என் மகனின் உயிர்த் தோழன் – ஒரு பக்கக் கதை

0
கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: அமானுஷம்
கதைப்பதிவு: September 14, 2023
பார்வையிட்டோர்: 8,912 
 
 

“அப்பா, நேதனும் நானும் வெளியே விளையாட போறோம்.” என் ஐந்து வயது மகன் முன் அறையில் இருந்து கத்துகிறான். எனது அலுவலக அறையிலிருந்து நான் பதிலளிக்கும் முன், முன் கதவு திறந்து மூடப்படும் சத்தம் கேட்டது. அவன் போய் விட்டான்.

நான் பெருமூச்சு விடுகிறேன். ஒரு வருடத்திற்கு முன்பு என் மனைவி இறந்ததிலிருந்து, என் மகன் நேதன் என்ற இந்த கற்பனை நண்பனை உருவாக்கி அவனுடன் தனது முழு நேரத்தையும் கழித்துக் கொண்டிருக்கிறான். தாயை இழந்த சிறுவன் இப்படி செய்வது இயல்பு என்றும், விரைவிலே அதை விட்டு விடுவான் என்றும் மருத்துவர்கள் சொன்னார்கள். ஆனால் இந்த நேதனால் எனக்கு வேலையும் செலவும் அதிகமாகிறது. பொம்மைகள், ஆடைகள், புத்தகங்கள் மற்றும் காலணிகள் என அனைத்தையும் நான் ஜோடி ஜோடியாக வாங்க வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக, நேதன் என்ற ஒரு சிறுவன் இருப்பதைப் போலவே நான் தினமும் நடந்து கொள்ள வேண்டும்.

நான் எனது அலுவலக வேலைக்குத் திரும்பிச் சென்று கவனம் செலுத்த முயற்சிக்கிறேன். பத்து நிமிடங்களுக்குள், முன் கதவு திறக்கும் சத்தம் கேட்கிறது. என் மகனின் குரல் கேட்டது, “அப்பா, நாங்கள் திரும்பி வந்து விட்டோம், வெளியே மழை பெரிதாக பெய்கிறது.”

நான் மீண்டும் கத்துகிறேன், “சேறு நிறைந்த காலணிகளை நன்றாக துடைத்துக்கொண்டு உள்ளே…” நான் முடிக்கும் முன், மாடிக்கு விரைவாக செல்லும் காலடிச் சத்தம் கேட்கிறது.

நான் முன் அறைக்கு விரைந்தேன். சேறு படிந்த காலடிச் சுவடுகளின் அடையாளத்தைப் பார்க்கிறேன். சேற்று காலணிகளை சுத்தம் செய்யாமல் வீட்டுக்குள் கொண்டு வரக் கூடாது என்று நான் எத்தனை முறை படித்து படித்து சொல்லியிருக்கிறேன்? எனக்குள் கோபம் வெடித்து போங்க, மறுபடி கத்துவதற்கு நான் தாயாராகயில் வினோதமான ஒன்றை பார்க்கிறேன்.

முன் அறையிலிருந்து மாடிப்படிக்கு செல்லும் வழியில் இரண்டு ஜோடி கால் தடங்கள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *