கதையாசிரியர் தொகுப்பு: பூ.சுப்ரமணியன்

20 கதைகள் கிடைத்துள்ளன.

இரு கடிதங்கள் !

 

  பிள்ளையார் படத்தினருகில் இருந்த சுவர்க்கடிகாரத்தைப் பார்த்தேன். மாலை ஐந்து மணியைக் காட்டியது அலுவலகத்திலிருந்து விவேக் வீட்டிற்கு வருவதற்கு இன்னும் மூன்று மணி நேரம் இருக்கிறது. நான் வீட்டில் எல்லா வேலைகளையும் முடித்து விட்டேன். அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்து குப்பை மாதிரி எல்லாத் துணியெல்லாம் பீரோவில் கலைந்து கிடக்கிறது சரி ! பீரோவை ஒதுங்க வைக்கலாம் என்று நினைத்து பீரோவைத் திறந்தேன். விவேக் மனம்போல், பீரோ முழுவதும் துணிமணிகள் நகைகள், புடவைகளால் நிறைந்திருந்தது. ஆகா


அலைகள் ஓய்வதில்லை !

 

  “வாங்க சார் ! “ என்ற பழக்கப்பட்ட குரல் தன்னை வரவேற்கவே நிமிர்ந்து பார்த்தான் கணேஷ்குமார். “ லதா நீயா.. நீ எங்கே …. ..?” “ என்னோட அக்கா வைதேகியைத்தான், பெண் பார்க்க நீங்க வந்திருக்கீங்க “ என மெதுவாக அவனுக்கு மட்டும் கேட்பதுபோல் லதா கூறினாள். ஒரே கம்பெனியில்தான் கணேஷ்குமாரும் லதாவும் வேலை பார்க்கிறார்கள். கணேஷ்குமார் உதவி மானேஜராகவும், லதா அங்கு டைபிஸ்ட்டாகவும் பணிபுரிகிறார்கள். இருவருமே கம்பெனியில் சொந்த வேலை இருப்பதாகவே ஒரே


வித்யா மீண்டும் வேலைக்குப் போகிறாள் !

 

  ஸ்ரீ கணேஷ் பிளாஷ்டிக் கம்பெனி அலுவலகத்திற்குள் வித்யா நுழையும்போது சுவர்க்கடிகாரம் பத்தடித்து ஓய்ந்திருந்தது. அவள் இருக்கையில் சென்று அமரவும் மேஜையில் இருந்த தொலைபேசி ‘ டிரிங் டிரிங் ‘ என்று ராகம் பாடியது. வித்யா கையில் எடுத்து ஹலோ என்று பேசிவுடன், மறுமுனையில் இருந்து முதலாளி இருக்காரா ? என்ற பெண் குரல் கேட்டது. “மேடம் நீங்க யாரு? முதலாளிக்கு நீங்க என்ன வேணும்?” என்று கேட்டாள் வித்யா “ நான் முதலாளியோட ஒய்ப் ..


எதிர்பாராத முடிவு !

 

  விநாயகர் படத்தின் அருகில், மாட்டியிருந்த அழைப்பு மணியின் சப்தம் கேட்டு வாசல் கதவை திறந்தேன். திறந்தவள் திகைத்தேன். முன் பின் தெரியாத பெண் ஒருத்தி , என் எதிரே நின்று கொண்டிருந்தாள். ‘என்ன ?’ என்பது போல் நான் அவளை வியப்புடன் பார்த்தேன். அவள் வெகு அலட்சியமாக “ உன்னால் ஒரு கொலை செய்ய முடியுமா ? “என்று சம்மந்தமில்லாமல் என்னைப் பார்த்துக் கேட்டாள். நான் அவளைப் பார்த்து “உன் பெயர் என்ன ? “


ஓடம் ஒரு ஓடத்தை கரை சேர்க்கிறது !

 

  விநாயகர் கோவில் அருகில் இருந்த சிறுவர் பூங்காவில் பிரபுவும், நானும் எங்கள் காதலைப் பற்றி சிரித்து பேசிக்கொண்டிருந்தோம் . அப்போது திடீரென்று பிரபு பொய்க் கோபத்துடன் என்னைப் பார்த்து “ சுபா ! நீ இப்படியே நம்ம கல்யாணத்தைப் பற்றி யோசனை பண்ணிக் கொண்டே இரு ! நீ வேணும்னா பாரு ! நமக்கு அறுபதாம் கல்யாணம்தான் நடக்கப் போவுது. இப்படியே நீ லேட் பண்ணிட்டே இருந்தே எங்க வீட்டிலே, என் அத்தை மகள் கழுத்திலே