ஆவிக்கதை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: அமானுஷம்
கதைப்பதிவு: March 31, 2019
பார்வையிட்டோர்: 169,989 
 
 

ஆவிகள் பற்றிய பாடம் நடந்துகொண்டிருந்தது மாசில்லாக் கோட்டையின் மாணிக்க மண்டபத்தில். வைரமாளிகையில் படிக்க பிக்காதவன் பெயர் ஜான். அவனுக்கு ஆவிகள் பற்றித் தெரிந்துகொள்வதில் அப்படி ஒரு ஆர்வம்.அதற்குக் காரணம் பலருக்குத் தெரியாது.

மதி கேட்டபோது இப்படி பதில் சொன்னான். எங்கப்பா தன் தாத்தாவின் ஆவியை நேரில் பார்த்தார். எனக்கும் ஆவி தெரியுமா? என்று கேட்டதற்கு பெரியவனானது நீயும் ஒரு நாள் பார்பாய் என்றார். அவர் அந்த விவரத்தை சிறுவனாய் இருந்த போது அவனிடம் சொன்னார்.

கடிகாரத்தைப் பார்த்தான் ஜான். மணி ஒன்பதைக் காட்டியது. பெல் அடித்தது. அப்போது சுவரில் இருந்த கடிகாரத்தில் மணி பத்து ஆகியிருந்தது. ஆவி பற்றிய பாடம் நடத்திக்கொண்டிருந்தவர் தன் கடிகாரத்தைப் பார்த்தார். சரியாக மணி ஒன்பது.

வகுப்பில் ஒரு குழப்பம் காலம் பற்றி. ஒன்பதா? பத்தா? என்று.

ஜானுக்கு அந்த குழப்பம் சிறிதும் இல்லை. அவன் தெளிவாக இருந்தான். ஆனால் அவன் மனம் மட்டும் அமைதியற்று இருந்தது. அதற்குக் காரணம் ஆவி.

கொஞ்ச நாட்களுக்குப் பிறகு திடீரென காணாமல் போனான். மாணிக்க மண்டபத்தில் அமைதி நிலவியது. அவனுடைய நெருக்கமாக நண்பர்கள் கூட அது பற்றி கண்டுகொள்ளவில்லை. மதிக்கு மட்டும் ஒரு யோசனை தோன்றியது. அது ஜானின் எதிர்காலம் பற்றியது.

வவ்வாலின் வடிவம். அதற்குத் தலையில்லை. ஒரு சராசரி மனித உடலைப்போல் இரு மடங்கு உயரம். கல்லால் ஆன வடிவத்தில் தலை காணமல் போனதற்கான காரணம் பற்றி ஜானுக்கு தெரியும். அதைப் பற்றி ஆசிரியரிடம் கேள்விப்பட்டிருந்தான். ஆனால் நேரில் பார்த்த போது அதிசயித்து நின்றான்.

டிங்டங்டுங் மலை. அங்குதான் 18 நூறு ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு பெரிய சாம்ராஜ்ஜியம் இருந்தது. அங்குள்ள மக்களின் வீடுகளுக்கு மட்டுமல்ல அரசனுடைய மாளிகைக்கும் கதவு இல்லை. அங்கு செல்லும் மக்களின் வாழ்வு சிறக்கும். மகிழ்ச்சியுன் வாழலாம் என்று ஆசிரியர் சொன்ன செய்தி நினைவுக்கு வர அவன் முகம் வாடியது

ஏதோ ஒரு காரணதத்தால் அந்த மலை ராஜ்ஜியம் அழிந்து போனது. ஆனால் அங்கு வாழ்ந்த மக்களின் ஆவி மட்டும் அங்கேயே சுற்றிக் கொண்டுள்ளது என்ற செய்தி சிலர் நம்பினர்.

அந்த மலைக்குச் செல்ல எல்லோராலும் முடியாது. அப்படிச் சென்றாலும் ஒரு சிலருக்கு மட்டும் தான் ஆவிகள் தென்படும்.

கறுப்பு மலை ஜானின் கண்ணுக்குத் தெரிந்தது. இனம்புரியாத மிகழ்ச்சி அவனுக்கு. மலை உச்சியில் ஏதோ புரியாத எழுத்தில் எழுதியிருந்தது. பென்னிறத்தில் இருந்த அந்த வாக்கியம் அவனுக்குப் புரிந்தது.

அதே நேரம் மாணிக்க மண்டபத்தில் வேறொரு ஆசிரியர் ஆவிகள் பற்றிக் கூறிக்கொண்டிருந்தார். கொஞ்ச நேரத்திலே அவர் சோர்வடைந்தார். கடிகாரத்தைப் பார்த்தார். மணி 10 ஆனதாகக் காட்டியது. அப்போது பெல் அடித்தது. சுவரின் கடிகாரம் பத்தைக் காட்டியது. வகுப்பிலிருந்த ஒரு குள்ளமான மாணவன் பவ்வியமாக எழுந்து நிமிர்ந்து நின்று கேட்டான் ஐயா இப்போது மணி ஒன்பதா? பத்தா? என்று.

அந்த ஆசிரியர் சுவரை நோக்கி கையை நீட்டினார். மண்டபத்திருந்த எல்லாரும் கலகல வென வாய்விட்டுச் சிறித்தார்கள்.

அவனுக்கு உண்மை புரிந்தது. தனக்குள் சிறித்துக்கொண்டான்.

– சிற்றேடு (அக்டோபர் – டிசம்பர்-2016)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *