Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: September 26, 2013

4 கதைகள் கிடைத்துள்ளன.

சுகுணா என் காதலி

 

  இப்படியாகும் என்று நினைக்கவேயில்லை நான். எதுதான் நான் நினைத்த படியெல்லாம் நடந்திருக்கிறது? இந்த பாஸ்கரும் அந்த பாஸ்கராக இருப்பான் என்று தோன்றக் கூட இல்லை எனக்கு. கல்லூரி முடிந்தவுடனேயே இங்கு வந்துவிட்டதால் ஊர் வாசனையே இல்லாமல் போய் விட்டது. பிடித்தது கிடைக்காது என்று தெரிந்த பிறகு கிடைத்ததை பிடிப்பதற்கு முயற்சி செய்துக் கொண்டிருக்கிறேன். முதல் வாரம் அவள் வீடு என்று தெரியாமலேயே இருந்திருக்கிறேன். ஒரு வெள்ளிக்கிழமை விடுமுறை நாளில் தான் அவள் முகம் பார்க்கும் வாய்ப்பே


சுதந்திரம்

 

 அவன் சொன்னதே என் காதில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. அவன் சொன்னதில் என் தூக்கத்தையும் தொலைத்து இப்படி விட்டத்தைப் பார்த்து படுக்க வைத்துவிட்டானே? ‘நானும் அவனைப் போல் இருந்துவிட முடியுமென்றால் எவ்வளவு நன்றாக இருக்கும்’ என்ற நினைப்பே பெரிய நிம்மதியையும் பிரமிப்பையும் தருகிறதே? இந்த எண்ணம் எனக்கு ஏன் தோன்றுகிறது? இப்போதுதான் தோன்றிய ஒன்றா அல்லது மனதில் ஒளிந்துக் கிடந்தது இப்போது அவன் சொன்னவுடன் விஸ்வரூபம் எடுக்கிறதா? எத்தனை ஆண்டுகள் கழித்துப் பேசுகிறேன் அவனுடன் அந்த சந்தோஷமெல்லாம் மறந்து


எங்கே அவள்?

 

 ‘Money.. Money… Money’ இதையே தாரக மந்திரமாகக் கொண்ட கரனுக்கு எல்லாமும் வேண்டும் ஆனால் பணமும் அதிகம் செலவாகிவிடக் கூடாது. அனிதா, கரனுக்கு அப்படியே எதிர்மறையான சிந்தையுடையவள். நாளையென்பது நிச்சயமில்லாத உலகில் சேமிப்பு, பத்திரப்படுத்துதல், கவனத்துடன் பயன்படுத்துதல் என்ற சொல்லுக்கே இடம் தராது தாராளமாகவும் அலட்சியமாகவும் செலவு செய்பவள். தனது மூன்று வயது மகள் ரோஷிமாவுக்கென்றால் கேட்கவே வேண்டாம் கேட்காமல் சகலமும் தந்திடுவாள் அவளுடைய நேரத்தைத் தவிர. கணவன் – மனைவி இருவரும் வியாபாரம், வெளியூர் பயணமென்று


நீயே சொல்லு சார்..!

 

 நேத்து சாயங்காலம்,நான் ரெண்டுபேரைக் கொன்னுட்டேன்னு சொன்னா உனக்கு ஆச்சரியமா இருக்கும் சார்..,அதுவும் எனக்குத் தெரிஞ்ச வழியிலே ரொம்பக் கொடூரமாத்தான் கொன்னேன்னு உங்கிட்டே சொல்றதுலே எனக்கொண்னும் சங்கடமில்லே சார்.., இன்னைக்கு காலையிலே, நீ கூட பேப்பரிலே பாத்திருப்பே.., ஆனா..நான் அவங்களைக் கொன்னது சரியா, தப்பா..ன்னு நீதான் ஒரு நியாயத்தைச் சொல்லணும் சார்..! கண்டிப்பா சொல்லுவியா சார்..? இந்த மருதாச்சலம் பயலுக்கு அடியாளா இருந்த ரெண்டுபேரைத்தான் நான் கொன்னுட்டேன்.இப்ப அதுக்கு பதிலா என்னைப் புடிச்சு பழிவாங்குறதுக்காக, ஆளும்,படையும் போட்டு என்னைத்