னலாய் மறைந்துவிட்டாளே!! கடைசிவரை அவளின் முகத்தை மட்டும் பார்க்க முடியவில்லையே!! என வருத்தத்துடன் நடை பயிற்சியை முடித்து விட்டான்.

செந்தில் வழக்கம்போல் வேலைக்கு புறப்பிட்டு, பேருந்து நிறுத்ததில் பேருந்திற்காக காத்திருந்தான். “கவிதா….” என குரல் கேட்க, ஒரு பெண் வேறொரு பெண்ணை அழைப்பதை கண்டான். ஆனால் அப்பெண்ணோ திரும்பவில்லை. மீண்டும் “கவி.. ஏய் கவி….” என அழைக்க, திரும்பினாள் கவிதா. எங்கே என் காதல் தேவதை? என்ற கேள்விக்கு பதில் கிடைத்ததை போல், அவளின் முகத்தை தன்னிலை மறந்து பார்த்து ரசித்து கொண்டிருந்தான். காலையில் தான் கண்ட கவிதை, அவன் கண்முன் கவிதாவாக நின்றிருந்தாள். கவிதாவின் கண்கள் அவனுக்கு கவிதையாக தெரிய, “பெண்ணே உன் கண்கள் என்ன காந்தமா!! இல்லை காந்தரமா!! என்னுள் என்னை ஏன் இப்படி வதைக்கிறாய்!!” என அவளை கவிதையாய் வடித்தான் செந்தில். கவிதை கடலில் ஆழ்த்திருந்த வேளையில் கல்லூரி பேருந்து வர, தோழியுடன் புறப்பிட்டாள். கவிதா பிஇ முன்றாம் ஆண்டு படிக்கும் மாணவி. யதார்த்தமானவள். எல்லோரிடமும் நன்கு பழகக்கூடியவள்

பேருந்து கல்லூரியினுள் நுழைந்தது. தோழிகளுடன் கவிதா வகுப்பறைக்கு செல்லும் வழியில், சில நான்காம் ஆண்டு மாணவர்கள், பெண்களை கிண்டல் செய்து கொண்டிருந்தனர். அவ்வழியாக வந்த விமல், அவர்களை கண்டித்தான். நடந்த சம்பவத்தை பார்த்துக்கொண்டே வகுப்பறைக்குள் நுழைந்தாள்.

விமல் பிஇ நான்காம் ஆண்டு படிக்கும் மாணவன். இவனை அனைத்து மாணவர்களுக்கும் பிடிக்கும். காரணம் நல்ல வசதியான குடும்பத்தை சார்ந்தவன், தன்னுடம் படிக்கும் மாணவர்களுக்கு கேட்கும் போதெல்லாம் பணத்தை வாரி இறைப்பவன். தினமும் விதவிதமான வண்டியில் வருபவன்.

வகுப்பறையில் அமர்ந்த கவிதா தோழியிடம் விமல், கிண்டல் செய்த மாணவர்களை கண்டித்ததை பற்றி புகழ்ந்து கொண்டிருந்தாள். கவிதாவிற்கு விமலின் செயல்பாடுகள் மற்றும் அனைவரிடமும் நன்கு பழகக்ககூடியவன் என்பதால் அவளுக்கும் அவனை பிடிக்கும்.

“ஏய் கவி இன்று நம்ம காலேஜ்ல ஸ்டுடண்ட்ஸ் எல்லாம் சேர்ந்து ஒரு போராட்டம் பண்ண போறாங்க” என கவியின் தோழி வசந்தி சொல்ல “என்ன போராட்டம்” என கவிதா கேட்டால் “ “சில மாணவர்களுக்கு அதிக கட்டணம் வசூலிக்கிறார்கள்லாம் அதற்க்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இந்த போராட்டமாம்” “இந்த பசங்கள்ளுக்கு வேற வேளை இல்ல’ “இந்த போராட்டமே விமல்தான் முன் நிக்கிறண்டி” ‘”ஓஹ அப்படியா விமல் பண்ணினா கண்டிப்பா ஒரு அர்த்தம் இருக்கும் அப்போ நானும் கண்டிப்பாக கலந்துக்குவேன்” ‘”ஏய் வெளிய நிறையே பத்திரிக்கையாளர்கள் வந்த்துருக்கங்க தெரியுமா” “அப்படி என்ன பெரிய போராட்டமா இது” “ஆமாம் நம்ம கல்லூரி எம் டி உருவ பொம்மை எரிக்க போறாங்கலாம் கொஞ்சம் வெளிய வந்துதான் பாரேன்” இருவரும் வெளியே வந்ததனர்

கல்லூரியின் வளாகத்தில் மாணவர்கள் போராட்டத்திற்க்கு தயாராகிக்கொண்டிருந்தார்கள் விமல் அவர்களுக்கு முன்நின்று வழி நடத்திக்கொண்டு இருந்தான். சில பத்திரியாளர்கள்ளும் அங்கு இருந்தனர் அதில் செந்திலும் ஒருவன். செந்தில் புகைப்படம் எடுக்க கல்லூரியின் முதல் தளத்தை பார்த்தான் அங்குத்தான் மீண்டும் அவன்னின் காதல் தேவதையை பார்த்தான் இந்த கல்லூரியில்தான் இவள் படிக்கிரளா? இந்த கல்லூரியே அவனுக்கு ஒரு தாஜ்மஹால் போல் தெரிகிறது. கண் சிமிட்டமலே அவளே பார்த்துக்கொண்டுயிருந்தான் அவலோ கல்லூரியின் முதல் தளத்திலிருந்து விமலை பார்த்துகொண்டுயிருந்தால் “கவி வாடி நாமலும் போராட்டம் நடக்கற இடத்துக்கு போகலாம்” “வா போகலாம்” மாணவர்கள் அனைவரும் ஒன்று கூடினர் கோஷம் சத்தம் என போராட்டம் தொடங்கியது. பத்திரிகையாளர்கள் அனைவரின் கவனமும் போராட்டம் நடக்கும் இடத்தை நோக்கி இருந்தது. உருவபொம்மையை எரிப்பதற்காக தீயை பற்றவைக்கும் போது தீயின் சிறு துளி கவிதாவின் துப்பட்டாவில் பட்டது தீ பரவியது உடனே கவிதா கத்த ஆரம்பித்ததுடன் செந்தில் பாயிந்து கவித்தாவின் மேல் தீ பரவாமல் அவளை காப்பாற்றினான் அவளோ பயத்தில் மயக்கம் அடேயே இடையில் வந்த விமல் கவிதாவை மருத்துவமனைக்கு தூக்கி சென்றான்.

மாணவர்கள் மருத்துவமனையை சுழ்ந்திருன்தனர் கவிதாவை பரிசோதித்த மருத்துவர் சாதாரண மயக்கம்தான் தீயை பார்த்த பயத்தில்த்தான் இந்த மயக்கம் பயப்பட வேண்டாம் என்று கூறினார். மருத்துவமனையின் நுழைவாயில் நின்றுகொண்டுருந்தத விமலை பார்த்தவுடன் “எப்படி நன்றி சொல்லுறது தெரியல வெரி தேங்க்ஸ்” “தேங்க்ஸ் எல்லாம் எதற்கு. இந்த போராட்டத்தை முன் நின்று நடத்துவதே நான் தானே. இது என் கடமை.” “நிங்க மற்ற மாணவர்களுக்குகாக நடத்தும் இந்த போராட்டமே உங்க நல்ல குணத்தை காட்டுது உங்க போராட்டம் வெற்றி பெற வாழ்த்துகள்” இவர்களின் உரையாடல்க்கு இடையில் வந்த வசந்தி கவிதாவை அழைத்து சென்றால். கல்லூரியின் பேருந்து வழக்கமாக கவிதா இறங்கும் இடத்தில் நின்றது தோழியுடன் கவிதா இறங்கினால் அங்கு தன் காதல் தேவதையின் வருகைக்காக காத்திருந்த செந்திலை பார்த்தவுடன் வசந்தி “ஏய் கவி இங்க பாரு அங்க நிற்கிற அந்த பத்திரிகைகார அண்ணன்தான் உன்னை தீயில் இருந்து காப்பத்தியது” “என்ன சொல்லுற வசந்தி அப்போ விமல் என்னை காப்பாத்துலைய” “இந்த அண்ணன்தான் உன்னை தீயில் இருந்து காப்பாற்றியது உனக்கு சாதாரண மயக்கம்தான் அந்த விமல்தான் உன்னை தேவையில்லாமல் தூக்கிட்டு போனான்” “ஏய் வசந்தி விமலா தப்பா பேசாத” “ஓகே ஓகே நான் தப்பா பேசல ஆனா உன்ன காப்பாற்றியது இந்த அண்ணன்தான் ஒரு நன்றியாவது சொல்லுடி”

செந்திலின் அருகில் கவிதா சென்றயுடன் அவனின் மனதில் மீண்டும் கவிதை பூ மழையைப் பொழிந்தது “சாரி எனக்கு அப்போ என்ன நடந்தது தெரியல இப்போத்தான் என் பிரான்ட் எல்லாம் சொன்ன ரொம்பா தேங்க்ஸ்” உங்களை காப்பாற்ற நான் கொடுத்து வைக்கணும் சொல்ல அவன் மனம் துடித்தது ஆனால் அவனோ “அதெல்லாம் பரவாயில்லை” என கூற “இதற்குமுன் உங்களை நான் பார்த்தேஇல்லை என்னை காப்பாற்றியதுக்கு மறுபடியும் ரொம்ப தேங்க்ஸ்” நான் இதற்க்கு முன் உங்களை பலமுறை நான் பார்த்திருக்கிறேன் என சொல்ல அவன் மனம் துடித்தது ஆனால் அவளோ அவ்விடம் விட்டு நகர்ந்தால்.

மறுநாள் கவிதா வழக்கம்போல கல்லூரி செல்வதற்காக பேருந்து நிறுத்ததிற்கு வந்தாள். அங்கு மீண்டும் செந்திலை கண்டாள். “ஹாய்! எப்படி இருக்கிங்க? என்ன காலையிலேயே பஸ் ஸ்டாப்ல” “இல்ல, நான் வழக்கமா இந்த டைம்ல, இந்த வழியாக ஆபீஸ் போவேன்” அவனோ தினமும் அவளை காணத்தான் இங்கு காத்திருக்கிறான் என அவளுக்கு தெரியவில்லை. “ஓ.கே காலேஜ் பஸ் வந்துருச்சு. சீ யூ பாய்” என புறப்பிட்டாள்.

அவள் பேருந்தினுள் ஏறி சாளரம் அருகில் அமர்ந்து கூந்தலை கோதும் அழகை கண்டு ரசித்துக் கொண்டிருந்தான் செந்தில். பேருந்து புறப்பிட்டது. பேருந்தினுள் அனைவரும் கல்லூரியில் நடந்த போராட்டம் பற்றிய பேசி கொண்டிருந்தனர். சிலர் விமலை புகழ்ந்து கொண்டிருந்தனர். அதை கேட்ட கவிதா மகிழ்ச்சியில் தனக்கு தானே புன்னகைத்தாள். பேருந்து கல்லூரியினுள் நுழைய, சில மாணவர்கள் அறிவிப்பு பலகை முன் கூட்டமாக நிற்பதை கண்டாள். “ஒரு வேளை நேற்று போராட்டத்தில் ஈடுப்பட்ட மாணவர்களை, கல்லூரி நிர்வாகம் கல்லூரியிலிருந்து நீக்கி விட்டார்களோ? அப்போ விமலின் படிப்பு என்னவாகும்” என பதட்டத்துடன் பேருந்திலிருந்து இறங்கி, அவ்விடம் நோக்கி ஓடினாள். கூட்டத்தை விளக்கி அறிவிப்பு பலகை முன் சென்று பார்த்தாள். அதில் மாணவர்களின் கட்டணம் குறைக்கப்பட்டு, அனைவருக்கும் சமமான கட்டணம் என எழுதபட்டு இருந்ததை கண்ட மகிழ்ச்சியில் மறுபுறம் பார்த்தாள்.

விமலுக்கு பலர் தங்களின் வாழ்த்துக்களை பரிமாறி கொண்டிருந்தனர். விமலும் அவளை பார்த்தவுடன் நாசுக்கா நகர்ந்து, தனியாக அருகிலுள்ள மரத்தின் அடியில் வந்து நின்றான். அவனை கண்ட கவிதா வெட்கத்துடன் அருகில் சென்றாள். “வாழ்த்துக்கள் விமல்!! நீங்க நடத்தின இந்த போராட்டம் மிக பெரிய வெற்றிய கொடுத்துருக்கு. மீண்டும் வாழ்த்துக்கள். உங்களை வாழ்த்த பலர் காத்திட்டுருக்காங்க. எனக்காக தனிய வந்ததற்கு ரொம்ப தேங்க்ஸ்” “எத்தனை பேர் வாழ்த்து சொன்னாலும் நீங்க எனக்கு ஸ்பெசல் தான். எத்தனையோ பேர் இருந்தாலும், நமக்குன்னு சிலர் மட்டும்தான் இருப்பாங்க. அந்த மாதிரித்தான், நீங்க எனக்கு. இப்பவும் எப்பவும் ஸ்பெசல்தான்” அப்பொழுது மெல்ல தென்றல் காற்று வீச, மரத்திலிருந்து சில பூக்கள் அவர்களின் மேல் விழுந்து, இருவரையும் வாழ்த்தியது. “நீங்க எனக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்ததற்கு தேங்க்ஸ். நான் போகட்டுமா?” “அப்போ மறுபடியும் எப்போ பார்க்கலாம்” அதற்கு அவளின் புன்னகையை பரிசளித்து அவ்விடம் விட்டு நகர்ந்தாள்.

வகுப்பறையில் வசந்தியிடம் நடந்தவற்றை விவரித்தாள் கவிதா. அதற்கு “கவி அவன நீ லவ் பண்றயா” “தெரியல டி.. ஆனா ஏதோ சம் திங் எனக்குள்ள. சொல்ல தெரியல டி..” “அவன் வசதியான வீட்டு பையன். எதையும் நல்ல யோசிச்சிச்சு பண்ணு” “சரி டி” வகுப்பு முடிந்து கல்லூரி பேருந்திலிருந்து, வழக்கமான பேருந்து நிறுத்ததில் இருவரும் இறங்கினர் அதே நேரத்தில் அவ்வழியாக தடுமாறி வந்த இரு சக்கர வாகனம் ஒன்று, கவிதாவின் மேல் உரச, அவள் நிலை தடுமாறி கீழே விழுந்தாள். ஆனால் அவளை காண காத்திருந்த செந்தில் அதை பார்த்தவுடன் மயங்கி கீழே விழுந்தான். விழுந்த கவிதாவிற்கு எந்த பாதிப்பும் இல்லை என்பதால் உடனே எழுந்தாள். மயங்கிய செந்திலை கவிதாவும் வசந்தியும் சிலரின் உதவியுடன் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

மருத்துவர் சிகிச்சையை துவங்கினார். செந்தில் வேலை செய்யும் பத்திரிக்கை அலுவகத்திற்கும் தெரிவிக்கபட்டது. “வசு.. தீ விபத்திலிருந்து என் உயிரை காப்பாத்தினவர். அவர் ஆபீசிலிருந்து பிரண்ட்ஸ் வரவரைக்கும் நாம இங்க இவரு கூட இருக்கலாம்” “கண்டிப்பா டி…” அவருடன் வந்த நபரை மருத்துவர் அழைப்பதாக செவிலி கூற, இருவரும் மருத்துவர் அறைக்குள் சென்றனர். “நீங்க அவருக்கு யார். ஐ மீன் உங்களுக்கும் அவருக்கும் என்ன உறவு” என மருத்துவர் கேட்க “அவருடைய பிரண்ட்ஸ்” “இப்போ அவர் நல்ல இருக்கார். அவருக்கு ஏதோ சிறு வயதில் ஏற்பட்ட விபத்து. அவரை ரொம்ப பாதிச்சிருக்கு. அதிர்ச்சிகரமான விசயங்களை பார்த்தாலோ? அல்லது கேட்டாலோ? இது போல மயக்கம் வரும். சில நேரம் அது அவரின் உயிருக்கே ஆபத்தாக முடியலாம். தொடர்ச்சியாக சிகிச்சை எடுக்கனும். இதற்கான ஸ்பெஷல் டாக்டர் பார்க்கிறது நல்லது” என மருத்துவர் கூற, கவிதாவின் கண்கள் கலங்கியது.

செந்திலின் நண்பர்கள் வர, நடந்ததை விவரித்து, இருவரும் அவ்விடம் விட்டு நகர்ந்து, செந்திலின் படுக்கையருகில் செல்ல, செந்தில் கண் விழித்தான். அருகில் தன் காதல் தேவதை கண்டவுடன் “உங்களுக்கு பைக்கில அடிப்பட்டது. இப்போ எப்படி இருக்கு?” “எனக்கு ஏதும் ஆகல. நீங்க தான் மயங்கிடிங்க” “சாரி… என்னால உங்களுக்கு சிரமம்” ‘நோ நோ… அப்படி ஒன்னும் இல்ல. உங்க உடம்பா பார்த்து கோங்க. பாய்.. நாங்க வரோம்’ கவிதாவுடன் வசந்தியும் மருத்துவமனைவிட்டு வெளிய வந்தனர். “அவரை விட்டு வர மனமே இல்ல வசு..” என கவிதா கூற “ஆமாம் கவி… அந்த அண்ணனுக்கு இப்படி ஒரு வியாதி இருக்க வேண்டாம்” “அவருக்கு சீக்கிரமே சரியாக கடவுளை வேண்டிக்கிறேன். அவருடைய மனதிற்கு எப்பவும் ஆறுதலாக இருக்கனும் தோணுது” கவிதாவின் பேச்சை சிரித்தபடியே கேட்டுக்கொண்டு நடந்தாள் வசந்தி.

கவிதாவின் வருகைக்காக காலையில் பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தான் செந்தில். அவனின் காதல் தேவதை வருவதை கண்டவுடன் ஆயிரம் தேவதைகள், அவன் மீது மலர்களை தூவி மழை பொழிவது போல் அவனின் மனம் துள்ளியது. அருகில் வந்த கவிதா “செந்தில் எப்படி இருக்கிங்க. உடம்பு நல்ல இருக்கா. கொஞ்சம் ரெஸ்ட் எடுத்திட்டு வேலைக்கு போகலாமே” “இல்ல.. இன்னும் இரண்டு நாள் ரெஸ்ட்தான்” “அப்போ காலையிலேயே பஸ் ஸ்டாப்ல என்ன பன்றிங்க” “சும்மா ஒரு ஃபிரண்ட் வரான். அவன பார்த்துட்டு போகலாம்ன்னு வெயிட் பண்ணுறேன்” “ஓஹோ.. ஓஹோ.. பாய் ஃபிரண்டா? இல்ல கேர்ள் பிரண்டா?” கிண்டலுடன் சிரித்த படியே கேட்டாள் கவிதா. நான் என் காதல் தேவதையான உன்னைத்தான் காண காத்துருந்தேன் என்று சொல்ல, அவன் மனம் துடிக்க, “பாய் ஃபிரண்ட் தான்” கூற “உண்மையாதான் சொல்றிங்களா? இல்ல நாங்க உங்க கேர்ள் ஃபிரண்ட் பார்த்துருவோம்ன்னு சொல்லுறிங்களா!!!” மீண்டும் சிரித்த படியே கேட்க “எனக்கு எந்த கேர்ள் ஃபிரண்டும் இல்லிங்க” என கூறும் போதே செந்திலுக்கு வார்த்தைகள் தடுமாறியது. அதற்கு கவிதா “சும்மா தான் சொன்னேன். என் இவ்வளவு டென்சென் ஆகுறிங்க. ஓ.கே பாய்!! எங்களுக்கு காலேஜ் பஸ் வந்துருச்சு. மறுபடியும் பார்க்கலாம்” என பேருந்தில் ஏறினாள். அவள் பேருந்தினுள் செல்வதை ரசித்த படியே, செந்தில் தன்னை மறந்து இருக்க, பேருந்து அவ்விடம் விட்டு நகர்ந்தது.

பேருந்து கல்லூரியை நோக்கி புறப்பிட்டு செல்ல, சிறிது நேரத்தில் விலை உயர்ந்த வாகனம் ஒன்று பேருந்து பின் புறமாக வந்து கொண்டிருந்தது. மற்றோர் நிறுத்தத்தில் பேருந்து நிற்க பின் புறமாக வந்த வாகனம் பேருந்தை தாண்டி முன் நோக்கி சென்றது. “ஹாய்!! கவி இப்போ.. நம்ம பஸ்ஸ க்ரோஸ் பண்ணி போன கார்ல விமல் இருந்தான்” என தோழி வசந்தி கூற, “ஓஹோ.. அப்படியா!! நான் பார்க்காம மிஸ் பண்ணிட்டேன்” “அதனால என்ன காலேஜ் போய் பார்த்த போகுது. அவன பார்ப்பது ரொம்ப முக்கியமோ” “வசந்தி நீ என் ஃபிரண்ட் தான். ஆனா விமல அவன் இவனு மரியாதை இல்லாம பேசாத. அவர் ஒரு ஜென்டில் மேன் தெரியுமா?” “ஓகே. டி.. இனி அவர் இவர்னு கூப்பிடுறேன்” “ஓகே” பேருந்து மீண்டும் நிறுத்தத்திலிருந்து புறப்பிட்டு சில மையில்கள் கடக்க, அங்கு விமல் வண்டியுடன் ஓரமாக நிற்பதை கண்டாள் வசந்தி. “ஹாய்!! அங்க பார் விமல் நிக்கிறார்” உடனே விமலை பார்த்தாள் கவிதா. பேருந்து வேகமாக முன் நோக்கி சென்றது. மீண்டும் பேருந்தின் பின் புறமாக வண்டியில் வந்து கொண்டிருந்தான் விமல். அவனையே திரும்பி திரும்பி பார்த்து கொண்டிருந்தாள் கவிதா.

பேருந்து ஓரமாக நின்றது. பின்புறம் அமர்ந்திருந்த மாணவர்கள் “என்ன ஆச்சு, ஏன் நிக்கிது” என கூச்சலிட, சில மாணவர்கள் பேருந்திலிருந்து இறங்கினார். மாணவர்கள் ஓட்டுனரிடம் கேட்க, ஓட்டுனர் ”வண்டி ஏதோ ரிப்பைர் ஆயிருச்சி. இனி ஓடாது. மெக்கானிக் வந்துத்தான் பார்க்கணும்” என கூற, மாணவர்கள் கூச்சலிட்டனர். பின் தொடர்ந்து வந்த விமல் வண்டியை பேருந்தின் பின் புறமாக நிறுத்தினான். அதை கண்டவுடன் கவிதா வண்டியிலிருந்து இறங்கி, அவனை பார்த்து நின்றாள். அவனும் கவிதாவை நோக்கி வந்தான். ஆனால் சில மாணவர்கள் விமலை சூழ்ந்து கொண்டனர். அவர்களிடமிருந்து நாசுக்காக, நகர்ந்து கவிதா அருகில் வந்தான். “ஹாய் கவி!! என்ன ஆச்சு?” “தெரியல.. வண்டி ரிப்பைர் ஆச்சுன்னு சொல்லறாங்க” “உனக்கு ஆட்சேபனை இல்லேன்னா, என் வண்டில வரலாமே” “சரி… வசந்தி நீயும் வாடி” என கவிதா வசந்தியை கூப்பிட, அவளோ மறுத்துவிட்டாள்.. “அப்போ நான் போறேன்” விமலுடன் கவிதாவும் விமலின் வண்டில் அமர்ந்தாள். “ஒரு நிமிஷம், நான் இப்போ வறேன்” என கூறி விட்டு பேருந்து ஓட்டுனரிடம், ஏதோ பேசுவதை கண்டாள் கவிதா. “என்ன டிரைவரிடம் ஏதோ பேசினிங்க. அவரும் என்னை பார்த்து சிரித்துக்கொண்டே பதில் சொன்னார்” “அப்படி எல்லாம் ஒன்னும் இல்லை. போகும் வழியில் மெக்கானிக் அனுப்பி வைக்க சொன்னார். அவ்வளவுதான்” வண்டி கல்லூரியின் வளாகத்தினுள் நுழைந்தவுடன் இன்று மாலை, உனக்காக நான் காத்திருப்பேன். நீ வருவாயா? என கேட்க எதையும் யோசிக்காமல் “சரி” என்ற பதிலை சொன்னாள் கவிதா. அதை போல் அன்று மாலை அவளுக்காக காத்துருந்தான்.

தான் விமலுடன் வண்டியில் போவதாக வசந்தியிடம் கவிதா கூற “எனக்கு இதெல்லாம் வேண்டாம்ன்னு.. தோணுதுடி… விமல் வசதியான வீட்டு பையன். எதற்கும் ஒருமுறை யோசித்து பண்ணு” என வசந்தி கூற, “அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன். விமல் ரொம்ப நல்ல பையன். உனக்கு அவரை பற்றி தெரியாது” என்று விமலுடன் வண்டியில் அமர்ந்தாள். வசந்தி அதை சற்றும் எதிர்ப்பார்க்கவில்லை.

வண்டி வேகமாக சில மைல்கல் கடந்தது. அதுவரை இருவரும் பேசாமல் இருக்க, சற்றென்று “எனக்கு உன்னை பிடிச்சிருக்கு. நான் உன்ன கல்யாணம் செய்ய ஆசைப்படுறேன்” என விமல் கூற, அதை நேரத்தில் அவள் இறங்கும் பேருந்து நிறுத்தம் வர “கொஞ்சம் வண்டிய நிறுத்துங்க. நான் இறங்கனும். நாளைக்கு காலேஜில பார்க்கலாம்” எனக் கூறி அவ்விடம் விட்டு நகர்ந்தாள் கவிதா.

பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த செந்தில் “ஹாய் கவி” “ஹாய் செந்தில், மறுபடியும் பஸ் ஸ்டாப்ல என்ன பன்றிங்க” “உங்களை பார்க்க தான் வந்தேன்” “என்ன விஷயம் சொல்லுங்க செந்தில்” “நான் கொடுக்கிற இந்த கிஃப்ட் பாக்ஸ்ஸ, நீங்க மறுக்காம வாங்கிக்கணும்” “சரி” என கையில் பெற்றுக் கொண்டாள். அதில் அவன் எழுதிய காதல் கடிதமும் இருப்பது அவளுக்கு தெரியாது.

“நான் கொடுக்கிற இந்த கிஃப்ட் பாக்ஸ்ஸ, நீங்க மறுக்காம வாங்கிக்கனும்” “சரி” என செந்தில் கொடுத்ததை பெற்றுக் கொண்டாள் கவிதா. அதில் அவன் எழுதிய காதல் கடிதமும் இருப்பது அவளுக்கு தெரியாது. செந்திலுக்கு பாய் கூறி விடைப்பெற்றாள்`

அவளுக்கு அன்று முழுவதும் விமலின் ஞாபகத்திலேயே தன்னையே மறந்து, கனவிலேயே இருந்தாள். அன்று இரவு படுக்கையில் விமல் தன்னிடம் காதலை சொல்லிய நினைப்பில், அவள் கண்கள் உறங்க மறுத்தது. மறுநாள் பொழுது விடிய, தன்னை அழகாக அலங்கரித்து விமலை காண சென்றாள். அவளின் மனம் ‘நானும் உன்னை விரும்புகிறேன்’ என்று எப்பொழுது அவனிடம் சொல்ல போகிறேன்’ என மனம் துடித்து கொண்டே இருந்தது. கல்லூரிக்கு செல்ல வீட்டின் வாசலுக்கு வர, செந்தில் கொடுத்த பரிசு நியாபகம் வர “இன்று மாலை பார்த்து கொள்ளலாம்” என அதை பிரிக்காமலே கல்லூரிக்கு புறப்பிட்டாள்.

கவிதா வழக்கமான பேருந்து நிறுத்ததிற்கு வர அங்கு செந்தில் அவளுக்காக காத்திருந்தான். அவனை பார்த்ததும் “ஹாய் செந்தில் இன்னைக்கு ஒரு அவசர வேலை இருக்கு. நான் சீக்கிரம் போகணும். பாய்!!!” “உங்க காலேஜ் பஸ் இன்னும் வரலையே” “லேட் ஆகும். அதான் ஆட்டோவில் போயிடுவேன்” “நான் வேணுன்னா உங்களை காலேஜ்ல ட்ராப் பண்ணட்டுமா” சிறிது தயக்கத்துடன் சம்மதித்தாள் கவிதா.

செந்திலின் இருசக்கர வாகனத்தில் இருவரும் இடைவெளி விட்டு அமர்ந்தனர். வண்டியை செலுத்திய செந்திலுக்கு மனமெல்லாம் மகிழ்ச்சி. தான் கொடுத்த காதல் கடிதத்தை படித்திருப்பாள். அதனால் தான் தன்னுடன் வர சம்மதித்தாள் போலிருக்கு என தனக்குள்ளேயே பேசிக்கொண்டான். வண்டியில் ஒருவரையொருவர் பேசிக்கொள்ளவில்லை. கல்லூரியருகில் வந்ததும், வண்டியிலிருந்து இறங்கிய கவிதா “தேங்க்ஸ் செந்தில்!! இப்போ பேச நேரம் இல்ல. நான் அவசரமா ஒருத்தர பார்க்க போறேன். பாய்!!” என கூறி கல்லூரிக்குள் நுழைந்தாள். அவள் தான் எழுதிய கடிதத்தை படித்தாளா? எந்த பதிலையும் சொல்லவில்லையே என அவன் மனதில் யோசித்து அவ்விடம் விட்டு நகர்ந்தான்.

கவிதா கல்லூரிக்குள் நுழைந்தவுடன் விமல் தான் வாகனத்தை நிறுத்துமிடத்திற்கு சென்று தேடினாள். அவனின் வண்டி அங்கு இல்லை என்பதால், அவன் இன்னும் வரவில்லை என்பதை புரிந்து கொண்டு, அவனின் வருகைக்காக காத்துருந்தாள். நுழைவாயிலில் விமலின் நான்கு சக்கர வாகனத்தை கண்டவுடன், தான் அவனுக்காக காத்திருப்பது அவனுக்கு தெரியக்கூடாது என்று ‘தான் வேறு ஏதோ வேலைக்கு வந்திருப்பது போலவும், அவனை பார்க்காததை போலவும் இருந்தாள். விமல் வண்டியில் இருந்தபடியே அவளை பார்த்துவிட்டான். வண்டியை நிறுத்தியவுடன் அவளுடன் பேசலாமா? அவள் என்ன பதில் சொல்ல போகிறாள்? என மனதில் பல கேள்விகளுடனும், எதிர்ப்பார்ப்புடனும், அவள் அருகில் சென்றான். “ஹாய் கவி! எப்படி இருக்க?” “நான் நல்லா இருக்கேன். நேத்து ஈவினிங் தானே பார்த்தோம். அதுக்குள்ள என்ன? எப்படி இருக்க? ங்கர கேள்வி” என சிரித்தாள்.

“இல்ல எப்படி ஆரம்பிக்கிறதுன்னு தெரியல. அதான் நான் கேட்ட கேள்விக்கு என்ன பதில் சொல்ல போறன்னு ஒரு பதட்டம்” “எல்லாம் நல்ல பதில்தான்” என கூறி அவ்விடம் விட்டு நகர்ந்தாள். அதை கேட்டவுடன் விமலின் மனதில் பூ மழை பொழிவது போல் இருந்தாலும், அவள் முழுமையாக பதில் சொல்லவில்லையே என அவளை பின் தொடர்ந்தான். அவள் வகுப்பறைக்குள் நுழையும் போது “ஹாய் கவி! நீ என்ன சொன்ன? எனக்கு புரியல. நல்ல பதில்னா நீ என்ன சொல்ல வர? ப்ளீஸ் சொல்லு. நீ தெளிவா சொல்லலன்னா, என்னால கிலாஸ் கவனிக்க முடியாது. ப்ளீஸ் சொல்லு” அதற்கு அவள் சிரித்துக்கொண்டே “எனக்கும் உன்ன ரொம்ப பிடிச்சிருக்கு” அதை கேட்டவுடன் விமல் “தேங்க்ஸ் கவி! இன்று மாலை உனக்காக காத்திருப்பேன்” கூறி அவ்விடம் விட்டு நகர்ந்தான்

அதன்பின் வகுப்பறைக்குள் நுழைந்த வசந்தி “ஏன் டி நீ காலேஜ் பஸ்ல வரல? முன்னாடியே சொன்னா, நானும் உன் கூடயே வந்திருப்பேன்” என கோபத்தில் பொரிந்தாள். அவளை சமாதானம் செய்து நடந்ததை விவரித்தாள். ஆனால் வசந்திக்கு பிடிக்கவில்லை. இருந்தாலும் உயிர் தோழியின் காதல் என கோபத்தை குறைத்தாள். “நான் இன்னக்கி இவினிங் உன் கூட வரமாட்டேன் டி” “ஓகே ஓகே இனிமே எல்லாம் அப்படித்தான்” என்ற வசந்தியின் பதிலுக்கு கவிதா புன்னகையித்தாள்.

அன்று மாலை விமலின் வண்டியில் கவிதா சென்றுவிட, கவிதாவின் வருகைக்காக பேருந்து நிறுத்தத்தில் காத்துருந்தான் செந்தில். வெகு நேரம் காத்திருந்து, இரவு நேரம் எட்ட, தன் காதல் தேவதையே காண முடியாமல், சோகத்துடன் திரும்பினான். மறுபக்கம் கவிதா படுக்கையறையில் செந்தில் தந்த பரிசை திறந்து பார்த்தாள். அதில் ஒரு அழகிய இரண்டு புறாக்கள் கொஞ்சும் பொம்மையும், அதில் கடிதம் இருந்தது. அந்த கடிதத்தை எடுத்து படித்தாள். அதில் செந்தில் தன்னை காதலிப்பதாக எழுதிருப்பதை அவள் சற்றும் எதிர்பார்க்கவில்லை. மறுநாள் பேருந்து நிறுத்தத்தில் கவிதாவின் வருகைக்காக காத்திருந்தான். அவள் எதிரே வருவதை கண்டு தயாரானான்.

பேருந்து நிறுத்தத்தில் கவிதாவின் வருகைக்காக நின்று கொண்டிருந்தான் செந்தில். அவள் வருவதை கண்டு, அவள் என்ன பதில் சொல்லப்போகிறாள்? என்ற எதிர்ப்பார்ப்புடன் அவளை வரவேற்றான். “ஹாய் கவிதா!!! குட் மார்னிங்!!” என புன்னகையுடன் வரவேற்றான். அதற்கு அவளும் புன்னகைத்தாலும், மனதில் இதை எப்படி சொல்ல போகிறோம்? என்ற பதட்டத்துடன் ஆரம்பித்தாள் “ஹாய் செந்தில்!!! நான் உங்கள ஒரு நல்ல ஃபிராண்டா தான் பார்த்தேன். எனக்கு ஒரு போதும் உங்க மேல காதல் உணர்வு வந்ததில்லை. உங்களுக்கு என் மீது இப்படி ஒரு உணர்வு வர நான் காரணமாக இருந்திருந்தால் மன்னித்து விடுங்க” என கவிதாவின் வார்த்தைகள் செந்திலின் இதயத்தை புன்னாக்க, ஆனாலும் அவன் அதை மறைத்து கொண்டு “சாரி கவிதா! என் மனதில் தோன்றியதை அப்படியே கடிதத்தில் வெளிபடுத்திட்டேன். ப்ளீஸ்! என்ன மன்னிச்சிருங்க” என கூற “நோ ப்ராபிளம். உங்கள நான் தப்பா நினைக்கல”. “தேங்க்ஸ் கவிதா!! எப்பவும் உனக்கு நான் நல்ல ஃபிராண்டா இருப்பேன்” என அவள் முன் கூறினாலும்,

நான் உன்னை முதல் முதலில் பார்த்த நாள் முதல் இன்று வரை, என் மனதில் கட்டிய, என் காதல் தேவதைக்கான காதல் கோட்டை, இப்பொழுது மணல் கோட்டையாய் இடிந்து, சரிந்து விட்டதே என அவன் மனம் பிளந்தது. “ஓ மை காட்!! நீங்க இவ்ளோ ஈஸியாக எடுத்துபிங்கன்னு, நான் நினைக்கல.. இன்னேள்ள இருந்து.. இல்ல….இப்பருந்து, நீங்க என்னோட பெஸ்ட் ஃபிரென்ட். அப்பறம்… நான் இன்னொரு விஷயமும் உங்களிடம் சொல்லணும். அத எப்படி ஆரம்பிக்கறதுன்னு தெரில” “சொல்லு கவி” “நான் என் காலேஜ்ல படிக்கிற ஒரு பையனை லவ் பண்ணுறேன். அவர் பேரு விமல். நான் ஒரு நாள் அவரை உங்களுக்கு அறிமுகம் செஞ்சி வைக்கிறேன்” என கவிதா கூறும் நேரத்தில், ஒரு நான்கு சக்கர வாகனம் ஒலி எழுப்ப, திரும்பி பார்த்தாள். அங்கு விமல் வண்டியிலுருந்து கைகாட்டி அழைத்தான். அதை கண்டவுடன், செந்திலை அழைத்து விமலிடம் அறிமுகம் செய்தாள் கவிதா. பின்னர் விமலுடன் அவள் கல்லூரிக்கு செல்ல, தன்னை அறியாமலே கண் கலங்கினான் செந்தில். இது போன்ற ஒரு நிலை, தன் காதலுக்கு வரும் என அவன் எதிர்பார்க்கவில்லை.

கவிதா அதிக நேரம் விமலுடன் பேசுவதற்கும், அவனுடன் வெளியில் செல்வதற்கும் செலவழிக்க, தன் தோழி வசந்தியுடனான கவிதைவின் நட்பில், சிறிய விரிசல் ஏற்பட்டது. கல்லூரிக்கும் விமலுடன் வண்டியிலே சென்றுவிட, பேருந்து நிறுத்தத்தில் காத்திருக்கும் செந்தில் அங்கு வருவதை நிறுத்திக்கொண்டான். கவிதா தன் காதலை மறுத்த அன்று முதல் அவனின் வாழ்க்கையே நின்றுவிட்டது போல மன அழுத்ததால், மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு குணம் பெற்றான். அவன் மனதின் ரணம் பெரிதாயினும், நாள்கள் நகர நகர அதை மறந்து வேலையில் கவனம் செலுத்தினான்.

மறுபுறம் கவிதாவின் காதல் விமலுடன் தொடர. நாட்களும் நகர்ந்தன. ஒரு நாள் செந்தில் தான் வேலை செய்யும் பத்திரிக்கைக்கு “காதல்” என்ற தலைப்பில் காதலர்களிடம் பேட்டி எடுப்பதற்காக கடற்கரைக்கு சென்றான். ஒன்றன்பின் ஒன்றாக வரும் கடல் அலைகளும், அது எழுப்பும் ஓசையும், சிறிய சிறிய மணல் வீடு கட்டி விளையாடும் குழந்தைகளும், இதை எதையும் கவனிக்காமல் சில காதல் ஜோடிகள் பேசிக்கொண்டிருபத்தையும், பார்த்த செந்தில் முதல் பேட்டியை யாரிடம் கேட்பது? என்ற குழப்பத்துடன், அருகில் தனியாக இருக்கும் ஒரு பெண்ணிடம் பேட்டியை ஆரம்பித்தான்.

அவள் தன் காதலனையும், அவர்கள் காதலை பற்றியும் கூறினாள். தாங்கள் ஒரு வருடம் ஒருவரையொருவர் உண்மையாக காதலிப்பதாகவும் “இதோ என் லவர் வரார்” என கையை நீட்டி காண்பித்தாள். அவனை பார்த்தவுடன் செந்தில் அதிர்ந்து போனான். காரணம் அவள் காண்பித்தது விமலைத்தான். அவனும் இதை எதிர்பாராமல் அருகில் வந்துவிட, செந்தில் அவனிடம் பேச முற்படும்போதே விமல் அந்த பெண்ணுடன் அவ்விடம் விட்டு நகர்ந்தான்.

அன்று இரவு முழுவதுமே கவிதைவின் காதல் என்ன ஆச்சு? விமலுடன் பிரிந்து விட்டாளா? கவிதாவை பார்க்கலாமா? என அன்று இரவை உறக்கமில்லாமல் கழித்தான். மறுநாள் கவிதாவின் கல்லூரிக்கு சென்று அவளை பார்ப்பததற்காக நுழைவாயிலில் காத்திருந்தான் செந்தில். அங்கு மீண்டும் அதிர்ச்சி காத்திருந்தது. அவளோ விமலுடன் நன்றாக பேசி சிரித்து கொண்டே வருவதைக் பார்த்தவுடன், அவன் வேறு பெண்ணையும் விரும்புவதாகவும், விமல் உன்னை ஏமாற்றுகிறான் என்பதை எப்படியாவது கூறி, கவிதாவின் வாழ்க்கையை காப்பாற்ற வேண்டுமென்று, அவளை தனியாக சந்திக்க முடிவெடுத்தான் செந்தில்.

வசந்தியிடம் கவிதாவின் கைபேசி என்னை பெற்று, உங்களிடம் தான் தனியாக பேசவேண்டும் என்று அவளை அழைத்தான் செந்தில். அதற்கு அவளும் வருவதாக கூறினாள்.

அவனின் அழைப்பை ஏற்று, பேருந்து நிறுத்ததிற்கு வந்தாள். வெகுநாட்களுக்கு பிறகு அவள் பேருந்து நிறுத்ததிற்கு வந்திருப்பதால், புது இடத்திற்கு வந்தது போல் தோணல் கவிதாவிற்கு. “வாங்க கவி!! எப்படி இருக்கிங்க?” என வரவேற்றான் செந்தில். “நான் நல்லா இருக்கேன். நீங்க எப்படி இருக்கிங்க?” “உங்க புண்ணியத்தால், நான் நல்லா இருக்கேன்” என்ற பதிலை கேட்டவுடன் புன்னகைத்தாள் கவிதா. “நான் இங்க வந்து ரொம்ப நாள் ஆச்சு. இப்போ எல்லாம் விமலுடன் கார்ல டெய்லியும் போயிடுவேன்” எனும் அவளின் பதிலிலிருந்து இருவருமே இன்னும் பிரியவில்லை என்பதை புரிந்து கொண்டான் செந்தில்.

விமலை பற்றிய உண்மையை எப்படி அவளுக்கு சொல்லி புரிய வைப்பது என குழப்பத்தில் நின்று கொண்டிருந்தான். “ஏதோ பேசணும்ன்னு சொன்னிங்க. கொஞ்சம் சீக்கிரம் சொல்லுங்க. நான் விமலிடம் சொல்லாம வந்துட்டேன். பஸ் ஸ்டாப்ல ஒரு பையன்கிட்ட பேசிறத பார்த்தா விமல் கோபப்படுவார்” “அப்போ அவர் வேறொரு பெண்ணிடம் பேசி பழகினால் தப்பில்லையா?” “என்ன சொன்னிங்க. புரியல மறுபடியும் சொல்லுங்க” என கவிதா கேட்க, நடந்தவற்றை விவரித்தான். ஆனால் அதை அவள் மனம் ஏற்கவில்லை. அதற்கு அவள் “நான் உன்னை காதலிக்க மறுத்தால் தான், நீ இது போன்று பொய் சொல்கிறாய். நான் உன் மேல் எவ்வளவு மதிப்பு வைத்திருந்தேன். ஆனால் அதையெல்லாம் ஒரு நொடியில் பால் செய்வது போல் காரியத்தை செய்துவிட்டாய். இனிமேல் நீ மீண்டும் போன்லையோ, நேரிலோ பேச அழைத்தால் காவல் நிலையத்தில் புகார் அளிப்பேன்” என செந்திலை எச்சரித்து அவ்விடம் விட்டு நகர்ந்தாள் கவிதா.

செந்திலை அவள் இழிவுபடுத்தினாலும், அவன் மனம் கேட்கவில்லை. இதை எப்படியாவது தடுத்து அவளை விமலிடமிருந்து காப்பற்றிட வேண்டும் என ஒரு திட்டம் தீட்டினான். “உங்களுடைய பெண் அதே கல்லூரியில் படிக்கும் விமல் என்ற மாணவனை காதலிப்பதாகவும், அதனால் அவள் படிப்பில் சரியாக கவனம் செலுத்துவதில்லை என்றும், இதை பெற்றோராகிய நீங்கள் கண்டிக்க வேண்டும்” என ஒரு கடிதத்தில் எழுதி, கல்லூரிலிருந்து அனுப்பபட்டது போல் கவிதாவின் வீட்டிற்கு அனுப்பினான்.

மறுபுறம் விமலின் கடைசி ஆண்டு பட்டபடிப்பு நிறைவு பெற்றது. இருவரும் இனி கல்லூரியில் சந்திக்க முடியாது என கண்ணீருடன் விடைப்பெற்று, வீட்டிற்கு வந்தாள் கவிதா. அவளின் பெற்றோருக்கு கடிதம் கிடைக்க, கவிதாவிற்கும், பெற்றோர்க்கும் கடும் வாக்குவாதம் முற்றியது. ஒருபோதும் ‘”இந்த காதலுக்கும், கல்யாணத்துக்கும் சம்மதிக்க மாட்டோம்” என கவிதாவின் பெற்றோர் திட்டவட்டமாகவும், உறுதியாகவும் நின்றனர்.

உடனே விமலுக்கு கைபேசியில் அழைத்து, நடந்தவற்றை கூறி “நம் திருமணம் இப்போதே நடக்க வேண்டும். நீ இல்லாத வாழ்வை என்னால் நினைத்து கூட பார்க்க முடியவில்லை” என கூற “அவசரப் பட வேண்டாம். கொஞ்சம் பொறு” என விமல் கூறினாலும், அவனுக்கோ கவிதாவை திருமணம் செய்து கொள்ள மனமில்லை. கவிதா அன்று இரவே அவளுடைய ஆடைகளை எடுத்துகொண்டு, விமல் இருக்கும் இடத்திற்கு சென்றுவிட, அதை சற்றும் எதிர்பாராத அவன் அதிர்ந்து போனான். “நாம இப்போ இங்க பேச வேண்டாம். வெளிய போய் பேசலாம்” “ஏன்” “என்னோட ஃபிரென்டும் அவனுடைய லவ்வரும் வந்துருக்காங்க. நாம அவர்களை டிஸ்டர்ப் பண்ண வேண்டாமே” என கூறி வேறு இடத்திற்கு அழைத்து சென்றான் விமல். ஆனால் அறையுனுள் இருந்தது, செந்தில் கூறிய அந்த பெண் தான் என்பது கவிதாவிற்கு தெரியாது.

வேறொரு இடத்தில் இருவரும் அமர்ந்தனர். “நான் இனி உன்ன விட்டு போக மாட்டேன். நான் வீட்டுக்கு போனால், என்னை வேற யாருக்காவது கல்யாணம் செய்து வச்சுருவாங்க” “கொஞ்சம் பொறு கவி. உன்னுடைய படிப்பு முடியட்டும்” “இல்ல விமல்!! கல்யாணத்து அப்புறம் படித்து கொள்ளலாம். நான் இனி என் வீட்டிற்கு போக மாட்டேன்” என இருவரும் விவாதித்து கொண்டனர். முடிவில் “என் பெற்றோர் திருமணத்துக்கு சம்மதிக்கவில்லை என கடிதம் எழுதி வைத்துவிட்டு, தான் தற்கொலை செய்து கொள்ள போவதாக கூறினாள். எங்கே இவள் தற்கொலை செய்து கொண்டால், தானும் காவல் நிலையத்தில் பதில் சொல்ல வேண்டுமோ? என பதறி திருமணத்திற்கு சம்மதித்தான் விமல்.

மறுநாள் காலையில் செந்திலின் கைப்பேசிக்கு அழைத்த வசந்தி, அன்று காலை பதினோறு மணிக்கு, விமலுக்கும், கவிதாவிற்கும் திருமணம் எனவும், அவள் என்னை அழைத்திருப்பதாகவும், நீங்களும் “வருவிங்களா”? என கேட்க, இதுவரை நடந்ததையும் விமலின் உண்மை ரூபத்தையும் வசந்தியிடம் கூறினான் செந்தில். செய்வதறியாமல் திணறினாள் வசந்தி. எப்படியாவது அத்திருமணத்தை நிறுத்தி விடவேண்டும் என புறப்பட்டான்

வசந்தியை எங்கு திருமனத்க்கு கவிதா அழைத்திருந்தலோ அதை திருமண பதிவு அலுவலகத்திற்கு சென்றான் செந்தில். அங்கு கவிதாவின் பெற்றோர் மற்றும் விமலின் சில நண்பர்களும் இருந்தனர் கவிதாவின் பெற்றோரை கண்டயுடன் அவர்களின் சம்மதத்துடன்தான் இந்த திருமணம் நடக்கிறதோ என சந்தேகத்துடன் அவர்களின் அருகில் சென்றான் ஆனால் அவர்கள் முகத்தில் பதட்டமும் கோபத்துடனும் இருபதையும் அருகில் விமலின் நண்பர்கள் சிலர் கைபெசில் விமலை தொடர்புகொல்ல முயற்ச்சி செய்துகொண்டிருந்தனர் அதில் அவன் கைபேசியை அனைத்து வைத்துருபதாக பேசிகொண்டதையும் கவனித்தான் அன்னேரம் “நிங்க யாரை பார்க்கணும்” என கவிதாவின் தந்தை கேட்க “நான் கவிதாவின் கல்யாணம் இங்க நடக்கிறத கேள்வி பட்டேன் அதாம் பார்க்கலாம்னு வந்தேன்” “யாரு சொன்ன இங்க கல்யாணம் நடக்குதுன்னு” “என்னுடைய பிரென்ட் வசந்தி சொன்னங்க” என செந்தில் பதில் கூறி முடிப்பதற்குள் அருகிலிருந்த கவிதாவின் தாய் கோபத்துடன் “நிங்க எல்லாம் சேர்ந்துதான என் மகள் வாழ்க்கையை இப்படி செய்திர்களா உங்க வீட்டு பெண்ணுக்கு இந்தமாதிரியான கல்யாணம் செய்து வைபிங்களா” என செந்திலை பார்த்து கேட்க “இல்லை நான்” என பதில் சொல்ல முடியாமல் திணறினான். கவிதாவின் பெற்றோருக்கு சம்மதம் இல்லை என்பதையும் புரிந்துக்கொண்டான். அவ்விடத்தில் நின்றுக்கொண்டிருந்த விமலின் நண்பன் ஒருவனுக்கு கைபேசியில் அழைப்பு வந்தது. அந்த அழைப்பில் எங்களுக்கு திருமணம் முடிந்து விட்டதாகவும் கவிதாவின் பெற்றோருக்கு தெரியக்கூடாது என்பதற்க்காக இந்த இடம் மாற்றம் நாடகம் எனவும் நண்பர்கள் என்னை மன்னித்து விடவும் நாங்கள் சில நாட்கள் வேறு ஊருக்கு செல்வதாகவும் கூறி அழைப்பை துண்டித்தான். அவன் கேட்ட விவரத்தை மற்றவர்களிடம்மும் பகிர்ந்துகொண்டான் கவிதாவிற்கு திருமணம் நடந்ததை கேட்டவுடன் அவளின் பெற்றோர் கதறி அழுதனர். அதை பார்த்த செந்திலுக்கும் கண்ணிற வர கவிதாவை அத்திருமனதிலிர்ந்து காப்பற்ற முடியவில்லையே என மனவலியோடு அவ்விடம் விட்டு நகர்ந்தான்.

மறுபுறம் விமலுடன் கவிதா வேறு ஊரில் மணவாழ்க்கையை துவங்கினால் கவிதாவின் பிடிவாதத்தாள் திருமணம் செய்தாலும் நாட்கள் நகரநகர விமலும் அவளுடன் இனிதே வாழ்க்கையை நடத்தினான் இப்படியே ஆறுமாத காலம் ஓடியது தான் பாதியில் விட்ட படிப்பை தொடர விருப்பபட்டால் கவிதா அதற்கு விமல் மறுத்து விட இருவருக்கும் வாக்குவாதம் ஏற்ப்பட்டது. படிப்பை தொடரமுடியவில்லையே தன் பெற்றோர் இதுபோன்ற எந்த விருப்பத்துக்கும் தடை செய்தது இல்லையே என வருத்ததுடன் இருந்தால். அவ்வேளையில் ஒரு தனியார் நிறுவனத்தில் விமலுக்கு வேலை கிடைத்தது.

விமல் வேலைக்கு சென்றான் முதல் நாள் என்பதால் அவனுடைய குழு தலைவரை பார்க்க வேண்டும் என்பது மேலாளரரின் உத்தரவு குழு தலைவரின் அறையை திறந்த விமலுக்கு அதர்ச்சி காத்திருந்தது அவன் விரும்பிய வேறு ஒரு பெண். செந்தில் கடற்கரையில் விமலுடன் பார்த்த அதை பெண் குழு தலைவியாக இருந்தால். இப்போது என்ன சொல்லுவது நீ இத்தனை நாளாக எங்க இருந்த என்று கேள்வி கேட்டால் என்ன பதில் சொல்லுவது என மனதோடு பேசிக்கொண்டான். “ஹாய் நிங்க இங்க என்ன பன்றிங்க” “நான் உங்க டீம்ல வொர்க் பண்ண வந்ருக்கேன்” தரலாமா வொர்க் பண்ணுங்க பட் இவேனிங் கேண்டியன்ல என்ன தனியா வந்து பாருங்க இப்போ போகலாம்” என அவள் கூற முகத்தை கைகுட்டையால் துடைத்து கொண்டு இருக்கைக்கு சென்றான்.

அன்று மாலை அவள் அழைத்த சிற்றுண்டி அருந்தும் இடத்திற்கு சென்றான் அவளும் அதே நேரத்தில் அங்க வர இருவரும் இருக்கையில் அமர்ந்தனர் “நீ எங்க போய்ட்ட ஏன் இத்தனைநாள போன் பன்னால” என அடுக்கடுக்காக கேள்விகளை கேட்டால் “நான் சொல்லுற விஷத்தை கேட்டு கோப படாதை” என என் பெற்றோர் தற்கொலை செய்து கொள்ளபோவதாக மிரட்டி என் விருப்பம்மிலாமலே எனக்கும் என் மாமா பெண்ணிற்கும் திருமணம் செய்து வைத்துவிட்டார்கள். இந்த சுழ்நிலையில் உன்னை எப்படி நான் பார்பது அதனால் தான் உன்னை தொடர்ப்பு கொள்ளவில்லை எனவும் மன்னித்து விடும்படி இன்னும் உன் நினைப்பில்தான் நான் வாழ்ந்து கொண்டிருபதகாவும் கண்ணிருடன் அவளிடம் பொய்யை கூறி அவளிடம்மும் மீண்டும் காதல் வலையை வீசினான் விமல்.

கவிதா தன் படிப்பை தொடரமுடியவில்லையே என விமலுக்கும் புதிய காதல் கிடக்க கவிதாவின் மணவாழ்க்கை சற்று விரிசல் விட ஆரம்பித்தது

ஒருநாள் கவிதா வீட்டில் இல்லாத நேரத்தில் தனக்கு உடல்நிலை சரிஇல்லை எனவும் என்னை என் மாணவி கவனிக்காமல் போய் விட்டால் எனவும் பொய்யாக கூறி அப்பெண் வீட்டிற்கு அழைத்து வாயஜாலத்தால் அவளை மயக்கி தவறான உறவு கொள்ள அந்நேரத்தில் வீட்டின் கதவை தட்டினால் கவிதா.

கதவை சரியாக தாழிடாததால், அவள் தட்டிய வேகத்தில் கதவு திறக்க, உள்ளிருந்த இருவரும் பயத்துடனும், பதட்டத்துடனும் ஆடைகளை சரி செய்து கொண்டனர். விமலை அந்த கோலத்தில் கண்டதும் கவிதாவின் கண்களில் தீ எறிவதுபோல் சிவந்துவிட்டது. அனைத்தையும் விட்டு விட்டு தன் காதல் கணவனோடு வந்த தனக்கு அவன் தந்த பரிசா இது? இல்லை பலர் புத்தி சொல்லியும் கேட்காமல் வந்த என் தவறா? அழுதுகொண்டே அவ்விடமே அமர்ந்தாள். அதே நேரத்தில் அப்பெண்ணுடன் வெளியே சென்றுவிட்டான் விமல்.

பல நாட்களாய் வீட்டிற்கு வரவோ, கவிதாவிற்கு தொலைபேசியில் அழைக்கவோ இல்லை. ஒரு நாள் காலை பொழுதில் வீட்டிற்கு வந்தான் விமல். “கவி ஐயம் சாரி. கவி நான் பண்ணியது தப்புத்தான். என்னை மன்னிச்சிரு. உன் முகத்தில் எப்படி முழிப்பது? எப்படி பேசுவது என எனக்கு தெரில. தயக்கத்தால் தான் இத்தனை நாளா வரல. ப்ளீஸ் மன்னிச்சிரு” என விமல் கூற “இப்படி பேச உங்களுக்கு வெட்கமா இல்ல. இதே தப்ப நான் செஞ்சிருந்தா நீ என்ன மன்னிப்பியா? சொல்லு…!! நீ மன்னிப்பேன்னா, நானும் மன்னிப்பேன்” என்ற அவளின் கேள்விகளுக்கு, பதில் சொல்ல முடியாமல் தலை குனிந்து நின்று கொண்டிருந்தான். “”நீ எப்படி என் முகத்தில் முழிப்பது என்று யோசிச்சியோ? அதை போலத்தான் நானும், இப்படி கேவலமான ஒருவனுக்கு பொண்டாட்டியா வாழ்ந்ததை நினைத்து, உன் முகத்தில் முழிப்பதை பாவமாக நினைக்கிறேன்”. “இந்த ஒருதடவை என்னை மன்னிச்சிரு” என விமல் கூற ”எனக்கு நீ நல்லது பண்ணணும்ன்னு நினைச்சனா, ப்ளீஸ்!! என்ன விட்டு, என் வாழ்க்கையை விட்டு போயிடு” என கவிதா கூற, முகம் நிமிறாமல், குனிந்த தலையுடன் அவ்விடம் விட்டு நகர்ந்தான் விமல்.

சில நாட்கள் நகர்ந்தபின் கவிதாவிற்கு கடிதம் வந்தது. அதில் என்னுடன் சேர்ந்து வாழ விருப்பமில்லை என்றால், விவாகரத்து கொடுக்கும்படி விமல் எழுதியிருந்தான். ஏற்கெனவே மனதாலும், உடலாலும் சோர்விலிருந்த கவிதாவிற்கு, இக்கடிதம் எந்த சோகத்தையும், வருத்தத்தையும் ஏற்படுத்தவில்லை. விவாகரத்துக்கு தயார்! என பதில் கடிதம் கொடுத்தாள். நீதிமன்றத்தின் முன் ஆர்ப்பாட்டம் நடக்க, அதை பத்திரிக்கையில் செய்தியாக்க வந்தான் செந்தில். அங்கு கவிதாவை வெகு நாட்களுக்கு பிறகு கண்டான் “ஹாய் கவிதா, எப்படி இருக்கிங்க?”. “நீங்க எப்படி இருக்கிங்க. அன்னக்கி உங்கள திட்டியதுக்கு சாரி”. “நோ ப்ராப்ளம். அதையெல்லாம் நான் எப்பவோ மறந்துட்டேன், இப்போ இங்க என்ன பண்ணுறிங்க. அவர் வரலையா?” “இல்லை” என நடந்தவற்றை விவரித்தாள் கவிதா.

“இப்போ நான் என்னுடைய டிவேர்ஸ் விசயமாகத்தான் கோர்ட்க்கு வந்துருக்கேன்” “”நல்ல யோசிச்சித்தான் இந்த முடிவை எடுத்து இருக்கிங்களா? அவரை ஒருத்தடவை மண்ணிக்கலாமே”. ”இல்ல செந்தில் என்னால விமலுடன் வாழ முடியாது. எனக்கு ஆம்பிளைகளையே பிடிக்கல. தற்கொலை செய்து கொள்ளலாம் போல் இருக்கு“ “ஓ..நோ,, கவி இந்த மாதிரி முட்டாள் தனமா பேசாதிங்க. தற்கொலை முடிவை விட்டுவிட்டு, இனிமே தான் வாழ்க்கையே தொடங்க போகிறது என எண்ணி இதையே ஆரம்பமாக எடுத்துக்குங்க. ஏற்கெனவே நீங்க அவசரப்பட்டு எடுத்த முடிவுத்தான், உங்களோட இந்த நிலைமைக்கு காரணம். எல்லா ஆம்பிளைகளும் நல்லவங்களும் இல்லை. அதுக்காக எல்லாரும் கேட்டவங்களும் இல்லை”

அதற்கு கவிதாவின் கண்ணீர் மட்டும் தான் பதில். அவளின் நிலைமையை புரிந்து கொண்ட செந்தில் “நீங்க கவலை படாதிங்க. உங்களுக்கு நான் என்னால் முடிந்த ஹெல்ப் பண்றேன். நீங்க பாதியில் விட்ட படிப்பை தொடர, எல்லா ஏற்பாடுகளையும் நான் செய்றேன்’’ “ரொம்ப தேங்க்ஸ் செந்தில்” “உங்க ஃபிரென்ட் வசந்தி கூட உங்களை கேட்டாங்க. பட் நீங்க எங்க இருக்கிங்கன்னு யாருக்கும் தெரியல” “சாரி செந்தில், என்னுடைய இந்த நிலைமையில் யாரையும் பார்க்க விரும்பல. அதான் நான் யாரையும் காண்டக்ட் பண்ணல” “பரவாயில்லை கவி\, நடந்ததை ஒரு பாடமாக எடுத்துக்கிட்டு, இனி வரும் வாழ்க்கையே நல்லதாக அமைக்க முயற்சிப்போம்” என அவளுக்கு ஆறுதலாகவும், உதவியாகவும் இருந்தான் செந்தில். பாதியில் விட்ட படிப்பையும், வசந்தியின் நட்பையும் தொடர்ந்தாள் கவிதா.

அவளின் பழைய வாழ்க்கையிலிருந்து விடுபட்டு, புதிய வாழ்க்கையை தொடர செந்தில் அவளுக்கொரு படிக்கட்டாக விளங்கினான். வாழ்க்கை சக்கரம் வேகமாக சுழன்றது. கவிதாவிற்கு தான் தனியாக வாழ்க்கையை வாழ முடியும் என நம்பிக்கை பிறந்தது. அதோடு செந்திலின் உண்மையான அன்பையும் புரிந்து கொண்டாள். ஒருநாள் அவளின் விவாகரத்து வழக்கிற்காக கோப்பு ஒன்றை எடுக்க, செந்திலின் வீட்டிற்கு வந்தாள். அந்நேரம் வீட்டில் செந்தில் இல்லை என்பதால், அவனின் கைபேசிக்கு அழைத்தாள் “நான் உங்க வீட்டிற்கு வெளியில் நிற்கிறேன்”. “அங்க ஜன்னலின் ஓரமாக சாவி இருக்கு. எடுத்து ஓபன் பண்ணி உள்ள உட்காருங்க” என அவன் கூற, வீட்டினுள் அமர்ந்தாள். கண்களில் தென்பட்ட சில புத்தகங்களை எடுத்து படித்தாள். அதற்கு இடையில் அவளுக்கொரு டைரி கிடைத்தது, அதில் செந்திலின் பழைய வாழ்க்கை குறிப்பிட்டு இருந்தான்.

அடுத்தவர்களின் டைரியை படிப்பது தவறு என மூடும் வேளையில் அதில்அவளின் பெயர் தென்பட்டது. மீண்டும் படிக்க ஆரம்பித்தாள். எங்கே என் காதல் தேவதை? என அவளை கண்ட நாள் முதல் இன்று வரை அதில் எழுதியிருந்தான். தான் தான் அவனின் தேவதை என்பதை புரிந்து கொண்ட கவிதா, என் மீது இவ்வளவு அன்பு வைத்திருக்கும் செந்திலை, உதா சீனபடுத்தியதை நினைத்து கலங்கினாள்., இது வரை அவனின் விரல் நுனிகூட நம் மீது படவில்லையே அவனின் கண்கள்க்கூட தவறாக பார்க்கவில்லையே எதுவாயினும் தான் செந்திலின் அன்புக்கு தகுதியானவள் இல்லை. தான் அவனின் காதலை சரியான தருணத்தில் ஏற்கவில்லை. அவருடன் சேர்ந்து வாழ தகுதியற்றவள் என அவள் மனதோடு பேசிக்கொண்டாள். எப்படியாவது அவருக்கு வேறு ஒரு நல்ல பெண்ணை திருமணம் செய்து வைக்க வேண்டும் எண்ணினாள்.

செந்தில் வீட்டினுள் நுழைந்தான். “சாரி கவிதா, உங்களை ரொம்ப நேரம் காக்க வைச்சுட்டேன்” ”இல்ல அப்படியெல்லாம் ஒன்னும் இல்லை செந்தில்” “நீங்க கேட்ட ஃபைல் இதுதான், கண்டிப்பா உங்களுக்கு நாளைக்கு நல்ல தீர்ப்பு கிடைக்கும். டைவேர்ஸ் நிச்சயம் கிடைக்கும்” “தேங்க்ஸ் செந்தில், நீங்க எனக்காக ரொம்ப ஹெல்ப் பண்ணிருக்கிங்க”” “பரவாயில்லை” “நான் உங்க அனுமதியில்லாமல் ஒரு விஷயம் பண்ணிட்டேன். அதக்கு முதல்ல மன்னிப்பு கேட்டுக்கிறேன்” “என்னன்னு சொன்னாதானே புரியும்” “உங்க டைரியை படிச்சிட்டேன். ஐயம் வெரி சாரி!! பட் அத படிச்ச உடனே தான் தெரியும், நீங்க என் மேல எவ்வளவு அன்பு வச்சிருக்கீங்கன்னு. நான் ஒன்னு சொன்னா தப்பா நினைக்க மாட்டிங்களே”” “சொல்லுங்க கவி“ “நீங்க ஒரு நல்ல பொண்ணா பார்த்து கல்யாணம் பண்ணிக்கணும் ப்ளீஸ். நான் எந்த விதத்திலும் உங்களுக்கு தகுதியானவள் இல்லை. என்னதான் டைவேர்ஸ் ஆனாலும், நான் வேறொரு ஆணோடு வாழ்ந்த வாழ்க்கை இல்லன்னு ஆகுமா?” என கவிதா கூற

“இரண்டு உடம்போடு வாழும் வாழ்க்கை மட்டுமல்ல திருமணம். இரண்டு மனமும், இளமை முதல் முதுமைவரை ஒருவரையொருவர் அன்பை பரிமாறி கொண்டு, ஒற்றுமையா வாழ்வதுதான் திருமணம். நீங்க இப்போ சம்மதம்ன்னு சொன்னா கூட, உங்களுக்கு டைவேர்ஸ் கிடைத்த உடனே திருமணம் செய்து கொள்ளலாம்” என செந்திலின் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் திணறினாள் கவிதா. “எனக்கு அதிர்ச்சியை தாங்க முடியாத நோய் இருக்குன்னு பயப்படுரிங்களா கவி” ”அப்படில்லாம் ஒன்னுமில்ல. உங்களுக்கு அதான் விருப்பம்னா, நானும் அதற்கு சம்மதிக்கிறேன்” என கூற, நாளை மறுநாள் நீதிமன்றத்தின் தீர்ப்பு வந்தவுடன், செந்திலின் சொந்த ஊர்க்கு வரும்படி விலாசதையும், அவளுக்காக எடுத்து வைத்திருந்த பச்சை வண்ண புடவையும், கொடுத்து விட்டு, வரும்பொழுது அந்த புடவை கட்டிக்கொண்டு வரவேண்டும் என கூறி திருமணத்திற்கான முன் ஏற்பாடுகளை செய்வதற்காக செந்தில் முன்கூட்டியே ஊருக்கு சென்று விட்டான்.

நீதிமன்றத்தின் தீர்ப்பு வந்தவுடன், செந்திலை பார்க்க பச்சை நிற புடவையை கட்டிக்கொண்டு, பல ஆசையோடும், கனவோடும் பேருந்தில் அமர்ந்திருந்தாள் கவிதா. அவள் அருகில் ஒரு பெண் அதே போன்ற பச்சை வண்ண புடவையை கட்டி அமர்ந்திருந்தாள். பேருந்து சில மைல்கள் கடந்தது. அருகிலிருந்த பெண், கவிதாவின் கைபேசியை கேட்டாள். “அவசரமா ஒரு ஃபோன் பண்ணனும். என் போன்ல ஜார்ஜ் இல்ல” “ஓகே இந்தாங்க” கவிதா கைபேசியை கொடுக்க, அவளும் கைபேசியில் பேசிக்கொண்டிருக்க, அதே நேரத்தில் அப்பேருந்து ஒரு விபத்தில் சிக்கியது.

வெகு நேரமாகியும் கவிதா அழைக்கவில்லையே என அவளின் கைபேசிக்கு அழைத்தான் “ஹலோ!! நீங்க யார் பேசுறது. கவிதாவோட போன் தானே இது” “நான் போலீஸ் இன்ஸ்பெக்டர் பேசுறேன். இங்க ஒரு ஆக்சிடன்ட். இந்த போன் வைத்திருந்த பெண்ணோட அடையாளம் சொல்ல முடியுமா?” “அவங்க நல்ல சிவப்பா இருப்பாங்க. பச்சை கலர் சாரி கட்டிருப்பாங்க” “சாரி சார்!! இந்த பெண் இறந்துட்டாங்க. நீங்க உடனே கிளம்பி வாங்க” விலாசத்தை கூறி கைபேசியின் அழைப்பை துண்டித்தார் காவல் ஆய்வாளர்.

ஆனால் கவிதா சிறு காயத்துடன் உயிர் தப்பியிருந்தாள். அவளின் கைபேசி மாறியதுதான் இந்த குழப்பத்திற்கு காரணம் என காவல் ஆய்வாளரின் மூலம் அறிந்த கவிதா, உடனே செந்திலின் கைபேசிக்கு தொடர்பு கொண்டாள். அவன் அழைப்பை ஏற்கவில்லை. நேரத்தை வீணாக்காமல் வேறொரு வாகனத்தில் செந்திலை காண சென்றாள். அங்கு வீடு திறக்கப்பட்டு இருந்தது “செந்தில்!! செந்தில்!!” என அழைத்துக் கொண்டே வீட்டினுள் சென்றாள். அவன் கையில் கவிதாவின் புகைப்படத்தை பிடித்தபடியே, அவனின் காதல் தேவதை இறந்துவிட்டாளோ? என அதிர்ச்சியில் இவ்வுலகைவிட்டே சென்றுவிட்டான். இதுவரை அவளின் நிழல் கூட படாத அவனின் தேகத்தில் கவிதாவின் கண்ணீர்த்துளிகள் அவனின் பாதத்தை நனைத்தது.

அவன் அவள் மேல் கொண்ட காதலை எண்ணியே, தன் வாழ்நாள் முழுவதும் அவனின் நினைவினில் அவனுக்கும் சேர்த்து சுவாசிக்கிறாள் கவிதா.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *