கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: April 9, 2020

10 கதைகள் கிடைத்துள்ளன.

நட்புக்கு இலக்கணம் வகுத்த நாய்

 

 அது ஒரு இனிமையான மாலைப்பொழுது. எனினும் யோகாவுக்கு அது எந்த இனிமையையும் கொண்டு வரவில்லை. யோகா மிகக்கடுமையாக யோசித்தவாறு ஜன்னலுக்கு வெளியே நிண்டிருந்த வீட்டுத்தோட்டத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவளுக்கு அப்போதிருந்த பிரச்சினையெல்லாம் அவளது அப்பாவை எவ்வாறு சந்தோஷமாக வைத்துக்கொள்வதென்பதுதான். அம்மா இறந்த பின் அப்பாவை எவ்வாறு தனிமையில் விடுவது என்று யோசித்த யோகா தன் கணவனது அனுமதியுடன் தம் வீட்டுக்குக் கூட்டி வந்து விட்டாள்.. ஆனால் இப்போது யோசிக்கும் போது அவரைக் கூட்டி வந்தது தப்பான


கணக்கு பிணக்கு புண்ணாக்கு

 

 முட்டாள்? மாத்ஸ், சயின்ஸ் வராட்டி பள்ளிப் படிப்பை விட்டுட்டியா? சரி இப்போ என்ன பண்ற? வனஜா எங்க ஊருப் பொண்ணு சென்னைல காலேஜ் படிக்கிறவ கேட்டாள் என்னை நாக்கு பிடுங்கி சாகிற மாதிரி. என் வீட்டிற்கு எதிர் வீட்டு பொண்ணு. சின்ன வயசில பாண்டி ஆடியது. ஒன்னா கவர்மென்ட் ஸ்கூல்ல படிச்சோம்.அவளை அப்பவே அவ மாமா நல்லா படிக்கிற பொண்ணூன்னு மெட்ராஸ் கூட்டிக் கொண்டு போனவர். நான் ஒம்பதாங் கிளாஸ் முழுப்பரிட்சை எழுதின கையோட என் மாமாவோட


இப்படியும் ஒரு தந்தை

 

 எட்டாம் வகுப்பு படித்துக்கொண்டு இருக்கிறாள் செல்வி. நன்றாக படிப்பவள். அவளுக்கு வீட்டில் சில பிரச்சனைகள், அவள் தந்தை மது அறுந்துபவர். அதைத் தவிற அவளிடம் தவறாகவும் நடந்து கொள்ளக் கூடியவர். அவள் அம்மா வீட்டு வேலைக்கு செல்பவள். அவள் அம்மா தான் வேலைக்கும் சென்று குடும்பத்தையும் கவனித்துக் கொள்கிறாள். செல்விக்கு ஒரு பாட்டி இருக்கிறாள், அவள் பாட்டி வீட்டிற்கு சென்று அம்மா வரும்வரை இருந்து கொள்வாள். தன் அப்பா தன்னிடம் தவறாக நடந்து கொள்வது அவளுக்கு பிடிக்காது,


நாயும் பொன்னும்!

 

 இந்தக்கதையில் ஏன்? எப்படி? என்றெல்லாம் கேட்கக் கூடாது. ஏனென்றால் அது கதை. அப்படித்தான் இருக்கும். ம்ம்… என்று மட்டும் கொட்டுங்கள். அது போதும்! ஒரு கிராமத்தில் நாய் ஒன்று வாழ்ந்து வந்தது. தினமும் அந்த நாயானது ஒவ்வொரு வீடுவீடாகச் செல்லும். வீடுகளில் சொல்லும் சிறுசிறு வேலைகளைச் செய்யும். பின்பு அவர்களால் கொடுக்கப்படும் உணவை உட்கொள்ளும் .இதுதான் அந்த நாயினுடைய அன்றாடம் வேலையாக இருந்தது. அப்போது நாயானது கர்ப்பமாக இருந்தது. ஒரு நல்ல நாளில் இரண்டு பெண் குழந்தைகளைப்


மகன் வீட்டு விசேஷம்!

 

 அடேயப்பா மகன் வீட்டை பார்த்து மலைத்து போய் நின்றார் பெரியவர் கதிரேசன். பக்கத்தில் இருந்த அவர் மனைவியிடம் எம்மாம் பெரிய வீடா கட்டியிருக்கான் பாரு உன் மகன். மனைவி உடனே சும்மா கண் வைக்காம வாங்க, உள்ளே போய் பாக்கலாம். ஹூம்..ஹூம் நான் இருந்த காலத்துல ஒண்டு குடித்தனத்துல உன்னைய வச்சு குடும்பம் நடத்தினேன், வருத்தத்துடன் சொன்ன கதிரேசனை சும்மா அதையே சொல்லி புலம்பாதீங்க, அன்னைக்கு நாம் அப்படி இருந்தோம், அதுக்கோசரம் பையனும் ஒண்டு குடித்தனத்துல கஷ்டப்படணும்னு


இரண்டு பாபிகள்

 

 இருள் கவியவில்லை இன்னும்… நாகரிகப் பெருநகரம் அசுரவேகத்தோடு, ஆரவாரமாய் இயங்கிக் கொண்டிருக்கும் வேளை, மாலை நேரம். புற்றுக்களிலிருந்து கிளம்பி எங்கெங்கும் திரிகிற எறும்புகள் போல, அலுவலகங்களில் அடைபட்டுக் கிடந்துவிட்டு வெளியேறிய உழைப்பாளிகள் – இயந்திரங்களை ஓட்டிப் பிழைக்கிறவர்களும், பேனா ஓட்டி வாழும் குமாஸ்தாக்களும், பிறரும் – வீடுகளை நோக்கிச் செல்லும் வேளை. உளச் சோர்வும் உடல் சோர்வும் இருந்த போதிலும், வீடு எனும் ஜம்பப் பெயரை உடைய பொந்துகளிலும் வளைகளிலும் குகைகளிலும் ஒடுங்கிவிடும் ஆசையோடு சென்ற இந்த


பவளக் கொடி

 

 ஊர் வெற்றிலை பாக்கு வைத்தாகி விட்டது. விடிந்தால் கல்யாணம். ரங்கூன் தேவர் என்று அழைக்கப்பட்ட சின்னத்தம்பித் தேவரின் ஒரே மகனான சிரஞ்சீவி முத்தையனுக்கும், சிங்கப்பூர்த் தேவரென்று கூப்பிடப்பட்ட பெரியண்ணத் தேவருடைய ஒரே மகளான சௌபாக்கியவதி பளவக்கொடிக்கும் திருமணம். இந்த சுபச் செய்தியைக் கேள்விபட்டதும், பணங்குளம் மட்டுந்தானா மூக்கின் மேல் விரலை வைத்தது? “கண்டீங்களாடி பொண்டுகளா இந்த அதிசயக் கூத்தை? நம்ப பவளக்கொடி வாழ்க்கைப்பட்டால் தன்னோட சொந்த அயித்தை மகன் வீரமணிக்குத்தான் வாழ்க்கைப்படுவேன்; இல்லாங்காட்டி, காளி கோயில் பாதாளக்


வழி விடுங்க…

 

 உங்களுக்கு நடராஜ் கதை தெரியுமா…? ! தெரியாது ! சொல்றேன். நடராஜ் வேலை செய்யும் இடத்தில் 48 பேர்கள் வேலை செய்கிறார்கள். 12 பெண்கள். மீதி ஆண்கள். இந்த 12 ல் குறிப்பிட்டுச் சொல்லும்படியாய் பாஸ் மார்க் வாங்கும் அழகில் உள்ள பெண்கள் மூன்று. சித்ரா, கௌரி, நிர்மலா. சித்ராவிற்கு ஏற்கனேவே திருமணம் ஆகிவிட்டது. கௌரி தபால் பிரிவில் வேலை செய்யும் மகேசைக் காதலிக்கிறாள். இதில் எந்தவித வில்லங்கமும் இல்லாமல் இருப்பது நிம்மி என்றழைக்கப்படும் நிர்மலா. இந்த


சிங் விட்ட சவால்

 

 நானும், ரகுவும் டெல்லியில் ஒரு ‘இன்டர்வியூ’வை முடித்துக் கொண்டு புது டில்லிக்குத் திரும்பிக் கொண்டு இருந்தோம்.’இன்டர்வியூ ஆசீஸை’ விட்டு வெளியே வந்து ஒரு ‘டாக்ஸி’யை கூபிட்டோம்.ஒரு வயசான ‘சர்தாஜி’ டிரைவர் எங்க எதிரில் வந்து நின்று நாங்க போக வேண்டிய இடத்தைக் கேட்டார்.நாங்க போக வேண்டிய இடத்தை சொன்னதும் அவர் ஒத்துக் கொண்டு மீட்ட ரைப் போட்டு விட்டு எங்களை ஏறச் சொன்னார். நாங்கள் எங்க பெட்டியை ‘டிக்கியில்’ வைத்து விட்டு டாக்ஸியில் ஏறிக் கொண்டோம். அந்த


மழையில் நனையும் பூனைகள்

 

 “இன்னும் ரெண்டு வாரத்திற்குள்ளே பணத்தை எண்ணிக் கீழே வைக்கலே, நீ, உன்னோட அம்மா அப்பா எல்லாரும் கம்பி எண்ண வேண்டியதுதான்” நான்கு பேர் சேர்ந்தார்போல் சத்தம் போட்டவுடன், மாதவி கலங்கிப்போனாள். நான்கே குடும்பங்கள் மட்டும் வசிக்கும் விதமாய் கட்டப்பட்டிருந்த ப்ளாட் என்றாலும், மற்ற மூன்று குடும்பங்களும் வந்து எட்டிப் பார்த்தபோது, துக்கமும், அவமானமும், கோபமும், இயலாமையும் சேர்ந்து அழுத்தியது. இருபத்தைந்து வயதுப் பெண்ணை நான்கு பேர் கதவைத் தட்டிக் கூப்பிட்டு இரண்டு வாரம் தவணை கொடுப்பதாய் சொடக்குப்போட்டு