கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 25, 2024
பார்வையிட்டோர்: 1,915 
 
 

காட்டில் வசிக்கும் சிவகுமார் சுவாமி தன் ஆஸ்ரம மேம்பாட்டுக்கு நிதி திரட்ட முடிவு செய்தார். தன்னிடம் இருந்த சீடர்களில் பிரேம்குமார், சுரேஷ் குமார் இருவரை அழைத்து திட்டத்தை விளக்கினார்.

“வருங்காலத்தில் மேலும் சீடர்கள் வருவார்கள். குடில்கள் மேலும் தேவைப்படும். குடில்கள் உறுதியாக இருக்க பலப்படுத்தப் பட வேண்டும். மழை காலங்களில் மழை நீர் வழிந்தோட வடிகால் அமைக்க வேண்டும். ஆஸ்ரமத்தைச் சுற்றி காட்டு விலங்குகள் வராமல் தடுக்க உறுதியான வேலி அமைக்க வேண்டும். தோட்டத்தை விரிவுப்படுத்தி நமக்கு வேண்டிய உணவுகளை நாமே விளைவிக்க ஏற்பாடுச் செய்ய வேண்டும்”.

இதற்காக நிதி அறிக்கை தனித்தனியாகத் தயார் செய்யும் படி சீடர்கள் இருவரையும் வேண்டிக் கொண்டார். நிதி தொடர்பாக அரசரிடம் அடுத்த மாதம் சென்று பேச இருப்பதாக முனிவர் அவர்களிடம் விவரித்தார்.

சீடர் பிரேம்குமார் மிகுந்த முயற்சி செய்து பல்வேறு தகவல்களை திரட்டி 10000 பொற்காசுகளுக்கு நிதி அறிக்கைத் தயார் செய்து சமர்ப்பித்தார்.

சீடர் சுரேஷ் குமார் எல்லாவித வேலைப்பாடுகளுக்கும் அதிகமாக மதிப்பீடு செய்து 50000 பொற்காசுகளுக்கு நிதி அறிக்கை முடிவு செய்தார். நிறைய நிதி கிடைக்க வழி வகுத்தமைக்காகத் தம்மை குரு பாராட்டுவார் என்று எதிர் பார்த்தார்.

சுரேஷ் குமாரின் நிதி கோரிக்கையைப் பார்த்த முனிவர் அதிர்ச்சி அடைந்து கோபத்துடன் சொன்னார்.

‘நமது கோரிக்கை எப்போதும் நியாயமாக இருக்க வேண்டும். அனாவசியமாக மதிப்பை அதிகரித்துக் காட்டி கொள்ளையடிக்க வழியமைத்து விடக் கூடாது. பணம் சும்மா கிடைப்பதில்லை. அது மக்களின் வரி பணம். மன்னர் நாம் சுரண்டி விடுவதாக நினைக்கக் கூடாது. நாம் பாடுபட்டு சம்பாதித்த ஆஸ்ரமத்தின் நற்பெயர் கெடக்கூடாது. பிரேம்குமாரின் சிக்கனமான நிதியறிக்கையுடன் நாம் மன்னரைச் சந்திக்கப் போகலாம்.’.

சுரேஷ்குமார் தலை குனிந்துக் காணப்பட்டார்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *