வே.சிவராஜா

 

395824_298980896826830_957010741_nகொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் இலக்கியக் குழுவும் இலங்கையர்கோன் பரிசில் நிதியமும் இணைந்து வீரகேசரி பத்திரிகையின் அனுசரணையுடன் நடாத்திய இலங்கையர்கோன் நினைவு அகில இலங்கைச் சிறுகதைப் போட்டியில்   வேலாயுதம் சிவராஜாதமிழ்பௌத்தன் எனும் தனது சிறுகதைக்காக முதலிடம் பெற்று எமக்குப் பெருமை சேர்த்துள்ளார்.

ஊர்காவற்றுறை பிரதேச சமூகசேவை உத்தியோகத்தரான இவர் நீண்ட காலமாக சிறுகதைகளை எழுதி வருவதுடன் நாடளாவிய ரீதியில் நடாத்தப்படும் பல்வேறு போட்டிகளிலும் பரிசுகளையும் விருதுகளையும் பெற்றவர்.

அரச ஊழியர் ஆக்கதிறன் போட்டியில் விரும்பித்தொலைத்தடயறி எனும் சிறுகதைக்காக தேசிய மட்டத்தில் முதலிடத்தையும் உதயன் பத்திரிகையின் வெள்ளி விழாவை முன்னிட்டு நடாத்தப்பட்ட போட்டியில்  எனக்குப்பயமாய்க்கிடக்குது எனும் கதைக்காக முதலிடத்தையும்  அதேவேளை 2011 வருட தமிழ்ச் சங்கப் போட்டியில் சுகமாகஅழவேண்டும் எனும் கதைக்காக இரண்டாம் இடத்தைப் பெற்றுக்கொண்டமையும் இவரது குறிப்பிடத்தக்க அடைவுகளாகும்.

அண்மையில் அளவெட்டி மகாஜன சபையின் வெளியீடாக இவரது தொகுப்பில் இதுவும்ஒருகதை எனும் சிறுகதை தொகுதியொன்று வெளிவந்தமையும் குறிப்பிடத்தக்கது.

கொழும்புத் தமிழ்ச் சங்கம் இலங்கையர்கோன் ஞாபகார்த்தமாக வீரகேசரிப்பத்திரிகையின் அனுசரணையில் நடாத்திய 2011 சிறுகதைப் போட்டியில்  ஆசிரியர் திரு.வே.சிவராஜா அகில இலங்கை மட்டத்தில் இரண்டாமிடத்தைப் பெற்றுக் கொண்டார்.

இலக்கியத்துறையில் சிறுகதைத் துறையுடன் கவிதை விவாதம் என பல்வேறு துறைகளிலும் தனது தடங்களைப் பதித்துள்ள சிவராஜா சமூகத்துக்கான தனது பங்களிப்பையும் நல்கத் தவறவில்லை.

அளவெட்டி அபிவிருத்தி மன்றத்தின் தலைவராகவும்  அளவெட்டி மகாஜனசபை மற்றும் அளவெட்டி அரசினர் வைத்தியசாலை நலன்புரிச் சங்கத்தின் நிர்வாக உறுப்பினராகவும் மகாஜன சபை கலைஞர் வட்டத்தின் உப செயலாளராகவும் சேவையாற்றி வரும் இவர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் வணிகமாணி மற்றும் அபிவிருத்திக்கற்கைகளில் முதுமாணிப் பட்டங்களையும் அயர்லாந்து தேசிய பல்கலைக்கழகத்தில் உளவளத்துணைக்கற்கை நெறி டிப்ளோமா பட்டமும் பெற்றவர்.

இலங்கைத்திறந்த பல்கலைக்கழகத்தில் சட்டத்துறையில்  பயின்று வருகின்றார்.

வரணி மகாவித்தியாலயத்தின் பழைய மாணவரான இவர் வரணியூரான்(ஜுனியர்) எனும் புனைபெயரில் ஆக்க இலக்கியங்களைப் படைத்து வருபவர் என்பதும் குறி்ப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *