கதையாசிரியர் தொகுப்பு: சௌ.முரளிதரன்

42 கதைகள் கிடைத்துள்ளன.

இளமை இதோ! இதோ!!

 

  வருடம் 2013 சென்னை : பருவா மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் டீன் செல்வம் கனைத்தார். “ என்ன டாக்டர் யயாதி? எல்லாம் தயார் தானே? மிஸ்டர். பருவா! ஆரம்பிக்கலாமா?” பருவா தலையசைத்தார். யயாதி சைகை காட்ட, அந்த மரபணு ஆராய்ச்சி நிலையத்தின் அறையின் விளக்குகள் கொஞ்சம் கொஞ்சமாக உயிரை விட்டன. திரை உயிர்பெற்றது. அதிலிருந்து ஒரு நோயாளியின் சோர்ந்த முகம் ஒன்று மெதுவாக தெரிந்தது. “இதோ இந்த திரையில் தெரிகிறானே இந்த நோயாளியின் பெயர்


வேடிக்கை!

 

  சகாதேவன் யாருக்காவது உடனடியா ரத்தம் தேவையா ? சகாதேவனுக்கு சொல்லிவிட்டால் போதும், உடனே ஆட்டோ பிடிச்சி, அவனே வந்து, ரத்த தானம் கொடுப்பான். கூடவே, முக நூலில், அவனது நண்பர்கள் இரண்டாயிரத்து சொச்சம் பேருக்கும் ஸ்டேடஸ் போட்டு தெரியப் படுத்துவான். உதவி பண்ணுங்க, ஷேர் பண்ணுங்கன்னு கெஞ்சுவான். இது மட்டும் இல்லை, எங்கேயாவது விபத்துன்னா, சகா, தன் கை வேலையெல்லாம் விட்டுட்டு அங்கே ஓடிப்போவான். இருக்கிற காசிலே , அங்கே உதவி செய்கிறவர்களுக்கு, டீ வாங்கிக்


நட்புக்கு அப்பால்

 

  1994 ஜூன் 15 பிழைப்பு தேடி, கோபாலும் கணேசனும் தங்கள் தங்கள் பாதையில் பிரிய முடிவெடுத்தனர். பிரிவதற்கு முன்னாள், ஆழ்வார்பேட்டையில், ஒரு முட்டுச்சந்தில், தாங்கள் எப்போதும் அரட்டை அடிக்கும் , சின்ன ரெஸ்டாரண்டில் சந்திக்க திட்டம். இரண்டு வடை , இரண்டு சமுசா, சிங்கில் டீ சகிதம் தங்களுக்கு தாங்களே பிரிவுபசாரம் நடத்திக் கொண்டார்கள்.. இருவருக்கும் மூச்சு முட்டியது. கணேசன் பேச்சு தடுமாறியது. வாயில் வடை வேறு. கண்ணீர் மல்க பிரியா விடை. “டேய் கோபால்,


தற்கொலை தான் முடிவு

 

  கல்பனா ஒரு முடிவுக்கு வந்து விட்டாள். இன்று தான் அவளது கடைசி நாள், இந்த பாழாய்ப் போன பூமியில். இந்த முடிவில் மாற்றத்திற்கே இடமில்லை. நோயிலும், வேதனையிலும் ஒரு நாளைப் போல சாவதை விட, ஒரேயடியாக போய் சேர்ந்து விடலாம். இது என்ன வாழ்க்கை, ஒரு பிடிப்பும் இல்லாமல், ? இந்த இருபத்திரண்டு வயதில் எல்லா வேதனைகளையும் அனுபவித்தாகி விட்டடது. போதுண்டா சாமி ! இதை விட நிம்மதியாகசெத்து மடியலாம். பாவம் கல்பனா, இரண்டு மூன்று


அவன் வழி தனி வழி

 

  “வாங்க சார், வாங்க” வரவேற்பு தடபுடலாக இருந்தது, அந்த வங்கிக் கிளையில். ஆர்பாட்டமாக வரவேற்றவர் அந்த கிளையின் மேனேஜர். சிரித்துக் கொண்டே உள்ளே வந்தவர் அந்த ஊர் வி.ஐ.பீ.. கோயில் டிரஸ்ட்டீ. மதுராங்கத்துக்கு பக்கத்தில் உள்ள, அந்த ஊரின் பெருமாள் கோயில், ரொம்ப பிரசித்தம். விசா வெங்கடேச பெருமாளுன்னு, அந்த கோவில் மூலவருக்கு அடைமொழி வேறே. வேலை தேடி வெளிநாடு போக ஆசைப் படுவோர், அந்த கோவிலுக்கு வந்து பதினோரு தடவை பிரகாரத்தை சுற்றினால், விசா