கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: May 4, 2012

10 கதைகள் கிடைத்துள்ளன.

ஜாதிக்கவுண்டன்பட்டியில் லக்னோகாரன்

 

 சென்னையிலிருந்து திரும்பிக்கொண்டிருந்தேன். திண்டுக்கல் வந்திறங்கி என் இரண்டு சக்கர வாகனத்தில் பயணம். மணி 12 நெருங்கிக்கொண்டிருந்தது. இந்தநேரத்தில் வாடிப்பட்டியில் ஒன்றும் வேலையில்லை. திண்டுக்கல்லில் என் தங்கை வீட்டில் தூங்கியது கொஞ்சம் சுறுசுறுப்பை வழங்கியிருந்தது. மெதுவாக ஓட்டிக்கொண்டிருந்த நான் ஜாதி கவுண்டன் பட்டி என்ற கைகாட்டியைப் பார்த்துவிட்டு வண்டியைத் திருப்பினேன். இந்த ஊருக்குப் போக வேண்டும் என்பது என் நீண்ட நாள் எண்ணம். அது என்ன ஜாதி கவுண்டன் பட்டி..? நல்ல சுத்தமான கவுண்ட சாதியினர் வாழ்ந்த ஊரோ?


மனசுக்குத் தெரியும்

 

 மல்லிகையைப் பார்க்கும் போதெல்லாம் எனக்கு மல்லிகா நினைவுதான் வரும். ஓராண்டு ஈராண்டு அல்ல இருபத்திமூன்று வருடத்திற்கு முன்பு அவள் எனக்குப் பழக்கம். எட்டாம் வகுப்பில். எங்கள் பள்ளிக்கு அவள் அப்போதுதான் வந்து சேர்ந்திருந்தாள். என் அளவுக்கு கருப்பு. சுருள் சுருளான முடி.. நேர்கோடு போல மூக்கு. பளீர் என்ற சிரிப்பு. மெல்லிய உடல். என் தோளுக்கு மேலே வளர்ந்தவள். அன்பு.. அதன் மறுபெயர்தான் மல்லிகா.. மல்லிகா தூரத்தில் உள்ள ஓர் குக்கிராமத்திலிருந்து பள்ளிக்கு வந்துகொண்டிருந்தாள். எங்கள் பள்ளியில்


இருட்டு உலகம்

 

 காலையில் கடையைத் திறந்தபோதே எனக்கு எரிச்சல் பற்றிக்கொண்டு வந்தது. முதலில் காலையில் என்று சொல்வதே தவறு. காலை 9 முதல் 12 வரை மின்வெட்டு நேரம் என்பதால் 11 மணிக்குத்தான் வந்து சேர்ந்தேன். பக்கத்து அச்சகத்து மெஷின்மேனை அழைத்து ஷட்டரைத் தூக்கிவிடச்சொன்னேன். அப்புறம் கம்ப்யூட்டரைப் பார்க்கும்போதுதான் அந்த எரிச்சல் வந்தது. நான் சமயநல்லூர் பக்கத்தில் உள்ள ஒரு குக்கிராமத்திலிருந்து மதுரை பெத்தாணியாபுரம் வந்து சேர்வது காலை 10 மணிக்கு முன்பு சாத்தியமில்லை. ஆனால், காலை 9 மணிக்கு


தாயைப் பொளந்து

 

 நடுச்சாமம். கொட்டத்தில் அமர்ந்திருந்த மட்டையனுக்கு எதிரே சிறுமலையில் எரிந்த தீயின் ஜுவாலைகள் தெரிந்தன. உலகின் மௌனத்தில் தீயெழுப்பும் சடசட ஓசையும் கேட்டது. எத்தனை உயிர்கள் சிக்குண்டனவோ என்று மட்டையனுக்குத் யோசனை வந்தது. தீயில் சிக்குண்ட மட்டையனின் மனநிலையை மலை காட்டுவதாக மட்டையனுக்குத் தோன்றியது. மட்டையனுக்கு வயது அறுபதுக்குக் கீழே இருக்கும். அவரின் வயது என்ன என்று அவருக்கும் தெரியாது. உத்தேசமாக ஒரு கணக்குப் போட்டு வயது அறுபது என்று சொல்லி வருகிறார். அவரின் பெயர் கூட மட்டையன்


பொம்பளயா இருந்து பாருங்க

 

 ஒரு கேள்விதான் அவன் கேட்டான். அவளுக்குக் குப்பென்று வேர்த்துவிட்டது. கைகால்கள் நடுங்கத் துவங்கின. ‘இருடா நாயி.. ஒனக்கு இருக்கு’, என்றபடி பதட்டத்துடன் மினி பஸ்சிலிருந்து இறங்கினாள். கூட்டம் எப்போதும் எக்குத் தப்பாகத்தான் இருக்கும். இரண்டு தடவை அடிக்க வேண்டிய டிரிப்பை ஒரு தடவையாக்கினால் மினி பஸ்சுக்கு லாபம். பெண்களுக்கு கஷ்டம். இடித்துப் பிடித்து, தள்ளி, மிதித்து தள்ளப்பட்டவள் போல, ஜோதி வெளியே வந்தாள். ஏதுமே நடக்காதது போல மினி பஸ் புறப்பட்டுப் போனது. பஸ்சில் இருந்தவர்களின் பாதிப்பேர்

Sirukathaigal

FREE
VIEW