கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: December 2016

100 கதைகள் கிடைத்துள்ளன.

யார் நீ?

 

 இரண்டு நாள் outstation branch ஆடிட்டுனா கொஞ்சம் ரிலாக்ஸ்டா இருக்கும். ருடீன் போர் அடிச்சு போச்சு “I will start tomorrow itself, Sir”னு ரீஜனல் மானேஜர் கிட்ட சொன்னேன் நான். நான்? வெங்கடேஷ், வங்கி அதிகாரி, வயசு 48. லக்னோவில் போஸ்டிங். மனைவியும் பெண்ணும், அவள் பக்க உறவுல ஏதோ கல்யாணத்துக்காக சென்னை போயிருக்காங்க. நான் தனியா லக்னோல போர் அடிச்சிகிட்டு. அது தான் சரின்னு உடனே சொல்லிட்டேன். ஆனா branch எதுன்னு தெரிஞ்சப்பறம் கொஞ்சம்


இது கதையல்ல நிஜம்…

 

 இந்த பத்தாம்தேதி சம்பளம் கொடுக்கற வழக்கத்த யாரு பழக்கபடுத்தியது, என்று எனக்கு தெரியல, அவன் மட்டும் கையில கிடைச்சான் ஒங்கி ஒரு குத்து குத்தலாம் போல இருந்தது எனக்கு, பத்து தேதிய அதிகம்தான் பத்து தேதிக்கு மேல் ஆகியும் சம்பளம் கொடுக்காம டேக்கா கொடுத்துட்டுருந்தார் என்னோட ஓனர், சார் அம்மா பத்து தடவை மேல போன் பண்ணிட்டாங்க சார், குழுவுக்கு பணம் கட்டணும்மா, ரொம்ப கஷ்டம் சார்… என்றேன்.. நான் என்ன வச்சிகிட்ட வஞ்சனம் பண்றேன், இருந்த


ஹம்பி

 

 அந்த இரயில் வண்டி மைசூரிலிருந்து ஹூப்ளி சென்றுகொண்டிருந்தது. முன்னிரவில் புறப்பட்ட வண்டி அடுத்த நாள் காலைதான் செல்லுமிடம் சேரும். நானும் எனது மனைவியும் ஒரு அலுவலக நண்பரின் திருமணத்திற்குச் சிர்சி (Sirsi) சென்றுகொண்டிருந்தோம்… அலுவலக நண்பர்களின் திருமணங்களுக்குச் செல்வது என்பது ஒரு கடமையாகவே கொண்டிருந்த காலம்.. அந்தப் பழக்கதினால்தானோ என்னவோ இன்றும் வேலை ஓய்வு பெற்று பலவருடங்கள் பின்னும், என்னைவிட மிக வயது குறைந்தவர்கள் நண்பர்களாகத் தொடர்கின்றனர். அதிர்ஷ்டவசமாக மைசூரிலும் ஒரு முன்னாள் அலுவலக நண்பரின் திருமணம்..


நான்கு கால் உலகம்

 

 திருவல்லிக்கேணி காவல் நிலையம். ஒரு மாதத்திற்கு முன்னர் நள்ளிரவில் சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம் அருகே ஒரு பெரியவரை யாரோ மர்மநபர் ஒருவன் அரிவாளால் வெட்டி கொலைச் செய்துவிட்டான். அவனை பற்றிய முக்கிய தகவல் கிடைக்கப்பெற்ற போலீசார், சில தடயங்களை வைத்து மும்முரமான ஆலோசனையில் ஈடுப்பட்டிருந்தார்கள். காவல் நிலையம் அருகே நடைப்பெற்ற இந்த படுகொலையால் பலதரப்பட்ட கட்சிகளிடமிருந்தும் அரசிடமிருந்தும் மிகுந்த கண்டனத்தை பெற்றமையால் ஒருவிதமான நெருக்கடி மனநிலையோடு இருந்தார் இன்ஸ்பெக்டர். அந்த நேரம் பார்த்து சந்துரு காவல் நிலைய


வடக்கு வீதி

 

 அலமேலு என்று யாழ்ப்பாணத்தில் ஒருவரும் பெயர் வைப்பதில்லை. அது காரணமாயிருக்கலாம். அவருக்கு அந்தப் பெயரில் அப்படி ஒரு மோகம். இறுக்கிப் பிடித்துக் கட்டிய இரட்டைப் பின்னல்களோடு அவள் காணப்படுவாள். அன்ன நடை என்று சொல்வதுண்டு; பிடி நடை என்றும் வர்ணிப்பதுண்ட. ஆனால் அலமேலுவின் நடை என்றால் மத்து கடைவது போன்ற ஓர் அழகு. இடைக்கு கீழே நேராக இருக்க மேலுக்கு மாத்திரம் இடமும் வலமும் அசைந்து கொடிபோல வருவாள். அந்த நேரங்களில் சோதிநாதன் மாஸ்ரர் மனசை என்னவோ