பன்மொழிப் புலவரை பந்தாடிய தெனாலிராமன்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: ஆன்மிகக் கதை
கதைப்பதிவு: January 12, 2013
பார்வையிட்டோர்: 7,587 
 

ஒரு நாள் கிருஷ்ணதேவ ராயரின் அரண்மனைக்கு, ஒரிஸாவில் இருந்து வித்யாசாகரர் என்ற சம்ஸ்கிருதப் புலவர் ஒருவர் வந்தார். பல நூல்களை இயற்றி, பல நாடுகளில் பயணித்து, அறிஞர்கள் பலருடன் வாதிட்டு, வெற்றி பெற்றவர் அவர்.

அவரை வரவேற்று உபசரித்தார் கிருஷ்ணதேவ ராயர். மன்னருக்கு வணக்கம் தெரிவித்த வித்யாசாகரர், ‘‘மன்னா! தங்களது கீர்த்தி எங்கும் பரவி இருக்கிறது. தங்கள் பெருமையை விளக்கும் புலவர்கள் பலர் இந்த அவையில் உள்ளனர். அவர்களு டன் வாதிட்டு, எனது அறிவுத் திறத்தை நிரூபிக்க விரும்புகிறேன். என்னுடன் வாதிடும் அளவுக்கு இங்குள்ள புலவர் களுக்கு திறமை இல்லையெனில், அவர் கள் தங்களது தோல்வியை ஒப்புக் கொள் ளலாம்’’ என்றார்.

வித்யாசாகரரின் ஆணவப் பேச்சு

கிருஷ்ணதேவ ராயருக்குக் கோபம் ஊட்டியது. எனவே, ‘‘புலவரே! என் அரசவைப் புலவர்களிடம் நீங்கள் வாதிட விரும்பியது சரி. ஆனால், அவர்கள் தோற்று விடுவார்கள் என்று நீங்களே தீர்மானிப்பது தவறு. என் அரசவைப் புலவர்கள் உங்களிடம் வாதிடத் தயார். வாதத்தின் முடிவில் வெற்றி & தோல்வியை நிர்ணயிப்போம்!’’ என்றார். வித்யாசாகரரும் உடன்பட்டார். அரசாங்க விருந்தினர் மாளிகையில் வித்யாசாகரர் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

பிறகு கிருஷ்ணதேவராயர், தம் அரசவைப் புலவர்களிடம், ‘‘நாளை, விவாதத்தில் யார் கலந்து கொள்ளப் போகிறீர்கள்?’’ என்று கேட்டார். எவரும் பதிலளிக்கவில்லை. உடனே தலைமைப் புலவர் பெத்தண்ணா எழுந்து, ‘‘மன்னர்பிரானே! இதுவரை எத்தனையோ புலவர்களுடன் வாது நிகழ்த்தி வெற்றி பெற்றுள்ளோம். ஆனால், வித்யாசாகரர் போன்ற பன்மொழிப் புலவரிடம் மோதுவது யோசிக்க வேண் டிய விஷயம்!’’ என்றார்.

மன்னருக்குக் கோபம் வந்தது. ‘‘அப்படியானால், நாளைக்கு வித்யாசாகரரிடம் ‘எனது அரசவைப் புல வர்கள், கெட்டிக்காரர்கள் இல்லை’ என்று சொல்லி, தோல்வியை ஒப்புக் கொள்ளட்டுமா?’’

அதுவரை அமைதியாக இருந்த தெனாலிராமன் சட்டென்று எழுந்தான். ‘‘மன்னா, தாங்கள் அனுமதித்தால்… வித்யாசாகரரை நான் சமாளிக் கிறேன்!’’

மன்னர் முகம் மலர்ந்தது. ‘‘உன்னால் முடியுமா?’’

‘‘அன்னை மகா காளி எனக்குக் கைகொடுப்பாள். கவலையை விடுங்கள்!’’ என்றான் தெனாலி.

மறு நாள் அவை கூடியது. தன் சகாக்களுடன் வந்தமர்ந்த வித்யாசாகரர், ‘‘மன்னரே! என்னுடன் வாதிடப் போகும் புலவர் யார்?’’ என்று கேட்டார்.

உடனே தெனாலிராமன் கம்பீரமாக எழுந்து, ‘‘புலவரே! தங்களுடன் இன்று வாதிட வந்திருப்பவன் அடியேன்தான். தெனாலிராமன்!’’ என்று சுயமாக அறிமுகம் செய்து கொண்டான். அவனை ஏறிட்டுப் பார்த்தார் வித்யாசாகரர். ‘புலவருக்கு உரிய மிடுக்கு எதுவும் இவன் முகத்தில் தெரியவில்லையே!’ என்று முணுமுணுத்தார். பிறகு, ‘‘சரி… விவாதத்தை நாம் ஆரம்பிக்கலாமா?’’ என்று கேட்டார்.

தெனாலிராமன், ‘‘புலவரே, விவாதத்துக்கு முன் உங்களைச் சோதிக்க விரும்புகிறேன்!’’ என்றபடி பட்டுத் துணியால் மூடப்பட்ட மூட்டை ஒன்றை கவனமாகவும் மிகுந்த பக்தியுடனும் எடுத்து வைத் தான். ‘‘என்ன இது?’’ _ வித்யாசாகரர்.

‘‘இது பிரசித்தி பெற்ற சம்ஸ்கிருத நூலான தில காஷ்ட மகிஷ பந்தனம்’’ என்றான் தெனாலி.

‘‘இப்படியரு பெயரை நான் கேள்விப்பட்ட தில்லையே!’’ என்று திகைத்தார் வித்யாசாகரர்.

‘‘நீர் கேள்விப்படாதது, இந்த நூலின் குற்றமில்லை. அது உங்கள் அறியாமையைக் காட்டுகிறது!’’ என்றான் தெனாலி மிதப்பாக. திலகாஷ்ட மகிஷ பந்தனம் குறித்து மேற்கொண்டும் தெரியாது என்றால் தன்னைப் பற்றிக் கேவலமாக நினைப் பார்கள் என்று கருதிய வித்யாசாகரர், ‘‘இந்த நூல் சட்டென்று என் நினைவுக்கு வரவில்லை!’’ என்று சமாளித்தார்.

சரியான பிடி கிடைத்ததை எண்ணி மகிழ்ந்தான் தெனாலிராமன். ‘‘சந்தோஷம். இந்த இலக்கியத்தை வைத்தே வாதிடலாம். சரி… இதன் ஆசிரியர் யார்?’’

வித்யாசாகரரின் நிலை தர்மசங்கடமா னது. ‘‘தெனாலிராமா… அதன் ஆசிரியர் பெயர் அவ்வளவு முக்கியமா என்ன?’’ என்றார்.

‘‘சரி… போகட்டும். இந்த நூல் மூன்று முக்கிய உவமைகள் கொண்டது. அவை என்னென்ன? விளக்குங்களேன்!’’ என் றான் தெனாலி.

கிட்டத்தட்ட பைத்தியம் பிடித்தது போலானார் வித்யாசாகரர். மேற் கொண்டு பேசினால் அவமானப்பட நேரும் என்று கருதி, தெனாலியிடம், ‘‘புலவரே! திடீரென்று என் உடல் நிலை பாதிப்பு அடைந்துள்ளது. அத னால் நாளை நமது விவாதத்தைத் தொடரலாமே!’’ என்றார். தெனாலி யும் ஒப்புக் கொண்டான்.

மறு நாள் காலையில் அரசவை கூடி யது. ஆனால், வித்யாசாகரர் அவைக்கு வர வில்லை. பின்னர் இரவோடு இரவாக அவர் ஊரைவிட்டு ஓடிய தகவல் தெரிந்ததும் மன்னன் கிருஷ்ணதேவ ராயரும் மற்றவர்களும் மகிழ்ந்தனர். மன்னர், ‘‘தெனாலிராமா! நீ ஏதோ ஓர் இலக்கியம் பற்றிக் கூறினாயே… அதன் பெயரென்ன?’’ என்று கேட்டார்.

‘‘திலகாஷ்ட மகிஷ பந்தனம்!’’

‘‘அதைப் பற்றி உனக்கு எப்படித் தெரியும்? எங்கே, அந்த நூலை என்னிடம் காட்டு!’’

உடனே பட்டுத் துணியில் மூடப்பட்ட மூட்டையை அவிழ்த்தான் தெனாலிராமன். அதற்குள் சற்று எள், விறகு, எருமை மாடு கட்டும் கயிறு ஆகியவை இருந்தன.

‘‘இதெல்லாம் என்ன? நூல் எதையும் காணோமே?’’ என்று வியப்புடன் கேட்டார் மன்னர்.

‘‘அரசே! இதுதான் திலகாஷ்ட மகிஷ பந்தனம். எள்& திலக். காஷ்டம்& விறகு. மகிஷ பந்தனம்& எருமை கட்டும் கயிறு. இந்த மூன்றும் சேர்ந்ததுதான் திலகாஷ்ட மகிஷ பந்த னம்!’’ என்று விளக்கினான் தெனாலி. அவனது சம யோசிதத்தை பாராட்டி சிறப்புப் பரிசுகள் வழங்கி கௌரவித்தார் கிருஷ்ணதேவ ராயர்.

– ராணி மணாளன், கிருஷ்ணகிரி-1 (மார்ச் 2007)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *