கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: June 7, 2020

38 கதைகள் கிடைத்துள்ளன.

குடியிருப்பில் ஒரு வீடு

 

 நாகரிக நகரங்களில் தவிர்க்க முடியாத வளர்ச்சியாகத் தலையெடுக்கிற எல்லா “எக்ஸ்டென்ஷன்”களையும் போல் தான் அந்தக் குடியிருப்பும் அமைந்திருந்தது. அமைதியான சூழ்நிலை, பரபரப்பு இல்லாத அருமையான தெருக்கள், “மொட்டைமொழுக்கென்று அழகோ கவர்ச்சியோ இல்லாது கட்டப்பெற்றுள்ள சதுர வடிவக் கட்டிடங்கள் முதலியவற்றை நாகரிக விதிகளின்படி கொண்டிருந்த அந்தப் பகுதிக்கு ஆரம்பத்தில் “நியூ காலனி” என்று தான் பெயர் சூட்டியிருந்தார்கள். காலவேகத்தில், பெயர்களுக்கும் தமிழ் வடிவம் கொடுக்க வேண்டியது அவசியம் என்று முளைத்த ஒரு உணர்வைப் பின்பற்றி – அந்த வட்டாரத்துக்கும்


மனநிலை

 

 அவன் – பெருமாள். சாதாரண மனிதன். அவ்வேளையில் அசாதாரணமான சூழ்நிலையில் தனித்து விடப்பட்டிருந்தான். அதனாலேயே அவன் உள்ளம், இனம்புரிந்து கொள்ள முடியாத உணர்வுகளினால் கனமேறிக் கொண்டிருந்தது. ஒருவித பயம், குழப்பம், அழுத்தும் சோகம், ஏதோ ஒரு வேதனை கவிந்து, கணத்துக்குக் கணம் பாரமாகி வந்தன. அவன் பார்வை ஒரு மிரட்சியுடன், மேலும் கீழும்; அங்கும் இங்கும், ஏறி இறங்கிப் புரண்டு அலைபாய்ந்தது. அவன் கண்களில் பட்டனவெல்லாம் அவனை அச்சுறுத்தின. மலைகள். எல்லாப் பக்கங்களிலும் மலைப்பகுதிகள். விரிந்து பரந்து


அதிர்ச்சி

 

 இரவின் அமைதியைக் கொன்றது அந்தக் கூக்குரல். யாரோ கொலை செய்யப்படுவதால் எழுகிற அலறல் போல ஒலித்தது அது. மனிதக்குரல் போல் அல்லாது பயங்காரமாக வீரிடும் ஏதோ ஒரு மிருகத்தின் கதறல் போல அது தொனித்தது. அச்சம் கொண்டு அடித் தொண்டையிலிருந்து கதறியதான அந்த ஒலம் கேட்போருக்கு அச்சம் தந்தது. அந்தத் தனிவீட்டின் மாடியில் இருட்டினூடே, எழுந்த அந்த நீண்ட கூச்சல், கீழே வீட்டினுள் படுத்துத் தூங்கியவர்களை உலுப்பியது. என்னவோ ஏதோ எனப்பயப்பட வைத்தது. விழித்தவர்களில் ஒருவர் தட்டுத்தடுமாறி


ஆற்றங்கரை மோகினி

 

 ”குகுகூங்” – ஏதோ ஒரு பறவையின் இன்னொலிபோல் சிதறியது சிறு சிரிப்பு. அந்தச் சூழ்நிலையில் அப்படி ஒரு சிரிப்பை மகாதேவன் எதிர்பார்க்கவில்லை. ஆகவே, திடுக்கிட்டுத் திரும்பி நோக்கினான். அவனுக்குப் பின்னால் சற்று தள்ளி, ஒரு மரத்தடியில் ஒரு பெண் நின்றதைக் கண்டு அவன் திகைப்பே கொண்டான். தனது எண்ணம் உடனடியாக இவ்வாறு பலித்திட முடியுமா? அல்லது, கனவின் உருவெளித் தோற்றம்தானா அது? அவன் விழித்துக்கொண்டே கனவு காண்கிறானோ? அன்றி. சித்தம் சிருஷ்டித்து விளையாடுகிற பிரமைதானா? கண்களை விரலால்


காதல் அதிர்ச்சி

 

 டாக்சி வாடகைக்கு வருமா? ஏதோ யோசனையில் ஆழ்ந்திருந்த சந்திரன், அருகில் ஒலித்த குரலைக் கேட்டுத் திடுக்கிட்டுத் திரும்பினான். அவனது பதட்டத்தைப் பார்த்தோ – அல்லது மனத்தில் தோன்றிய ஏதேனும் ஒரு எண்ணத்தினாலோ – முகத்தில் சிரிப்பின் ரேகை நெளிய அவனையே கவனித்தபடி நின்ற இளம் பெண்ணை அவன் ஒரு தடவைதான் நோக்கினான். “ஊம்” என்று சொல்லிக் கதவைத் திறந்து விட்டு, மீட்டரை இயங்கும் படிச் செய்த பிறகு, தனது இடத்தில் அமர்ந்து, தயாரானான். அதற்குள் அவளும் காரில்


முளையும் – விளைவும்

 

 “விளையும் பயர் முளையிலே தெரியும்” என்று சொல்லப்படுகிறது. பயிர்களைப் பொறுத்த வரையில் இது உண்மையாக இருக்கலாம். மனித வாழ்க்கையில் இந்த விதி பொய்த்துப் போகும். போகும் என்ன போகும் முழுக்க முழுக்கப் பொய்த்தே விட்டது. பொய்யாகிக் கொண்டே இருக்கிறது! சிந்தித்துச் சினந்து சீறியது ஞானப்பிரகாசம் அவர்களின் அறிவு. அவருடைய அறிவுக்கு, அவர் பெருமைப்பட்டுக் கொள்ளும் அவரது உள் ஒளிக்கு, பலத்த அடிபட்டிருந்தது, நிமிர்ந்து நிற்க வலு இல்லாமல் செய்கிற சரியான வர்ம அடி” அதுதான் அவருடைய சிந்தனைக்கும்


திட்டம் தவறிப்போச்சு

 

 பேரும் குண இயல்புகளும் அதிசயமாக ஒத்துப் போகிற அபூர்வப் பிறவிகளில் பரிபூரண ஆனந்தம் என்பவரும் ஒருவராவார். வளர்ந்து பெரியவன் ஆனதும் நம்ம பிள்ளையாண்டான் இப்படி இப்படி நடந்து கொள்வான் என்பதை முன் கூட்டியே தீர்க்க தரிசனம்” ஆக உணர்ந்து, பையனுக்கு அந்தப் பெயரை குடும்பத்தின் பெரியவர்கள் இட்டார்களா? அல்லது, நமக்கு இந்தப் பெயர் இருப்பதால் நாம் பூர்ணமாக எதையும் செய்ய வேண்டும், எதிலும் பரிபூரணம் காண்பதே நமது வாழ்க்கை தர்மமாக இருக்க வேண்டும் என்று பையனே தீர்மானித்து


பெருமை

 

 ஒருவனுக்கு அதிர்ஷ்டம் இந்தால் அவன் கரியைத் தொட்டாலும் அது மஞ்சள் ஆகிவிடும் என்று சொல்வார்கள். பணம், பொருள் விஷயத்தில் மட்டுமின்றி புகழும் பெருமையும் வந்து சேருவதில் கூட அதிர்ஷ்டம் துணைபுரியக்கூடும் என்பதற்கு புன்னைக்காடு மகிழ்வண்ணம் பிள்ளையின் அனுபவம் சுவாரஸ்யமான உதாரணமாக விளங்குகிறது. வானைத் தொடுவது போல் நெடிது உயர்ந்து, முடிந்த வரையில் எவ்வளவு நிலப்பரப்பை வளைத்து பிடித்துக் கொள்ள இயலுமோ அவ்வளவுக்கு நீண்டு நெளிந்து கிடக்கும் மலைத் தொடரின் அடிவாரத்தை ஒட்டி அமைந்துள்ள சிற்றுார்களில் ஒன்று புன்னைக்


சுயம்பு

 

 காதுகளை உறுத்தும் பேரோசை சுயம்புவின் கவனத்தை ஈர்த்தது. அவன் பார்வை தானாகவே வெளியே பாய்ந்தது. ரோடில் பயங்கர வேகத்தில் ஒடியது ஒரு மோட்டார் பைக். உல்லாசியான இளைஞன் ஒருவன். அவன் பின்னால் அவனை ஒட்டியவாறு ஒரு இளம் பெண். அவள் சிரித்துச் சிரித்து ஏதோ சொல்லிக் கொண்டிருந்தாள். சுயம்புவின் கண்களில் ஒரு மிரட்சி. அவன் முகத்தில் ஒரு கலவரம். அவன் உள்ளத்தில் ஒரு பரபரப்பு. “அய்யோ!” என்று சிறு கூவல் எழுப்பியது அவன் வாய். காரணம்? வேகமாகப்


சின்னவன்

 

 புத்தகங்கள் அடங்கிய பையை எடுத்துக் கொண்டு, கடியாரத்தைப் பார்த்தான் முருகன். மணி ஒன்பது அடிக்க ஐந்து நிமிடங்கள் இருந்தன. ”சரியான நேரம்தான். இப்பவே புறப்பட்டு மெது மெதுவாக நடந்தால் ஒன்பதரைக்கு ஸ்கூல் போய் சேர்ந்திரலாம். பையன்களோடு பேசி விளையாட நேரம் இருக்கும் முதல் மணி அடிக்க ஐந்து நிமிஷத்துக்கு முன்னாலே வகுப்புக்குப் போகலாம்” என்று எண்ணவும் அவனுக்க உற்சாகம் ஏற்பட்டது. “அம்மா, நான் ஸ்கூலுக்குப் போறேன்” என்று உரக்கச் சொல்லியபடி வாசல் நடையை அணுகினான் முருகன். அந்த