பிரியா பெயருக்கேற்ற அழகும், வயதுகேற்ற வாளிப்பும் உடைய அழகு தேவதை. கல்லூரி முடித்து ஒரு வருடம் ஆயிற்று, வேலைக்குச் செல்ல அனுமதியில்லை வீட்டில் ஜாதகம் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள், நல்ல வரன் வந்தால்,திருமணம் செய்துவிடலாம் என்பது பெற்றோரின் விருப்பம்.
ப்ரியாவின், அப்பா பாங்கில் வேலை, அம்மா பள்ளி ஆசிரியை.அன்பும் பண்பும் ஊட்டி வளர்த்த ஒரே மகள்.
ப்ரியாவின் நட்பு வட்டம் பெரியது, ஆனால் அருணிடம் மட்டும்தான் சுக மற்றும் துக்கம் பகிர்வாள். அருண், அழகுடன், அறிவும், நல்ல வேலையும் உடைய வீட்டின் ஒரே மகன், ஒரு வருடமாக வேலைக்குச் சென்று வருகிறான்.
அவளின் பெற்றோர், அருணிடம்தான் கேட்கவேண்டும் இவளின் மனம் பற்றி, அவ்வளவு உற்ற நண்பர்கள்.
ஆம் அதில் கலப்படமற்ற அன்பும், எதையும் எதிர்பாராத அரவனைப்பும் மட்டுமே இருக்கும். இருவரும் பள்ளி பருவத்திலிருந்து ஒரே தெரு, ஒரே கல்லூரி, ஒரே வகுப்பு.
பள்ளி பருவத்தில் ஒன்றாக விளையாடி, பதின் பருவத்தில் சண்டையிட்டு விலகி, பின் கல்லூரியில் இனைந்தனர். அன்றிலிருந்து சிறு சிறு சண்டை, இருவரிடமும் குறும்புத்தனமும், ஒருவரை ஒருவர் கலாய்த்து பின் சமாதானம் ஆகுவார்கள். சக மாணவர்கள் பொறாமைபடும் அளவுக்கு இவர்களின் புரிதல் இருக்கும். இதெல்லாம் இவர்களின் பெற்றொருக்கு பார்த்து பழக்க மாகவிட்டதால் இரண்டை யும் கண்டுகொள்வதே இல்லை.தெருவாசிகள் தான் ஒருமாதிரி பேசி இருவீட்டாரிடமும் வாங்கிக் கட்டிக்கொள்வார்கள்.
ஏய் ப்ரியா! அழைத்துக்கொண்டே வந்தான், வீட்டிற்குள். என்னடா? என்றாள். தல படம் டிக்கெட் சனிக்கிழமைக்கு இருக்கு,வர்றியா? என்றான்,
ஐய், எனக் குதித்தாள். போலாம்,போலாம், என்றாள்.
அவளின் அப்பா, அம்மா வெளியே எங்கோ போய்விட்டு வந்தனர், வாடா அருண். வேலையெல்லாம் எப்படி போயிட்டு இருக்கு?
சூப்பர் அங்கிள்! செமையா இருக்கு. இப்போ பிரமோஷன் கூட ஆயிட்டேன், என்றான்.
ப்ரியா, இந்த போட்டோவை பார், ஜாதகம் சூப்பரா இருக்காம், பொருத்தமானதாக இருக்காம், பையன் ஸடேட்ஸ்ல இருக்கானாம், இப்போ லீவுல வந்திருக்கானாம், சாஃப்ட்வேர் கம்பெனி வேலை,ஒரே பையன்தான், பேரு ஆர்யாவாம் , இதே ஊரு, நல்ல குடும்பமா தெரியுது, நாளைக்கு ப்ரியா போட்டோவை கொடுக்கனும்.என்றார்.
சரி அங்கிள் நான் கிளம்பறேன்.என்றான். இருப்பா, நீயும் பார்த்து விட்டு போ,என்றார். இருவரும் பார்த்தனர், நல்ல ஹேன்ட்சம்,நல்ல கலர், வேற எதுவும் போட்டோவில் தெரியலை எனக் கூறி சிரித்தனர்.
நாளைக்கு சொல்றேன்பா! எனக்கூறி ,அருணுடன் பேசிக்கொண்டே வெளியே சென்றாள்.
இதுக்கு என்ன ஆச்சு? வரன் கிடைக்கிறதே பெரிய கொம்பா இருக்கு நமக்கு, இவளுக்குதான் எத்தனை ஆப்ஷன்ஸ். எனக்கு இந்த மாதிரி வாய்பே கிடைக்கலை,என் நேரம் உங்கக்கிட்ட மாட்டிக்கிட்டேன் என்றாள் ப்ரியாவின் அம்மா,
எனக்கும்தான் என்று அங்கலாய்த்தான்.
அதெல்லாம் விதி, அப்படித்தான் நடக்கும், சரி,சரி,சாப்பிட வாங்க. என்று கடமையில் முழ்கினாள்.
ப்ரியா,நீ என்ன முடிவு பன்னின, இந்த பையன் ஓகேவா? என்றான் அருண்.
எப்படிடா, போட்டோவை பார்த்து முடிவு பண்ணி இவன் கூட நான் மீதம் உள்ள என் வாழ்க்கை வாழனும்.இது என்னடா? எனக்கு மட்டுமில்லே அவனும்தான் ,என்னை பற்றி அவனுக்கு தெரியவேண்டாமா, இதெல்லாம் வீட்டில் கேட்டாக்கா, அப்படித்தான் இதுவரை நடக்கிறது, நீ என்ன ஏதாவது புரட்சி பண்ணப் போறியா? இல்ல வேற ஏதாவது ஐடியா இருக்கான்னு கேட்கிறாங்கடா? என்ன செய்யறது,எப்படி் சம்மதிக்கிறது? எனக்கு புரியலைடா, நீ என்ன நினைக்கிறே, என்றாள்.
ப்ரியா,நான் அட்வைஸ்லாம் பண்ணல, அது உனக்குத் தேவையுமில்லை, மண வாழ்க்கை நம்பிக்கை மட்டுமே அஸ்த்திவாராமாகக் கொண்டு கட்டப்படுவது.
முதலில் நீ நம்பித்தான் மண வாழ்வில் இறங்கவேண்டும், பின் அவனையே சார்ந்து , இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு பின் நம்பிக்கை வந்து வாழ்வதுதான் முழுமையான வாழ்க்கை.
இந்த புரிதலில் வெற்றி பெறாதவர்களே மண வாழ்க்கையில் தோற்கிறார்கள்.
இதற்கு காதல் கல்யாணங்கள் விதிவிலக்கு, அங்கு ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டப் பின் பின் தான் உண்மையான காதலே ஆரம்பமாகிறது என்றான்.
என்னடா,ரொம்ப அனுபவம் பட்ட மாதிரி பேசற, எனக்குத் தெரியாம ஏதாவது இருக்கா?
இருக்கு ,உனக்கு தெரியாது, அப்புறமா சொல்றேன் என்று பொய் சொன்னான்.
சீ போடா, நீயெல்லாம் அதுக்கு லாயக்கே இல்ல.
சனிக்கிழமை மாலை சினிமாவுக்கு பைக்கில் கிளம்பினார்கள்,
ஏய் சாப்பிட்டு போடி,என்றாள் ப்ரியாவின் அம்மா,
வெளியிலே நல்ல சாப்பாடா சாப்பிட்டுக்கிறோம்.
என்னங்க! கல்யாணம் பேச ஆரம்பிச்சாச்சு, இப்பவாது இவங்களை இப்படியெல்லாம் போகக் கூடாதுன்னு சொல்லக்கூடாதா?
ஏன் சொல்லனும்? அவங்கள மாதிரி நண்பர்கள் யாரும் எனக்கு கிடைக்கலியேன்னு, அவங்கள பார்த்தா எனக்கு பொறாமையா இருக்கு, கொஞ்ச நாள் தான், கல்யாணம் ஆகிட்டா இவனை ரெம்ப மிஸ் பண்னுவா!
தியேட்டரில் ஏக கூட்டம், முன்பதிவு செய்ததால், எளிதாக உள்ளே சென்றனர்,
இவர்களுக்கு அருகில் ஒரு ஜோடி, நேற்று போட்டோவில் பார்த்த அதே ஆர்யா, கூட வந்து இருப்பது ,அவனுக்கு ஏற்ற அழகும் ,உயரமும், செதுக்கிய உடலும், ஜீன்ஸ் மற்றும் டாப்ஸில் அவளின் அழகை மேலும் கூட்டியது, இவன் அவர்களை பார்க்கையில், அவளும் இவனை கவனித்துவிட்டாள், ஒரு நிமிடம் இருவரும் பார்த்துக் கொண்டது இவன் உடலில் ஏதோ மாற்றம் நிகழ்வதாக உணர்ந்தான் ,உடல் லேசானது, மீண்டும் மீண்டும் பார்க்கத் தோன்றியது.
ஆர்யா, கூட இருப்பது யார்? அவன் வீட்டில் ஒரே பிள்ளை, சகோதரியாக இருக்க முடியாது,காதலியா? அப்படின்னா ஜாதகம் பார்த்து போட்டோ ஏன் கொடுத்தாங்க? ஒன்றும் புரியல,என யோசித்தான். ப்ரியா இதை எதை பற்றியும் அறியாமல் அமர்ந்து இருந்தாள்.
இடைவேளையில் இவன் பாப்கார்ன் வாங்க வெளியே வந்தான், ஆர்யா கூட வந்த பெண்னும் வந்தாள்,கேட்கலாமா? என யோசித்து, கேட்டு விடுவோம் என முடிவெடுத்து,
ஹலோ,ஐ ஆம் அருண் என்றான்
ஹாய் ,மீ சுதா என்றாள்.
தல படம் பார்க்க வத்திங்களா? என வழிந்து, சிரித்தான்.
இல்ல தலைலே பேன் பார்க்க வந்தேன், என கலாய்த்தாள்.
சாரிங்க, உங்க பக்கத்திலே இருக்கிறாரே அவர் யார்? னு கேட்டான்,
ஏன், என்னோட ஃப்ரண்ட் என்றாள்.எங்க வீட்டுக்கு பக்கத்து வீட்டுப் பையன்.
வேற ஒன்றும் இல்லை,அவங்களுக்கு பெண் பார்க்கிறாங்க, போட்டோ என் ஃப்ரண்ட் வீட்டுக்கு வந்தது, அதான் சந்தேகமாக கேட்டேன், சாரி என்றான்.
நீங்க கூடத்தான் யாரு கூடவோ வந்திருக்கீங்க, ஆனா நான் பார்த்த உடனே நீங்க இருவரும் ஃபரண்டஸ்னுதான் புரிஞ்சுகிட்டேன். நீங்க என்னை பார்த்ததையும் நான் பார்த்தேன்.
சாரி, கொஞ்சம் திரும்பி பார்க்க வைக்கிற மாதிரிதான் இருக்கிங்க. அதான்.
ஹலோ! ஓகே ஓகே!
நீங்க என்ன பன்றீங்க? யாரையாவது லவ், பன்றீங்கிளா? என நேரடியாக அவள் கேட்டாள்,
ஐயோ! அதெல்லாம் இல்லைங்க!
நான் பைனல் இயர் பன்றேன், அதுவரை வைட் பண்னு எனக் கூறி சிரித்துக்கொண்டே உள்ளே சென்றுவிட்டாள்.
அருணும் உள்ளே வந்தான், எங்கோ பறப்பது போல் உணர்ந்தான், இவனுக்கு தல படமும் புரியலை , தலை கால் புரியலை, மனது பிசைந்தது.
ஏய், என்னாச்சு,ஒரு மாதிரி இருக்க, சிரிக்கிற, என்ன? என்றாள் ப்ரியா.
ஒன்னுமில்லை, படத்தைப் பார் என்றான்.
அந்த பக்கம் திரும்பவே பயம் கலந்த உணர்வு, இப்படி பளீச் னு யாரு சொல்லுவா?
இவள் சொல்லிட்டாளே! னு சந்தோஷமாவும்,டென்ஷனாகவும் இருந்தான்.
வண்டி எடுக்குமிடத்தில், மீண்டும் சந்தித்தனர்,
ஹாய்! என்றான், அவர்களைப் பார்த்து, அவர்களும் நின்றார்கள்,
நான் அருண், என தன்னை ஆர்யாவிடம் அறிமுகமானான்,
இவங்க ப்ரியா, என அவளை அறிமுகப்படுத்தினான்.
ப்ரியா ,இவர் ஆர்யா, இவங்க சுதா ,என அறிமுகபடுத்திக் கொண்டனர்.
நால்வரில் இருவர் பிரியா மனமில்லாமல் பிரிந்தனர்.
ஏய், அருண், அவன் யாருப்பா? ஆள் செமையா இருக்கான்?
யாருடா அவ? சுதா , அவன் ஆளா?
உனக்கு எப்படி தெரியும், இப்படி ஒருத்தி இருக்கான்னு எனக்கு சொல்லவே இல்லையே எனக் கேட்டவாறே வண்டியிலேறி புறப்பட்டனர்.
லூசு ,அவங்களும் ஃப்ரண்ட்ஸ்தான், அந்த ஆர்யோவோட போட்டோவைதான் நேத்து உங்க அப்பா காண்பிச்சாங்க,
அப்படியா! முன்னாடியே சொல்லியிருந்தா அவன் கூட இன்னும் பேசியிருப்பேனே,
நாளக்கு உங்க அப்பாவிடம் அப்பாவிடம் போய் சொல்லிடு அப்புறமா போய் பேசிக்கோ, என்னை விட்டுடு,
ஆமாம்,அந்த சுதாவின் பார்வையே சரியில்லையே உன்னை என்ன அப்படி பாக்கிறா? என்றாள்,
நாங்க லவ் பண்ண போறோம் ,என்றான்,
இது எப்போடா? என்றாள்.
இடைவேளையில் இருந்து, என்றான் .
நண்பர்கள் காதலிக்கலாமாடா ?
கூடாது, தோழியின் கணவனின் தோழியை காதலிக்கலாம் என்றான்.
ஏய், உன் ஆளுக்காக என்னை அவனுக்குக் கட்டி வைக்கிறதுன்னு முடிவே கட்டிட்டியா! என முதுகில் செல்லமாக குத்தினாள்.