கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: May 7, 2012

34 கதைகள் கிடைத்துள்ளன.

செத்தாலும்

 

 அம்மாஆஆஆ… ஆ… அவ அலறுனா. படார்னு கதவத் திறந்துக்கிட்டு ஓடி வரலை யாரும். அவ அலறுனது வெளியில கேக்கலபோல. மறுபடியும் கத்தப் பிரயத்தனப்பட்டப்பத்தான் அவளோட தொண்டைக்கு அவ்வளவு பக்கத்துல இருந்த அவளோட காதுக்கே தொண்டை அலறுனது கேக்கலைன்னு அவளுக்குப் புரிஞ்சிச்சு. க்ரேன் எழும்புற மாதிரி கைகளத் தூக்கிக்கிட்டு வந்து, தண்ணிக்குள்ள முக்கி வச்ச இலவம்பஞ்சைப் போல ஊறிக் கனத்து ஒட்டிக்கிட்டிருந்த உதடுகள ஒருவழியாப் பிரிச்சுவிட முடிஞ்சிச்சு. ஆனாலும் தடிச்சு மரத்திருந்த நாக்கக் கையால அசைச்சு வளைச்சுப் பேச


பொழப்பு

 

 அப்பவெல்லாம் நான் பேசுவேன். ரொம்பப் பேசுவேன். பேசிக்கிட்டேயிருப்பேன். தூக்கிப் புழியிறதுக்குள்ளக் கையொடிச்சுப் போடுற ஜீன்ஸ் பேன்ட்டுகள மூச்சப் புடிச்சு ஒதறி காலாக் கம்புல போட்டுக் க்ளிப்புப் போடுறப்பக்கூடப் பேசுவேன். சன்னல் க்ரில்ல சாவி போட்டுத் தெறந்து, நாலு ஈரப் பேன்ட்டுமா சேந்து ஒராளு கனங் கனக்குற காலாக் கம்ப அலாக்காத் தூக்கி வெளிச்சுவத்துத் துளையில சொருகப் போறப்பக்கூடப் பேசுவேன். ஊரணில எறங்கி, கொண்டாந்த துணிமணியந்தா அப்டி இப்டி ரெண்டு தப்பு தப்பிப்புட்டு, கட்டாந்தரையில காயப்போட்டுப்புட்டு நாலு முங்கு


பாதாள நந்தி

 

 சிறுமிக்கும் குமரிக்குமான வித்தியாசங்களை அவளிடமிருந்து மெல்லச் செதுக்கிக் குறைத்துக் கொண்டிருந்தது காலம். காலத்தின் இரவில் கனவு கண்டு புரண்டாள் புஷ்பா. கனவில் படுபாதாளமாய் ஆழ்ந்திருந்தது ஒரு கிணறு. அதன் நீர் சாந்தின் பிசுபிசுப்பில் தளும்பிக் கிடக்க, அதில் மெல்ல நீந்திக் கிடந்தன இரு மீன்கள். குளித்துத் துவட்டும்போது வெற்றுடம்பின் எடுப்பை வியக்காது எடுப்பின் மச்சத்தை ஒருத்தி தொட்டு வியப்பதுபோலவே அவள் மின்னும் மீன் குறித்து வியக்காமல் நீரின் நிறம் குறித்து வியந்தாள். வியப்பு அவளின் உதட்டையும் இமையையும்


புளியம் பூ

 

 தோப்பை விற்பதற்கான எல்லாக் கையெழுத்தும் முடிந்தது. தோப்பை வாங்கும் வட்டிக்கடைப் பாண்டியன் பணத்தை அப்பாவிடம் நீட்டினார். ‘அவங்ககிட்டயே கொடுங்க’ என்று அப்பா அண்ணனைக் காட்டிவிட்டு வெளியேறினார். அண்ணன் பணத்தை வாங்கிக்கொண்டு, ‘நீங்க பஸ்ல வந்திருங்க’ என்று எங்களிடம் சொல்லிவிட்டுப் புதிதாக வாங்கியிருக்கும் கருமையும் நீலமும் கலந்த மோட்டார் சைக்கிளில் ஏறிப் பறந்துவிட்டான். நான், அம்மா, அக்கா மூவரும் பஸ் ஸ்டாண்டை நோக்கி நடந்துகொண்டிருந்தோம். அம்மாவுக்கு அழுகையை அடக்க முடியவில்லை. சேலைத் தலைப்பால் முகத்தை மூடிக்கொண்டாள். அக்கா, அம்மாவைத்


என் மரணத்திற்குப் பிறகு நீயும் இறந்துவிடுவாய்

 

 சிகாமணி இறந்தபோது அவன் அருகே அழுவதற்கென யாருமில்லை. தேனி நகராட்சியிலிருந்து கொண்டுவரப்பட்ட சவவண்டியில் எடுத்துப்போய் எரித்துவிட்டார்கள். அன்று வியாழக்கிழமை. தேனியில் வாரச் சந்தை கூடும் நாள். சந்தையைத் தாண்டித்தான் சவவண்டி நகர்ந்துபோனது. சிகாமணி இறப்பதற்கு முன், அவனாகவே யாரிடமோ சொல்வதுபோலத் தான் இறந்ததும் கார்க்கோடனும் இறந்துபோவான் என்று சொன்னான். தேனி வாரச் சந்தை முடிந்ததும் அன்று இரவு, கூட்டத்தில் தவறிவிழுந்த நாணயங்களையும் ரூபாய்த் தாள்களையும் தேடி எடுப்பவனாக இருந்தான் சிகாமணி. காக்கி நிறத்தில் அரை டவுசரும் சிவப்பு

Sirukathaigal

FREE
VIEW