Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

கதையாசிரியர் தொகுப்பு: அப்புசாமி

75 கதைகள் கிடைத்துள்ளன.

அம்மா வா..ரம்

 

  “அம்மா தெய்வம்டி! எங்க அம்மா தெய்வம்டி!” அப்புசாமி உணர்ச்சி வசப்பட்டுக் கத்தினார். “ஸோ வாட்?” என்றாள் சீதாப்பாட்டி சர்வ அலட்சியத்துடன். “நீயெல்லாம் ஒரு பொம்பிளையா?” என்று அடுத்த கணையை ஏவினார் அப்புசாமி. சீதாப்பாட்டி, “ஐ திங்க் ஸோ..” என்றாள். மகாபாரத டி.வி. யுத்தக் காட்சியில் கோணாமாணா அம்புகளை முக்கிய நபர்கள் ஒருத்தர் மேல் ஒருத்தர் விட்டுக் கொள்வார்களே. அந்த மாதிரி சீதாப்பாட்டிக்கும் அப்புசாமிக்கும் ஒரு சொற்போர் நடந்து கொண்டிருந்தது. “சீதே! நான் பொல்லாதவன்! தாலி கட்டிய


அப்புசாமியின் ஜு ஜு ஜி ஜீ!

 

  அப்புசாமி தெற்காசிய நாடுகளால் சூழப்பட்டிருந்தார். அவரது இந்திய ரத்தம் ஜிவுஜிவென்று சூடேறிக் கொண்டிருந்தது. இடம் : வேளச்சேரி பப்பள பளபள புதிய நீச்சல் குளம். நேரம் : மண்டை பிளக்கும் வெய்யில். அப்புசாமியின் கைகள் பரபரத்தன. வலப்பக்கம் பாகிஸ்தானை முறைத்தார். இடப்பக்கமிருந்த ஸ்ரீலங்காவை உறுத்து நோக்கினார். நேப்பாள், பூட்டான் ஆகியவற்றின் மீதும் கடுமையான பார்வையை ஏவினார். பங்களாதேஷையும் மாலத்தீவையும் கறாராகக் கவனித்தார். அவனவன் என்னமாக ஆட்டிக் கொண்டிருக்கிறான். வண்ண வண்ணத் தொளதொள சட்டைகளென்ன, கொடிகளென்ன, கத்தல்


கொள்ளைக்கார அப்புசாமி

 

  அப்புசாமி ஒவ்வொரு நகையாக அணிந்து கொண்டார். சங்கிலி, தோடு, புல்லாக்கு, ஒட்டியாணம், கடகம், சடை பில்லை – சுருக்கமாகச் சொன்னால் சர்வாலங்கார பூஷிதனாகிக் கண்ணாடியில் தன் அழகைப் பார்த்துப் பார்த்து வியந்தார். டி.வி.யில் செய்திகளைத் தொகுத்துச் சொல்ல அவ்வப்பொழுது முளைக்கும் சில திடீர் அழகிகளை விடத் தான அழகாகவும் லட்சணமாகவும் இருப்பது போன்ற கர்வம்கூட அவருக்கு ஏற்பட்டது. நிலைக் கண்ணாடிக்கு நெருக்கமாக முகத்தை வைத்துக் கொண்டு மூக்கில் அணிந்து கொண்டிருந்த புல்லாக்கை ஆராய்ச்சி மணி போல


பந்தியும் ப·ப்வேயும்

 

  இப்போதெலலாம் கல்யாண வீடுகளுக்குப் போனால் முன் மாதிரி ‘பந்திக்கு முந்திக்கோ’ என்று அநாகரிகமாக விழுந்தடித்தவாறு ஒருத்தர்மேல ஒருத்தர் இடித்துக் கொண்டு, மியூஸிகல் சேரில் இடம் பிடிப்பதுபோல் டைனிங் ஹாலில் காலி நாற்காலியை நோக்கிப் பாயவேண்டிய அவசியமே இல்லை. முதலில் சாப்பிட்ட எச்சில் இலைகளை எடுக்குமுன் நாற்காலியில் உட்காந்து கொண்டு எச்சசொச்சங்களை அருவருப்புடன் பார்க்கும் அபாக்கியங்கள் இல்லை. பிரபல சமையல் காண்ட்ராக்ட் விற்பன்னர்களெல்லாம் இப்போது ப·ப்வே முறைக்குத் தாவிவிட்டார்கள். இது ரொம்ப ஆறுதலான விஷயம்தானென்றாலும் எல்லா ப·ப்வே


அப்புசாமியின் ‘வால்’ நாளில்…

 

  அனைத்து சென்னை வாசிகளின் காதுகளிலும் அந்த இரவு நேரத்தில் கொசுக்களின் ரீங்காரம் ‘நொய்ய்ய்ங்’ துன்பமாகச் சத்தமிட்டுக் கொண்டிருக்க அப்புசாமியின் காதில் மட்டும் வேறொரு வகை சத்தம் இன்பமாக ரீங்கரித்துக் கொண்டிருந்தது. ‘காலை எட்டு மணிக்கு நாம் ஓர் இடத்துக்குப் போகிறோம். ‘அன்டில் ஈவினிங்’ அங்கேயே நாம் இருந்துவிட்டுத் திரும்புகிறோம். நாளைக்கு என் பிறந்த நாளில்லையா? முதல்வர்-கவர்னர் உறவு முறையிலிருந்து மனைவி சீதேயும் அவரை மதித்து அவருக்கு ஒரு ‘நாம்’ அந்தஸ்து முதல் முதலாகக் கொடுத்துப் பேசியிருக்கிறாள்.