கதையாசிரியர் தொகுப்பு: அ.முத்துலிங்கம்

105 கதைகள் கிடைத்துள்ளன.

நிலம் எனும் நல்லாள்

 

 சைமன் கனடா வந்த நாலாவது நாளே தாயிடம் கேட்டான். ”அம்மா, உங்களிடம் துவக்கு இருக்கிறதா?” ”இல்லையே, இது என்ன கேள்வி?” ”அமெரிக்காவின் சனத்தொகையிலும் பார்க்க அங்கே துப்பாக்கிகளின் எண்ணிக்கை அதிகமாமே.” ”இது அமெரிக்கா அல்ல மகனே, கனடா.” ”பக்கத்து வீட்டுக்காரர்களிடம் துப்பாக்கி இருக்குமா?” ”ஏணி கடன் கேட்பதுபோலப் பக்கத்து வீட்டில் போய் இரவல் கேட்கப்போகிறாயா? யேசுவே, என்ன நடக்கிறது இங்கே?” ”இல்லை அம்மா, ஒரு பாதுகாப்புக்குத்தான்.” ”இங்கே உனக்கு எதிரிகள் இல்லை. நீ சுதந்திரமாக உலாவலாம். இது


கனகசுந்தரி

 

 இப்படி ஓர் அவமானம் கனகசுந்தரிக்கு அவளுடைய 15 வயது வாழ்க்கையில் நடந்தது கிடையாது. இதற்கு எல்லாம் காரணம், கறுப்பு ரீச்சர்தான். மற்றவர்கள் விமலா ரீச்சர் என்று அழைத்தாலும், அவளுக்கு அவர் கறுப்பு ரீச்சர்தான். எதற்காகத் தன் மீது வன்மம் பாராட்டுகிறார் என்று அவள் யோசித்து இருக்கிறாள். ரீச்சர் வாய் திறக்கும்போது நாக்கு பிளந்திருக்கிறதா என்று உற்றுப் பார்த்திருக்கிறாள். கனகசுந்தரி அழகாக இருப்பாள். வெள்ளை வெளேர் என்ற நிறம். அவள் நடந்துபோனால், ஆணோ, பெண்ணோ நின்று திரும்பிப் பாராமல்


எல்லாம் வெல்லும்

 

 பிரிகேடியர் துர்க்கா, பூமி யில் வாழப்போகும் கடைசி நாள் அன்று திடுக்கிட்டு விழித்தபோது, காலை ஐந்து மணி. அவர் மூன்றா வது நாளாகப் பதுங்கு குழியில் இரவைக் கழித்திருந்தார். வழக்க மாக, தோய்த்து அயர்ன் பண்ணி விறைப்பாக நிற்கும் அவருடைய சீருடை சேற்று நிறமாக மாறிவிட்டது. சப்பாத்துகளைக் கழற்றி, மண்ணை உதறி மறுபடியும் அணிந்துகொண்டார். சுவரில் சாத்திவைத்த S97 துப்பாக்கியின் மேல் வண்டு அளவிலான இலையான் ஒன்று உட்கார்ந்திருந்தது. அதை அடிக்கக் கை ஓங்கியவர், மனதை மாற்றி


ஜகதலப்ரதாபன்

 

 முன்னொரு காலத்தில் யாழ்ப்பாணப் பட்டினத்துக்கு ஒரு புதுப் படம் வந்தால், அதைக் கிராமங்களில் விளம்பரப்படுத்துவதற்கு மாட்டு வண்டிகளைப் பயன்படுத்துவார்கள். வண்டியின் இரண்டு பக்கங்களிலும் தொங்கும் விளம்பரத் தட்டிகளில், எம்.கே.டி பாகவதரோ, டி.ஆர்.ராஜகுமாரியோ, எம்.எஸ்.சுப்புலட்சுமியோ, பி.யு.சின்னப்பாவோ காட்சி அளிப்பது வழக்கம். மேளம் அடித்தபடி வண்டி கிராமத்து ஒழுங்கைகளில் ஓடும். அப்படி ஓடும்போது, விளம்பரத் துண்டுகளை அள்ளி வீசுவார்கள். வாழ்நாள் முழுக்க இந்த ஒரு தருணத்துக்காகவே காத்திருந்ததுபோல, நானும் தம்பியும் பாய்ந்து புழுதியில் விழுந்து, புரண்டு அந்தத் துண்டுகளைப் பொறுக்குவோம்.


ஆயுள்

 

 (இந்தக் கதையில் ஓர் ஆண் பாத்திரம் உண்டு. பெண் பாத்திரமும் இருக்கிறது. ஆனால் இது காதல் கதை கிடையாது. இன்னொரு பாத்திரமும் வரும். அதைப் பற்றிய கதை. ஏமாற வேண்டாம் என்பதற்காக முன்கூட்டியே செய்த எச்சாிக்கை இது.) பெயர் ஆயுள் மே இலையான் ஒரு நாள் பழ இலையான் ஒரு மாதம் வண்ணத்துப்பூச்சி ஒன்றரை வருடம் தவளை இரண்டு வருடம் நாய் 15 வருடம் சிங்கம் 30 வருடம் ஒட்டைச்சிவிங்கி 36 வருடம் மனிதன் 65 வருடம்


மூன்று குருட்டு எலி

 

 இரவுகள் ஒன்றிரண்டு மணித்தியாலங்களை பகலிடம் இருந்து திருடிக்கொள்ளும் பனிக்காலம். ஓர் இரவு தொலைபேசி வந்தது. நண்பர் தமிழ் மழலைப் பாடல்கள் (nursery rhymes) புத்தகம் எங்கே கிடைக்கும் என்று கேட்டார். எனக்கு தெரியவில்லை. மனைவியைக் கேட்டேன். எல்லாம் தெரிந்த அவளுக்கும் தெரியவில்லை. அடுத்த நாள் நாங்கள் மூவரும் கனடாவின் கடைகளில் ஏறி இறங்கினோம். ஆங்கிலத்தில் nursery rhymes இருந்தன. ஆனால் தமிழில் அப்படி ஒன்றும் இல்லை என்று கையை விரித்துவிட்டார்கள். எனக்கு தமிழ் நாட்டில் ஒரு நண்பர்


பாரம்

 

 அமெரிக்காவில் அவன் தங்கிய முதல் வீட்டுக்கு முன் ஒரு மயானம் இருந்தது. வாடகைக்கு எடுத்தது. மறு நாள் காலை யன்னலைத் திறந்து பார்த்தபோதுதான் அவனுக்கு மயானம் இருப்பது தெரிந்தது. உடனேயே அனோஜாவை நினைத்துக்கொண்டான். மயானத்தைத் தாண்டும்போது அவள் கை விரல்களை ஒவ்வொன்றாகச் சூப்புவாள். அவனையும் கை விரல்களைச் சூப்பச் சொல்வாள். அவனுக்குச் சிரிப்பு வந்தது. அமெரிக்காவின் பனிக் காலத்தில் என்ன செய்வாள்? ஒவ்வொரு முறை மயானத்தைக் கடக்கும்போதும் கையுறையைக் கழற்றி ஒவ்வொரு விரலாகச் சூப்பிவிட்டு மறுபடியும் கையுறை


கழுதை வண்டிச் சிறுவன்

 

 புத்தாயிரம் நெருங்க நெருங்க, என் பதற்றம் அதிகரித்தது. இனி வரும் வருடங்களில் நினைவுகூரும் விதமாக அதைக் கொண்டாட வேண்டும் என்று திட்டமிட்டேன். திங்கள் முடிந்து செவ்வாய் பிறப்பது, பங்குனி சித்திரையாக மாறுவது, ஒரு வருடம் கழிந்து இன்னொரு வருடம் பிறப்பது எல்லாம் வழமை போல நடப்பதுதான். ஆனால், ஆயிரம் வருடங்கள் முடிந்து இன்னொரு ஆயிரம் வருடங்களுக்கான தொடக்கம் என்பது எவ்வளவு அபூர்வமானது! ஆகவே, அந்த இரவு என்றென்றைக்குமே மறக்க முடியாத ஒன்றாக அமைய வேண்டும் என்று நான்


பொற்கொடியும் பார்ப்பாள்!

 

 நவாலியூர் சோமசுந்தரப் புலவரின் பாடல் ஒன்றில், பால்குடம் சுமந்துகொண்டு ஒரு சிறுமி சந்தைக்குப் போவாள். அவளது மனம் கோட்டை கட்டும். ‘நான் பாலை விற்றுக் காசு சேர்த்துப் பணக்காரியாவேன்; பட்டாடை உடுத்தி நடக்கும்போது, எல்லோரும் பார்ப்பார்கள். பாரும், பாரும்!’ என்று அவள் தலை நிமிர்வாள். அப்போது பால்குடம் உடைந்து, அவள் கோட்டையும் சிதைந்துபோகும். அந்தப் பாடலின் வரிகள்: ‘சுந்தரிபோல் நானே சந்தைக்குப் போவேனே அரியமலர் பார்ப்பாள் அம்புசமும் பார்ப்பாள் பூமணியும் பார்ப்பாள் பொற்கொடியும் பார்ப்பாள்…’ இதிலே, பொற்கொடி


உடனே திரும்பவேண்டும்

 

 முதலில் கடித்தது தும்பு இலையான். தும்பு இலையான் உண்மையில் கடிக்காது, முட்டைதான் இடும். என்னுடைய மகள் கைக்குழந்தை. அவள் தோள்மூட்டில் முட்டையிட்டிருந்தது. கண்ணுக்குத் தெரியாத அந்த முட்டைப்புழு சருமத்துக்குள் புகுந்து வளர ஆரம்பித்தது. சருமம் வீங்கி குழந்தை நிறுத்தாமல் அழுதது. நாங்கள் ஆப்பிரிக்காவுக்கு வந்து சில மாதங்களே ஆகியிருந்தன. எங்களுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. அடுத்து அவளுக்கு நுளம்பு கடித்து மலேரியாக் காய்ச்சல் பிடித்தது. மருத்துவ மனைக்கு ஓடினோம். குழந்தை மெலிந்து உருக்குலைந்து கொண்டு வந்தது. அந்த