ஆவி காயின்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: அமானுஷம்
கதைப்பதிவு: September 1, 2022
பார்வையிட்டோர்: 23,791 
 

“டே நண்பா”

“சொல்லுடா”

“நேத்து நான் ஒரு யூடியூப் வீடியோ பார்த்தேன்டா.. அது ரொம்ப இன்ட்ரஸ்டிங்கா இருந்துச்சு…”

“அப்படியா!”

“ஆமான்டா”

“அப்படி என்ன வீடியோ அது?”

“ஆவிகளோடு பேசுவது எப்படி?”

“டே..”

“ஆமான்டா.. ஒரு போர்டு இருக்கு.. அதுக்கு பேரு ஓஜா போர்டாம்.. அத யூஸ் பண்ணி நம்ம முன்னோர்கள கூப்பிடலாமாம்.. நமக்கு எதாவது தீர்க்க முடியாத பிரச்சனைனா… அதுக்கும் தீர்வு கேட்கலாமாம்…”

“ஓ..”

“என்ன.. நாமும் அப்படி ட்ரை பண்ணிப் பார்க்கலாமா?”

“டே.. வேணான்டா.. எனக்கு நீ சொல்றத கேட்கும் போதே பயமா இருக்கு..”

“டே.. இதுக்கெல்லாம் பயப்பட்டீனா எப்படிடீடா? யாரு சண்டைக்கு வந்தாலும் சூராதி சூரன் மாதிரி வம்புக்கு நிப்ப, இப்ப என்னடானா இப்படி நடுங்கற..!!??”

“டே.. அது வேற.. இது வேற…”

“சரி… நான் விக்ரம்கிட்ட அந்த போர்ட வாங்கிட்டு வரச் சொல்லிட்டேன். அவனும் சுந்தரும் இப்ப வந்துருவாங்க.. அதுக்கப்பறம் நாம ஆவிங்ககிட்ட பேசறோம். நம்ம பிரச்சனைகளுக்கு ஒரு தீர்வு காணறோம்”

“டே.. நான் வர்லேடா.. என்னை விட்டுடுங்க..”

“மிதுன்.. இப்படி பயந்து ஓடாதடா.. ஒன்னும் ஆகாது.. இரு..”

“சரி சரி.. ஆனா நான் பேச வரமாட்டேன்.. சும்மா தூரமா இருந்து பார்த்துட்டுத்தான் இருப்பேன்..”

“சரிடா மிதுன்.. நீ இப்படிச் சொன்னதே போதும்..”, என அருண் சொன்ன போதே..

விறுவிறுவென வந்து சேர்ந்தனர் விக்ரமும், சுந்தரம்..

“ஹாய் கய்ஸ்…”

“வாங்கடா வாங்க.. போர்டு கிடைச்சுதா..”

“ம்.. ம்.. வாங்கிட்டோம்டா..”

“சரி.. இப்ப எந்த பிரச்சனைக்கான சொல்யூசன நாம கேட்கப்போறோம்..?”

“டே.. முதல்ல எந்த முன்னோர நாம கூப்பிடப் போறோம்..?”

“எங்க தாத்தாவக் கூப்பிடலாம்டா.. பெரிய பதவியில இருந்தவர்.. ரொம்ப அறிவாளி.. எங்க குடும்பங்கள்ல பல சிக்கலான பிரச்சனைகளை தீர்த்து வச்சவர்..”

“சரிடா.. அவரையே கூப்பிடலாம்”

“டே.. அந்த போர்ட இப்படி கீழே வைடா..”

“ம்..”

அந்த போர்டைச் சுற்றிலும் A முதல் Z வரை எழுத்துகள் எழுதப்பட்டிருந்தன. கூடவே 0 முதல் 9 வரை எண்களும். நடுவே ஒரு பெரிய வட்டம்.. அதற்கு இருபுறமும் சிறு சிறு வட்டங்கள்.. இடதுபக்கம் YES என்றும் வலதுபக்கம் NO என்றும் எழுதப்பட்ட சொற்கள் காணப்பட்டன.

“டே.. விக்ரம்.. போர்டு கூட வேற என்ன கொடுத்தாங்க..?”

“இந்தாட அருண்.. இந்த சின்ன பாக்ஸ கொடுத்தாங்க..”

அருண் அதனை வாங்கி திறந்து பார்த்தான்.. அது ஒரு திருநீர் டப்பா..

அதற்குள் வட்ட வடிவத்தில் பத்து ரூபாய் நாணயம் சைஸில் ஒன்று இருந்தது.

“இங்க பாருங்கடா.. இந்த போர்டுக்கு ரெண்டு பக்கமும் ரெண்டு பேரு உட்காந்துக்கணும். இந்தக் காயின் மாதிரி இருக்கறத எடுத்து நடுவட்டத்துல வச்சுடணும்..”

“ரெண்டு பேரும் ஆளுக்கொரு விரல அந்தப்பக்கமும், இந்தப்பக்கமும் வச்சுட்டு.. கண்ண மூடி.. ‘ஆவியுலகில இருக்கற விக்ரமோட தாத்தாவ..’ இங்க வரச் சொல்லி வேண்டிக்கனும்..”

“அப்ப உடனே அவர் வந்திருவாறாடா?”

“டே.. எங்க தாத்தாவ நான் கூப்பிட்டா.. உடனே வருவார்டா..”

“சரி.. வந்துட்டார்னு எப்படித் தெரியும்?”

“வந்துட்டிங்களானு கேட்டா நம்ம விரலுக்கு கீழே இருக்கற இந்த ஆவி காயின் நம்ம விரல்கள இழுத்துட்டுப் போய் எஸ்ல நிற்கும்.. அப்பறம் திரும்பவும் போர்டுக்கு நடுவுல வந்திரும்”

கேட்கும் போதே நடுங்க ஆரம்பித்தான் மிதுன்.

“டே..பயப்படாதடா.. அதான் நாங்கெல்லாம் இருக்கோம்ல..”

“சரி.. விக்ரம்.. நீ அந்தப்பக்கம் உட்கார்..”, என அருண் கூற..

சுந்தரும் ஆர்வமாய் அருகில் அமர்ந்து கொண்டான்.. மிதுன் மட்டும் கொஞ்சம் விலகி அமர்ந்து கொண்டான்.

ஆவி காயினை எடுத்து நடுவிலிருந்த வட்டத்தில் வைத்துவிட்டு.. நால்வரும் கண்களை மூடிக் கொண்டனர்.

விக்ரம் வேண்ட ஆரம்பித்தான்.

“ஆவியுலகில இருக்கிற என் தாத்தாவே.. சில கேள்விகளுக்கு விடை சொல்ல இப்ப இங்க உடனே வரவும்.. உங்களுக்கு விருப்பப்பட்டா மட்டும் கேள்விகளுக்கு விடை சொல்லல்லாம். நாங்களும் உங்களுக்கு எந்த தொந்தரவும் தர மாட்டோம். நீங்களும் எங்களுக்கு எந்த தொந்தரவும் தரமா வந்துட்டு போயிடனும்.. எனக்காக வருவீங்க தானே..!”, என்ன வேண்டி முடித்த போது..

ஆவி காயின் இவர்களது விரல்களை இழுத்துக்கொண்டு நகர ஆரம்பித்தது.

‘எஸ்’ என்ற வட்டத்திற்கு சென்று விட்டு.. மீண்டும் நடுவட்டத்திற்கு வந்துவிட்டது.

நால்வருக்கும் குப்பென வியர்த்து விட்டது.

இப்போது வாயைத் திறந்தே கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தான் அருண்..

“வந்திருக்கிறது விக்ரமோட தாத்தா தானே?”

இப்போது ஆவி காயின் “எஸ்” வரை இருவரது விரல்களையும் இழுத்துச் சென்று தொட்டு விட்டு நடுவட்டத்திற்கு திரும்ப வந்தது.

“வணக்கம் தாத்தா”, என நால்வரும் சொல்ல..

அந்த ஆவி காயின் “V A N A K K A M” என்று எட்டு எழுத்துகள் மீதும் போய்விட்டு மீண்டும் நடுவட்டம் வந்து சேர்ந்தது.

“உங்க பேரு..!”, என்றான் சுந்தர்.

“S E L V A M” என்று ஆறு எழுத்துகளில் ஊர்ந்து விட்டு மீண்டும் நடுவில் வந்து நின்றது ஆவி காயின்.

‘ஆமாம்’ ‘ஆமாம்’ என்றவாறு தலையை ஆட்டினான் விக்ரம்.

“தாத்தா எப்படி இருக்கீங்க?”

“H A P P Y” என்ற பதில் வந்தது.

“தாத்தா எங்க நாலு பேருல யாருக்கு முதல்ல வெளிநாடு போக வாய்ப்பு இருக்கு?”

“V M A S” என்று பதில் வந்தது.

“என்ன தாத்தா சொல்றீங்க? ஒன்னுமே புரியலையே!”

“டே.. எனக்கு புரிஞ்சிடுச்சுடா.. இவர் நம்ம நாலு பேரோட முதல் எழுத்த மட்டும் சொல்றார்.. விக்ரம் V மிதுன் M அருண் A சுந்தர் S.. சரிதானே தாத்தா?”

“YES” என்ற பதில் வந்தது.

“அருண்.. எதோ பிரச்சனைக்கு தீர்வு காண தாத்தாவ கூப்பிடலாம்னு சொன்னியே.. அந்தப் பிரச்சனையைச் சொல்லுடா..”

“ம்.. சரி சொல்றேன்..”

“தாத்தா.. நான் மனப்பூர்வமா ஒரு பொண்ண லவ் பண்றேன்.. என்னோட லவ் சக்சஸ் ஆகுமா?”

“NO” என தாத்தா சொன்ன பதில் கேட்டு அதிர்ச்சியடைந்தான் அருண்.

அடுத்தடுத்து ஆவி காயின் படபடவென பல வார்த்தைகளை வரிசையாக அடுக்க ஆரம்பித்தது.

“L O V E I S B A D”

“D O N T L O V E”

“L O V E K I L L S”

“R U N A W A Y F R O M L O V E”

“L O V E G I V E S T E A R S”

“டே.. என்னாச்சுடா தாத்தாவுக்கு.. காதலே தப்புனு பாடம் எடுக்க ஆரம்பிச்சிட்டார்…”

“I S H E R N A M E R O J A ?”

என தாத்தாவே அடுத்த கேள்வி கேட்டார்.

“ஆமா தாத்தா”, என்றான் அருண்.

“F O R G E T H E R” என பதில் வர

“ஏன் தாத்தா?”, எனச் சோகமாகக் கேட்டான் அருண்..

“I S H E R M O T H E R N A M E M E E R A ?”

“ஆமா…”

“I S H E R G R A N D M A N A M E M A L L I G A ?”

“ஆமா தாத்தா..”

“S H E N E V E R A C C E P T E D M Y L O V E”

“ஓ..”

“H E R F A M I L Y A L W A Y S A G A I N S T L O V E”

“ஓ அதான் விஷயமா..?”

இப்பொழுது அவர்களைச் சுற்றி யாரோ தேம்புவது போல ஒரு குரல் கேட்டது.

“சாரி.. தாத்தா.. என் பிரச்சனைக்கு தீர்வு தேடறேனு சொல்லி… இப்ப உங்க பழைய பிரச்சனைய கிளறி விட்டுட்டேனே…”

இப்போது ஒரு சிரிப்புச்சத்தம் கேட்டது.. பின் அது இரண்டு சிரிப்புச் சத்தமாக மாறியது.

நால்வரும் பயந்துவிட்டனர்.

“D O N T F E A R”

“சரிங்க தாத்தா..”

“J U S T N O W”

“…..”

“S H E J O I N ED M E”

“ஓ..”

“N O W O N W A R D S N E V E R C A L L M E A G A I N” என்று சொன்ன நொடி.. அறைக்குள் ஒரு புகை சட்டென வந்து மறைந்து போனது.

நால்வரும் திகிலடைந்து நின்றனர். மிதுன் மயக்கமடையும் அளவுக்குப் போனான்.

“டே.. எந்திருக்கடா போதும்..”

“முன்னோர்கள்கிட்ட பேசறோம்னு போயி அவங்கள அழ வக்கிறதெல்லாம் நல்லா இல்லடா.. வாழ்ந்த வரைக்கும் எவ்வளவோ கஷ்டப்பட்டு இருப்பாங்க..இப்பவாவது அவங்க நிம்மதியா இருக்கட்டும்னு விட்டுடலாம்டா.. இனி இந்த போர்டு வேண்டாம்.. நான் ரோஜாவ மறக்க ட்ரை பண்றேன்.. என் வேலையில அதிகம் கவனம் செலுத்தப் போறேன்.. காதல் வேணும்னா தானா வரட்டும்..”

“சரிடா.. நல்ல முடிவு..”

“சரிடா.. டி.வி.. போடவா.. ஒரு சிறப்புத்திரைப்படம் இருக்கு…”

“என்ன படம்டா?”

‘ஆவிகள் விளையாட்டு’ என்ற குரல் அறையில் நாலாபக்கமும் இருந்து ஒலித்தது.

‘ஆ’ என்றவாறு நால்வரும் அவ்விடத்தை விட்டு ஓட ஆரம்பித்தனர்.

வெளியான இதழ் : நோஷன் பிரஷ் சிறுகதைப் போட்டிக்கு அனுப்பிய கதை

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *