நீரிழிவை நீக்கும் ஆராய்ச்சி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: அறிவியல்
கதைப்பதிவு: February 3, 2020
பார்வையிட்டோர்: 17,558 
 
 

கார்த்திகேயனும் குமாரசிங்காவும் கொழும்பில் உயிரி வேதியியலில் ஆரய்ச்சி செய்பவர்கள் .கார்த்திகேயனின் சொந்த ஊர் நல்லூர் யாழ்ப்பாணம். குமாரசிங்கா பிறந்த இடம் தெற்கில் ருகுணு மாகாணத்தில் உள்ள திசமஹரகம. பண்டைய முருகன் கோவிலான கதிர்காமத்தில் இருந்து மேற்கே 11 மைல் தொலைவில் அமைந்துள்ள ருகுணு மாகாணத்தில் ஒரு காலத்தில் தலைநகராக இருந்த ஊர்.

நீரிழிவினால் உயிரிழந்த நோயாளர்களின் எண்ணிக்கை இலங்கையில் 5 மில்லியனைத் தாண்டி அதிவேகமாக அதிகரித்து வருகிறது. சோறு இலங்கை வாசிகளின் பிரதான உணவு. மூன்று நேரமும் சோற்றை உண்ணும் சில கிராமவாசிகள் இலங்கையில் உண்டு. விவசாயிகளிடையே இந்த நீரிழிவு நோய் மிகவும் குறைவு , காரணம் அவர்கள் வியர்வை சிந்தி உழைப்பவர்கள் ஓடி ஆடி வேலை செய்யாமல் ஒரே இடத்தில இருந்து உணவை அருந்தும் அதிகமான ஊழியர்களிடம் இந்த நோய் இரண்டாம் நிலையில் காணப் படுகிறது என்பது ஆராச்சியாளர்கள் கருத்து..

நீரிழிவு வியாதிக்கு பல காரணங்கள் உண்டு ஒன்று குறைவான உடற்பயிற்சி, மற்றும் மாச்சத்து . உணவு, இனிப்புப் பண்டம் உண்ணும் பழக்கம்.. இது பணக்காரர் அனேகருக்கு உள்ள வியாதி. அதனால் பணக்காரர் நோய் என்றறும் நக்கலாக அழைப்பர். இந்த நோயினால் கண்பார்வை மங்குதல், இதய நோய், , கால் துண்டிக்கும் நிலை , சிறுநீரக நோய் போன்றவையால் உயிரைப் பாதிக்கிறது. வேதியல் ஆராய்ச்சியாளர்கள் இருவரினதும் பெற்றோர்கள் நீரிழிவு காரணமாக இறந்தார்கள் .அதிர்ஷ்டவசமாக கார்த்திக் மற்றும் குமாரசிங்கா இந்த நோயினால் பாதிக்கப்படவில்லை

ஆராய்ச்சிப் பணியில் ஈடுபடும் இவர்களை மேற்பார்வையிடுவது பேராசிரியர் ராஜேந்திரன். இவர் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர் . நீரிழிவு நோயுக்கு ஒரு தீர்வினைக் காண கார்த்திக்கும் .குமாரசிங்காவும் தீவிரமாக ஆராய்ச்சியில் ஈடுபட்டனர். .இருவரும் முருக பக்தர்கள்.. முருகன் தனது இரண்டாவது மனைவி வள்ளியை காதலித்து திருமணம் செய்தது கதிர்ககாம கிராமத்தின் சுற்றாடலில் என்பதை மக்கள் நம்பி வந்தனர். ஒரு காலத்தில் நெல் விளையும் கிராமம் என்பதால் அக் கிராமத்துக்கு கதிர்+காமம் என்ற பெயர் வந்தது. இனொரு விளக்கமும் உண்டு . கதிர் என்பது முருகன் என்ற ஒளிக் கதிர் . காமம்’ என்பது காதல். ஒளியான முருகன் வள்ளியை காதல் செய்த கிராமம் என்பதாகும். . இந்த கிராமத்தை ராமாணிக்க நதி தழுவச் செல்கிறது.

வள்ளி ஒரு வேடவப் பெண். முருகன் வள்ளி காதலுக்கு துணை போனவர் கணேஷர் என்கிறது இதியாசம் . அதனால் கதிர்காம முருகனுக்கு பக்கத்தில் கணேஷருக்கு கோவில் உண்டு . முருகனுக்கு பூஜை செய்யும் கபுரா ள என்ற பூசகர் வள்ளியின் குல வழி வந்தவர் அவர வாய் காதி மறைத்து துணியால் கட்டி பூசி செய்வார். இந்த முறை வடக்கில் உள்ள சன்னதி முருகன் கோவிலிலும் உண்டு ஒருவரும் மூலஸ்தானத்துக்குள் போக முடியாது. இகொவிலில் முருகனுக்கு சிலையோ அல்லது வேலோ இல்லை சக்தி வாய்த்த யந்திரம் உண்டு என்பது நம்பிக்கை.

யந்திரத்தை ஓரு பேழைக்குள் வைத்து யானை மேல் ஊர்வளம் ஊர்வலம் செல்வார்கள். ஊர்வளம் முடிந்தவுடன் யானை மலசலம் கழிக்கும். இந்த முருகன் வள்ளி காதல் கதை மரபு வழிவந்த பழம்பெரும் கதை என்றாலும் தமிழ் நாட்டிலும் இலங்கையிலும் தமிழர் வாழும் தேசங்களிலும் இதை நம்பினார்கள். கதிர்காமத்தின் சுற்றாடல் அபூர்வ அதிர்வுகளைக் கொண்டது. இந்த அதிர்வு கோவிலில் உள்ள இயந்திரத்தால் உருவாகிறது என்ற கருத்தும் உண்டு. அதனால் பால் குடி பாபா , மங்கலபுரி சுவாமி., பாலசுந்தரி சுவாமி, கல்யாண கிரி சுவாமி போன்ற பல சித்தர் சுவாமிகள் இருந்து தியானம் செய்ததாக பல ஆதாரங்கள் உண்டு ருகுணு இராச்சியத்தின் மன்னன் கவன்திஸ்சாவின் மகன் துட்டகைமுனு கதிர்காம முருகனை வணங்கி தமிழ் மன்னன் எல்லாளனோடு போருக்குச் சென்றதாக மகாவம்சம் சொல்கிறது. வெற்றியோடு திரும்பிய . துட்டகைமுனு கோவிலைப் புதிப்பித்ததாக பழம்கதை ஓன்று உண்டு.

***

தமிழ் சிங்களவர்களின் புதிய ஆண்டுக்கு கார்த்திக் குமாரசிங்காவின் வீட்டுக்கு அவன் அழைப்பின் பேரில் சென்றிருந்தான் வீட்டில் புது வருட கொண்டாட்டம் முடிந்த அடுத்த நாள் இருவரும் கதிர்காமம் கோவிலுக்குப் போனார்கள் .பூஜையின் போது வேடவப் பெண்கள் பூஜைக்கு பிரசாதம் தட்டில் கொண்டு வந்ததையும். தீபம் காட்டியதையும் கார்த்திக் அவதானித்தான். பூஜையின் போது பெண்களின் பங்கேற்பை பார்க்க அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. கப்புரால ஒரு துணியால் தன் வாயையும் காதையும் கட்டியபடி முருகன் வள்ளி தேவயானை படம் உள்ள திரைச் சேலைக்கு முன் தீபம் காட்டி மந்திரம் சொல்லி பூஜை செய்வார்

பூஜை முடிந்ததும், “கார்த்திக் என்னுடன் வா நான் இங்கிருந்து காட்டில் இரண்டு மைல்கள் தூரத்தில் உள்ள ஒரு குடிசையில் வாழும் ஒரு சக்தி உள்ள முதியவர் இருக்கிறாரென கேள்விப்பட்டேன். அவர் நோய்களை குணப்படுத்தும் சக்தி உள்ளவர் வேடவர்கள் நீரழிவு வியதியினால் பாதிக்கப் படவில்லை என்பதை எங்கள் பேரசிரியர் ராஜேந்திரன் சொல்லி அறிந்தேன். அவர் கிழக்கு மாகாணத்தை சேந்தவர் என்பதால் அவருக்கு வேடவர்கள் பற்றி பல விசயங்கள் தெரியும். எதுக்கும் அதன் காரணத்தை முதியவரிடம் போய் கேட்போம்” என்றார் குமாரசிங்கா

அவர்கள் இருவரும் மாணிக்க நதிக் கரையோரமாக, காட்டினூடக இரு மைல்கள். நடந்து சென்று ஆற்றின் கரை ஒரத்தில் உள்ள ஒரு குடிசை அடைந்தனர்’ குடிசைக்குள் சுமார் எண்பது வயதுடைய ஒரு முதியவர் தாடியோடு அமர்ந்து தியானம் செய்வதை இருவரும் கண்டார்கள் . .சில இலைகள், காட்டுப், பழங்கள்,, மற்றும் வேர்கள்,. கிழங்குகள் அவர் அருகே இருந்தன களிமண் பானை ஒன்று நீரோடு குடிசையின் ஓரத்தில் இருந்தது ஒரு வில்லும் அம்பும் அவர் பக்கத்தில் இருந்தன. குடிசை ஓரத்தில் ஒரு வேலுக்கு காட்டு மலர்களால் மாலையிட்டு அதற்கு முன் சில பழங்கள் காட்டு மலர்கள் தேன் ஆகியவை படைக்கப்பட்டு இருந்தன..குடிசைக்கு வெளியே இரு பக்தர்கள் அவரை சந்திக்க காத்து நின்றனர்.

அவர்கள் குமாரசிங்காவோடு சிங்களத்தில் பேசியதில் இருந்து. அவர்களை சிங்கள பக்தர்கள் என அடையாளம் கார்த்திக் கண்டார்

“நீங்கள் இந்த சாமியின் பக்தர்களா”? கார்த்திக் கேட்டார்

;” ஓம்’ சேர். அடிக்கடி இவரிடம் இவரிடம் வந்து போவோம்” . என்றார் ஒரு பக்தர்

“ உமது பெயர் என்ன?. :

“ சந்திரசேன. இவர் என் தம்பி பந்துசேன . எங்கள் ஊர் தெற்கு கடல் ஓரத்தில் உள்ள கிரிந்த கிராமம் “

“எதற்காக அடிகடி இவரிடம் வருகுறீர்கள்.”?

“ இவர் எனது பெற்றோருக்கு இருந்த நீரழிவு வியாதியை குணப்படுத்தியவர்., எங்களுக்கும் அந்த நோய் இருக்’கிறது என்று டாக்டர் சொன்னார். அத்துடன் இவரிடம் உள்ள சக்தியால் எங்கள் நோயை மாற்றுவார் என்ற நம்பிக்கை” சந்திரசேன பதில் சொன்னார் .

“ என்ன உங்களுக்கும் நீரிழிவு வியாதியா “? கார்த்திக் கேட்டார்

“: ஓம் சேர்” இரண்டாம் நிலை நீரிழிவு”.

குமாரசிங்க கார்த்திக்கைப் பார்த்தார்.

“ இவர் சொன்ன பதிலை கேட்டியா கார்த்திக்’”

“கேட்டேன் குமார, எல்லாம் நம்பிக்கை. சாமியை கண்டு பேசி அவர் என்ன மூலிகைகள் பாவிக்கிறார். என்று அறிவோம். நான் நினைக்கிறேன் வெடவ இனம் இயற்கையை மதிப்பவர்கள்.. எல்லாத் தேசங்களிலும் பூர்வ குடி மக்கள் இயற்கையை இறைவனாக மதிப்பவர்கள். இயற்கையில் உள்ள மரங்கள். பழங்கள் மூலிகைகள் நல்ல சுவாசக் காற்று தான் அவர்களுக்கு நீரழிவு இருதய, நீரக வியாதிகள் போன்றவை இல்லாமல் இருக்க உதவுகிறது பெரிய நகரங்களில் வாழ்பவர்கள் பலர் இயற்கையை மதிபதில்லை வியாபாரத்துக்காக தொழிற்சாலைகளை உருவாகி . அதை மாசு படுத்துகிறார்கள்.”

“நானும் வாசித்தேன். மேற்கு தேசத்தவர்கள் நீரிழிவுக்கு இலங்கை வேடவர்களின் மருந்து என்று சொல்லி பணம் சம்பாதிக்க பார்கிறார்கள் என்று. நீரிழிவுக்கு மருத்து தயாரிக்கும் நிறுவனங்கள் இதை பொய் என்று சொல்லி பிரச்சாரம் செய்கிறார்கள் தங்கள் வருமானம் பாதிக்கப்படாமல் இருக்க ” குமாரசிங்க சொன்னார்

“அது சரி சந்திரசேனா இந்த சாமியின் சொந்த ஊர் கதிர்காமம்மா”?
:
“ இல்லை. இவரின் சொந்த ஊர் உகந்த மலை . இங்கிருந்து கிழக்கே முப்பது மைல் தூரத்தில் இருக்குகிறது. . மாதத்தில் ஒரு தடவை காடுகளூடாக நடந்து போய் அந்த உகந்த மலை முருகன் கோவிலில் மூன்று நாட்கள் தங்கிப் பூஜை செய்து விட்டு வருவார். அந்த கோவில் இவரின் பூர்வீகக் கோவில் கதிர்காமத்துக்கு வடக்கில் இருந்து கிழக்கு கரையோர வழியாக வருடா வருடம் பாதயாத்திரை செய்யும் முருக பக்தர்கள் சுமார் 400 மைல்கள் இரு மாதங்களில் நடந்து, கதிர்காமத்தை அடைய முன் இந்த கோவிலில் சில தினங்கள் தங்கி கதிர்காமம் செல்வார்கள், உகந்த மலை வேடவர்கள் பாதை யாத்திரை பக்தர்களுக்கு உபசாரம் செய்வார்கள்;

” இவர் வேடவர் இனத்தைச் செர்ந்தவரா”?

“ ஆம் சேர்’ இவர் உகந்த மலை பகுதியில் வாழும் வேடவர்களுக்கு நாட்டு வைத்தியம் செய்து பல உயிகளைக் காப்பாற்றிய வன்னியாலா ஆத்தோ என்பவர்.இவரை வேலாயுதசாமி என்பர்”.

“நீர் அந்தக் கோவிலுக்கு போய் இருக்குறீரா”?

“ இரு தடவை இவரோடு காட்டின் ஊடாகப் போய் இருக்குறேன்”

“ மிருகங்கள் உங்களைத் தாக்க வில்லையா”?

“இல்லை. அவர். கையில் அம்பும் வில்லும் இருக்குமே. அதை ஒரு போதும் அவர் பாவித்தது இல்லை. அதுவே வேடவர்களின் சின்னம்” சந்திரசேன சொன்னார்: .

“ உகந்த மலை எங்குள்ளது . அது பெரிய மலையா”?

“அது ஒரு குன்றம். அந்த கிராமம் கடற்கரை ஓரமாக பொத்துவில்லில் இருந்து மேற்கே 34 கி.மீ. தூரத்தில் உள்ளது எங்கு குன்றம் இருக்கிறதோ அங்கு முருகன் இருப்பார். அங்குள்ள பண்டைய முருகன் கோவில். சக்தி வாய்ந்தது முருகன் சூரபத்மனோடு போர் புரிந்த சோர்வினால் அங்குள்ள குன்றத்தில் உட்கார்ந்த படியால் அந்த குன்றத்துக்கு உட்கார்ந்தது,, உகந்தம் என மருவியது என்பர் அந்த ஊர்வாசிகள். இது மரபு வழி வந்த கதை” விளக்கம் கொடுத்தார் சந்திரசேன

“ வேறு என்ன அகோவிலில் விசேசம்’”?

: வள்ளியம்மை கோயில் குன்றத்தின் உச்சியிலும், முருகன் கோயில் முன்றத்தின் அடியிலும் இருக்கிறது. இக்கோவில் கிழக்கு தெற்கு மாகணங்கள் சந்திக்கும் இடத்தில் உள்ளது இந்த இடத்தில சிவ பக்தன் இராவணன் திருக்கோணேஸ்வரதுக்குப் போக முன் தங்கி சென்றதாக மரபுக் கதை உண்டு.” பந்துசேன சொன்னார்
“ இது போன்று இன்னும் இரு மரபு வழி வந்த கதை உண்டு” சந்திரசேன சொன்னார்”

“:சொல்லும் கேட்போம்:” கார்த்திக் ஆவலுடன் கேட்டார்

“ இந்த கதை படி வகூர் மலையில் இருந்து முருகன் விட்ட அம்பு உகந்த மலைஉச்சில் விழுந்தது என்பர். மற்ற கதை முருகனும் வள்ளியும் தனித் தனியே இரு கற் படகுகளில் வந்து மலையில் வாசம்செய்ததாக கதை உண்டு. உகந்த மலைக்கு அருகே உள்ள கிராமங்களான பாணம, . குமணவில் சிங்களவரும் தமிழர்களும் ஒற்றுமையாக வாழ்கிறார்கள். குன்றதுக்’கு உச்சியில் எட்டு சிறு நீர் தடாகங்கள் உண்டு. இதை முருகனும் வள்ளியும் நீராடிய சரவணப்.பொய்கை என்பர் ஊர்வசிகள் ஆக மொத்தமாக 32 சிறு தடாகங்கள் உண்டு”
“ அது சரி வேடவர்கள் என்ன மொழி பேசுவார்கள் “:

“ தமிழும் சிங்களமும் கலந்த மொழி” பண்டைய இலங்கை மக்களால் பேசப்படும் மொழி, தமிழ் மொழியை இது ஒத்ததாக உள்ளது” சந்திரசென சொன்னார்

“ அதோ வேலாயுத சுவாமி கண் விழித்து விட்டார் வாருங்கள் அவரிடம் போவோம்” என்றார் பந்துசேன

குடிசைக்குள் சென்ற கார்த்திக்கையும் குமாரசிங்காவையும் கை கூப்பி வேலாயுத சுவாமி வரவேற்றார். அவர் முகத்தில் ஒரு பிரகாசம் இருப்பதை இருவரும் கண்டனர்
அவர்கள் இருவருக்கும் தேனும் தினைமாவும், காட்டுப் பழங்களும் சில கிழங்குகளும் உண்ணக் கொடுத்தார், தாங்கள் வந்த காரணத்தை இருவரும் சுவாமிக்’கு சொன்னார்கள். அதைக் கேட்டதும் அவர் முகத்தில் ஒரு புன்னகை

அவர் சிறிது நேரம் யோசித்து விட்டு அதிகம் பேசாமல் பக்கத்தில் உள்ள இலைகள் சிலவற்றை காட்டி இது தான் உங்களின் ஆராய்சிக்கு உகந்த முலிகை இலை. இது சிறுகுறிஞ்சான் என்ற இன்சுலின் தாவரத்தின் இலை. இதை ஒன்றை, தினந்தோறும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டாலே போதுமானது இது இஞ்சி குடும்பத்தைச் சேர்ந்த தாவரம். . முதல் நிலை சர்க்கரை நோயாளிகளை தவிர 2 ஆம் நிலை சர்க்கரை நோயாளிகலளின் நோயை. இது தீர்க்கும், அதோடு தர்பூசணி பழமும் மிக நல்லது. இதோ பாவக்காயும், கத்தரிக்காயும், வெந்தயமும் . இவையும் நல்லது. இதை தான் எனது இன வேடவ மக்கள் அதிகம் உண்பார்கள். அதோடு அவர்கள் ஓடித் திரிந்து வேட்டையாடுவார்கள். இதுதான் அவர்களுக்கு நீரிழிவு வியாதி இல்லாததன் ரகசியம்’ என்றார் வேலாயுத சுவாமி.

கார்த்திக்கும் குமாரசிங்காவும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தார்கள்.

“என்ன யோசிகிரீர்கள்”? சாமி கேட்டார் .

“ஒன்றுமில்லை சாமி இந்த இலைக்கு ஆங்கிலத்தில் காஸ்டஸ்பிக்டஸ் என்பர் இது தான் முதல் தடவை இந்த இலையைக் காண்கிறோம். தகவலுக்கு நன்றி சாமி. இதை எமது ஆரய்ச்சியில் பயன் படுத்தி நீரழிவு வியாதியை நீக்க மருந்தை கண்டுபிடிப்போம். சாமி. இனி இன்சுலின் ஊசி போட்டுக் கொள்வதைத் தவிர்க்கமுடியும் மாத்திரை வடிவிலோ, திரவ மருந்தாகவோ இதை வைத்து நாம் உருவாக்குவோம்” கார்த்திக் சொன்னார் உறுதியோடு .

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *