“Hello ! Evening ஏழு மணிக்கு மேல free யா??”
மறுமுனையிலிருந்து வந்த பதில் அவளுக்கு மகிழ்ச்சியான ஒன்றாய் இருந்ததை அவளது முகம் காட்டியது.
“Thank you! வழக்கமான இடம் ! Ok.. Bye..”
“Ms.ANITA..MBA…VICE PRESIDENT..”
இந்த பெயர் பலகைக்குப் பின்னால் உட்கார பட்ட பாடு அனிதாவை ஒரு ஆணவக்காரியாக மாற்றியிருந்தால் தப்பேயில்லை.
“யார் எப்படி விமர்சித்தாலும் எனக்கு கவலையில்லை “என்ற முகம்தான் அனிதாவின் அடையாளம். அதை யாருக்காகவும் மாற்றிக்கொள்ள தயாராக இல்லை நவீன் உட்பட.!!
இந்த கதைக்கு அனிதாவின் பின்னணி அவசியம் என்று நினைப்பவர்களுக்கு மட்டும்.
“அனிதா அப்பா வளர்த்த பெண். அப்பா அம்மா எல்லாமே மனோகர் தான். அப்பாவின் கனவை நனவாக்கியவள். ஆனால் அவளுடைய கனவு??? அவளுக்கு என்று கனவு இருந்ததா என்ன??
அப்பா சொன்ன சில புத்திமதிகளை இன்று வரை கடைப் பிடிப்பவள்.
“கண்டிப்பாக வாழ்வில் ஒரு குறிக்கோள் இருக்கணும்.”
“எந்த விமர்சனத்தையும் personal ஆக எடுத்துக் கொள்ளாதே ! அது உன் முன்னேற்றத்துக்கு ஒரு முட்டுக்கட்டை!”
ஏந்த பிரச்சனையும் ஒரு நாள் ஆறப்போட்டால் ,பாதி பிரச்சனை தானாகவே தீர்ந்து விடும்”
“Believe in yourself”
அனிதா தனியாக வளர்ந்த பெண். தைரியத்தின் மொத்த பிரதிநிதி.
ஆறு மணிக்கு பார்க்க வேண்டிய ஃபைல்ஸ் எல்லாம் பார்த்து முடித்து எழுந்திருக்கும் போது M.D. யின் அவசர அழைப்பு.
“அனிதா.. அடுத்த வார Hong Kong conference papers ready! Just go through once! Sorry I’m delaying you”
அனிதா ஃபைல்களை எடுத்துக் கொண்டு அறைக்குள் வந்தாள். தொலைபேசியை எடுத்து
“நவீன் ! ஸாரி…. அரை மணி லேட்டாகும்”என்றவளின் முழு கவனமும் வேலையில்.
பத்தே நிமிடத்தில் வேலையை முடித்து M.D. யின் பார்வைக்கு அனுப்பி விட்டு ஒப்பனை அறைக்குப் போய் லேசாக முகத்தை டச்சப் பண்ணிக் கொண்டு கிளம்பி விட்டாள் நவீனைக் காண.
அனிதாவின் நவீனும் சந்திக்கும் இடங்களை விரல் விட்டு எண்ணி விடலாம். ஆர்ப்பாட்டம் இல்லாத அமைதியான இயற்கை எழிலுடன் கூடிய Rain Tree க்குத்தான் முதலிடம்.
நவீன் வழக்கம் போல் ஏற்கனவே வந்து காத்திருந்தான். ஒரு நாளும் அவளை காக்க வைத்ததில்லை. அப்போதுதான, ஆபீசுக்குக் கிளம்புவது போல ஃப்ரெஷ்ஷாக இருந்தான்.
“நீ மாற மாட்ட நவீன்”என்று மனசுக்குள் சொல்லிக்கொண்டே”Hi Honey “என்று அணைத்துக் கொண்டாள்.
“என்ன Ani , you look stressed out”??
“ஆமாம் நவீன்! எனக்கு சில சமயம் என்ன ஆகிறதென்றே புரியவில்லை. எதை நோக்கி இந்த பயணம் என்றே தெரியவில்லை. இன்னும் என்னவெல்லாம் இழக்கப் போகிறேன் ? உனக்குத் தெரியும் என்னுடய பலம் , பலவீனம் எல்லாம் !”
“Ok , cool down dear ! என்ன சாப்பிடலாம்? உனக்கு பிடிச்ச தயிர் வடை , ஆப்பம் தேங்காய் பால்…. அப்புறம்…….??”என்றான்.
அனிதா அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
“உனக்குப் பிடித்த”
இந்த வார்த்தைகள் அவளை எங்கேயோ இழுத்து சென்றது.
***
மனோகர் ஒரு self-made man. சாதாரண குடும்பத்தில் பிறந்து விடாமுயற்சியால் தன் புத்திசாலித்தனம் ஒன்றை மட்டுமே மூலதனமாக்கி முன்னுக்கு வந்தவர். ஒரு MNC யின் சேர்மன் ஆகி ஓய்வு பெற்றவர்……
அனிதாதான் மகன், மகள் எல்லாம். அனிதாவை தாயின் பிரிவை நினைக்கவே நேரம் தரவில்லை. Next, next எனும் தொடர் ஓட்டப்பந்தயத்தில் உணர்ச்சிகளுக்கு இடம் ஏது?
பள்ளியிலிருந்து வரும்போதே ஏதாவது ஒரு பாராட்டுடன் வருவது வழக்கமான ஒன்றானது.
விலையுயர்ந்த வெளி நாட்டு மது வகைகள் தராத போதையை மகளின் வெற்றிகள் தந்தன. ஆனால் அனிதாவுக்கு சில சமயம் அது சலிப்பைத் தந்தது. ஆரம்பத்தில் போராடி பெற்ற பாராட்டுக்கள் அதிக முயற்சி இல்லாமலே மடியில் வந்து விழுந்தது.
மகளுக்கு தேவை சேலஞ்ச் என்று புரிந்தது. B.Com. முடித்ததும் MBA சேர்ந்து இருபத்தைந்து வயதில் பெரிய கார்ப்பரேட் ஒன்றில் ஆறு இலக்கம் சம்பளம் வாங்கும் பெண்ணை பார்த்து பார்த்து பூரித்து போவார். அவள் திருமணம் பற்றி மறந்தே போனார்.
Office ல் ஒரு workshop.
“Are you a leader?”என்ற தலைப்பில். மகாபலிபுரத்தில் பெரிய நிறுவனங்கள் சார்பில் தேர்ந்தெடுத்த சில தகுதி வாய்ந்த candidates.
அனிதா நவீன் சந்திப்பு அங்குதான் நிகழ்ந்தது.
நவீனும் ‘ Motivational speakers’ ல் ஒருவன்.. மதிய உணவின் போதே இருவருக்குள்ளும் ஒரு ஈர்ப்பு ஏற்பட்டு விட்டது.
அடிக்கடி அவர்கள் சந்தித்தார்கள். ஒரு கட்டத்தில் இருவரும் வாழ்க்கையில் இணைய தீர்மானித்ததும் அப்பாவிடம் சொல்ல தீர்மானித்தாள்.
“அப்பா ! Meet Mr.Naveen ! My close friend!”.
மனோகர் யாரையும் அனிதா வீட்டுக்கு கூட்டி வந்து பார்த்தில்லை.
பார்த்ததுமே ஈர்க்கும் Personality.!“
அப்பா ! நவீன் ஒரு freelance writer. Philosophy யில் Ph.D.”
மனோகருக்கு ஆர்வம் கொஞ்சம் குறைந்து விட்டது. அவருடைய நட்புவட்டாரத்தில் நவீன்பொருந்த வாய்ப்பேயில்லை!
நவீன் வீட்டை பிரமிப்புடன் பார்த்தான். வீட்டின் ஒவ்வொரு செங்கல்லும் ‘ அனிதா.. அனிதா ‘ என்றது. எங்கு திரும்பினாலும் அனிதா அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
டென்னிஸ்…. கராத்தே…. பரதநாட்டியம் , என்று பல வேடங்களில் !!
“நவீன் ! What do you like to drink? Wine… Scotch… or just beer ?”
“அப்பா நவீன் teatoteller !”
சிரித்துக்கொண்டே சொன்னாள் அனிதா!
மனோகர் இங்கே தனக்கு என்ன வேலை என்று நினைத்துக் கொண்டார்.
அனிதாவும் அப்பாவும் மாற்றி மாற்றி ஒருவரையொருவர் புகழ்ந்து பேசிக்கொண்டு இருந்தது நவீனுக்கு வேடிக்கையாய் இருந்தது.
டின்னர் முடிவுக்கு வரும்போதுதான் ஞாபகம் வந்தவர் போல்,
“By the way , நவீன் உன்னைப் பற்றி சொல்லவேயில்லையே “என்றார்.
“அனிதாவைப்போல என்னுடய பயோடேட்டா அவ்வளவு பெரிசு கிடையாது. அம்மாதான் என்னை வளர்த்து ஆளாக்கினவர்.
St.Stphenes கல்லூரியில் Philosophy major. இரண்டு வருஷம் Columbia University யில் journalism. மறுபடி இங்கே Madras University யில் Ph.D. இப்போ freelance journalist ! அம்மா போய் இரண்டு வருஷம் ஆகிறது.
“அப்பா இவன் இந்தியாவின் ‘ one of the top motivational speakers’ …..”
“Well done my boy!!!!!”
அவனை அப்புறம் மறந்தே போனார்.
ஒரு மாசம் கழித்து club ல் இருந்து வீட்டிற்கு திரும்பும் வழியில் ,
“அப்பா do you remember Naveen ? அன்றைக்கு வீட்டுக்கு சாப்பிட வந்தானே ! அவனும் நானும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து விட்டோம்! Ofcourse only with your permission! and blessings!
ஒரு சின்ன ஜெர்க்…. வண்டியை சமாளித்து ஓட்டினார்.
அப்பாவிடம் காரில் சொல்லியிருக்க வேண்டாமோ என்று தோன்றியது.
மனோகர் இதை எதிர்பார்க்கவில்லை. அப்போதுதான் முதல் முறையாக மனைவி பார்வதி இல்லாததை உணர்ந்தார்.
திருமணம் ராஜா முத்தையா மண்டபத்தில் முடிவானது. நவீனிடம் கூறியபோது
“As you wish”என்றான்.
அப்போது ஆரம்பித்த “உனக்கு பிடித்தால் எனக்கும் OK” எப்போதுமே தொடர்ந்தது. ஆரம்பத்தில் அவள் ஒரு ராஜகுமாரி போல் உணர்ந்தாள்.
வீட்டில் அடிக்கடி பார்ட்டி கொடுத்து பழகியவள். நவீன் அவளுடைய நண்பர்களுடன் சகஜமாக பழகினான்.
பார்ட்டி முடிந்ததும் யாரையாவது கொண்டு விட கிளம்பி விடுவாள். திரும்பி வருவதற்குள் பார்ட்டி நடந்த சுவடே தெரியாமல் வீட்டை spic and span ஆக மாற்றி விடுவான்.
நவீன் குழந்தைகளுடன் பொறுமையாக விளையாடுவான். அனிதா நேர் எதிர். ஆரம்பத்திலேயே சொல்லி விட்டாள். அவளுக்கு அதில் அதிக ஆர்வம் இல்லை என்று தெரிந்தபின் நவீன் அந்த பேச்சையே எடுத்தில்லை.
அனிதாவுக்கு தான் அளவுக்கதிகமாக அவனை use பண்ணுவது போல ஒரு குற்ற உணர்ச்சி தோன்ற ஆரம்பித்தது.
ஒரு நாள் அவனிடம் கேட்டு விட்டாள்
“நவீன் உனக்கென்று ஒரு ஒப்பீனியன் கிடையாதா? நான்தான் என் அப்பாவின் கனவை என் கனவு என்று ஏமாந்து என் ஆசை என்னவென்றே தெரியாமல் வாழ்ந்து விட்டேன். எல்லாம் தெரிந்த நீ உன் ஆசைகளை குழி தோண்டி புதைக்காதே! நான் சுயநலமாகவே வளர்ந்த பெண். என்னால் மற்றவர்கள் உணர்ச்சிகளை புரிந்து கொள்ள முடியவில்லை.
Sorry Naveen! You are too good to be true and too good for me too!!!!”
அதற்கப்புறம் அனிதா ரொம்ப மாறி விட்டாள். அவனிடமிருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலக ஆரம்பித்தாள்.
அனிதா அடிக்கடி அப்பாவைப் போய்ப் பார்க்க ஆரம்பித்தாள். மகள் முன்னைப் போல மகிழ்ச்சியாக இல்லை என்பது புரிந்தது. அவளாக சொல்லட்டும் என்று விட்டு விட்டார்.
அனிதாவே ஒரு நாள் மனதில் உள்ளதை கொட்டிவிட்டாள்.
“அப்பா ! என்னால் நவீனுடன் சேர்ந்து வாழ முடியும் என்று தோன்றவில்லை. ரொம்ப நல்லவன்ப்பா! அவனுடைய உணர்ச்சிகளுடன் விளையாடுகிறேனோ என்று தோன்ற ஆரம்பித்து விட்டது. தினம் தினம் குற்ற உணர்வுடன் வாழ முடியும் என்று தோன்றவில்லை. He is way too good for me ! நாங்கள் நண்பர்களாக பிரிய முடிவு செய்து விட்டோம்.”
இது வரை மகளின் வெற்றி செய்திகளையே கேட்டு பழகியவருக்கு இதைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அவள் சொந்த வாழ்க்கையில் தோற்று விட்டதாய் எண்ணினார். அதற்கு தான் தான் முழு பொறுப்பு என்ற எண்ணம் அவரை ஒரு வருஷம் கூட உயிருடன் இருக்க விடவில்லை.
அனிதா திரும்பவும் அப்பா வீட்டுக்கு வந்து விட்டாள். ஆனால் மாதம் ஒரு முறை நவீனை சந்திக்க தவறியதில்லை.
இதற்கிடையில் அனிதாவுக்கு ஏற்பட்ட இரண்டு உறவுகள் கசப்பான அனுபவத்தில் முடிந்தது. நவீனிடம் எல்லாம் சொல்லிவிடுவாள். வேலையில் முழு கவனம் செலுத்தி VP level க்கு உயர்ந்தாள்
“Hello !!!! என்ன வந்ததிலிருந்து mood out?”
“ஒன்றுமில்லை! எனக்கு இரண்டு வருஷம் London branchல் posting வந்திருக்கு ! போலாமா வேண்டாமா என்று ஒரே குழப்பமாயிருக்கு”
“நீ தான் சரியான முடிவு எடுப்பவளாயிற்றே ! என்ன குழப்பம்….???
“உன்னால் தான் குழப்பம்..”
“என்னாலா”
“ஆமாம்! உன்னை விட்டு பிரிந்து போவதை நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை.!”
“அனிதா ! Don’t be silly ! நீயா இப்படி பேசுகிறாய்?. உன் அப்பா இருந்தால் ரொம்ப சந்தோஷப் போட்டிருப்பார்.”
“நீ என்னை மிஸ் பண்ண மாட்டியா ?”
“Ofcourse! ஆனால் உனக்கு வரும் நல்ல வாய்ப்பு எனக்கு மிக்க மகிழ்ச்சி!”
“இந்த மாசம் முடிவை சொல்ல வேண்டியிருக்கும்.!”
“நீ உனக்குப் பிடித்த முடிவை எடுப்பாய் என்று நம்புகிறேன்’”
அடுத்த பத்து நாட்கள் ரொம்பவே பிஸியாக போனது.
திடீரென்று ஒரு நாள் நவீனிடமிருந்து தொலைபேசி அழைப்பு….
“அனிதா உன்னை முக்கியமாக பார்க்க வேண்டும் ! எப்போது?”
“Sorry நவீன். இன்றைக்கு no chance!
நாளை மாலை … ! After 7 ! எங்கே?”
“நான் வீட்டிற்கே வருகிறேன் ! Hope it’s ok with you!”
அப்பா போன பின் நவீன் அந்த வீட்டில் நுழைவது இதுவே முதல் முறை.
அடுத்த நாள் சரியாக ஏழரைக்கு நவீன் வீட்டிற்கு வந்தான். கூடவே ஒரு அழகான இளம் பெண். !
“அனிதா ! இவள் கவிதா. என் தூரத்து சொந்தம். ஒரு விபத்தில் இரண்டு கால்களையும் இழந்து விட்டாள். பரிதாப அடிப்படையில் நிச்சயிக்கவில்ல. ! இருவரும் விரும்பிதான் இந்த முடிவு.அடுத்த வாரம். Register marriage! முக்கிய நண்பர்களுக்கு மட்டும் விருந்து.. ! உன்னிடம் இது பற்றி பேச முடியாமல் போனதற்கு வருந்துகிறேன் !”
“Congrats! “தன்னிச்சயாய் வந்த வார்த்தையை தொடர்ந்து சில நிமிடங்கள் மௌனம். அப்படியே அந்த பெண்ணை கட்டிக் கொண்டாள்.
“கவிதா ! உலகத்திலேயே அதிர்ஷ்டசாலி நீயாகத்தான் இருப்பாய் ! நவீன் , I’m so happy for you! உன்னுடைய கனவுகள் எல்லாம் நனவாக என்னுடைய வாழ்த்துக்கள். !”
அதற்கு மேல் அங்கு நின்றால் அவள் நொறுங்கி விடுவாள் என்று கிளம்பி விட்டான்.
அன்றைக்கு இரவு அழுததுதான் முதலும் கடைசியும். இனி அவள் கனவு காண்பாள்.
அவளுக்கென்று ஒரு கனவு !!!!!