கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: May 2012

283 கதைகள் கிடைத்துள்ளன.

செல்லச்சாமியின் வாழ்வில் ஒரு தினமும் , பெருமாள் முருகனும்

 

 1 செல்லச்சாமிக்கு வழக்கம் போல் ஐந்தரை மணிக்கு முழிப்பு வந்து விட்டது . மாடித் தரையில் படுத்திருந்தவரின் கண்கள் மேலே சிமிட்டிக் கொண்டிருந்த வானத்தின் எண்ணற்ற கண்களைச் சந்தித்தன . நீலமும் வெள்ளையுமாக வானில் தெரிந்த புரிபடாத சித்திரங்களில் எதையாவது தேடிக் கண்டு பிடிக்க முடிகிறதா என்று பார்த்தார். அவர் சிறுவனாக இருந்த போது இம்மாதிரி வானில் காணப்படும் ஓவியங்கள் முந்தின ஜன்மத்தில், இதே நாளில் நடந்த காட்சிகளைத்தான் தீட்டிக் காண்பிக்கப் படுவதாக நினைத்ததுண்டு . வெட்ட


அறமற்ற மறம்

 

 டிசம்பர் காலை பத்துமணிக் குளிரில் கஸ்தூர்பா ரோடு குளிர்ந்து கிடந்தது. போன வருஷம் இதே நேரம் இந்த தில்லிக்கு வந்த போது நன்றாக மாட்டிக் கொண்டோம் என்று இருந்தது. ” இந்த நவம்பர்ல, சரியான குளிர் சமயத்ல வந்து சேர்ந்திருக்கே. நல்லதுதான் போ. அடுத்த வின்டருக்கு நீ தயாராயிடுவே ” என்று சாமித்துரை அவன் வந்த புதிதில் சொல்லிச் சிரித்தார். வந்த ஒரு வாரம் அவர் கூடத்தான் அவன் தங்கியிருந்தான். அப்புறம் சரோஜினி நகரில் ஒரு பஞ்சாபி


ஏமாற்றம்

 

 கணேசன் விழுந்தடித்துக் கொண்டு சாமியார் மண்டபத்தை அடைந்த போது, தியாகராஜன் வந்திருக்கவில்லை. அவனே அரை மணி லேட் என்றால் தியாகு அவனை விட மோசமாக இருக்கிறானே என்று சுற்று முற்றும் பார்த்தான். தியாகுவின் சுவடே காணோம். மண்டபத்தைச்சுற்றி மரங்களும் கொடிகளும் செடிகளும் ‘ பசேல் ‘ என்று பரவிக் கிடந்தன. சாமியார் மண்டபத்துக்கு இடது புறமும், வலது புறமும் வயல்கள் வீசிக் கிடந்தன. காற்றில் ஆடிய நெற் பயிர்களின் பச்சை கண்ணை வந்து அடித்தது. சாமியார் மண்டபத்தில்


வேஷங்கள்

 

 முன்னிரவின் குளிர்ந்த காற்று உடலைத் தழுவிச் சென்றது. ஆனால் மனதில் படிந்திருந்த குமைச்சலை அதனால் அடக்க முடியவில்லை. வைதீஸ்வரன் பார்வை வானத்தில் படர்ந்தது. கொட்டிக் கிடந்த ஏகப் பட்ட நட்சத்திரங்களில் எது ரொம்பவும் அழகு என்று தேடிச் செல்வதைப் போல நிலவு உருண்டு சென்று கொண்டிருந்தது. அகலமாக விரிந்து கிடந்த மொட்டை மாடியில், இந்தக் காற்றிலும் , நிலவிலும் , இருளிலும் இதற்கு முன் எவ்வளவோ தினங்கள் மயங்கி, முயங்கிக் கிடந்திருக்கிறார் அவர். ஆனால் இன்று மனதில்


புழுக்கம்

 

 உடம்பு பூராவும் ரத்தத்துக்குப் பதிலாக அந்த விஷச் சொற்கள் ஓடுவது போல ரத்னாவுக்குத் தோன்றியது. என்ன ஒரு கேடு கெட்ட நிலைமை. அவளுக்கு அருவருப்பாக இருந்தது. மனம் குன்றுவது போலிருந்தது. இந்த உணர்ச்சிகள் எல்லாம் ஒரு சேர எழுந்து அவளைக் கவ்வி , கோபத்தை உண்டாக்கின. எதிரே பலேகர் என்கிற அவள் கணவன் என்கிற புழு இருந்திருந்தால் நசுக்கி விடக் கூடிய கோப வெறி மனத்தில் பீரிட்டு எழுந்தது.சற்று முன்பு நடந்த நிகழ்ச்சியும் அதன் விளைவான அதிர்ச்சியும்