
பெயர்: நீலமேகம். வயது 71.
பூர்வீகம்: திருவாரூர் மாவட்டம், கீழமணலி என்ற கிராமம்.
தந்தை: ராமஸ்வாமி அய்யங்கார். கிராமத்து கணக்கராக இருந்தவர்.
தாயார்: ஜானகி
படிப்பு: பி.எஸ்சி (இயற்பியல்), திருச்சி தேசியக் கல்லூரி.
வேலை தேடி மும்பைக்கு சென்று இருபத்தைந்து ஆண்டுகள் பல தனியார் கப்பல் துறை அலுவலகங்களில் பணிசெய்து கோயம்புத்தூர் இடமாற்றம்.
உலகின் முதல் பெரிய கப்பல் பணியகமான, ‘மெர்ஸ்க் லைன்’ (Maersk Line) கோவை அலுவலகத்தில் பொது மேலாளராக பணிசெய்து ஓய்வு பெற்றவன்.
கப்பல் துறையில் சேர்வதற்கு முன்பு, கப்பல்களிலும் பணிபுரிந்தவன்… அப்படியாக முப்பது நாடுகளுக்கு சென்று பார்க்க முடிந்தது. (திருமணத்திற்கு முன்பு வரை)
சிறுவயதிலிருந்தே கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள் எழுதுவதில் நாட்டம் அதிகம்.
என் எழுத்துகளுக்கு முதல் பெரிய ஆதரவளித்து என்னை மேலும் உற்சாகப்படுத்தியவள் என் மனைவி சந்திரா. (2020ல் காலமாகி விட்டார்).
பிடித்த கதாசிரியர்கள்: கல்கி,சாண்டில்யன், லக்ஷ்மி, சாவி, சுஜாதா, ஜாவர் சீதாராமன், கி.வா.ஜ.
பிடித்த நடிகர்: இன்றுவரை நடிகர் திலகம் சிவாஜி கணேசன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நகைச்சுவை சக்ரவர்த்தி நாகேஷ்.
பிடித்த இயக்குனர்கள்: ஏ.பி.நாகராஜன், ஸ்ரீதர், திருலோகச்சந்தர், பீம்சிங்.
பிடித்த உணவு: தென்னிந்திய சைவ உணவு வகைகள்.
ஆன்மீகம்: முடிந்த அளவில் அனுசரிப்பது உண்டு.
அரசியல்: செய்திகளை தெரிந்து மட்டும் வைத்துக் கொள்வது. மற்றபடி பெரிய விருப்பங்கள் இல்லை.
அறிந்த மொழிகள்: தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, மராத்தி சரளம். மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஓரளவு.
கற்றுக்கொண்டு இருப்பது: ஸ்பானிஷ், ஜெர்மன் மொழிகள்.
சிறுகதைகள் தளத்தில் வெளியான கதைகள்: ரா.நீலமேகம்