கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: February 26, 2014

10 கதைகள் கிடைத்துள்ளன.

வள்ளுவனுடன் விஜயன்

 

 விஜயனுக்கு கதை எழுத ஆசை! ஆனால் கற்பனை எழும்ப வில்லை. கவிதை வடிக்க ஆசை! ஆனால், கருத்து வழிய வில்லை. அவன் எழுதி அனுப்பியிருந்த ஏழு எட்டு கதைகளை ஒரு பத்திரிகை கூட பிரசுரிக்க வில்லை. எப்படி போடுவார்கள், புரியாத விஷயங்களை சொன்னால்? யாருக்கு வேண்டும் இவனது வெட்டி வேதாந்தமும், வறட்டு நடையும். இவனது கதைகளை, இவனாலேயே படிக்க முடியவில்லை. அவ்வளவு வள வள.! இவனது கவிதையை திட்டி அனுப்பியிருந்தார்கள், அடிக்காத குறைதான். அபத்த களஞ்சியம். இதில்,


மின்சாரத் தகனம்

 

 ஆத்தங்கரையை ஒட்டிய சுடுகாட்டுக்குள் ஊதா நிற ஜீப் நுழைந்தது. டிப்-டாப் ஆசாமிகள் ஐந்து பேர் இறங்கினார்கள். ஜீப் டிரைவர் நூல,; பந்து, டேப் சகிதமாய் அவர்களோடு சேர்ந்து கொண்டார். மண் வெட்டியையும் தன் வளைந்த முதுகையும் குழாயடியில் கழுவியபடி மங்கலான கண்கள் வழியே மேலோட்டமாகப் பார்த்தார், கருப்பு என்கிற கருப்புசாமி. டிப் – டாப் ஆசாமிகளில் இரண்டு பேர் டேப்பைப் பிடித்து நீள வாக்கிலும் அகல வாக்கிலும் குறுக்கும் நெடுக்குமாய் அளந்து கொண்டு அவர்களுக்குள் பேசிக்கொண்டனர். அருகில்


நினைவெல்லாம் நீயே ஆனாய்…

 

 “இனியா, நீதான் எத்தனையோ கதை எழுதறியே… என் அப்பாவை பத்தி ஒரு கதை எழுதேன்… ப்ளீஸ் பா….” “ நீ நினைக்கறதை நீயே எழுதினா நல்லாருக்குமே சூர்யா…?” “ இல்லப்பா… எனக்கு எழுதல்லாம் வராது…. என் எண்ணத்துக்கு நீ உயிர் குடுத்தா நான் ரொம்ப சந்தோஷப்படுவேன்…” கடற்கரை மணலில் ‘அப்பா’..என்று எழுதி கொண்டே உற்று பார்த்து கொண்டிருந்த சூர்யாவை வியப்புடன் பார்த்தவள், “ சூர்யா உனக்கு அப்பான்னா அவ்வளவு பிடிக்குமா?” “ ஏன் இப்படி கேட்கிற …


பள்ளிக்கூடப் புதிர்

 

 “டேய்! அரவிந்தன் மாஸ்டர் வாறாரடா” ரியூற்றறி வாசலில் நின்ற மாணவர்கள் உள்ளே போய் வாங்குகளில் அமர்கின்றனர். வாசலில் சைக்கிளை நிறுத்தி விட்டு வகுப்புக்கு வருகிறான் அரவிந்தன். தன் இருக்கையில் அமர்ந்தவாறு கையைத் திருப்பி நேரம் பார்க்கிறான். பாடம் தொடங்க வேண்டிய நேரத்திற்குப் பத்து நிமிடங்கள் இருக்கின்றன. பயிற்சிப் புத்தகத்தை, எடுத்து விரித்து வைத்துக் கொண்டு படிப்பிக்க ஆரம்பிக்கிறான். “இண்டைக்கு அரவிந்த் சேர் புது மணிக்கூடு கட்டியிருக்கிறார் என்னடா ரஞ்சன்” “ ஓமடா புதுசு போலைத் தான் கிடக்கு”


ஃபிராய்ட் கனவுகள்

 

 உங்களில் மிகச் சிறந்த ஆண்மீகவாதிகள் யார் என்று தலையில் தலைப்பாகையுடன், கைகளை மார்புக்கு குறுக்காக கட்டிக் கொண்டு, தீர்க்கமான பார்வையுடன் அவர் (விவேகானந்தர்) அந்தக் கேள்வியை கேட்டபோது நான் மட்டும்தான் வேகமாக கையை தூக்கினேன் அவ்வளவு பெரிய கூட்டத்தில்…. ‘வெரிகுட்” என்று என் முதுகில் தட்டிக் கொடுத்தார் விவேகானந்தர் இடம் : மனநல மருத்துவமனை டாக்டர் : தூங்கிகிட்டு இருக்கும் போது அடிக்கடி ஒரு கையை மட்டும் படக்குன்னு மேலே தூக்குறீங்களாமே………….. ஏன்? உங்க மனைவி ரொம்ப