கலைவேந்தன்

kalaivendhan
 

கலைவேந்தன் என்னும் பெயரில் கதைகள் கவிதைகள் எழுதி வரும் என் இயற்பெயர் எஸ் ராமஸ்வாமி. நான் புதுதில்லியில் ஆங்கில ஆசிரியனாக கடந்த 24 வருடங்களாகப் பணியாற்றி வருகிறேன். தமிழிலும் ஆங்கிலத்திலும் முதுகலைப்பட்டமும் கல்வியியல் இளங்கலைப்பட்டமும் பெற்றுள்ள நான் எழுதிய சில கதைகள் விகடனிலும் விகடன் பவளவிழா சிறப்புக் கவிதைப்போட்டியில் 7000 ரூபாய்கள் பரிசுபெற்று முதலிடத்தில் வந்த எனது கவிதையும் எனது சிறு சாதனைகளாகக் குறிப்பிடலாம்.

மூன்று நான்கு புத்தகத்தொகுப்புக்கு ஏற்ற தாக கவிதைகளும் கதைகளும் இருக்கின்றன. வாய்ப்பு வரும்போது அவற்றைப் பதிப்பிட எண்ணமுண்டு.

முத்தமிழ்மன்றம் தமிழ்மன்றம் ஈகரை தமிழ்க்களஞ்சியம் போன்ற தமிழ்த்தளங்களில் எனது படைப்புகள் தொடர்ந்து இடம்பெற்றுவந்துள்ளன. கவிதைகளுக்காக என்றே கவிதைக் கலையுலகம் என்னும் தளத்தையும் நடத்திவருகிறேன்.

கலைவேந்தன்: sramasamy2002@gmail.com