(2023ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
விக்னேஷ் கிளினிக்.
டாக்டரின் அறையில் ராஜேஷ் அமர்ந்திருந்தான். உயரமான இளைஞன் ஒருவர் உள்ளே நுழைந்தான்.
‘வணக்கம் நான் ராஜேஷ், உங்களை பார்த்து இருக்கேன் சந்திக்க இன்னிக்கு தான் வாய்ப்பு.
‘உங்களுக்கு உடம்பு சரியில்லையா?’ நின்றபடியே கேட்டான் அந்த இளைஞன்.
‘உடம்புக்கு ஒண்ணும் இல்ல. என்னோட யூட்யூப் சேனலுக்காக இந்த இரட்டைப் பிறவிகள் பத்தி ஒங்க கிட்ட பேட்டி எடுக்க வந்திருக்கேன். இரட்டையர் பத்தி நிறைய பேசுறாங்க ஒரே மாதிரி சிந்திப்பாங்க ஆசைப்படுவாங்கன்னு சொல்றாங்க அதெல்லாம் உண்மையா? சொல்லுங்க காமிரா ஆன்ல தான் இருக்கு’
‘அப்படியா? நான் டாக்டருக்கு படிக்கல. நான் டாக்டர் விக்னேஷோட ட்வின் பிரதர். அவன் வருவான் அவன்கிட்ட பேட்டி எடுங்க ‘ என்றான் அந்த இளைஞன்.
– ட்வின்ஸ் கதைகள் 10, முதற் பதிப்பு: 2020, எஸ்.மதுரகவி, சென்னை