எஸ்.அர்ஷியா

 

இயற் பெயர்: சையத் உசேன் பாஷா (1959),
மகள் பெயரில் எழுதும் தந்தை.

தோட்டக்கலை சார் தொழிலை உணவுக்கும்
சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகளை உயர்வுக்கும் செய்பவர்.

முதல் நாவலான ‘ஏழரைப்பங்காளி வகையறா‘,
உருதுமொழிபேசும் தமிழ்நாட்டு முஸ்லிம்களில்
ஒருகுழுவினரைப் பற்றியது.

பண்டங்களை விளைவிக்கும் நிலத்தையே பண்டமாக்கி
கூறுபோட்டு விற்கும் பெருநிலவணிகமான ரியல் எஸ்டேட்டையும் அதில் அரசியல்வாதிகளின் கையளிப்பையும் பகிரங்கப்படுத்துவது, இரண்டாவது நாவல் ‘பொய்கைக்கரைப்பட்டி‘.

இரண்டு நாவல்களுக்குப்பின் வெளியான ‘கபரஸ்தான் கதவு‘,
இவரது முதல் சிறுகதைத் தொகுப்பு.

அரசு நிறுவனங்களால் ஆறுகளையொட்டி உருவாக்கப்படும்
கரையோரச் சாலைகள் ஆற்றங்கரை நாகரீகத்தையும் அங்கு வசிக்கும் மக்களையும் உருக்குலைக்கும் அபாயத்தையும்
ஒரு முஸ்லிம் இளைஞனின் திருமணத்தையும் காட்சிப்படுத்துவது, மூன்றாவது நாவலான, ‘அப்பாஸ்பாய் தோப்பு‘.

மரணத்தில் மிதக்கும் சொற்கள், வெளிவரயிருக்கும் இரண்டாவது சிறுகதைத் தொகுப்பு.

தமிழ்நாடு அரசின் சிறந்த நாவலுக்கானப் பரிசையும் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் அழகியநாயகி அம்மாள் விருதையும் பெற்றவர்.

மனைவி அமீர்பேகம் அரசுப்பள்ளி வேதியல் ஆசிரியை மகள் அர்ஷியா தொழில்நுட்பத் துறையில் வேலையையும் படிப்பையும் தொடர்பவர்.

எஸ்.அர்ஷியா,
29, தபால் தந்தி நகர் 2 – வது தெரு,
மதுரை – 625 017.
பேச: 99948 73456

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *