சரஸ்வதி ராஜேந்திரன்

 

பெயர்: சரஸ்வதி ராஜேந்திரன்
புனை பெயர்: மன்னை சதிரா
ஊர்: மன்னார்குடி

சரஸ்வதி ராஜேந்திரன்இந்த வலைப்பூவில் எனது சின்ன சிறுகதைகள் வலம் வரப்போகிறது நிண்ட தூரம் நடந்தாலும் பரவாயில்லை என்று குறிப்பிட்ட இடம் தேடிப்போய் காபி குடிப்பார்கள் சிலர். காரணம், அந்த காப்பி இன் தரத்திற்காக. காப்பிஇன் மனம் மனதை மகிழ்விக்கும் சுவை நாக்கில் நிற்கும், அதே போல் இந்த வலைப்பூவில் வலம் வரும் சின்ன சிறுகதைகளில் தரம், மனம், சுவை இருகிறதா என சொல்ல போகிறவர்கள் நீங்கள்.

இந்த கதைகளில் சரசம் இருக்காது, விரசமும் இருக்காது. இது காகிதப்பூவல்ல நிஜப்பூ. இதை கதை என்று சொல்வதை விட “ரியலிசம்” என்பதே பொருத்தமாகும். படியுங்கள். விமர்சியுங்கள். உங்கள் விமர்சனம் என் தரத்தை மேம்படுத்தும் உரமாக எடுத்துக்கொள்கிறேன்.

ஒரு விமர்சகியாக உள்ளே நுழைந்த நான் இன்று கிட்டத்தட்ட முந்நூறு கதைகள் பலதரப்பட்ட வார மாத இதழ்களிலும் (கலைமகள், கல்கி, சாவி, இதயம், விகடன், குமுதம்,ஜெமினி சினிமா, அமுதசுரபி, மின்மினி, குங்குமம், வாரமலர், பெண்கள்மலர், தேவதை, தேவதையின் கொலுசு, பாக்யா, இனிய உதயம் இப்படி பல).

இதைதவிர காரைக்குடி பொன்முடி பதிப்பகத்தில் வெளியான மனக்கணக்கு ,சிறுவர்களுக்கான சிறப்பு சிறுகதைகள், மாணவர்களுக்கான நீதி நூல்கள் என மூன்று நூல்கள் வெளிவந்துள்ளன

என் கதைகள் இணைய தளத்திலும், முகநூலிலும் பலரால் படிக்கப்பட்டு விமர்சிக்கப்பட்டுள்ளன.

நன்றி
சரஸ்வதி ராஜேந்திரன்
51,வடக்கு ரத வீதி மன்னார்குடி
cell:+(91) 9445789388
வலைத்தளம்: http://ilatchaambugal.blogspot.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *