கதை கேளுங்கள்

 

கதை கேளுங்கள் என்ற பகுதிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். வாசகர்களும் தங்களுக்கு பிடித்தமான சிறுகதை அல்லது ஆசிரியர்கள் தாங்கள் எழுதிய சிறுகதையை சொந்த குரலில் பதிவு செய்ய ஓர் வாய்ப்பு.

Sirukathaigal YouTube Channel:

https://www.youtube.com/sirukathaigal

Recently, we added many audio stories and planning to add more. Kindly subscribe to our YouTube channel and extend your support. Your subscription will encourage us to do more.

சமீபத்தில், பல ஆடியோ கதைகளைச் சேர்த்துள்ளோம், மேலும் பலவற்றைச் சேர்க்க திட்டமிட்டுள்ளோம். தயவுசெய்து சிறுகதைகள் YouTube சேனலுக்கு குழுசேரவும், உங்கள் ஆதரவை நீட்டவும். உங்கள் சந்தா மேலும் எங்களை ஊக்குவிக்கும்.

கதை சொல்லி பயன்கள்:

 • பார்வையற்றோருக்கு சிறுகதைகள் கேட்கும் வாய்ப்பு.
 • ஆசிரியர்களின் குரலில் கதை கேட்கும் வாய்ப்பு.
 • சிலர் கதை சொல்லுவதில் வல்லவர்களாக இருப்பர். அவர்களுக்கு இந்த வாய்ப்பு ஒரு வரப்பிரசாதமாக இருக்கும்.
 • ஒருவர் கதை சொல்லி கேட்பது ஆனந்தமாகயிருக்கும், அந்த அனுபவமே அலாதியானது.

நீங்கள் செய்ய வேண்டியது இது தான்:

 • சிறுகதைகள் தளத்தில் உள்ள ஒரு சிறுகதையை தேர்வு செய்யுங்கள்.
 • அக்கதையை உங்கள் சொந்த குரலில் பதிவு செய்யுங்கள்.
 • பத்து நிமிடத்துக்கு மேல் மிகையாகாமல் பார்த்து கொள்ளுங்கள்.
 • உங்கள் குரல், எந்த ஒரு இடையூறு இல்லாமல் துல்லியமாக இருத்தல் அவசியம்.
 • பின்னணியில் எந்த ஒரு இசை கோர்ப்பும் செய்யாதீர்கள். உங்கள் குரல் மட்டுமே ஒலிக்க வேண்டும்.
 • பின் வரும் பகுதியில் உங்களை பற்றிய விபரங்களுடன் குரல் பதிவை சமர்பிக்கவும்.

உங்கள் குரல் பதிவை sirukathaigal@outlook.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.

** தள ஆசிரியர் உங்கள் குரல் பதிவை மேற்பார்வை இட்ட பின்னரே சிறுகதைகள் YouTube தளத்தில் உங்கள் குரல் பதிவை காண முடியும்.

** உங்கள் குரலை பதிவு பண்ணாமல் இருக்க தள ஆசிரியர்க்கு உரிமை உண்டு.

** ஒரே கதைக்கு பலர் குரல் பதிவை அனுப்பி இருந்தால், அதில் சிறந்த குரல் உள்ளவர் தேர்ந்தெடுக்கப்படுவர்.

இத்தளத்தில் இல்லாத சிறுகதையை கதை கேளுங்கள் பகுதியில் இணைக்க விரும்பினால் எங்களை முதலில் தொடர்ப்பு கொள்ளுங்கள்.

10 thoughts on “கதை கேளுங்கள்

 1. வணக்கம்

  இதுவரை உங்களால் தேர்வு செய்ய பட்ட குரல் பதிவை எப்படி பார்ப்பது.

  நன்றி…

 2. நாம் கூறும் கதைகள் கற்பனைக் கதைகளாக இருக்கலாமா?

  1. கற்பனை கதையாக இருக்கலாம், சிறுகதைகள் தளத்தில் உள்ள கதையாக இருக்கலாம், புதிய கதையாகவும் இருக்கலாம். குரல் பதிவை அனுப்பும் போது, அதனை எழுதியும் அனுப்புங்கள் அல்லது அந்த தள முகவரியும் அனுப்புங்கள். மிக்க நன்றி.

 3. ஐயா,
  வணக்கம்… நான் இங்கு எனது லிங்க் அனுப்பியுள்ளேன்…ஒலி வடிவத்தில் கதை என்பது கதையை அப்படியே வாசிப்பதா? அல்லது பொருளை புரிந்து கொண்டு கதை சொல்வதா ? என்பதில் சந்தேகம் எனது யூடியூபில் இரண்டு வகையும் உள்ளது ….சிலருக்கு புத்தகத்தில் இருப்பதை அவரக்ளுக்கு பதில் யாரவது படித்து ஒலி வடிவத்தில் கேட்க பிடிக்கும் ஏனெனில் நாமாக கதையை சொல்லும்பொழுது சில மாறுபாடுகள் ஏற்படும் சிலருக்கு கருத்தை மட்டும் தெரிந்துகொண்டால் போதும்…. எனவே தங்களுடைய தேவாயயை நான் அறியேன் …. எனவே தயை கூர்ந்து எனது ஒளியலையில் உள்ளதை கேட்குமாறு வேண்டிக்கொள்கிறேன் .

  நன்றி ….

  காயத்ரி இளையராஜா

  1. நீங்கள் பதிவு செய்த கதையின் ஒலிவடிவத்தை sirukathaigal@outlook.com என்ற ஈமெயில் முகவரிக்கு அனுப்புங்கள். மிக்க நன்றி.

 4. marangalai potruvom endra karuthai valiyurithi naan ezhuthiya POOVARASU endra sirukathaiyai ennudaiya kuralil ingu pathivu seiya virumbukiren.Nandri !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *