Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: February 21, 2019

10 கதைகள் கிடைத்துள்ளன.

அது ஒரு “கறி”க் காலம்!

 

 முந்தாநாள் தான் இந்தியாவில் இருந்து வந்தேன். இந்த இந்தியா பயணத்தில் போய் இறங்கிய முதல் நாள் காலையில் இட்லி குடல் குழம்புடன் ஆரம்பித்து , பயணத்துக்கு முந்தைய தினம் மாரியம்மன் பொங்கலும் , கறி விருந்தும் என்று முடிந்த காலம் முழுவதும் கறிக்காலமாக இருந்தாலும் ( அதிலும் இந்த பொங்கல் வைத்து குழைந்து போன வெள்ளை சாப்பாட்டில் அப்படியே எலும்புக் குழம்பை பிசைந்து அடிப்பது தனி சுவைத்தான் ) , அதற்கும் மேல் என்ற அனுபவத்தை தந்த


மேகா அழகிய மனைவி

 

 ராம்குமாருக்கு வேலைபோய் மூன்று மாதங்களாகின்றன. அவன் இழந்தது மந்திரிப்பதவியோ, அல்லது அவன் ஒரு நிலப்பிரபுவின் பிள்ளையோ அல்ல. ஒரு சாதாரண உயிரணிகச் சாரதி (ஆம்புலன்ஸ்). அவனது மாதாந்த ஊதியமே அவன் குடும்பம் வதியும் இரண்டறை வீட்டின் வாடகைக்கும், அரிசி காய்கறி, உப்புப்புளி, குழம்புக்கும், குழந்தைகளின் உடுப்பு, லக்ரோஜன் / செறியல் (தானிய) உணவுகள், மருத்துவச் செலவுகளுக்குந்தான் அத்தாப்பத்தியமாயிருக்கும். (மட்டுமட்டாயிருக்கும்.) அந்த ஒரே வருமானத்தையும் இழப்பதென்பது அவஸ்த்தையிலிருக்கும் ஒரு நோயாளியின் உயிர்வளிக்குழாயைப் பிடுங்குவதைப்போல. அவன் சகி மேகா அழகி,


குழந்தை

 

 அத்தியாயம்-23 | அத்தியாயம்-24 நடராஜனுக்கு கமலா போ¢ல் இன்னும் நம்பிக்கை வரவில்லை.’இவள் இப்படித் தான் சொல்லுவா.நாமும் ஏமாந்து போய் உண்மை காரணத்தை சொல்லி விடுவோம்.உண்மை காரணம் தொ¢ஞ்சவுடன் பூகம்பம் தான் வெடிக்குமே ஒழிய, இவள் குழந்தையை வளக்க ஒத்துக் கொள்ள மாட்டா.நாமே ஏமாந்துப் போய் இவ கிட்ட மாட்டிப் போம்.இவ கேப்பதை உண்மைன்னு நம்பி நாம் உண்மையை சொன்னா வேறே வினையே வேணாம்.உண்மைக் காரணத்தை சொல்லாமல் இருந்து வருவது தான் சரி’ என்று எண்ணி மனதில் யோஜனைப்


அழகோவியம்

 

 விழா மேடையில், சென்னை ஓவியக் கலைக்கல்லூரியின் முதல்வர் தலைமையில் பெரியவர்கள் வீற்றிருக்க, அரங்கமே நிறைந்து கிடந்தது. ஓவியத்துறை ஜாம்பவான்கள் பலர் கூடியிருக்க அகில இந்திய அளவில் ஓவியம் வரைவுப்போட்டி நடைபெற்று முடிவுகள் அறிவிக்கபடும் நேரத்திற்காக அனைத்து மாநில மாணவர்களும் தம் தம் படைப்புகளை காட்சிப்படுத்திவிட்டு இருக்கையில் அமர்ந்து இருந்தனர். ஆனால் என் மனமோ பின்னோக்கி மூன்றாண்டுகளுக்கு முன் சென்றது. கவிதா, கொஞ்சம் பொறுத்துக் கொள். நாளைக்கு மருத்துவரிடம் சொல்வோம், ஏதாவது அலர்ஜியாகிருக்கும் பயப்படாதே! என தேற்றினாள் கவிதாவின்


தாய்க்கே……தாயுமானவன்!

 

 நீங்க எல்லோருமே பத்திரிகைகளில் வரும் சிறுகதைகளை விரும்பிப் படிப்பவர்கள் தானே! கதை படிப்பது ஒரு சுவாரஸ்யமான பொழுது போக்கு என்று நினைத்துத் தானே கதைகளை தேடித் தேடிப் படிக்கிறீர்கள்? நான் உங்களுக்கு ஒரு செய்தி சொல்கிறேன்! அது சுவாரஸ்யமான விஷயமாக மட்டும் இருக்காது. உங்களை ஒரு நிமிஷம் நிறுத்தி, சிந்திக்க வைத்து விடும்! நான் சொல்லப் போவதை நீங்கள் கதையாக எடுத்துக் கொண்டாலும் சரி, செய்தியாக எடுத்துக் கொண்டாலும் சரி, உங்களை சிந்திக்க வைத்தால் சரி! எங்க