நீல பத்மநாபன் (பிறப்பு: சூன் 24, 1938, கன்னியாக்குமரி மாவட்டம்), தமிழகத்தின் ஒரு முன்னணி எழுத்தாளர். புதினம், சிறுகதை, கட்டுரை, கவிதை என பல வகைகளிலும் எழுதுபவர். இலை உதிர் காலம் புதினத்துக்காக 2007ஆம் ஆண்டின் தமிழ் நூல்களுக்கான சாகித்திய அகாதமி விருது விருது பெற்றுள்ள நீல பத்மநாபன், பொறியாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்று தற்போது திருவனந்தபுரத்தில் வசித்து வருகிறார். இவரின் படைப்புகள் கடந்த 25 ஆண்டுகளாக நவீனத்துவ வடிவ இலக்கணத்தால் மதிப்பிடப்பட்டு எதிர்மறைகள் சுட்டப்பட்டுள்ளன.
தமிழில் மூத்த தலைமுறை எழுத்தாளர்களில் ஒருவரான நீல. பத்மநாபன் தமிழில் ஓர் அசலான படைப்பாளி. இதுவரை ”தலைமுறைகள்’” ”தேரோடும் வீதி” ”பள்ளிக் கொண்டபுரம்” ”உறவுகள்” உள்ளிட்ட இருபது நாவல்களும், 150-க்கும் மேற்பட்ட சிறுகதைகளும் எழுதி இருக்கிறார். இதில் ஒரு நாடகத்தையும் சேர்த்துக் கொள்வது அவசியம்.
2004-ஆம் ஆண்டு மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாதெமி விருதினைப் பெற்ற இவர், தமிழிலிருந்து ஆங்கிலம், மலையாளத்திலிருந்து தமிழ் என்று மொழிபெயர்ப்புகளிலும் இயங்கி வருகிறார். திருவனந்தபுரத்தில் 1938-ல் பிறந்த நீல.பத்மநாபன் மின்வாரியத்துறையில் இன்ஜினீயராக இருந்து ஓய்வு பெற்றவர். இவரது துணைவியார் பெயர்: கிருஷ்ணம்மாள். இவரது மகள் வழிப் பேரன் பள்ளி வயதிலேயே ஆங்கிலத்தில் சிறுகதைத் தொகுப்பு ஒன்றை எழுதி வெளியிட்டிருக்கிறான். பேரன் ஒரு லண்டன் வாசி. அந்தக் கதைத் தொகுதிக்கு நீல.பத்மநாபன் முன்னுரையும் வழங்கி இருக்கிறார். திருவனந்தபுரம் தமிழ்ச் சங்கத் தலைவர் பதவி உள்ளிட்ட பல பதவிகளில் இயங்கியவர். ராஜராஜன் விருது, ராஜா சர் அண்ணாமலை செட்டியார் விருது போன்ற விருதுகளைப் பெற்றவர். இவரது படைப்புகள் ஆங்கிலம், ஜெர்மன், ருஷ்யன் மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு பரவலான கவனத்தைப் பெற்றிருக்கின்றன.
இதுவரை நீல.பத்மநாபன் எழுதி அச்சில் வெளி வந்த பக்கங்கள் மொத்தம் 6467. இவரது சமீபத்திய நாவலான ”இலையுதிர் காலம்” இந்தக் கணக்கெடுப்பில் சேர்க்கப்படவில்லை. இவரை பற்றிய டாக்குமெண்டரியை சாகித்ய அகாதெமி இயக்கி வெளியிட்டிருக்கிறது. இந்த வருடத்திற்கான (2007) சாகித்ய அகாதெமி விருது இவரது ”இலையுதிர் காலம்” நாவலுக்கு வழங்கப்பட்டிருப்பதை ஒட்டி இச்சந்திப்பு திருவனந்தபுரத்திலுள்ள அவரது இல்லத்தில் நிகழ்ந்தது. ”எல்லோரையும் போலவே ஓர் எழுத்தாளனுக்கும் தெரியாத விஷயங்கள் பல இருக்கும். அதை வெளிச்சம் போட்டுக் காட்டுவதல்ல ஒரு சிறந்த நேர்காணல். அவனுக்குத் தெரிந்த அனுபவங்களை அவனது வாசகர்களோடு பகிர்ந்து கொள்ளும் அளவில் அமைவதே ஒரு தேர்ந்த நேர்காணல்” என்ற அளவீட்டில் இயங்கும் நீல.பத்மநாபன் அந்த வரம்பில் நின்றே பல கருத்துக்களை இந்நேர்காணலில் பகிர்ந்திருக்கிறார்.
புதினங்கள்
- தலைமுறைகள் – 1968
- பள்ளிகொண்டபுரம் – 1970
- பைல்கள் – 1973
- உறவுகள் – 1975
- மின் உலகம் – 1976
- நேற்று வந்தவன் – 1978
- உதய தாரகை – 1980
- பகவதி கோயில் தெரு – 1981
- போதையில் கரைந்தவர்கள் – 1985
சிறுகதைகள்
- மோகம் முப்பது ஆண்டு – 1969
- சண்டையும் சமாதானமும் – 1972
- மூன்றாவது நாள் – 1974
- இரண்டாவது முகம் – 1978
- நாகம்மா – 1978
- சத்தியத்தின் சந்நிதியில் – 1985
- வான வீதியில் – 1988
கவிதைகள்
- நீல பத்மநாபன் கவிதைகள் – 1975
- நா காக்க – 1984
கட்டுரைகள்
- சிதறிய சிந்தனைகள் – 1978
இலக்கிய பார்வைகள்
- திரட்டு நூல் – குரு சேத்திரம் – 1976
- தற்கால மலையாள இலக்கியம் தமிழ் – 1985
Nice