உதயசங்கர்

 

கா. உதயசங்கர் (பிறப்பு: 1960) ஒரு தமிழக எழுத்தாளர் ஆவார். இவர் சிறுகதை, கவிதை, மொழிபெயர்ப்பு, சிறார் இலக்கியம், கட்டுரை போன்றவற்றை எழுதி வருகிறார்.

வாழ்க்கைக் குறிப்பு
1960 ஆம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டியில் பிறந்தவர். இவர் தந்தை ச. கார்மேகம் மற்றும் தாயார் கமலம். இவர் மல்லிகா என்பவரை ஏப்ரல் 12, 1987 அன்று திருமணம் செய்துக்கொண்டார். இவருக்கு நவீனா, துர்கா என்ற இரு மகள்கள் உள்ளனர், இருவரும் ஹோமியோபதி மருத்துவர்கள் ஆவார்கள். இவர் இளங்கலை வேதியியல் பட்டம் பெற்றவர். இரயில்வேயில் பணி செய்தவர். இவர் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தில் மாநில துணைப் பொதுச் செயலாளராக செயலாற்றி வருகிறார்

இலக்கியப்படைப்புகள்

சிறுகதை நூல்கள்

யாவர் வீட்டிலும்
மறதியின் புதைசேறு
உதயசங்கர் கதைகள்
ஒரு விளக்கும் இரண்டு கண்களும்
பிறிதொரு மரணம்
கண்ணாடிச்சுவர்கள்
குமாரபுரம் ரயில்வே ஸ்டேஷனில் ஓரிரவு
தூரம் அதிகமில்லை
பின்பு பெய்தது மழை
மீனாளின் நீலநிறப்பூ

குறுநாவல்

ஆனால் இது அவனைப்பற்றி

கவிதை நூல்கள்

ஒரு கணமேனும்
காற்றைவாசி
தீராது
எனவே
தீராத பாடல்

குழந்தை இலக்கியம்

தலையாட்டி பொம்மை (குழந்தைப்பாடல்கள்)
பச்சை நிழல் (சிறுவர் கதைகள்)
குழந்தைகளின் அற்புத உலகில் (கட்டுரைகள்)
மாயக்கண்ணாடி (சிறுவர் கதைகள்)
பேசும் தாடி (சிறுவர் நாவல்)
விரால் மீனின் சாகசப்பயணம்
கேளு பாப்பா கேளு (குழந்தைப்பாடல்கள்)
பேய் பிசாசு இருக்கா? (கட்டுரைகள்)
ரகசியக் கோழி (சிறுவர் கதைகள்)
அண்டாமழை (சிறுவர் கதைகள்)
ஏணியும் எறும்பும் (சிறுவர் கதைகள்)

மலையாளத்திலிருந்து மொழிபெயர்ப்பு

வாயும் மனிதர்களும்
தயா
புத்தகப்பூங்கொத்து – குழந்தைகளுக்கான படக்கதைகள்
புத்தகப்பரிசுப்பெட்டி – குழந்தைகளுக்கான படக்கதைகள்
லட்சத்தீவின் கிராமியக்கதைகள்
லட்சத்தீவின் இராக்கதைகள்
மீன் காய்க்கும் மரம்
மரணத்தை வென்ற மல்லன்
பறந்து பறந்து
அய்யாச்சாமி தாத்தாவும் ஆட்டுக்கல் மீசையும்
இயற்கையின் அற்புத உலகில்
பாருக்குட்டியும் அவளது நண்பர்களும்
சப்தங்கள் வைக்கம் முகமது பசீர்
கண்ணாடி பார்க்கும் வரையிலும் தொகுப்பு
மாதவிக்குட்டியின் கதைகள் மாதவிக்குட்டி
நட்சத்திரம் வீழும் நேரத்தில்
லால் சலாம் காம்ரேட் இ.எம்.எஸ் (கட்டுரைகள்),

ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்ப்பு

சிவப்பு நிற மழைக்கோட்டில் ஒரு பெண்
பயங்களின் திருவிழா

கட்டுரை நூல்கள்

முன்னொரு காலத்தில்
நினைவு என்னும் நீள்நதி
சாதிகளின் உடலரசியல்
எது மருத்துவம்
காந்தீயத்தை விழுங்கிய இந்துத்வா
வேதகாலத்திற்கு திரும்ப முடியுமா?

விருதுகள்

லில்லி தேவசிகாமணி நினைவு சிறுகதை நூல் விருது – 1993
தமுஎகச புதுமைப்பித்தன் நினைவு சிறுகதை நூல் விருது – 2008
உலகத்தமிழ் பண்பாட்டு மைய விருது – 2015
எஸ். ஆர். வி. பள்ளியின் படைப்பூக்க விருது – 2016
கலை இலக்கியப் பெருமன்றம் – சிறுவர் இலக்கிய விருது – 2016
விகடன் விருது – சிறுவர் இலக்கிய விருது – 2016
கு.சி.பா. நினைவு – சிறுவர் இலக்கிய விருது – 2017
நல்லி – திசைஎட்டும் மொழிபெயர்ப்பு விருது – 2017
தமிழ் பேராயத்தின் அழ.வள்ளியப்பா குழந்தை இலக்கிய விருது – 2017
கவிதை உறவு சிறுவர் இலக்கிய விருது – 2018

1 thought on “உதயசங்கர்

  1. தோழர் உதயசங்கரை வாழ்த்துகிறேன். தொடரட்டும் அவர் இலக்கிய பணி!

    எஸ்.மைக்கேல் ஜீவநேசன்
    தேனி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *