கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்  
கதைப்பதிவு: March 11, 2015
பார்வையிட்டோர்: 26,443 
 
 

இன்றோடு சரியாக மூன்று வருடம் ஓடிவிட்டது . இந்த மூன்று வருடங்களில் பல விஷயங்கள் மாறி இருந்தன என்னை சுற்றியும் என்னிடத்திலும்.

இந்த மூன்று வருடங்களில் இந்த இடம் தளைகீழாக மாறி போய்விட்டது. இப்போது இந்த வீதி பரபரப்பாக இயங்கி கொண்டு இருகின்றது. சாலையை அகல படுத்துவதற்காக இங்கே இருந்த அரசமரம் அகற்றப்பட்டு இருகின்றது. வெட்டவெளியாக இருந்த இடத்தில இப்போது அழகிய பூங்கா வந்துவிட்டது. அரசமரம் பக்கத்தில் இருந்த முருகன் அண்ணன் டீ கடை இடம் மாறி பத்து அடி தள்ளி நிற்கின்றது. முருகன் அண்ணன் வளர்த்த மணியை (நாய்) இப்போதெல்லாம் பார்க்க முடியவில்லை. இப்படி எல்லாம் மாறி இருகின்றது.

என்னையும் … இதோ இப்போது நான் அமர்ந்து இருக்கும் இந்த நாற்காலியையும் தவிர்த்து.

இதே நாற்காலியில் அன்று என்னோடு அவளும் இருந்தால்.

நம் வாழ்கையில் சிலர் ஏன் சில சந்தர்பங்களில் வந்து போகிறார்கள் என்று கடைசி வரை நம்மால் உணர இயலாது. அப்படி வந்து போன தடமும் இறுதிவரை நம்மை விட்டு விலகாது.

அப்படி என்னுள் வந்து போனவள் தான் என் ஆனந்தி.

அவள் வந்து போன பதிவு ……

ஒரு பன்னாட்டு நிறுவனத்தின் காபி அறையில் ஒரு இளைஞர் அணி பேசி கொண்டு இருந்தது. என்னடா குணா உங்க வீட்ல உனக்கு கல்யாணம் பண்ணுவாங்கள மாட்டாங்களா.

நீ தான் கவிதை எல்லாம் எழுதி எங்கள கொல்லுறியே, அந்த மாதிரி எதாச்சும் முயற்சி பண்ணி பாக்கலாம் இல்ல.

ஏன்டா இப்படி … கவிதைய படிச்சிட்டு நல்ல இருக்குன்னு சொல்லிட்டு பேஸ்புக் ல லைக் போடறதோட முடிஞ்சி போயிடுது நம்ப ரசிகர் வட்டாரம்… அதுக்கு மேல நீ யோசிக்கிறமாதிரி எல்லாம் ஒண்ணும் இல்லை என்றான் குணா.

இதோ இன்னக்கி கூட ஒரு பொண்ண பாக்க போறோம்.. சும்மா நிறமா இருந்த போதுமாடா … பாத்த ஒடன புடிக்கணும்.. பாத்துட்டு வந்த பிறகு அவ ஞாபகமாகவே கெடக்கணும்… அவ தான் டா …. நம்பல பாதிச்சவ … மீதியெல்லாம் அதுக்கு அப்புறம் தான்…

சில நிமிடங்கள் அரட்டை தொடர்ந்தது … அதோடு சபையும் கலைந்தது ….

அன்று மாலை நண்பர்களின் வாழ்த்துகளுக்கும் கேலிகளுக்குக்ம் இடையே வழக்கத்தை விட சற்று முன்னதாகவே புறப்பட்டான்.

வழக்கத்துக்கு மாறாக வானிலை, ஒருவித மகிழ்ச்சியான மனநிலையில் இருந்தான் குணா. இன்று அவளை பார்க்க போகிறோம் என அவன் உள் மனசு சொல்லிக்கொண்டே இருந்தது.

தனது பைக்கில் சென்று கொண்டு இருக்கும் போதே காற்றோடு சேர்ந்து மண்வாசனையும் அவன் போகும் திசையில் அதிகமாய் அடித்தது. சற்று நேரத்தில் லேசாக மழை தூவ ஆரம்பித்தது.

பெண் பார்க்க போவதால் எங்கும் ஒதுங்காமல் மழைக்கு முன்னால் போய் விடலாம் என தனது பைக்கின் வேகத்தை கூட்டினான். பத்து நிமிடம் கூட அவனால் தாக்குபிடிக்க முடியவில்லை. நல்ல மழை பொழிய துவங்கிவிட்டது.

இனி பயனில்லை என்பதை உணர்ந்து எங்கேனும் ஒதுங்கலாம் என முடிவெடுத்தான். சாலையின் ஓரத்தில் ஒரு மரத்தின் அரவணைப்பில் சிலர் நின்று கொண்டு இருந்தார்கள். அவனும் அங்கு சென்று அடிக்கலாம் புகுந்தான். வீட்டில் இருந்து கைபேசி அழைப்பு வந்தது அம்மாவிடம் இருந்து. எங்க ராஜா இருக்க, இங்க நல்ல மழை… இன்னக்கி பொண்ணு வீட்டுக்கு போறது நாபகம் இருக்கு இல்ல… பாத்து கவனமா வா என்றால் ….

குணா அம்மாவிடம் பேசிக்கொண்டு அரை குறையாய் கவனித்தான்… ஹெல்மெட் அணிந்த படி ஒரு பெண் மழையில் நனைந்தபடி அவசர அவசரமாக தன் பைக்கில் இருந்து இறங்கி அவன் அருகில் வந்து நின்றால். ஒரு பக்கம் மண்வாசம் … மறுபக்கம் காற்றோடு சேர்ந்த அவள் வாசம்… முதல் முறையாக அவன் உணரும், பெண்மையை உணர்த்தும் நிமிடங்கள் அங்கே நகர்ந்து கொண்டு இருந்தது.

அவள் யார் என்று தெரியவில்லை… மழைக்காக அவள் துப்பட்டாவை தலையில் போட்டு இருந்ததால் முகம் முழுவதுமாய் தெரியவில்லை. காதில் அணித்து இருந்த கம்மல் லேசாக அசைந்து கொண்டு இருந்தது. குளிரால் அவள் நடுங்குவதை அவள் கம்மல் அசைவுகள் சொன்னது. அவளது தேகம், நிறம், தங்கதிருக்கு சமமானது என அவள் அணிந்திருந்த தங்க சங்கிலி சொன்னது . கை விரல் மோதிரம் அவள் எளிமை சொன்னது, அவள் உடுத்தி இருந்த ஆடை அவள் குணம் மற்றும் இயல்பை சொன்னது. இப்படி அந்த அணிகலன்களே அவளை பற்றி மொத்தமும் சொல்வதை போல உணர்ந்து கொண்டு இருந்தான். மழையில் கரைந்து கொண்டும் இருந்தான்.

லேசாக மழை விட துவங்கியது. ஒவ்வொருவராக களைய துவங்கினார்கள். நகர மனம் இல்லாமல் அங்கேயே நின்று கொண்டிருந்தான். அவள் புறப்பட தயார் அவத்தை உணர்ந்து ஏதோ பத்து வருட பழகிய உறவின் பிரிவை போல உணர்ந்தான். ஒரு சில வயதானவர்களை தவிர்த்து அனைவரும் நகர்ந்துவிட்டார்கள். மீதம் இருந்தவர்களும் நகர ஆயித்தம் ஆகிக்கொண்டு இருந்தார்கள்.

அவள் அவளது பைக்கின் அருகில் சென்று தன் பைக்கை ஸ்டார்ட் செய் முயற்சித்தால். குணாவும் அவனது பைக்கின் அருகில் சென்றான்.

இரண்டு மூன்று முறை முயற்சித்தும் அவள் பைக் ஸ்டார்ட் ஆகா வில்லை. குணா அவள் அருகில் சென்று நான் வேணுமானால் ஒரு முறை முயற்சிக்கவா என கேட்டான். சரி என்று சொல்ல மனம் இல்லாமல் அரைமனதாய் தலை அசைத்தால். பைக் ஸ்டார்ட் ஆகிவிடக்கூடாது என்று வேண்டிக்கொண்டே ஸ்டார்ட் செய்ய முயற்ச்சித்தான். என்றும் இல்லாமல் இன்று குணாவின் வேண்டுதல் கடவுளின் காதுகளில் விழுந்து இருக்கும் போல. அவன் வேண்டுதல் நிறைவேறியது. பைக் இறுதிவரை ஸ்டார்ட் ஆகவில்லை.

பைக் ஸ்டார்ட் ஆகமாட்டேன்கிறது. மழையில் நனைந்ததால் ஏதேனும் பிரெச்சனை என்று நினைக்கின்றேன். மெக்கானிக் வந்து பார்த்தல் தான் சரி ஆகும் என சொன்னான் குணா. குணா சொல்லும்போதே அவளின் கண்கள் கலங்க துவங்கிவிட்டது. அவள் கண் மை கதவுகளை மெல்ல மெல்ல அவள் கண்ணீர் உலுக்கிக்கொண்டு இருந்தது.

நீங்கள் எங்கே போகவேண்டும் என்று கேட்டான் குணா. கண்களை சிமிட்டிய படியே தன் அழுகையை மறைத்துக்கொண்டு பேசத்துவங்கினால். அவள் மஹிந்திரா சிட்டி யில் இருக்கும் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்வதாகவும், தன் வீடு வண்டலூரில் இருப்தாக நா தழு தழுத்த குரலில் சொன்னால்.

உங்களுக்கு சரி என்றால் நான் ஒரு யோசனை சொல்கிறேன் என்றான் குணா.

மழை மீண்டும் வரும் போல இருகின்றது. பக்கத்தில் தான் மறைமலை நகர் இரயில் நிலையமும் உள்ளது. அதுவரை உங்கள் பைக்கை டோ செய்து கொண்டுபோய் விடலாம். மறைமலை நகர் இரயில்வே நிலையத்தில் பைக்கை விட்டுவிட்டு இரயிலில் போய்விடுங்கள். நாளை மெக்கானிக்கை அழைத்து வந்து வண்டியை சரிசெய்து கொண்டுபோகலாம் என்றான்.

எனக்கு இதெல்லாம் பழக்கம் இல்லை என்றால். அது மட்டும் இல்லாமல் பயமாகவும் இருகின்றது என்றால்.

எது பைக்கை டோ செய்வதில் பயமா இல்லை என்னோடு சேர்ந்து பயணிப்பதில் பயமா என்று சிரித்தபடி கேட்டான். சட்டென சிரித்த அவள் கண்களால், இமைகலில் இருந்த கண்ணீரும் வெட்கப்பட்டு கிழே விழுந்தது.

வேறு யாரேனு கேட்டு இருந்தால் சரி என்று சொல்லி இருப்பால என்று தெரியவில்லை. குணாவுக்கு மறுப்பு சொல்ல முடியவில்லை.

அடுத்த ஐந்தாவது நிமிடம் சாலை நகர துவங்கியது. ஆமாம் அவனை பொறுத்தவரை சாலை தான் நகர்ந்து கொண்டு இருந்தது. அவன் அங்கே தன் நின்று கொண்டு இருந்தது. மெல்ல சாரல் மழை தூவி கொண்டு இருந்தது.மண்வாசனை கலந்த காற்று.இருண்ட மேகங்கள். சாலையில் உற்சாகத்தில் குணா.

பதினைந்து நிமிட பயணம் பதினைந்து நொடியாக தெரிந்தது. மறைமலை நகர் இரயில் நிலையத்தை அடைந்தார்கள். அவசர அவசரமாக பைக்கை ஸ்டாண்டில் நிறுத்திவிட்டு, குணாவுக்கு நன்றி சொன்னாள். இன்று தன்னை பெண் பார்க்க வருகின்றார்கள் என்றும், அதனால் தான் அவள் சிறிது பதற்றம் அடைந்துவிட்டால் என்றும் சொல்லிவிட்டு, மீண்டும் ஒரு முறை நன்றி சொல்லியபடி ரயில் நிலையத்தை நோக்கி நடக்க துவங்கினால்.

பேச ஏதோ துவங்கி அமைதியானான் குணா. அங்கு இருந்து மெதுவாக நகர்ந்து அருகில் இருந்த முருகன் டி கடையில் ஒரு டி சொன்னான். அன்று தான் முருகன் அண்ணன் (டீ மாஸ்டர்) அறிமுகம் கிடைத்தது. முருகன் அண்ணன் கொடுத்த டீ கிளாஸ்சை கையில் வாங்கினான்.

சுட சுட இருந்த டீ யில் ஒரு துளி குளிர்ந்த மழை துளி விழுந்தது. குணாவின் மனநிலையும் அப்படிதான். அவனுள் இப்போது அவள் ஒரு துளியாய் இறங்கிவிட்டால். இருவரின் சந்திபிப்ப்புகாக மழை சிறிது நேரம் ஒதுங்கி இருந்திருக்கும் போல. அவள் நடக்க துவங்கிய நொடியில் இருந்து மழையின் வேகம் மெல்ல மெல்ல அதிகரித்தது. மழையில் அவள் நினைவுகள் கரைந்துவிடாமல் அவள் நினைவுகளை பத்திரமாக தன் இதயத்தில் வைத்து பூட்டி மழையில் நனைந்த படியே அங்கு இருந்து புறப்பட்டான் குணா .

நல்ல மழையால் அன்று அவர்கள் பெண் பார்க்க போகவில்லை. மழையில் நனைந்த குணாவுக்கு இரண்டு நாட்கள் நல்ல குளிர் காய்ச்சல். இரண்டு மூன்று நாட்கள் ஓய்வு எடுத்துக்கொண்டு வீட்டிலே இருந்துவிட்டான். இரண்டு மூன்று நாட்களும் அவள் நிவைவுகலாகவே இருந்தான்.

இரண்டு மூன்று நாட்கள் கழித்து அலுவலகத்திற்கு சென்றான். அலுவலகத்தில் என்னடா பொண்ணு பாக்க போறேன்னு சொல்லிட்டு கல்யாணமே பண்ணிட்டியா என்று நண்பர்கள் கிண்டல் செய்தார்கள். ஆனால் அவை எதுவும் அவன் காதுகளில் விழுந்ததாக தெரியவில்லை.

மாலை வீட்டுக்கு கிளம்பினான். அவளை பெண்பார்க்க வருவதாக சொன்னாளே. என்ன ஆகி இருக்கும். அவளை பிடித்து போய் இருக்குமா. அவளை பிடிக்கவில்லை என்று யாரேனும் சொல்லுவார்களா என தனக்குள்ளே பேசிக்கொண்டே சென்று கொண்டு இருந்தான்.

மூன்று நாட்களுக்கு முன்பு மழைக்கு ஒதுங்கிய இடத்தை கடக்கும் போது அவள் அங்கே நிற்பது போல உணர்ந்தான். அது வெறும் கற்பனை என்று நினைக்கும் போதே குணாவை நோக்கி அவள் கை அசைத்தாள். தயக்கத்தோடும் ஆசையோடும் குணா அவள் அருகில் சென்றான். நீங்க எங்க இங்க என்றான் குணா.

மூன்று நாட்களாக உங்களுக்காக தான் இதே இடத்தில காத்துகொண்டு இருக்கின்றேன் என்றாள். குணா உறைந்து போனான். கற்பனையில் கரைந்து கொண்டு இருந்தான். உறைந்துகிடந்த குணாவை அவளின் அடுத்த வார்த்தைகள் உருக செய்தன.

அன்று பைக்கை ஸ்டாண்டில் போட்டுவிட்டு அவசரத்தில் போய்விட்டேன். பைக்கின் ஸ்டான்ட் ஸ்லிப் உங்க கிட்டயே இருக்கு. அதனால என்னால பைக்கை எடுக்க முடியவில்லை என்றாள். உங்க பேர் , வேலை செய்யும் அலுவலகம் பற்றி எந்த விவரமும் இல்லாததால், தினமும் மாலை நேரத்தில் உங்களுக்காக இங்கு காத்து நிற்கின்றேன். இன்று மட்டும் நீங்கள் வரவில்லை என்றால் அடுத்து போலீஸ் கம்ப்ளைன்ட் தான் என்று சொல்லி சிரித்தால்.

குணா பைக்கை ஸ்டார்ட் செய்தான். முதல் முதலாக ஒரு பெண், அதுவும் அவனை வேற்று உலகை அறிமுகம் காட்டியவள் அவனுடன் அவன் பைக்கில். கனவுகள் மெய்ப்படும் என்பதின் பொருள் புரிந்தது. இம்முறை அவர்கள் நகர்ந்து கொண்டு இருந்தார்கள், ஆனால் சாலை அங்கேயே இருபதாக உணர்ந்தான் குணா.

போகும் வழியிலேயே ஒரு மெக்கானிக்கை அழைத்து சென்றார்கள். ஸ்டான்ட் ஸ்லிப் கொடுக்க பட்டது. மெக்கானிக் தன் வேலையை துவங்கினான். குணவும் தான்.

சாரி.. சொல்ல மறந்துட்டேன் . என் பேர் குணா என்றான்.

ஹலோ நான் ஆனந்தி. முதல் முறையாய் தன்னை அறிமுக படுத்திக்கொண்டாள் ஆனந்தி.

அடுத்த வினாடிக்குள் ஆயிரம் முறை அந்த பெயரை மனதுக்குள் சொல்லி பார்த்திருப்பான் குணா.

பைக் ரெடி ஆகா கொஞ்சம் நேரம் ஆகும் நினைக்கின்றேன். ஒரு டீ சாப்பிடலாமா என்றான் குணா. தலை அசைத்தால் ஆனந்தி. அண்ணா ரெண்டு டீ என்றான் குணா.

ஸ்டான்ட் ஸ்லிப் இருந்திருந்தால் எனக்காக காத்திருக்க மாட்டிங்க இல்ல என்றான் குணா. இல்லைன்னு சொல்ல மாட்டேன், ஆனா தெரில என்பதே என் பதில் என்றால் ஆனந்தி.

ஆவி பறக்க டீ அவர்கள் முன்னால் வந்தது.

இருவருக்கும் இடையிலான முதல் உரையாடல் துவங்கியது.

சுமார் அரைமணி நேரம் பேசி இருப்பார்கள். அந்த அரைமணிநேரமும் குணா தன்னை மறந்து இருந்தான். முதல் அறிமுகம் போல அது தெரியவில்லை. எதார்த்தமாக இருவரும் தங்களை பற்றி பரிமாற துவங்கி விட்டார்கள். இருவருக்கும் ஒரு புரிதல் இருப்பதாகவே உணர்ந்தார்கள். பல கேள்விகள் கேட்ட குணா, ஆனந்தியை பெண் பார்க்க வந்ததை பற்றி ஒரு கேள்வி கூட கேட்கவில்லை . அதுவும் புரிதலின் உச்சமே.

அரைமணி நேரத்தில் பைக் ரெடி ஆனது. இருவரும் விடை பெரும் நேரம் வந்தது. தொலைபேசி என்னை பரிமாறி கொண்டார்கள். நட்பு தொழில்நுட்பம் மூலம் தொடர்ந்தது.

மாலை துவங்கும் உரையாடல் பல நேரங்களில் விடியற்காலை வரை தொடர்ந்தது. அவ்வப்போது முருகன் கடை அருகே சந்திப்புகளும் நிகழ்ந்தது. காலம் கடந்தது. காதல் கனிந்தது. ஏனோ தானோ என்ற காதல் என்று இல்லாமல் இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்த, பக்குவப்பட்ட காதல் அது.

இப்படி இருந்த அவர்களுக்குள் அவ்வப்பொழுது சிறு சிறு கருத்து வேறுபாடுகள், இருந்தும் உறவு இனித்தது. நிகழ்வது எல்லாம் அவனுக்காகவா என்று அவன் அறியவில்லை, ஆனால் அவளாள் என்பது மட்டும் உணர்ந்தான் . தூரத்தில் இருந்தால் நினைவுகளால் எரித்தால். அருகில் வந்தால் மௌனத்திலே கொன்றால்.

ஊகத்தால் அவளை புரிந்துகொள்ள முயற்ச்சித்தான், புரிந்து விட்டால் விலகிவிடுவோம் என மீண்டும் முயற்சித்ததை மறந்துவிட்டான்.

சில நாட்களாக இருவருக்கும் ஆனா உரையாடல் குறைய துவங்கியது.

பல சந்தர்பங்களில் ஆனந்தியின் பேச்சுக்கு பலமுறை தேடியும் விளக்கம் கிடைக்கவில்லை.

ஒரு நாள் முருகன் டீ கடையின் அருகே இருந்த நாற்காலியில் இருவரும் அமர்ந்து இருந்தார்கள். இருவரும் மொவுனமாகவே இருந்தார்கள். ஆனந்தி துவங்கினாள். நமக்குள் நிறைய வேறுபாடு வந்துவிட்டது குணா. உனக்கான தேர்வு நான் இல்லை என்று அடிக்கடி தோன்றுகின்றது. நான் போய்டுறேன் குணா. என்னை மன்னித்து விடு என்றாள்.

காரணம் புரியாமல் குணா அதிர்ச்சி அடைந்தான். ஆனந்தியின் அணைத்து காரணங்களுக்கும் பதில் அளித்தான். உரையாடல் தொடர்ந்தது தவிர, உறவு விரிசல் விட ஆரம்பித்தது. கண்களில் கண்ணீர் கலங்க ஆனந்தி சொன்ன கடைசி வார்த்தைகள்… நான் போகணும் குணா. நீ புரிந்து கொள்வாய் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கு குணா. நான் போகணும் குணா என்று சொல்லியபடி ரயில் நிலையத்தை நோக்கி மெதுவாக நடக்க துவங்கினால்.

அவள் வந்து போன பிறகு ……

அன்று முதல் அவளுடனான தொடர்பு நின்று போனது. எவ்வளவு முயற்சித்தும் அவளை தொடர்புகொள்ள முடியவில்லை.

மூன்று வருடங்கள் கடந்தும், அவளுடன் பயணித்த தூரத்தை தாண்ட முடியவில்லை. இன்று வரை அவள் விட்டு சென்ற நினைவுகள் தினமும் என்னை தொடர்ந்து வந்துகொண்டு இருகின்றது. அவள் நினைவுகள் அதிகரிக்கும் போதெல்லாம், இந்த நாற்காலியில் வந்து அமர்ந்தாள் கரணம் இன்றி மனம் லேசாகும். இன்றும் அவள் பேசிய அந்த கடைசி வார்த்தைகள் மெதுவாய் கேட்டுக்கொண்டு இருகின்றது. டேப் ரெகார்டர்றில் ரீவைண்ட் செய்வது போல அவள் பேசிய கடைசி நிமிடங்களை ரீவைண்ட் செய்து அவளை புரிந்துகொள்ள முயற்சிகின்றேன். எத்தனை முறை முயற்சித்தாலும் ” நீ புரிந்து கொள்வாய் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கு குணா ” என்று அவள் சொன்ன வார்த்தைகள் மட்டுமே திரும்ப திரும்ப கேட்கின்றது.

இந்த மூன்று ஆண்டுகளில் அவளை தவிர்த்து யாரும் என்னை கடந்து செல்லவில்லை என்று பொய் சொல்ல விருப்பம் இல்லை, இருந்தும் அவள் பதிவிட்டு சென்ற இதயத்திற்கு மாற்று வேறு யாரும் இல்லை என்பது மட்டும் நிஜம்.

ஏதோ ஒரு எதிர்பார்ப்பிலும், நம்பிக்கையிலும் என் வாழ்கை நகர்ந்து கொண்டு இருக்கின்றது. அவளை மீண்டும் என் ஆனந்தியாக பார்க்க நேர்ர்ந்தல் இதோ அவளுக்கான என் வார்த்தைகள்.

உன்னோடு இடைவிடா பேசிக்கொண்டே

இருக்க வேண்டும்

பேசும்போதே விளையாட்டாய்

சண்டை பிடிக்க வேண்டும்

உனக்காக மாட்டும் கவிதை எழுத வேண்டும்

எழுதிய கவிதையை தனிமையில்

உன் குரலில் கேட்க வேண்டும்

உன் அருகில் அமர்ந்து மௌனமாய்

நொடி விடாமல் உன்னை பார்த்துக்கொண்டே

கரைந்து போக வேண்டும்

நான் கரையும் தருணத்தில்

என்னை நீ மீட்டெடுக்க வேண்டும்

உன்னிடம் சின்ன சின்ன பொய் சொல்லி

மாட்டிகொள்ள வேண்டும்

மாட்டிக்கொண்டு

நீ கொடுக்கும் தண்டனையை

ஏற்றுக்கொள்ள வேண்டும்

உன் சமையல் சுவையை

உன் உள்ளங்கையில் இருந்து

சுவைத்து பார்க்க வேண்டும்

சுவைத்த ருசியை

உனக்கே திருப்பி கொடுக்க வேண்டும்

தலைகோத வரும் உன் விரல்களை

தட்டிவிட வேண்டும்

மீண்டும் மீண்டும் முயற்சித்து

நீ கொடுக்கும் முத்தத்தின்

ஈரம் காய்ந்து போகாமல்

பார்த்துக்கொள்ள வேண்டும்

உன்னோடு என் தலையணையை

பகிர்ந்து கொள்ள வேண்டும்

என் பெயரை நீ தூக்கத்தில்

முனங்குவதை கேட்டு

அந்த மயக்கத்தில் நான்

உறங்க வேண்டும்

Print Friendly, PDF & Email

6 thoughts on “ஆனந்தி

 1. ரொம்ப அனுபவிச்சு எழுதி இருக்கீங்க.. நல்லா இருந்துச்சு ..உங்கள் எழுத்து பயணம் தொடர வாழ்த்துக்கள் .

  தமிழ் ல நிறைய எழுத்து பிழை.. அது கதையின் ஜீவனையே கெடுக்குது . தயவு செய்து திருத்தி கொள்ளவும். நன்றி

  1. உங்கள் கருத்துக்கு நன்றி. நிச்சயம் திருத்தி கொள்கின்றேன்


   அன்புடன்
   பாரதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *