
பிறப்பு: உத்திரன்மேரூர், தமிழ்நாடு
வசிப்பு: வாஷிங்டன் டி.சி. அருகில்
விழுப்புரத்தில் உயர்நிலைப்பள்ளி முடித்துவிட்டு, சென்னை விவேகானந்தா கல்லூரியில் இளங்கலை, முதுகலை பட்டங்கள் பெற்றபின், அமெரிக்கா சென்று கலிபோர்னியா பல்கலைக் கழகத்தில் வேதியிலில்முனைவர் பட்டம் பெற்றார். ஐந்து ஆண்டுகள் வேதியியலில் ஆராய்ச்சி முடிந்தபின், பால்டிமோர் வட்டாரத்தில்கல்லூரியிலும் பல்கலைக் கழகத்திலும் வேதியியல் பேராசிரியராக பணிபுரிந்து சில ஆண்டுகளுக்கு முன்வேலை ஓய்வு பெற்றார்.
வாஷிங்டன் – பால்டிமோர் வட்டாரத் தமிழச்சங்கத்தின் பொறுப்புகள் ஏற்று, பிறகு தலைவராகவும் இருந்தார். வட அமெரிக்க முருகன் ஆலய அறங்காவலர்களில் ஒருவராகவும், நிர்வாகக் குழுத்தலைவராகவும் பணிசெய்துள்ளார்.
தமிழ்ச்சங்கம் பதிப்பித்த ‘தென்றல்’ பத்திரிகையின் துணை ஆசிரியர்களில் ஒருவராக இருந்தார்.
‘தென்றல்’ மற்றும் அமெரிக்காவில் வெளியான ‘முல்லை’, ‘தமிழ் மலர்’ ஆகிய மாத இதழ்களில் சிறுகதைகள் எழுதியுள்ளார்.
சென்னை பதிப்புகளான கல்கி, கலைமகள் இதழ்களிலும், மதுரை பதிப்பான தமிழ்ப்பாவை இதழிலும்இவரது பல சிறுகதைகள் வெளிவந்துள்ளன. கல்கி பத்திரிகை இவருடைய ‘வாஷிங்டன் வைரம்’ மற்றும்‘மாண்புமிகு கம்சன்’ ஆகிய குறுநாவல்களை தொடர்கதைகளாக வெளியிட்டது.
இதைத் தொடரந்து, இவரதுபடைப்புகள் சில புத்தக வடிவில் வெளிவந்துள்ளன:
- ‘என்னை அடைத்(ந்)த அதிர்ஷ்டம்’ – மொழியாக்கம், கலைமகள் பதிப்பகம், சென்னை
(மூளை வாதத் தாக்குதலுக்கு ஆளான, சிங்கப்பூர் வாழ் தமிழர் திரு. விஜய் சந்தானம் தன்னுடைய கடும்முயற்சியினால் தனது வாழ்க்கையை முடிந்தளவு சீராக்கிக் கொண்டதை ஆங்கிலத்தில் ‘My Stroke of Luck’ என்ற நூலை தானே எழுதி வெளியிட்டார். இது போன்ற தாக்குதலுக்குட்பட்ட மற்றவருக்கும் தமிழாக்கம்பயன்படுமென்று வாஷிங்டன் ஶ்ரீதர் மொழி பெயர்த்தார்.) - ‘மாண்புமிகு கம்சன்’ – குறு நாவல், வானதி பதிப்பகம், சென்னை
- ‘வாஷிங்டன் வைரம்’ – குறு நாவல், அல்லயன்ஸ் பதிப்பகம், சென்னை
- ‘இதயச் சிறகுகள்’ – சிறுகதைத் தொகுப்பு, அல்லயன்ஸ் பதிப்பகம், சென்னை
கதை எழுதுவது தவிர, இவருக்கு நாடகத்துறையிலும் நிறைய ஈடுபாடு உண்டு. சிவாஜி கணேசன்கலைமன்றம் எனும் கலைக்குழுவை அமைத்து,2018ல் வெள்ளி விழா நடத்தினார்.
இதுவரை 20க்கும்மேற்பட்ட தமிழ் நாடகங்களை எழுதி, வாஷிங்டன் – பால்டிமோர் வட்டார நண்பர்களுடன் சேர்ந்து நடித்து, எல்லாநாடகங்களையும் இயக்கி அமெரிக்க நகரங்களில் மேடையேற்றியுள்ளார்.
நான்கு ஆங்கில நாடகங்களையும் எழுதி அமெரிக்க ரசிகர்களுக்கு அளித்துள்ளார்.
‘வாஷிங்டன் வைரம்’, ‘சரணம் அமெரிக்கா’ , ‘இந்தியா வந்தியா?’, ‘ஹாலிவுட் அழைக்கிறது’, ‘லவ் பண்ணுடா கண்ணா’, கல்கியின் ‘அலை ஓசை’ ஆகிய தமிழ்நாடகங்களும், ஆங்கிலத்தில் ‘Arranged Marriage’ ‘Ahimsa’ என்ற நாடகங்களும் குறிப்பிடத்தக்கவை.
ஆங்கில நாடகங்களில் அமெரிக்க நண்பர்கள் நடித்துள்ளனர். இவருடைய நாடகங்கள் பெரும்பாலும் அமெரிக்கவாழ் இந்தியரின் சமூகநிலையை சித்தரிக்கும் படைப்புகளாகவே உள்ளன.
நீண்ட இடைவெளி்க்குப்பின் மீண்டும் சிறுகதைகள் எழுதுகிறார். ‘சிறுகதைகள்.காம்’ வலைதளம்இவருக்கு உற்சாகமூட்டி, ‘பொறாமை’ ‘சாதாரணப் பெண்’ போன்ற இவரது
சிறுகதைகளை விரைவில்இணையதளத்தில் வெளியிட்டு ஆதரவளிப்பது திருப்தியளிக்கிறது.
மின்னஞ்சல்: sridar227@gmail.com