கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: April 2020

89 கதைகள் கிடைத்துள்ளன.

ஒத்தப்பனை

 

 என் வீட்டிலிருந்து பார்த்தால் சுமார் அரை கி.மீ தூரத்தில் தெரியும் அந்த ஒத்தப்பனை (ஒற்றைப் பனை மரம்) என் கண்ணுக்குத் தெளிவாகத் தெரியும். சுமார் ஐந்து கி.மீ தூரத்திலிருக்கும் பள்ளியிலிருந்து நான் வரும் அந்த மாலைப் பொழுதுவரை, காலையில் செய்த குழி பணியாரங்களை ஈரத்துணியில் கட்டி கையில் வைத்துக்கொண்டு எனக்காக மிகுந்த ஆவலோடு காத்திருப்பார் என் தாத்தா. ஆம்! அவர் என் தந்தையின் தாத்தா சுப்பராசா (இப்படித்தான் அவரை அழைப்பார்கள்). நான் அவருடைய பேரனின் மகன், கொள்ளுப்பேரன்.


ரயில் வந்ததே!

 

 அது ஒரு நிசப்தமான இடம். முட்கள் பதினோரு மணியை தொட்டது அந்த ரயில்வே ஸ்டேஷன் கடிகாரத்தில்.. ஒரு முப்பது வயது மதிக்கத்தக்க நபர் சுற்றிமுற்றி பார்த்தார். அவர் அருகில் ஒரு இளைஞனை தவிர வேறு யாரும் அங்கு இல்லை. அந்த இளைஞன், முகத்தில் சோகத்துடனும் மடியில் பையுடனும் ரயில் வரும் திசை நோக்கி பார்த்துக்கொண்டிருந்தான். சற்று கலங்கிய கண்களை பார்த்த அந்த நபர், ” தம்பி ஏன் சோகமா இருக்க ” என கேட்க தான் தாமதம்.


தீ விழா

 

 “ஊர்த் திருவிழான்னு ஏன் எங்களை அசிங்கப்படுத்த பெங்களூரர்லர்ந்து கூட்டி வந்த? ஆறுமுகம் ” என்ற எனது உரத்துக் கத்திய கூச்சலுக்கு. பனந்தோப்பில் சரக்கடிக்க சேர்ந்த அந்த ஊர் நண்பர்கள் ஆறுமுகம் பெருமாளும் அவர்கள் இருவரது நண்பர்களும் அதிர்ந்தனர். சரக்கு ஏறுமுறன்னேயே நான் மப்பில் பேசியதாய் நினைத்தார்களோ என்னவோ “சத்தம் போடாத மணி”. என் கம்பெனி டீம் மெம்பரும் சகாவுமான ஆறுமுகத்தின் ஊர்க்காரனுமான பெருமாள் எச்சரித்தான். ஊருக்குள்ளே இங்கு பேசிய விஷயம் விஷமாகக் கூடாது என்று ஆறுமுகம் அவன்


தாம்பூலம் – ஒரு பக்க கதை

 

 ஓர் ஊரில் கணவனும் மனைவியும் சந்தோசமா வாழ்ந்து வருகிறார்கள். இவர்களுக்குக் குழந்தைகள் இல்லை. இருவரும் காட்டுக்கு விறகு வெட்ட போவர்கள். வெட்டிய விறகினை ஊருக்குள் சென்று விற்று வருவார்கள். அப்படி ஒருநாள் விறகு வெட்ட காட்டுக்குள் போகும்போது, அங்கு ஒரு இளைஞன் ஒருவனும் விறகு வெட்டிக்கொண்டிருந்தான். தம்பதிகளுக்கு அவ்வவ்போது உதவியும் செய்த வந்தான் அந்த இளைஞன். நாட்களும் சென்றன. மனைவிக்கு இந்த இளைஞன் மீது ஈர்ப்பு ஏற்பட்டது. கணவன் ஒரு பக்கத்தில் விறகை வெட்டிக் கொண்டிருக்கிறான். மனைவியும்


சூரன் குத்து

 

 ஒளி ஒடுங்கிச் சோர்ந்துவிட்ட பகலை விழுங்கிக் கொழுக்கும் எண்ணத்தோடு விரைந்து வரும் இரவு எனும் அசுரக் குழந்தை சற்றே மலைத்து நிற்கும் நேரம்….. பகலுமற்ற இரவுமற்ற “இரணிய வேளை”… ஊரின் தென்புறத்திலிருந்து விம்மி எழுந்த ஓலம் காற்றோடு கலந்து எங்கும் பரவியது. இருளும் ஒளியும் கூடி முழங்கும் விந்தையை ரசித்தபடி சோம்பிக் கிடந்த என் காதுகளையும் தொட்டது அது… இன்றுதான் “சூரன் குத்து” என்ற நினைவு படர்ந்தது எனனுள்… யானைமுகாசூரன், சிங்கமுகாசூரன் போன்ற பல சூரன்களையும் குத்திக்


மெல்லத் துறந்தது கதவு…

 

 வாக்கிங் போய் விட்டு வீட்டு வாசலுக்கு வந்தார் எக்ஸெல். வீட்டுக் கதவு மூடியிருந்தது. காலிங் பெல் அடித்தார். கதவு திறக்கவில்லை . இன்னொரு முறை ஓங்கி அடித்தார். அப்போதும் பூங்கதவு திறக்கவில்லை . கோபம் வந்தது. கதவை படபடவென தட்டினார். “யாரது? இப்படி தட்டறது?” என கத்தினார் ! மிஸ்டர் எக்ஸ் உள்ளிருந்து. “நான்தான். உங்க பொண்டாட்டி!” “எவ்வளவு பேர் இந்த மாதிரி கிளம்பியிருக்கீங்க? என் ஒய்ஃப் காலிங் பெல்தான் அடிப்பாளே தவிர ஒருக்காலும் கதவை தட்டமாட்டா.


தப்புக் கணக்கு!

 

 ஐம்பது லட்சம் வங்கி கையிருப்பு. வாசலில் இறக்குமதி செய்யப்பட விலை உயர்ந்த கார். கிழக்கு கடற்கரைச் சாலையில் இருபது ஏக்கரில் இரண்டு சொகுசு பங்களாக்கள் . சென்னை வானகரத்தில் ஒரு வசதியான திருமண மண்டபம். – இயக்குனர் ராமபத்ரனுக்கு மனசுக்குள் நிம்மதி. சபதத்தை நிறைவேற்றிவிட்டத் திருப்தி. வங்கி கணக்குப் புத்தகம், இடங்களின் பத்திரங்கள், அது சம்பந்தமான ஆவணங்கள் எல்லாவற்றையும் எடுத்து சூட்கேசில் வைத்துக் கொண்டு தன் அலுவலகத்தை விட்டு வெளியே வந்தார். பந்தாவாக காரில் ஏறி அமர்ந்து


என்னே எந்த ஆடவணும் தொடாம…

 

 பெருமாள் துணிகள் தைக்கும் ‘பாக்டரியில்’ ‘மெக்கானிக்காக’ வேலைப் பார்த்து வந்தான். அவனுக்கு இரண்டு பெண்கள்.பெரியவள் பிரேமா ப்ளஸ் 2 முடித்து விட்டு,கொஞ்சம் ‘கம்ப்யூட்டர் கோர்ஸ்ஸ¤ம்’ படித்து விட்டு ஒரு சின்ன கம்பனியில் வேலை பார்த்து வந்தாள்.சின்னவவள் சுகன்யா ஐந்தாம் வகுப்பில் படித்துக் கொண்டு இருந்தாள். வீட்டிலேயே பெருமாளின் மணைவி செண்பகம்,அக்கம் பக்கத்தில் இருந்து வந்தவர்களுக்கு ஜாக்கெட்,’நைட்டி’, ’சூரிதார்,கமீஸ்’ போன்ற பெண்களின் ஆடைகளை தைத்துக் கொடுத்து கொஞ்ச ம் பணம் சம்பாத்தித்து வந்தாள். இந்த மூன்று வரும்படி வந்தும்


ஜவஹர் எனும் நேரு

 

 (இதற்கு முந்தைய ‘பெயர்கள்’ கதையைப் படித்தபின் இதைப் படித்தால் புரிதல் எளிது). ‘ஐயோ அம்மா” என்று ஜவஹர் போடுகிற கூச்சலும் காதைப் பிளக்கும். அந்த நிமிடம் உயிரே போகப்போகிற மாதிரிதான் இருக்கும் அவன் போடுகிற கூச்சல். ஆனால் ஜவஹரின் எல்லா கூச்சலும் அந்த ஒரு நாளைக்குத்தான். மறுநாள் அவனைப் பார்த்தால் அத்தனை அடி உதை வாங்கிய அடையாளம் அவனுடைய முகத்தில் கொஞ்சம்கூடத் தெரியாது. மனசு நிறைந்த ஒரு சிரிப்புதான் அவன் முகத்தில் பொங்கி வடிந்து கொண்டிருக்கும். நல்ல


பிச்சை

 

 “அம்மா கல்லூரிக்கு நேரமாயிற்று டிபன் தயார் ஆகிவிட்டதா, டிராபிக்ல போய் சேருவதற்குள் போதும் போதும் என்றாகிவிடும், சீக்கிரம்மா” என்றான் பாஸ்கர். “இருடா தோசைதானே கல்லு அடுப்பில் வைத்துவிட்டேன், மூன்று தோசைதான் சாப்பிடுவே அதுக்கு ஏன் இப்படி பறக்கறே” “சரிம்மா வழவழன்னு பேசாதீங்கம்மா, தோசையை கொடுங்க, மதியம் என்னம்மா” “மதியத்திற்கு சாம்பாரும் உருளை கிழங்கும் வைத்திருக்கிறேன்” “சரிம்மா” என்று வேகமாக சாப்பிட்டு விட்டு கல்லூரிக்கு கிளம்பினான். “பாஸ்கர் வாடா கேண்டீன் போய் சாப்பிட்டு வரலாம்” என்றான் தினேஷ் “தினேஷ்